விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு04


கருத்துக்கள் தேவை: மூளை, மனம், உயிர்

தொகு

பின்வருவன சில முக்கிய தலைப்புக்கள் ஆகும். அத்தலைப்புக்களில் கட்டுரைகளை வரைய முன் அச்சொற்களுக்கிடையான தொடர்பையும், சொற்கள் தெரிவிக்கும் எண்ணக்கருக்களையும் அலசுவது முக்கியமாக படுகின்றது. எனவே அவற்றை இங்கே இடுகின்றேன்.

சில கேள்விகள்

தொகு
  • மனத்துக்கும் சிந்தைக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • அனுபத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • அறிவுக்கும் சிந்தனைக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
சிந்தனை ஒரு செயல்பாடு, அறிவு ஒரு நிலை.
  • உள்ளுணர்வுக்கும் மனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • மனம், சிந்தை, உள்ளுணர்வு மூளையின் ஒரு விளைவா (விளைவுகளா)?
  • உணர்ச்சி மனதின் ஒரு நிலையா?
  • சிந்தனை மனத்தின் ஒரு நிலையா, அல்லது செயல்பாடா?
  • ஆத்மாவும், உயிரும் எதை நோக்கி குறிக்கின்றன? விஞ்ஞான நோக்கில் அப்பிடியான ஒன்று இல்லை என்றுதானே ஒரு அனுமானம் இருக்கின்றது. ஆனால் பல மனிதர்கள் அப்படி ஒன்று இருப்பதாக நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை பிழையான நம்க்கையாக இருக்க சந்தர்பம் உண்டு. ஆகவே ஆத்மா, உயிர் என்றால் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன?

பல நிலை ஆய்வு

தொகு

மேலே தரப்பட்ட தலைப்புக்கள் பல நிலைகளில் இருந்து ஆயப்படுதல் முக்கியாமாகும். மொழியியல், உளவியல், சமூகவியல், அறிவியல் போன்ற துறை வழிகளிலும். சமய அல்லது ஆத்மீக நிலைப்பாடிலும் ஆயப்பட வேண்டும்.

--Natkeeran 16:40, 10 மார்ச் 2006 (UTC) (மேலும் விரியும்)


மொத்தமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உருவாக்க வாய்ப்பு

தொகு

Discussion moved to விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள்

தமிழ் விக்சனரி

தொகு

தமிழ் விக்சனரியில் முன்பு போல தற்பொழுது பங்களிப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழ் விக்கிபீடியாவில் ஆர்வம் கொண்டுள்ள பிற பயனர்களும் அங்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --ரவி 15:25, 9 ஜூலை 2006 (UTC)

தமிழ் விக்சனரியில் தற்பொழுது 1971 சொற்கள் உள்ளன. இந்திய மொழி விக்சனரிகளில் தமிழ் மொழி விக்சனரியே முதலாவதாகவும் குறைந்தபட்ச ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உடையதாகவும் உள்ளது. அனைத்து மொழி விக்சனரிகளில் 35ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் பலர் வந்து பங்களித்தால் மிகச் சிறந்த கூட்டாக்கமாக வளர்த்து எடுக்கலாம். குறைந்தது 5000 சொற்களை சேர்த்த பின் விக்கிபீடியாவுக்கு விழிப்புணர்வு பரப்புவது போல விக்சனரிக்கும் தமிழ் இணையத்தளங்களில் விழிப்புணர்வு உண்டாக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். சுந்தர், தற்பொழுது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ள சொற்களை தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் பலரின் தொடர் பங்களிப்புகளும் நிச்சயம் தேவை. நன்றி. --ரவி 14:27, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரைத் தலைப்புக்களில் ஆங்கிலம்

தொகு

கட்டுரைத் தலைப்புக்களில் ஆங்கிலப் பதங்கள் இருப்பது பொருத்தமற்றது என்பதே எனது நிலைப்பாடு. கட்டுரையின் ஆரம்பத்தில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் ஆங்கில விக்கியில் குறித்த கட்டுரைப்பக்கத்துக்கு இணைப்புக் கொடுப்பது முக்கியமானது. ஆனால் தலைப்பில் ஆங்கிலம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். சீனர் ஒருவர் தொடர்பான கட்டுரைத் தலைப்பில் நாம் சீன எழுத்துக்களைச் சேர்க்க வாய்ப்பில்லைத் தானே. அவ்வாறானால் ஆங்கிலம் மட்டும் சேர்ப்பானேன்?

நாம் ஒருவகை ஆங்கில மேலாதிக்கத்துக்குள் இருக்கிறோம் என்பது உண்மை. ஆங்கில ஒலிகளைத் தமிழில் எழுத எழுத்துக்களையும் குறியீடுகளையும் தேடியலைகிறோம். வேறு வழியில்லை. ஆனால் ஆங்கிலத்திலேயே தலைப்பிடுவதென்றால் கட்டுரையையே ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதி விடலாமே!

இது தொடர்பில் விக்கிப்பீடியர்கள் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. சமசுகிருத சொற்களைத் தமிழில் எழுத தற்சமம், தற்பவம் போன்ற இலக்கண ஒழுங்குமுறைகள் இருந்தன என்றே நினைக்கிறேன். அவ்வாறாக ஆங்கில ஒலிகளையும் எழுதுவதற்கான ஒரு பொதுவான முறை அவசியமாகின்றது. செல்வா 'fa' ஒலிக்கு ஃப என்பதை விட ஃவ் சிறந்ததென்கிறார். அதற்கான அவரது வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இவ்வாறான கருத்துக்கள், விவாதங்கள் மிகப் பயனுடையவையாக இருக்கும். கோபி 15:36, 9 ஜூலை 2006 (UTC)

பக்கத் தலைப்புகளில் ஆங்கிலம் தேவையில்லை என்ற கோபியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--ரவி 14:31, 17 ஜூலை 2006 (UTC)
+1. -- Sundar \பேச்சு 07:59, 19 ஜூலை 2006 (UTC)

பக்கத்தலைப்புகளில் ஆங்கிலம் அவசியமே அற்றது. (ஆங்கிலத் தலைப்பில் ஏதாவது பக்கங்கள் உள்ளனவா??). ஆனால் ஆங்கிலச் சொல்லொன்றின் தமிழ்ப் படுத்தல் கட்டுரை ஒன்றில் முதல் பந்தியிலேயே அதன் சரியான ஆங்கிலப் பெயரை ஆங்கிலத்திலேயே குறிப்பிடல் வேண்டும். அதனைக் கட்டுரை ஆரம்பிப்பவரே எழுதானால் நல்லது. எ-கா: ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (இந்தத் தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒரு புறம் இருக்க).--Kanags 08:33, 19 ஜூலை 2006 (UTC)

ஃவேர்ச்சைல்டு உரையாடலைப் பார்க்கவும். ஆங்கில தலைப்பை கட்டுரையில் முதல் வரியில் இணைக்கவேண்டும் என்றும், பகுப்பு, பிற விக்கி இணைப்பிற்கான சுட்டுகள் தர வேண்டும் என்பதெல்லாம் கருத்தில் இருந்தும், முதலிலேயே கட்டுரையை இடும் பொழுதே செய்வதில் சுணக்கம் ஏற்படுகின்றது. முதலில் இடுவதெல்லாம் எல்லா வகையிலும் முழுமையுடன் இருப்பது கடினம். ஒவ்வொரு கட்டுரையும் பல முறை திருத்த வேண்டியுள்ளது (இது இயல்பான ஒன்றே). முன்னினும், இப்பொழுது நான் பகுப்பு, பிற விக்கி இணைப்பு எல்லாம் பாதி கட்டுரைகளுக்காவது இடுகிறேன் :) என் நோக்கம் முதலில் ஏதேனும் பயனுடைய கருத்துக்கள் இருக்க வேண்டும். செப்பம் செய்தல், விரிவாக்குதல், ஒழுங்கு படுத்துதல், வெளியிணைப்பு தருதல், ஆழப்படுத்துதல் எல்லாம் பின்னர். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. இது என் போக்கு. சில ஆங்கில எழுத்துக்கள் தலைப்பில் வர வேண்டியிருக்கலாம். எடுத்துக்காட்டாக CAS எண்.--C.R.Selvakumar 13:16, 19 ஜூலை 2006 (UTC)செல்வா

refernce desk உருவாக்கம்

தொகு

விக்கிபீடியா தளம் தொடர்பற்ற பல விடயங்கள் பற்றிய பயனர் கேள்விகளை ஆங்கில விக்கிபிடீயாவில் en:Wikipedia:Reference deskல் அலசுகிறார்கள். பயனர்:RajaManjula இது போல் ஒரு கேள்வியை செமண்டிக் வெப் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழிலும் reference desk தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது :) reference desk என்பதற்கு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்கலாம். நேரடி மொழிபெயர்ப்பு தவிர தமிழ் மரபுக்கு இசைந்த பெயர்களும் வரவேற்கப்படுகின்றன. தற்போதைக்கு Wikipedia:Reference desk என்றே பக்கத்தை ஆரம்பிக்கிறேன். பிறகு தமிழ்ப்பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்--ரவி 14:31, 17 ஜூலை 2006 (UTC)


