விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 4
- 1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
- 1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.
- 1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு (படம்) கொண்டு வந்தார்.
- 1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
- 1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
- 1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
கண்டசாலா (பி. 1922) · அ. வேங்கடாசலம் பிள்ளை (இ. 1953) · ந. பிச்சமூர்த்தி (இ. 1976)
அண்மைய நாட்கள்: திசம்பர் 3 – திசம்பர் 5 – திசம்பர் 6