செப்டம்பர் 9
நாள்
(செப்டெம்பர் 9 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 337 – முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது.
- 533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர்.
- 1087 – வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.
- 1493 – உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
- 1513 – ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
- 1543 – மேரி ஸ்டுவர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1739 – அமெரிக்கப் புரட்சிக்கு முன்னதாக பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களில் நிகழ்ந்த அடிமைகளின் கிளர்ச்சி தென் கரொலைனாவில் ஆரம்பமானது
- 1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.
- 1791 – அரசுத்தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகருக்கு வாசிங்டன், டி. சி. எனப் பெயரிடப்பட்டது.
- 1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
- 1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.
- 1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- 1855 – கிரிமியப் போர்: செவஸ்தப்போல் நகரில் இருந்து உருசியப் படைகள் விலகின.
- 1892 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு வியாழனின் மூன்றாவது சந்திரன் அமல்தியாவைக் கண்டுபிடித்தார்.
- 1922 – கிரேக்க-துருக்கியப் போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
- 1924 – அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 – பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பர்மிய தேசிய வீரர் ஊ ஒட்டாமா சிறையில் இறந்தார்.
- 1940 – வடக்கு டிரான்சில்வேனியாவை உருமேனியாவிடம் இருந்து அங்கேரிக்குக் கையளிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கலவரங்களில் 93 உருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானம் ஒரிகனில் குண்டுகளை வீசியது.
- 1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.
- 1945 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பான் சீனாவிடம் சரணடைந்தது.
- 1947 – முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1948 – கிம் இல்-சுங் கொரிய சனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.
- 1954 – அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.
- 1965 – நியூ ஓர்லென்ஸ் அருகே பெட்சி சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்,
- 1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 1970 – பிரித்தானிய விமானம் ஒன்று பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
- 1971 – நியூயார்க்கில் அட்டிக்கா சிறைச்சாலையில் நான்கு-நாள் கலவரம் ஆரம்பமானது. இறுதியில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
- 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
- 1993 – பலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தது.
- 2001 – ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணித் அகமது சா மசூது இரண்டு அல் காயிதா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் ஆத்திரேலியத் தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – பீகாரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- 2009 – துபை மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 2012 – ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 2015 – ஐக்கிய இராச்சியத்தில் அதிக காலத்துக்கு ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
- 2016 – வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
பிறப்புகள்
- 1789 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1859)
- 1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)
- 1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1954)
- 1916 – அ. சேனாபதி கவுண்டர், தமிழக அரசியல்வாதி (இ. 1992)
- 1926 – இராம. வீரப்பன், தமிழக அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2024)
- 1941 – தென்னிசு இரிட்சி, சி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2011)
- 1945 – அரசு மணிமேகலை, தமிழக எழுத்தாளர் (இ. 2001)
- 1949 – சுசீலோ பாம்பாங் யுதயோனோ, இந்தோனேசியாவின் 6வது அரசுத் தலைவர்
- 1953 – மஞ்சுளா, தென்னிந்திய நடிகை (இ, 2013)
- 1966 – ஆடம் சேண்ட்லர், அமெரிக்க நடிகர்
- 1967 – அக்ஷய் குமார், இந்திய நடிகர்
- 1968 – சாபாசு பட்டி, பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 2011)
- 1991 – ஒஸ்கார், பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
- 1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1028)
- 1569 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525)
- 1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)
- 1960 – பொன். கந்தையா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1914)
- 1976 – மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர், மெய்யியலாளர் (பி. 1893)
- 2000 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1916)
- 2000 – வீராசாமி ரிங்காடு, மொரிசியசு ஆளுனர் (பி. 1920)
- 2003 – எட்வர்ட் டெல்லர், அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)
- 2005 – இளையபெருமாள், தமிழக அரசியல்வாதி (பி. 1924)
- 2011 – காந்திமதி, தமிழக நடிகை
- 2012 – சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
- 2012 – வர்கீஸ் குரியன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1921)
- 2014 – பிரோசா பேகம், வங்காளதேசப் பாடகி (பி. 1930)
- 2015 – கே. குணரத்தினம், இலங்கைத் தமிழ் இயற்பியலாளர், கல்வியாளர் (பி. 1934)
சிறப்பு நாள்
- குழந்தைகள் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)
- விடுதலை நாள் (வட கொரியா, 1948)
- விடுதலை நாள் (தஜிகிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 9 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்