ரவி! Reference desk என்பதன் தமிழ் பதம் குறிப்புதவி பகுதி என்று அமைவது சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.(காரணம்)நூல்நிலையந்களில் கவனித்தது நினைவுக்கு வருகிறது. ச.இராக்கேசு.

Welcoming new users

தொகு

When using the template {{newuser}}, I request everyone to please substitute it, {{subst:newuser}}. It lessens to load on the servers. - Ganeshk 16:24, 20 ஜூலை 2006 (UTC)

விக்கி நூல்கள் , விக்கி மூலம்

தொகு
  • விக்கி நூல்கள் தளத்தில் நிர்வாக ரீதியாக சரிசெய்யப்பட வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஏற்கனவே உள்ள அதிகாரி அணுக்கம் உள்ள பயனரான ஸ்ரீஹரியை வெகு நாட்களாக காணவில்லை. எனவே என்னை சுய நியமனம் செய்துள்ளேன். ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். வாக்கெடுப்புப் பக்கம் இங்கே.
  • விக்கி மூலம் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய பல நூலகள் தவறுதலாக விக்கி நூல்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலம் தொடங்குவதற்கான உடனடி தேவையை இது வலியுறுத்துகிறது. தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். தவறாமல் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். --ரவி 21:46, 22 ஜூலை 2006 (UTC)
விக்கி நூல்கள் தளத்துக்கான வாக்கெடுப்பு முடிந்து எனக்கு அதிகாரி அணுக்கம் கிட்டியுள்ளது. அதைப் பயன்படுத்தி அங்கு தளத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட முடிகிறது. வாக்களித்து உதவிய அனைவருக்கும் நன்றி. விக்கி மூலம், விக்கி செய்திகள் தளங்களுக்கான வாக்கெடுப்பு தொடர்கிறது .--ரவி 09:54, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

வாழ்த்துக்கள் ரவி, தங்கள் நிர்வாகத்தில் விக்கிநூல்கள் முன்னேற்றமடையும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.--Kanags 10:22, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

நல்லது ரவி, வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 10:33, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

வாழ்த்துக்கள் ரவி! பொறுப்பேற்று பங்களிக்க முன்வந்ததற்கு நன்றிகள்! --C.R.Selvakumar 12:18, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

ரவி, எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும். ஏனைய விக்கித் திட்டங்களிலும் முன்னணியில் இருந்து செயற்பட முன்வந்ததற்கு நன்றி. Mayooranathan 18:01, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

வாழ்த்துக்கள் ரவி. தமிழ் விக்கிமூலம் தொடர்பிலும் அதிக கவனம் எடுக்க வேண்டும். --கோபி 18:14, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
வாழித்துக்கள் ரவி. அங்கு பயனர்:Srihari சில காலம் ஆர்வமாக இயங்கிகொண்டு இருந்தவர். அவரும் விக்கிமூலம் தொடங்க முயற்சித்தவர். மீண்டும் வருவார் என்றே நினைக்கின்றேன். குழந்தைகளுக்கான படங்களுடன் கூடிய விக்கி நூல்களை எழுதுவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம். தெரிந்து நல்ல பாடல்களை தொகுத்து விக்கி நூல் ஆக்குவது. வலைப்பதிவுகளில் கிடைக்கும் எழுத்துக்களை தொகுத்து விக்கிநூல்கள் ஆக்குவதும் நன்று...என்ன மாதிரி புத்தகங்களை இலகுவாக தொகுக்கலாம் என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்துவிடுங்கள்...:-)--Natkeeran 22:34, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. எனினும், குறைந்தபட்ச அளவு பயனர்களாவது பிற திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் வரை, நான் தனித்து பெரிதாக பங்களித்து விட முடியாது. தற்போதைக்கு, பிற தளங்களில் விஷமப் பங்களிப்புகள், விக்கி கொள்கைக்கு புறம்பான பங்களிப்புகளை நீக்குவது, மீடியாவிக்கி செய்திகளை மொழிபெயர்ப்பது என்ற அளவில் தான் என் பங்கு இருக்கும். குழந்தைகளுக்கான எளிய, இனிய நூல்களை உருவாக்குவதை நிச்சயம் முன்னுரிமை கொடுத்து செய்வோம்--ரவி 17:30, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்கிமூலம்

தொகு

தமிழுக்கு விக்கிமூலம் மிக அவசியமாகும். விக்கிமூலம் விரைவில் தொடங்கப்பட்டு பழந்தமிழ் நூல்களும் நவீன நூல்களில் பதிப்புரிமைச் சிக்கல்கள் அற்றனவும் இணைக்கப்பட வேண்டும். மதுரைத்திட்டம் பெருமளவு பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கியுள்ளது. ஆயினும் தமிழக அரசு அரசுடமையாக்கிய புதுமைப்பித்தன், க. நா. சு. போன்ற முக்கியமான படைப்பாளிகளின் படைப்புக்கள் (சென்னைநெட்வேர்க் சில புதுமைப்பித்தன் கதைகளை வெளியிட்டுள்ளதைத் தவிர) இணையத்தில் எங்குமே காணக் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. அக்குறையை விக்கிமூலம் மூலம் தீர்த்துக் கொள்ள நாம் முயலலாம். ரவி தனிப்படக் கவனம் எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும். கோபி 15:38, 25 ஜூலை 2006 (UTC)

விக்கி செய்திகள்

தொகு

ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அனைவரையும் அங்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன். அங்கு பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். தனியே தமிழில் விக்கி செய்திகள் தொடங்குவதற்கான உடனடித் தேவை குறித்து எனக்குத் தெளிவில்லை என்றாலும் (செய்திக் கட்டுரைகளை விக்கிபீடியாவிலும் சேர்க்கலாம் என்பதால்), தொடங்கி வைப்பதால் எந்த பாதகமும் இல்லை. மெல்ல மெல்ல தளத்தை வளர்த்தெடுப்பதற்கு நேரத்தை தரும். விக்கிபீடியா அளவுக்கு பிற திட்டங்களில் விக்கி பயனர்களின் ஈடுபாடு இருக்காது என்பது தெளிவு என்றாலும் இங்கு அனுபவம் வாய்ந்த பயனர்கள் பிற விக்கி திட்டங்களுக்கும் அவ்வப்போது வருகை தந்து தளங்களின் நிர்வாகத்தில் உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் விக்கிபீடியாவில் பங்கெடுக்காமல் நேரடியாக அத்தளங்களில் பங்களிப்போருக்கு விக்கி மீடியா திட்டத்தின் முழுமையான இலக்கு, செயற்பாடுகள் பற்றி தெளிவான புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.--ரவி 21:03, 23 ஜூலை 2006 (UTC)


