ஏப்ரல் 26
நாள்
(ஏப்பிரல் 26 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMXXV |
ஏப்ரல் 26 (April 26) கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).
- 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர்.
- 1721 – ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார்.
- 1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன.
- 1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரொலைனாவின் டேரம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
- 1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
- 1867 – கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.[1]
- 1903 – அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.
- 1923 – யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.
- 1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
- 1942 – மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 1943 – சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.
- 1944 – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு எகிப்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை கிரேக்கத்தின் அரசுத்தலைவராக அறிவித்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
- 1954 – இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
- 1960 – ஏப்ரல் புரட்சியை அடுத்து தென்கொரியாவின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
- 1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
- 1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
- 1966 – தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1981 – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
- 1981 – ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
- 1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
- 1994 – சப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
பிறப்புகள்
- 1711 – டேவிடு யூம், இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776)
- 1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
- 1785 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851)
- 1888 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1951)
- 1888 – அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், உருசிய வானியலாளர் (இ. 1983)
- 1889 – லுட்விக் விட்கென்ஸ்டைன், யூத ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1951)
- 1900 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1985)
- 1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குநர்
- 1912 – தி. க. சண்முகம், தமிழக நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1973)
- 1914 – ஆர். சுதர்சனம், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1991)
- 1917 – ஐ. எம். பேய், சீன-அமெரிக்க கட்டிடக்கலைஞர்
- 1938 – நீல பத்மநாபன், தமிழக எழுத்தாளர்
- 1965 – கெவின் ஜேம்ஸ், அமெரிக்க நடிகர்
- 1967 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (இ. 2012)
- 1970 – சரண்யா பொன்வண்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1970 – மெலனியா திரம்ப், அமெரிக்காவின் முதல் பெண், அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் மனைவி
- 1973 – சமுத்திரக்கனி, தமிழகத் திரைப்பட இயக்குநர்
இறப்புகள்
- 680 – முதலாம் முஆவியா, உமையா கலிபா (பி. 602)
- 1865 – ஜான் வில்க்ஸ் பூத், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்த அமெரிக்க நடிகர் (பி. 1838)
- 1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)
- 1920 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1887)
- 1961 – ஹரி சிங், இந்தியாவின் சம்மு காசுமீர் சுதேச சமத்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (பி. 1895)
- 1976 – க. இராமச்சந்திரா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர்
- 1977 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)
- 1977 – ந. சிதம்பர சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர் (பி. 1912)
- 1991 – வேலா அரசமாணிக்கம், தமிழக இதழாளர், பேச்சாளர் (பி. 1937)
- 2005 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பராகுவை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1917)
- 2016 – எம். எச். முகம்மது, இலங்கை அரசியல்வாதி (பி. 1921)
- 2024 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1934)
சிறப்பு நாள்
- செர்னோபில் விபத்து நினைவு நாள் (உருசியா, பெலருஸ்)
- இணைவு நாள் (தான்சானியா)
- அறிவுசார் சொத்துரிமை நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.