விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 7
செப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)
- 70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.
- 1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர் (படம்). 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
- 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
- 1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
- 1996 – யாழ்ப்பாணத்தில் கைதடியில் கிருசாந்தி குமாரசாமி என்ற மாணவி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
சங்கரதாசு சுவாமிகள் (பி. 1867) · பி. பானுமதி (பி. 1925) · வசுந்தரா தேவி (இ. 1988)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 6 – செப்டெம்பர் 8 – செப்டெம்பர் 9