பக்க நெறிப்படுத்தல்

தொகு

பக்க நெறிப்படுத்தல் குறித்த சிறு வினாவை பேச்சு:மஞ்சள் பக்கத்தில் செல்வா எழுப்பியுள்ளார். இது குறித்த என் பரிந்துரை என்னவென்றால், ஒரு தலைப்பின் ஒரு பொருள் அதிகப்படியாகத் தேடப் படும் சாத்தியம் இருந்தால் அப்பக்கத்தை முதன்மையாகக் கொள்ளலாம். அதையும் நெறிப்படுத்தல் பக்கம் மூலமாக வழிப்படுத்த தேவையில்லை. எடுத்துக்காட்டாக, குயில் என்று தேடுவோர் பறவையான குயிலையும், பாரதி என்று தேடுவோர் சுப்பிரமணிய பாரதியையும், மஞ்சள் என்று தேடுவோர் மஞ்சள் பயிரையும் தேடுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். எனவே இப்பக்கங்களின் தலைப்புகளில் குயில் (பறவை) என்பது போல் குறிப்பிடத் தேவையில்லை. வெறும் குயில் என்ற தலைப்பே போதும். அப்பக்கத்தின் தொடக்கத்தில் குயில் என்ற தலைப்பைக் கொண்ட பிறக் கட்டுரைகளை பார்க்க குயில் (பக்க நெறிப்படுத்தல்) பக்கத்திற்கு செல்லவும் என்று குறிப்பு தரலாம். இது போன்ற பயன்பாடு தான் ஆங்கில விக்கியிலும் உள்ளது.--ரவி 16:43, 25 ஜூலை 2006 (UTC)

மஞ்சள் என்பதற்குத் தனி பக்கம் இருந்து அதனுள் அச்சொல் தொடர்பான தலைப்புகள் தாங்கிய பக்கங்களைத் தருவது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்கில விக்கியில் இரு வழிகளிலும் நெறிப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். தமிழில் சுப்பிரமணியன் என்னும் பெயர் பல கட்டுரைத ்தலைப்புகளிலே வர வழியுண்டு. குயில் என்பதும் அப்படியே (இப்பொழுது 2 தான் உள்ளதெனெனினும், 6-7 க்கு மேல் வர வாய்ப்புள்ளதென்று நினைக்கிறேன்). சுப்பிரமணியன் என்றால் சுப்பிரமணிய பாரதியைத்தான் தேட வேண்டும் என்றில்லை. நான் தேட வந்தது சி.சுப்பிரமணியனானக இருந்தால், அல்லது 52 புத்தகங்கள் எழுதிய தமிழ்க் காசு வாகிய கா.சுப்புரமணியனாக இருந்தால் பிற பக்கங்களுக்கு அழித்துச் செல்வது தேவையற்றது என்பது என் நினைப்பு.--C.R.Selvakumar 17:06, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
ஆங்கில விக்கியில் இதை இரு வழிகளில் செய்கிறார்கள்.
  1. அனைத்து பயன்பாடுகளுமே ஒரே அளவில் தேடப்படும் நிலையில் ஒரு "disambiguation" பக்கத்தை உருவாக்கி, ஒவ்வொரு துணைத் தலைப்பினோடும் அடைப்புக்குறிக்குள் அதன் இனத்தைக் குறிப்பிடுவர். (எ-கா) en:Albert I
  2. ஒரு பயன்பாடு ஏனையவற்றைக் காட்டிலும் வெகுவாகத் தேடப்படும் இடத்தில் அந்த பக்கத்தின் தலைப்பில் அடைப்புக்குறிகள் சேர்க்காமல் அந்த கட்டுரையின் முதலில் en:Template:Otheruses என்ற வார்ப்புருவை சேர்த்துவிடுவர். (எ-கா) en:India
இதே அணுகுமுறையை நாமும் பின்பற்றலாம் என எண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 06:22, 26 ஜூலை 2006 (UTC)

உரையாடல் பக்க வரிசை

தொகு

உரையாடல் பக்க உரையாடல்களை வரிசைப்படுத்துவது குறித்த சிறு வினாவை பேச்சு:மஞ்சள் பக்கத்தில் செல்வா எழுப்பியுள்ளார். அண்மைய உரையாடல்களை பக்கத்தின் துவக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது அவரது பரிந்துரை. அண்மைய உரையாடல்களை பக்கத்தின் இறுதியில் விடுவது தற்போதைய நடப்பு. இது குறித்து எனக்கு உறுதியான விருப்பங்கள் எதுவும் இல்லை என்றாலும், அனைத்து விக்கி திட்டங்களிலும் பக்கத்தின் இறுதியில் தான் புதிய உரையாடல்களை இடுகிறார்கள். பக்கங்களை அதிகம் புரட்டாமல் பக்கத்தின் தொடக்கத்திலேயே தொகுப்பது பயன்பாட்டுக்கு எளிது என்ற நோக்கில் செல்வாவின் பரிந்துரையே வழிமொழிகிறேன் :)--ரவி 16:43, 25 ஜூலை 2006 (UTC)

இது தொழில்நுட்ப அடிப்படையிலான மரபு. உரையாடல் பக்கத்தின் மேலே "+" என்ற தலைப்புடன் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பக்கத்தின் இறுதியிலேதான் புதிய பத்தியை இணைக்க முடியும். அதனால் புதிய உரையாடல்களை அவ்விடங்களிலேயே துவக்குவது நலம். ஆனால், "விக்கிபீடியா" மற்றும் பேச்சுப் பக்கம் அல்லாத பிற பெயர்வெளிகளில் செல்வா விரும்பும் மரபே கையாளப் படுகிறது. ஏனெனில் இப்பக்கங்களில் "+" கருவி இல்லை. (எ.கா) en:Wikipedia:Featured article candidates. -- Sundar \பேச்சு 06:26, 26 ஜூலை 2006 (UTC)

Priority articles requiring translation

தொகு

Is there a list of priority articles that require translation? If so can you please let me know where to find them. - Balshu 22:46, 25 ஜூலை 2006 (UTC)

கட்டுரைகளில் ஆங்கிலம் தவிர்ப்போம்

தொகு

தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கின்றன. இவை அனைத்தும் முழுமையாக தமிழாக்கப்படல் உடனடியாக நிகழக் கூடியதல்ல. பெரும்பாலும் இவை ஆங்கில விக்கியிலிருந்து பிரதி செய்யப்பட்டுள்ளதால் இப்பக்கங்களில் உள்ள ஆங்கில இணைப்புக்கள் காரணமாக பெருமளவு ஆங்கிலச் சொற்கள் வேண்டிய பக்கங்களில் காணப்படுகின்றன. இந்த ஆங்கிலப் பகுதிகளைப் பேச்சுப் பக்கங்களுக்கு மாற்றினால் என்ன? பேச்சுப் பக்கங்களிலுள்ள இணைப்புக்களும் வேண்டிய பக்கங்களின் இணைப்புக்கள் எண்ணிக்கையில் உள்ளடங்குமா? உள்ளடங்காது எனின் ஆங்கிலக் கட்டுரைப் பகுதிகளை பேச்சுப் பக்கத்துக்கு மாற்றிவிட்டு கட்டுரையின் ஆரம்பத்தில் ஆங்கில விக்கியில் பயன்படுத்துவதுபோல please expand this article எனும் செய்தியை சேர்த்துவிடலாம். கட்டுரையின் பகுதிகள் ஆங்கிலத்தில் காணப்படுவதை முடிந்தவரை குறைக்க வேண்டும். மேலும் மயூரன் குறிப்பிட்டதுபோல விக்கிபீடியாவில் மொத்த உரைப்பகுதியின் அளவு / கட்டுரைகளின் எண்ணிக்கை சுட்டெண் கொண்டு அதன் கனதியை அடையாளங் காண்பதற்கு (கட்டுரை எண்ணிக்கையை விட இதுவே சிறப்பானது) ஆங்கிலக் கட்டுரைப் பகுதிகள் முடிந்தவரை இல்லாதிருப்பது நல்லது. மேலும் வெறுமனே தமிழ்த் தலைப்பின் கீழ் ஆங்கில உரைப்பகுதி இருப்பது தமிழ் கலைக்களஞ்சியம் அல்லவே! ஆகையால் இனிவருங்காலங்களில் ஆங்கில கட்டுரைகளை இட்டு மொழிபெயர்க்க வேண்டியன எனக் குறிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மிக அவசியமானவற்றைப் பேச்சுப் பக்கங்களில் இட்டு விரிவாக்கக் கோரும் வார்ப்புருவை இணைக்கலாம். --15:33, 29 ஜூலை 2006 (UTC)கோபி

