செப்டம்பர் 21
நாள்
(செப்டெம்பர் 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 21 (September 21) கிரிகோரியன் ஆண்டின் 264 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 265 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 101 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.
- 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.
- 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
- 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார்.
- 1860 – இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன.
- 1896 – பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
- 1898 – பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
- 1921 – செருமனியில் தொழிற்சாலைக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
- 1934 – சப்பானில் மேற்கு ஒன்சூ பகுதியில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் உயிரிழந்தனர்.
- 1938 – நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் உயிரிழந்தனர்.
- 1939 – உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1942 – உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
- 1964 – மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.
- 1965 – காம்பியா, மாலைத்தீவுகள், சிங்கப்பூர் ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1971 – பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1972 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
- 1976 – சீசெல்சு ஐநாவில் இணைந்தது.
- 1981 – பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத
- 1984 – புரூணை ஐநாவில் இணைந்தது.
- 1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 – ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1993 – உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்துச் செய்தார்.
- 1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
- 2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
- 2013 – இலங்கையின் வட மாகாண சபைக்கு முதல் தடவையாகத் தேர்தல் நடைபெற்றது.
- 2013 – கென்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1832 – லூயி பால் கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1913)
- 1853 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1926)
- 1866 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1946)
- 1901 – பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார், இலங்கையில் வீரகேசரி நாளிதழைத் தொடங்கியவர். (இ. 1975)
- 1909 – குவாமே நிக்ரூமா, கானாவின் அரசுத்தலைவர் (இ. 1972)
- 1910 – எம். டி. பார்த்தசாரதி, தமிழக கருநாடக இசைக் கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1963)
- 1921 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1924 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (இ. 1965)
- 1927 – ஜி. கே. வெங்கடேஷ், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 1993)
- 1930 – எஸ். ஏ. கணேசன், தமிழக அரசியல்வாதி
- 1931 – சிங்கீதம் சீனிவாசராவ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
- 1934 – தாவீது தூலீசு, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்
- 1939 – அக்னிவேஷ், இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி
- 1944 – ஜெ. சுத்தானந்தன், கல்வியாளர், சமூக சேவகர் (இ. 2010)
- 1947 – ஸ்டீபன் கிங், அமெரிக்க நூலாசிரியர்
- 1954 – சின்சோ அபே, சப்பானின் 90வது பிரதமர்
- 1957 – கெவின் ரட், ஆத்திரேலியாவின் 26வது பிரதமர்
- 1963 – ஜீவா, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2007)
- 1963 – கேட்லி அம்ப்ரோஸ், அண்டிக்குவா துடுப்பாட்ட வீரர்
- 1965 – பிரமிளா செயபால், இந்திய-அமெரிக்க அரசியல்வாதி
- 1979 – கிறிஸ் கெயில், யமெய்க்கத் துடுப்பாளர்
- 1980 – கரீனா கபூர், இந்திய நடிகை
- 1983 – மேகி கிரேஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- கிமு 19 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (பி. கிமு 70)
- 1558 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1500)
- 1576 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (பி. 1501)
- 1743 – இரண்டாம் ஜெய் சிங், ஜெய்ப்பூர் அரசர் (பி. 1688)
- 1950 – ஆர்த்தர் மில்னே, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1896)
- 1958 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (பி. 1908)
- 1967 – அல்பர்ட் பீரிசு, இலங்கை அரசியல்வாதி (பி. 1905)
- 1971 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்க்கெந்தீன மருத்துவர் (பி. 1887)
- 1976 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (பி. 1894)
- 1989 – ராஜினி திரணகம, இலங்கை மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
- 2000 – லியோனித் இரகோசொவ், உருசிய மருத்துவர் (பி. 1934)
- 2005 – காரை சுந்தரம்பிள்ளை, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1938)
- 2007 – விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 2008 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது அரசுத்தலைவர் (பி. 1922)
- 2011 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (பி. 1927)
சிறப்பு நாள்
- மரியாவின் பிறப்பு (கிழக்கு மரபுவழி திருச்சபை, யூலியன் நாட்காட்டி)
- சம இரவு நாள் (வடக்கு அரைக்கோளம்)
- உலக அமைதி நாள்
- விடுதலை நாள் (ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
- விடுதலை நாள் (பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981)
- விடுதலை நாள் (மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1964)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 21 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்