கோபியின் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் போது, தமிழின் originality மறைந்துவிட சந்தர்ப்பம் அதிகம்.--Kanags 22:35, 29 ஜூலை 2006 (UTC)
வார்ப்புரு:மேம்படுத்து என்பது பொருத்தமான பக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்காக அமைத்துள்ளேன். --கோபி 18:00, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி கூறுவது உண்மையே! வெறுமனே ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரையை இங்கு பிரதிசெய்து விடுவது பயனற்ற செயல். குறுங்கட்டுரையானாலும் நமது பாணியில் எழுதுதலே நன்று!. --ஜெ.மயூரேசன் 03:57, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆம். மேற்கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன்படுகிறேன். துவக்க காலத்தில் வெகுசிலரே இருந்தபோது ஏதாவது மொழிபெயர்ப்பாவது செய்யலாமே என்று கருதி அவ்வாறு செய்தோம். அண்மைக் காலங்களில் இயன்ற அளவு வரிக்கு வரி மொழி பெயர்ப்பதைத் தவிர்த்து வருகிறேன்; பல கட்டுரைகளில் ஆங்கிலக் கட்டுரையில் இல்லாத ஒரு மேற்கோள், தகவல், படிமம், அல்லது வேறு ஏதாவது ஏற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறேன். -- Sundar \பேச்சு 08:25, 2 ஆகஸ்ட் 2006 (UTC)


ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளில் பல குறைபாடுகள் உண்டு. முக்கியமாக அவை euro centric பார்வையை கொண்டிருக்கின்றன. மேலும், 95% தரம் மத்திமமே. எனவே அவற்றை வரிக்கு வரி மொழிபெயர்ப்பது அவசியமற்றது. தமிழ் மரபு, சூழல் வழியாக வரும் தகவல்களை சேர்க்கும்பொழுது கட்டுரை மேன்மை, தனித்துவம் பெறுகின்றது. எனவே, மேற்கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். --Natkeeran 13:21, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்கி திட்டங்கள்

தொகு

மற்ற விக்கி திட்டங்களுக்கு வாக்கெடுப்பு நடக்கும் பக்கங்களுக்கு முதல் பக்கத்தில் இருந்து இணைப்பு கொடுத்தால் புதுப் பயனர்கள் வக்களிக்க வசதியாக இருக்கும் தானே? --சிவகுமார் 11:13, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

கொஞ்ச நாளாவது இங்கு பங்களித்து , விக்கி திட்டங்களில் ஆர்வமுடையோர் தான் பிற திட்டத் துவக்கத்திற்கு பொறுமையும் ஆர்வமும் கொண்டிருப்பர். அவர்கள் அனைவரது பேச்சுப் பக்கத்திலும் தகவல் இட்டிருக்கிறேன். வேண்டுமானால், முதற்பக்கத்தில் மட்டும் இடுவதற்கு பதில் tamil font help அனைத்து பக்கங்களிலும் வருவது போல் ஒரு site notice போல் போட்டு போதுமான வாக்குகள் கிடைத்தவுடன் அத்தகவலை நீக்கி விடலாம்.--ரவி 11:21, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
மிக நல்ல யோசனை! --சிவகுமார் 11:29, 3 ஆகஸ்ட் 2006 (UTC)


e-kalappaiக்கு பரிந்துரை

தொகு

நீங்க்ள, இது வரை சுரதா எழுதியை (அல்லது அதையொத்த பிற எழுதிகளை)பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இனி e-kalappai பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். தொடக்கத்தில் எழுதிப் பழக நேரமானாலும், கற்ற பின் மிக விரைவாகவும் எளிதாகவும் தமிழில் தட்டச்சு செய்யலாம். அதிகம் தமிழில் தட்டச்சு செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். கவனக்குறைவான எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கலாம். சொந்தக் கணினியோ நிர்வாக அணுக்கும் உள்ள கணினியோ உள்ளவர்கள் e-kalappaiஐ நிறுவிக் கொள்ளலாம். சுரதா எழுதிகளை பயன்படுத்துவதில் உள்ள ஒரு பாதகம் என்னவென்றால், தமிழ் சொற்களுக்கான எழுத்துக்கூட்டல்கள் ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதிந்து விடுகின்றன. அண்மையில் கைப்பட கடிதம் எழுதும்போது வருக என்று எழுத வேண்டிய இடத்தில் varuga என்று ஆங்கிலத்தில் எழுத வருகிறது. நகர்பேசியில் தமிழ் குறுந்தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்புவதும் இது போன்ற விளைவுகளைத் தரும். என் கருத்தில், இவை விரும்பத்தக்க ஒன்றல்ல.--ரவி 14:20, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

Wikipedia திட்ட தலைப்பு பக்கங்கள்

தொகு

Wikipedia என்று ஆங்கிலத்தில் திட்ட பக்கங்களில் வருவதை தமிழாக்கம் செய்ய முடியாதா? --Natkeeran 15:45, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

பார்க்க: விக்கிபீடியா:வழு நிலவரங்கள்#தற்பொழுது பதியப்பட்டுள்ள வழுக்கள். முடிந்தால் இந்த வழுவைப்வழுப் பதிவைப் புதுப்பியுங்கள். -- Sundar \பேச்சு 16:06, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

சுந்தர், இந்த வழுவைச் சரி செய்யுங்கள் (அல்லது நீக்க உதவுங்கள்) என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 16:22, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

எங்கள் துறையில் சுருக்கமாக (தவறாகத்தான்!) ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுண்டு. தமிழில் அவ்வாறு குறிப்பிட்டு நீங்கள் சுட்டியபின் தான் தவறின் அளவு புரிகிறது. :) "Bug report" என்பதை "வழு இருப்பு அறிக்கை" என்று மொழிபெயர்க்கலாமா? -- Sundar \பேச்சு 16:31, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

வழு இருப்பு அறிக்கை என கூறலாம். வழுக்கள் அறிக்கை என்றும் கூறலாம். வழு அறிக்கை என்றும் கூறலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் அது வழுவான அறிக்கை என்று பொருள் கொள்ளலாகாது.--C.R.Selvakumar 16:57, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

முயற்சிக்கலாம் சுந்தர். --Natkeeran 18:36, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

--Natkeeran 15:13, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

வேண்டிய பக்கங்கள்

தொகு

நன்கு திட்டமிடப்படாத வகையில் ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கப்படும் போது, அதிலும் குறைந்தளவு பயனர்களே பங்களிக்கும் நிலையில் இரு விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

  1. கட்டுரைகளின் தரம்
  2. இருக்க வேண்டிய கட்டுரைகள்

இதில் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்பதில் நாம் எல்லா மொழிகளிலுமிருக்க வேண்டிய கட்டுரைகளையே இன்னும் எழுதி முடிக்கவில்லை. அது மேலைத்தேச நிலை நின்று உருவாக்கப்பட்டிருப்பினும் அந்தப் பட்டியலிலுள்ள கட்டுரைகளை எழுதி முடிப்பது நல்லது.

இதுதவிர இருக்க வேண்டிய கட்டுரைகள் தொடர்பில் வழிகாட்டக்கூடிய முக்கிய பக்கம் வேண்டிய பக்கங்கள் என்பதாகும். ஆனால் தமிழ் விக்கிபீடியாவின் பல பக்கங்களில் ஆங்கிலக் கட்டுரைகள் இணைப்புக்கள் அகற்றப்படாத நிலையில் சேர்க்கப்பட்டிருப்பதால் பெருமளவு ஆங்கில இணைப்புக்கள் வேண்டிய பக்கங்களில் வருகின்றன. ஆதலால் முடிந்தளவு ஆங்கிலத்தைத் தவிர்க்க வேண்டும். அவசியமான ஆங்கிலப் பகுதிகளை மொழிபெயர்ப்பதும், மிக அவசியமற்ற ஆங்கில உரைகளை நீக்குவதும் நல்லது. யாராவது ஒரு பயனர் வேண்டிய பக்கங்களுக்கான கட்டுரைகளைத் தொடங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. (சில சமயங்களில் மயூரேசன் அதனைச் செய்துள்ளதாகத் தெரிகிறது). --கோபி 16:30, 19 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரைகளின் அளவு

தொகு

31.07.2006 புள்ளிவிபரங்களின் படி 0.5Kb, 2Kb என்ற அளவுகளை விட பெரிய பக்கங்கள் முறையே 60%, 18% ஆகும். கடந்த ஓர் ஆண்டு காலத்தில் (கட்டுரைகள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதிலிருந்து) இந்த அளவுகளே காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இதனை 75%, 25% ஆக அதிகரிக்க முடியுமானால் மிகவும் நல்லது. மேலும் 20% கட்டுரைகள் 256B (0.25Kb) ஐ விட அளவில் சிறியவை. இதனை 10% வரை குறைக்க முடியுமானால் நல்லது. அளவை அதிகரிப்பதற்காக தரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. தரம் என்று வரும்போது அளவும் எண்ணிக்கையும் முக்கியமானவையல்ல.

கடந்த சில நாட்களாக நான் குறும்பக்கங்கள் சிலவற்றை அகற்றுவதிலும் சிலவற்றை விரிவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளேன். 64B ஐ விடச் சிறிய கட்டுரைகள் இல்லாத நிலை வர வேண்டும். --கோபி 18:11, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நல்லது கோபி. இனி தர மேம்பாட்டில் அக்கறை காட்டுவோம். -- Sundar \பேச்சு 10:59, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

ஜிம்போ வேல்சு பெங்களுர் வருகை

தொகு

விக்கிமீடியா நிறுவனர் ஜிம்போ செப்டம்பர் 28 முதல் 30 வரை பெங்களூரில் நடைபெறும் ஒரு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதோடு இயன்றால் விக்கிபீடியர்களையும் சந்திக்கக் கூடும். விருப்பமுள்ளவர்கள் இங்கே தங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். பிற விக்கிபீடியர்களைச் சந்திக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். (பெங்களூரிலேயே உள்ள நம் சிவகுமாரை நான் இதுவரை சந்திக்க முடியவில்லை (அவர் என் வீட்டருகே ஒருமுறை வந்தும் :( ), ஆனால் வெளியூரிலுள்ள புருனோவைச் சந்தித்து விட்டேன்! ஹரிகிசோரையும், சந்தோசையும் எப்படியாவது இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வற்புறுத்துவேன்.) -- Sundar \பேச்சு 10:59, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

சுந்தர், இந்த செய்திக்குறிப்பு பெங்களூரில் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே வந்து போய்விட்டாரா ஜிம்போ வேல்சு? இல்லை, இன்னொரு முறை வருவாரா? இச்செய்திக் குறிப்பில் தமிழ் விக்கிபீடியா திட்டம் பற்றி பெரிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. எனினும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் தரம், பயனர் எண்ணிக்கை, கட்டுரை எண்ணிக்கை, வளர்ச்சிப் போக்கு, உலகளாவிய பங்களிப்பு, பிற தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சி (இந்திய மொழி விக்சனரிகளில் தமிழ் தான் முதலிடம்!) ஆகியவற்றை வலியுறுத்திக் காட்டுவீர்ர்கள் என்று நம்புகிறேன்--ரவி 22:28, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


முதல் 100 தமிழ் விக்கிபீடியா பக்கங்கள்

தொகு

இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி அதிகம் பார்வையிடப்படும் 100 தமிழ் விக்கிபீடியா பக்கங்களை அறியலாம். (பங்களிப்பாளர்கள் மட்டும் தான் தமிழ் விக்கிபீடியாவுக்கு வந்து போகிறார்களோ என்ற என் நீண்ட நாள் சந்தேகமும் தீர்ந்தது ;)) தமிழ் விக்கிபீடியாவின் பயனர் வரத்து, போக்குகளை அறிய இவ்விவரம் பேருதவி புரியும். இதில் இடம்பிடிக்கும் கட்டுரைகளை அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து மேம்படுத்த தனித் திட்டம் தொடங்கலாம் :) நம் தளத்தை பற்றிய நல்ல மனத்தோற்றத்தை உருவாக்க இது மிகவும் அவசியம். எதிர்ப்பார்க்கத்தக்க வகையில் முதற்பக்கமே அதிகம் பார்வையிடப்பட்டிருக்கிறது. எனவே, இப்பக்கத்தின் தரம், இற்றை நிலைமையில் அதிக கவனமெடுக்க வேண்டும். இதில் இருந்து வழி காட்டப்படும் கட்டுரைகளின் தரத்திலும் கவனம் வேண்டும். நடப்பு நிகழ்வுகள் பக்கமும் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்பக்கம், அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதில்லை என்பது கவலைக்குறியது. நடப்பு நிகழ்வுகளை கவனம் கொடுத்து எழுதுவதன் மூலம் அதிக பயனர்களை ஈர்க்க முடியும் என்று தோன்றுகிறது.

என்னால் அப்பக்கத்தை பார்க்கவோ, அவற்றில் தப்பட்டிருக்கும் இணைப்புக்களை சென்று பார்க்கவோ முடியவில்லை :-(--Natkeeran 22:31, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மேற்படி புள்ளிவிவரங்கள் செப்டம்பர் 1 முதல் cumulativeஆக தரப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 10 முறையாவது பார்க்கப்படும் பக்கங்களை((மொத்த பக்க பார்வைகள் divided by (current date - sep 1)) - எப்படி நம்ம சமன்பாடு ;)!) அதிக அக்கறையெடுத்து மேம்படுத்த வேண்டும். இது போன்ற சில கட்டுரைகளின் பேச்சுப்பக்கங்களில், வார்ப்புரு:விரைந்து மேம்படுத்து இடலாம். இத்தலைப்புகளை கூட்டு முயற்சிக் கட்டுரைகளாக முன்னுரிமை கொடுத்து மேம்படுத்தலாம். நடப்பு நிகழ்வுகள், முதற் பக்க செய்திகள், உங்களுக்குத் தெரியுமா ஆகிய பகுதிகளை குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது. தற்பொழுது அன்றாடத் தேதிகளுக்கான கட்டுரைகளை உருவாக்கி வருவதால். அவற்றுக்கு கூடுதல் கவனம் கொடுத்து மேம்படுத்தி, வரலாற்றில் இன்று என்பது போல் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். உள்ளடக்கத்தில் மாற்றம் இருக்கும்போது தான் repeat பயனர்கள் வருவார்கள். தற்போது ஒரு மாதத்துக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டிருப்பது பெரும் பிழை என்று படுகிறது. கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான பங்களிப்புகளை உயர்த்துவது, இன்னும் அதிக சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் வேண்டும். காட்சிப்படுத்தப்படும் சிறப்புக்கட்டுரையை வாரம் ஒன்றாக மாற்றலாம். மாதம் ஒரு சிறப்புக் கட்டுரையாவது உருவாக்கும் இலக்கை வைத்துக்கொள்ளல்லாம். தற்பொழுது நன்கு வளர்ந்த நிலையில் உள்ள இந்திய இரயில்வே, சாக்லேட் ஆகிய கட்டுரைகளை சிறப்புக்கட்டுரைகளாக மாற்றப்பார்க்கலாம். -- ரவி 11:14, 2 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நம் வழக்கமான பங்களிப்பாளர்கள், ஒரு வேளை, முதற் பக்கத்தை புத்தகக்குறியிட்டு அடிக்கடி பார்க்கும் பழக்கமிருந்தால் அதை கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். மாறாக, அண்மைய மாற்றங்கள் பக்கத்தை புத்தகக் குறியிட்டு வைக்கலாம். முன்னர், கட்டுரை எண்ணிக்கையை பார்ப்பதற்காக முதற் பக்கத்தை அடிக்கடி பார்ப்பது வழக்கம். தற்போது இத்தகவலையும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காணலாம். கூடுதலாக, வார்ப்புரு:Mainpagefeatureக்கும் இணைப்பு தரப்படுகிறது. முதற் பக்க உள்ளடக்க மாற்றங்களை பார்க்க விரும்பும் பங்களிப்பாளர்கள் இவ்வார்ப்புருவை பயன்படுத்தி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். top 100 பக்கங்கள் பட்டியலுக்கும் இணைப்பு தரப்படுகிறது. அடிக்கடி பார்க்கபடும் பக்கங்களுக்கு கவனம் ஈர்த்து பங்களிப்புகளை மேம்படுத்துவது இதன் நோக்கம். ஆனால், பங்களிப்புகளின்றி அடிக்கடி குறிப்பிட பக்கங்களை (என்னை போல் ஆர்வத்தின் பேரில்!) பார்வையிடுவதையும் தவிர்க்கலாம். பங்களிப்பாளர் அல்லாத பயனர்கள் எத்தனை பேர் நம் தளத்துக்கு வந்து போகிறார்கள், குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கிறார்கள் என்று அறிய இது உதவும். விந்தையான வேண்டுகோள் தான். ஆனால், பயனர் வருகை குறித்த கூடுதல் துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்க இது உதவும். அதை அறிவதில் நம் மகிழ்ச்சியும் பொறுப்பும் பங்களிப்பும் கூடும் என நம்புகிறேன்--ரவி 18:18, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா ஊடகக் கோப்புகள்

தொகு

இதுவரை படிமங்களை இணைப்பதில் நாம் காட்டி வரும் முனைப்பை ஒலி, ஒளிக்கோப்புகளை இணைப்பதிலும் காட்டினால், தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை இன்னும் மேம்படுத்தலாம். இதற்கு, ஆங்கில விக்கபீடியா ஊடக இணைப்புகளைப் பார்க்கலாம். விக்கிமீடியா காமன்சிலும் தேடிப் பிடித்து இணைப்பு தரலாம். காமன்சில் உள்ள Video, Sound Media of the day பகுப்புகள் இதற்கு உதவும். எடுத்துக்காட்டுக்கு, மோட்ஸார்ட், புல்லாங்குழல், வயலின், இந்தியக் குயில் ஆகிய கட்டுரைகளில் தரப்பட்டுள்ள ஒலிக்கோப்புகளையும் ஒக்டோபஸ், சார்லி சாப்ளின் ஆகிய கட்டுரைகளில் தரப்பட்டுள்ள ஒளிக்கோப்புகளையும் பாருங்கள். முதற்பக்கத்தில் இருந்து கூட இது போன்ற ஒலி ஒளிக்கோப்புகளுக்கான இணைப்புகளைத் தந்து பயனர்களை ஈர்க்க தனிப்பகுதியைத் தொடங்கப் பரிந்துரைக்கிறேன். பகுதியின் பேரை, ஒலியும் ஒளியும் என்று வைக்கலாமா :)? (சின்ன வயதில் பாட்டுக்கள் காட்டிய தூர்தர்ஷனுக்கு நன்றி ;))? இது போன்ற முயற்சிகள் தமிழ் இணைய ஊடகங்களில் தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என நம்புகிறேன். தற்போதைய தகவல் காத்திருப்பு வரிசை பட்டியலை போல் விக்கிபீடியா:ஊடகக் காத்திருப்பு வரிசை பக்கம் ஒன்றையும் இதற்காகத் தொடங்கலாம்.--ரவி 10:49, 2 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இரவி பயனுள்ள ஆலோசனை. எனக்கும் இதில் உடன்பாடே. --சிவகுமார் 10:55, 2 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அபிதான கோசம்

தொகு

சுமார் 104 ஆண்டுகளின் முன் வெளியிடப்பட்ட தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசம் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மகாபாரதம், இராமாயணம் போன்ற விடயப் பரப்புக்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். இ. பத்மநாப ஐயரின் உதவியுடன் யாழ். பல்கலைக் கழக நூலகத்திற் பணியாற்றும் அ. சிறீகாந்தலட்சுமியின் முயற்சியால் தட்டெழுதப்பட்ட. இந்நூல் மெய்ப்புப் பார்க்கப்படாமலேயே பதிவேற்றப்பட்டுள்ளது.

--கோபி 18:05, 4 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ஆங்கில சொற்கள்

தொகு

அண்மைய மாற்றங்கள் பக்கம் முழுவதும் தமிழில் பார்ப்பதற்கு மகிழ்சியாக உள்ளது. இதையும் தமிழில் மொழி பெயர்த்திடலாமே!

  • மறை minor edits | காட்டு bots | மறை anonymous users | மறை logged-in users | மறை my edits

--Harikishore 15:39, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.--ரவி 16:11, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை உருவாக்கக் கோரிக்கை

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் சிறு குறிப்புக் கூட இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள ஆனால் முக்கியமான தலைப்புக்களில் குறுங்கட்டுரைகளையாவது உருவாக்க முன்வருமாறு பயனர்களை கேட்டுக் கொள்கிறேன். சில உதாரணங்கள்:

மேலும் ஒரு வரிக் கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாகவாவது தரமுயர்த்துவதும் அவசியமானதாகும். --கோபி 19:50, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, இவை மயூரநாதனின் ஈடுபாட்டு வட்டத்தில் உள்ள தலைப்புகள். அவரின் கவனத்துக்கு கொண்டுவந்தீர்களானால் அவரே அவற்றை உருவாக்கிவிடுவார். --Natkeeran 22:30, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, நக்கீரன், இப் பக்கங்களை எனது கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றிகள். நான் இவற்றைத் தரமுயர்த்துவேன். அழிக்கவேண்டாம். முக்கியமாக முதல் மூன்று பக்கங்களிலும் உள்ள வரைபடங்கள் அதிக நேரம் செலவிட்டுத் தமிழ் விக்கிபீடியாவுக்கென வரையப்பட்டவை. இப்பொழுது நான் வேறு சில கட்டுரைகளுக்காகத் தகவல்கள் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளேன். அதனால், குறுகிய கால எல்லைக்குள் இவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் இது செய்து முடிக்கப்படும். Mayooranathan 09:45, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி மயூரநாதன். இவற்றில் சிலவற்றுக்கு speed-delete இட்டிருந்த போதிலும் விரிவாக்கப்பட வேண்டியவை என்பதாலேயே அழிக்கவில்லை. அனைத்துப் பயனரும் குறுங்கட்டுரைகளை சிறிதாயினும் விரிவாக்க உழைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். --கோபி 15:51, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
குறும்பக்கங்கள் பகுதியைக் கடந்த இரு மாதங்களாக அவதானித்து வருகிறேன். பக்கவழி நெறிப்படுத்தற் பக்கங்களைத் தவிர வேறெவையும் அப்பக்கத்தில் 512 பைட்டு அளவினை விடக் குறைவானதாக இருக்கக் கூடாது என்பது என் ஆசை. அதற்காக அவற்றை அழிக்க வேண்டியதில்லை; தரமுயர்த்துதலே சரியானது. தலைப்பை விளக்கும் ஒருவரிக் கட்டுரைகளையும் ஆதாரமற்ற மற்றும் பயனற்றவையாகக் காணப்பட்டவற்றையுமே நீக்கியுள்ளேன். தமிழ் விக்கிபீடியாவின் கலைக்களஞ்சியத் தரம் பேணப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறேந்த நோக்கமும் இதில் இல்லை. --கோபி 18:40, 15 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகளை விரிவாக்கிய மயூரநாதன் மற்றும் தோழர்களுக்கு நன்றிகள். --கோபி 19:05, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

திரைப்பட வார்ப்புருக்கள்

தொகு

ஆங்கில விக்க்பீடியாவிலிருந்து பிரதிசெய்யப்பட்ட திரைப்பட வார்ப்புருக்களை மட்டும் கொண்டு கட்டுரை எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லப்படுகிறது. இது த.வி. யின் தரத்தில் பாதிப்புச் செலுத்துவதாக உணர்கிறேன். (முன்பொருமுறை மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட போது உரிய கவனமெடுக்கப்படாமையின் விளைவுகள் தெரிந்ததே.) பயனர்கள் இது தொடர்பில் கருத்துக் கூறுவதை வரவேற்கிறேன். கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்ற சிறிதளவு பிரக்ஞையுமற்ற பங்களிப்புக்களால் பயனில்லை. குறித்த கட்டுரைகளை மேம்படுத்த மினக்கெடுவதில் நேர விரயமே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. --கோபி 16:31, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, இந்தப் போக்கில் எனக்கு உடன்பாடில்லை தான். இது குறித்து பல முறை நீங்களும் நானும் நிரோவுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம். இருந்தும், அவர் தொடர்ந்து இப்படி செயல்படுகிறார். இது போன்ற தருணங்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆங்கில விக்கியில் அனுபவமுள்ள சுந்தர் விளக்கலாம். மூலிகை கட்டுரைகளை சேர்த்த கார்த்திகேயன் கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டும் நோக்கமாக கொண்டு செயற்பட்டார். ஆனால், நிரோவுக்கு கட்டுரை எண்ணிக்கை உயர்த்தும் நோக்கை விட அவருக்கு ஆர்வமுடைய திரைப்படத்துறை குறித்து விரைந்து கட்டுரைகளை சேர்க்கும் ஆர்வமே மேலிட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த ஆர்வம் நன்முறையில் பயன்பட வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாகவும் இருக்கும். திரைப்படக் கட்டுரைகளை எப்படி எழுதுவது என்று ஓரிரு மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கி காண்பித்த பின், அவரும் அது போன்று சில கட்டுரைகளை உருவாக்க முனைந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது தான். இனி புதிதாக அவர் ஆங்கில விக்கி கட்டுரை தகவல் பெட்டிகளை பிரதியிடும் முன், அவர் ஏற்கனவே தொடங்கிய கட்டுரைகளை மேம்படுத்த முயலவேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக் கொள்ளலலாம். புதிதாக உருவாக்கும் கட்டுரைகளையும் குறைந்தபட்ச தர அளவுகளை பின்பற்றி உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்--ரவி 16:47, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, நான் நிரோவின் ஆர்வத்தை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர் சற்று கவனமெடுக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். நானும் நீங்களுமே தொடர்ந்து கூறுகிறோம். அனுபவமுள்ள சில வேறு பயனர்கள் அவரது ஆர்வத்தை சரியாக வழிகாட்ட வேண்டுமென்ற நோக்கிலேயே ஆலமரத்தடியில் இக்குறிப்பை இட்டேன். --கோபி 17:03, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி அல்லது பிற நிர்வாகிகளுக்கு, ஆலமரத்தடி மற்றும் பேச்சுப் பக்கம் தொடர்பில் நிரோஜன் எந்தப் பதிலுமளிக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியாக வார்ப்புருக்களைப் பிரதி செய்து புதிய பக்கங்களை உருவாக்குகிறார். இது தொடர்பில் ஆலமரத்தடியில் சரியான முடிவுக்கு வரும்வரை நிரோஜனைத் தற்காலிகமாகத் தடுக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 18:12, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, ஒரு பயனரைத் தடை செய்வது (தற்காலிகமாக என்றாலும்) மிகவும் கடைநிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. ஆனால், அவரது பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு மாறாக அவர் தொடர்ந்து செயல்படுவது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கிறது. தற்காலிகமாக கூடத் தடை செய்வது, தடை நீக்கத்துக்குப் பின் அவரை பங்களிக்கத் தூண்டாமலும், சுதந்திரம் குறைந்த சூழலில் இயங்குவது போன்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கச் செய்யலாம். விக்கிபீடியாவின் அதிகாரத் தன்மை பற்றிய தவறான புரிதல், அவரையொத்த பிற பயனர்களை விக்கிபீடியாவுக்கு இட்டு வருவதை குறைக்கச் செய்யலாம். வார்ப்புரு பிரதிகள் தவிர பயனுள்ள சில கட்டுரைகளையாவது உருவாக்கி இருக்கிறார் என்பதையும், ஆர்வ மேலீட்டால் தான் விக்கிபீடியா கொள்கைகள் பற்றிய தெளிவின்றி செயல்படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. மற்ற பயனர்களின் கருத்துக்கு காத்திருப்போம். நிரோவுடன் இயன்றால் பேசிப் பார்க்கிறேன். தேவைப்பட்டால், தகுந்த அவகாசமும் அறிவிப்பும் இட்டு ஓரிரு நாட்கள் கழித்து தடை செய்வது பற்றி சிந்திக்கலாம்--ரவி 18:23, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
இவ்வாறான பங்களிப்புகள் விக்கிபீடியா கொள்கைகளுக்கு எந்த வகையிலும் எதிரானவையாக இல்லாதபட்சத்தில் தடைசெய்ய வேண்டிய தேவை இல்லை. ஒரு பயனரை தடைசெய்வதற்கான காரணங்கள் ஆங்கில விக்கிபீடியாவில் இருப்பின் அவற்றை எடுத்தாளலாம். --Sivakumar \பேச்சு 18:49, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நிரோஜனும் தமிழ்ப் பெயர்களில் தனிமங்களை பற்றிய கட்டுரைகளை உருவாக்கும் அனாமதெயமும் உருவாக்கும் கட்டுரைகளைச் செம்மை செய்வதில் ஏற்படும் நேரவிரையத்தைத் தவிர்க்க குறித்த பயனர்களின் ஒத்துழைப்பே அவசியமானதாகும். அவர்கள் ஒத்துழைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? விக்கிபீடியா கொள்கைகள் பற்றிய தெளிவு எனக்கும் இல்லைதான். ஆனால் பலதடவை எடுத்துக் கூறியும் சிறிதும் கவனத்தில் எடுக்காமல் செயற்படுவதே கவலையளிப்பதாக உள்ளது. --கோபி 18:30, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

சிவா, நான் இப்பங்களிப்பிறாகத் தடுக்கக் கோரவில்லை. இத்தகைய பங்களிப்புக்களில் எத்தகைய தரம் பேணப்படல் வேண்டும் என்பது தொடர்பில் ஆலமரத்தடியில் ஒரு முடிவுக்கு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தக் கோரினேன். ஆனால் பதில் கிடைக்காமலேயே புதிய கட்டுரைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன. அதனாலேயே தற்காலிகமாகத் தடுக்கக் கோரினேன்.இத்தகைய பங்களிப்புக்களை bengali விக்கிபீடியாவில் கண்டிருக்கிறேன். எண்ணிக்கை அதிகரிப்பு மட்டும்தான்; பயனில்லை. நிரோஜன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரது பங்களிப்புக்கள் கலைக்களஞ்சியத் தரத்திலில்லை. அவருக்கு முக்கிய பய்னர்கள் ஆலோசனை வழங்குவதில் மினக்கெடுவதுமில்லை. அவரை சரியாக வழிப்படுத்த வேண்டுமென அவரது பேச்சுப் பக்கத்தில் நிறையக் குறிப்புக்களை கூறியுள்ளேன். அவரது பங்களிப்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் அது போதியதாக இல்லை. கோபி 19:02, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


அவசரப்படாதீர்கள், த.வி ஒரு தொலைநோக்கு.................திட்டம். எனவே அவருடைய பங்களிப்பு பயன் உள்ளதே. வார்ப்புருக்கள் மட்டும் கூட. நிரோஜன் கனடாவில்தான் இருக்கின்றார் என நினைக்கின்றேன். முடிந்தால் சந்திக்க முயல்வேன் (உடனடியாக அல்ல). அவரது வயது 19 தான், அவரால் தமிழில் நன்றாக எழுத கூடியவாறு தனது திறனை வளக்க நீண்ட காலம் உள்ளது. அவருடைய ஈடுபாடுகள் புதிய திசைகளில் அமைகின்றன. மிகவும் வரவேற்க வேண்டும். அவர் இட்ட பட்டியல் மிகவும் பயனுள்ளது. உண்மையில் திரைப்படதுறை பற்றிய தகவல்கள் பல புதிய பயனர்களை த.வி. பக்கம் ஈடுபடுத்த உதவும்.


கோபி, ரவி உங்களின் தரம் நோக்கிய தொடர் கவனத்தை வரவேக்கின்றேன். அதேசமயம் விக்கிபீடியா ஒரு மாற்று ஆக்க முறை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த மாற்று ஆக்க முறையில் பல படிமுறைகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய பக்கத்தில் அதை வளர்க்க கூடிய ஒரு சில தகவல்கள் இருந்தாலே போதுமானது. காட்டாக ஒரு வரையறையோடு ஆங்கில விக்கியின் இணைப்பு, அல்லது வெளி இணைப்பு ஒன்று. ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு முக்கிய சொல்லுக்கு இணையான ஒரு தமிழ் சொல் இருந்தால் அதை கட்டுரையாக ஆரம்பித்து ஆங்கில விக்கியுடன் இணைப்பு கொடுத்தால் அதனால் பலன் உண்டு. அதே போல, ஒரு திரைப்படத்தின் வார்ப்புருவை சேர்ப்பது என்பது நேரமெடுத்து செய்ய வேண்டியது, அது நல்ல ஒரு பயனுள்ள செயல்பாடே. அதே திரைப்படத்தில் ஆர்வம் உள்ள பிற பயனர்கள் உள்ளடக்கத்தை சேர்க்கலாம். எனினும் சில குறைந்த பட்ச எதிர்பார்ப்புக்களை நாம் கொண்டிருக்கலாம்:

  1. தமிழில் கட்டுரைத் தலைப்பு
  2. மூன்று வரிக் குறுங் கட்டுரை அல்லது விரிவாக்கப் படக்கூடியவாறு தகவல் சேர்ப்பு
  3. வகைப்படுத்தல் (சற்று அனுபவம் வந்த பின்)
  4. ஆங்கில விக்கி இணைப்பு (இருந்தால்)

இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. தொலைநோக்கில் பல கட்டுரைகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எனக்குண்டு. அது தவறாக இருக்கலாம். தரம் நோக்கி சற்று கூடிய அவதானம் த.வி. க.க தேவையாக இருக்கலாம். --Natkeeran 22:47, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


உங்கள் அனைவரது கருத்துக்களோடும் நோக்கங்களோடும் உடன்படுகிறேன். ஆங்கில விக்கியில் நீக்கல் தகுதிகள் பெற்ற கட்டுரைகளை நான்கு எச்சரிக்கைகளுக்குப்பின்னும் தொடர்ந்து உருவாக்கும் பயனர்களைத் தடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், இங்கு அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். மேற்கத்தியர்களுக்கும் நமக்கும் உள்ள பண்பாட்டு வேறுபாடுகள் காரணமாக நம்மால் இது போன்ற முறைமை நடவடிக்கைகளை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இரண்டாவதாக, நீக்கல் தகுதிகளிலேயே நமக்கு இன்னும் தெளிவு ஏற்படவில்லை அல்லது அவற்றை இறுக்கமாக வலியுறுத்தும் நிலை இல்லை. மூன்றாவதாக, இந்த வழக்கில் அவர் தகவல் பெட்டி வார்ப்புருவைப் பயன்படுத்தி வருவதால் பின்னர் அனைத்துக் கட்டுரைகளையும் கண்டுபிடித்து நீக்குவது அவ்வளாவு கடினம் இல்லை.
இருப்பினும் கோபியின் கவலை முற்றிலும் சரியே. நட்கீரன் குறிப்பிட்டுள்ள குறைந்த அளவு தகுதிகளில் ஒரு வரியாவது வரைவிலக்கண நடையில் இருத்தல் வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்று. (கணினியியல் உவமையைக் கையாண்டால், நிரல் எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இலக்கணப் பாகுபாட்டிற்குட்பட வேண்டும்.) கடைசியாக ஒருமுறை நமது கவலைகளையும், அவரது நடவடிக்கைகளினால் த.வி. தரத்தின் மீதான அவப்பெயர் ஏற்படும் வாய்ப்பையும் விளக்கி, அவரது பங்களிப்பைக் கூடுதல் பயனுறச் செலுத்துமாறு வலியுறுத்தலாம். -- Sundar \பேச்சு 07:13, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
நற்கீரன், உங்கள் குறைந்தபட்ச எதிர்பார்ப்புப் பரிந்துரைகளுடன் நான் உடன்படுகிறேன். சுந்தர், முன்னர் மூலிகைகள் தொடர்பான கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் கலைக்களஞ்சியத் தரத்தில் அமையாத சுமார் 20 கட்டுரைகள் பின்னர் நீக்கப்பட்டன. அவற்றை உருவாக்கிய பங்களிப்பு வீண்தானே. இத்தகைய நிலை நிரோஜன் உருவாக்கும் கட்டுரைகளுக்கும் உருவாகக் கூடாது என்பதே என் ஆதங்கமாகும். அவர் குறித்த திரைப்படங்கள் தொடர்பில் கட்டுரைகள் உருவாக்குகிறார். அவை தொடர்பில் சிறு அறிமுகமாவது எழுத வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும். நிச்சயமாக அவருக்கு அது தொடர்பில் தெரியும். ஆதலால் அவர் அவற்றை வார்ப்புருக்களை இடுவதோடு நின்றுவிடாது கட்டுரைகளை சிறிதாவது உருவாக்க உழைக்க வேண்டும். அவர் இன்னமும் ஒரு பதின்வயதினர்தான். அந்த வயதுக்குரிய அவரது குணவியல்புகளை ஏற்றுக் கொள்கிறேன். தமிழை வளர்ப்பதற்காக புறப்பட்டதாகக் கூறும் வசனத்திலேயே அவரது எழுத்துப் பிழையையும் நான் அவ்வாறுதான் விளங்கிக் கொள்கிறேன் :-)) இந்த இயல்புகளிலிருந்து அவர் ஒரு பொறுப்பான ஆளுமையாக வளர்வார் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் அதன்முன் உருவாக்கும் கட்டுரைகளின் தரத்தைப் பேணுவதில் அனுபவமுள்ள பயனர்கள் அவருக்கு வழிகாட்டியாக வேண்டும். அதற்கு அழுத்தமான பரிந்துரைகள் அவசியமாகும். நிரோஜன் நற்கீரனின் பரிந்துரையைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகின்றது. கோபி 18:36, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நிரோவுடன் தொலைபேசி ஊடாகவும் msn messenger ஊடாகவும் பேசினேன். தமிழ் விக்கிபீடியாவின் செயல்பாடுகள், தர அளவுகள் குறித்து விரிவாக விளக்க முடிந்தது. தான் ஒரு கட்டுரையை தொடக்கி வைத்தால், பிற பயனர்களும் இணைந்து பங்களிப்பர் என்ற நோக்கிலேயே அவர் பல கட்டுரைகளை தொடங்கியுள்ளார். எனினும், குறைவான பங்களிப்பாளர்கள் உள்ள நிலையில் இக்கட்டுரைகளை பிறர் வளர்த்தெடுப்பதில் உள்ள சிக்கலை புரிந்து கொள்கிறார். எனவே தான் உருவாக்கிய பழைய கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து மேம்படுத்துவதாகவும், புதிய கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவின் தர அளவுகளுக்கு உட்பட்டு உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதில் எனக்கு மகிழ்ச்சியே. தொடர்ந்து பங்களித்து, ஒரு சிறந்த பயனராக நிரோ உருவெடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வுரையாடலை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்--ரவி 15:32, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை விரிவாக்கக் கோரிக்கை

தொகு

--கோபி 18:50, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]