விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17


பிரெஞ்சு - பிரான்சிய - எது நல்லது?

பிரான்சு நாட்டில் பேசும் மொழியை அவர்கள் 'விரான்சே (français, [fʁɑ̃sɛ]) என்பதுபோல குறிப்பிடுகிறார்கள். பிரான்சிய மொழி என்றால் இயல்பாகவும், மூல மொழியை ஒத்தும் உள்ளது. பிரெஞ்சு என்று எழுதுவதை pirenju என்று ஒலிக்க வேண்டும். பிரெஞ்ச்சு என்றால் pirenchu என்று ஒலிக்க வேண்டும். பிரெஞ்ச் என்றால் pirench என்று ஒலிக்க வேண்டும். பிரான்சு, பிரான்சிய மொழி, பிரான்சிய அறிஞர், பிரான்சிய அரசியலாளர் என்பன பொருத்தமாக இருப்பதாக நினைக்கின்றேன். பிரான்சு என்றோ பிரான்ஸ் என்றோ எழுதிவிட்டு பின்னர் அந்நாட்டு மக்களையோ, மொழியையோ பிரெஞ்ச் என்று கூறுவது ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாமல், ஆனால் ஆங்கிலத்தைப் பின்பற்றுவதாக இருக்கின்றது. டாய்ட்சு மொழியினர் பிரான்சிய மொழியை Französische Sprache என்றும், எசுப்பானிய மொழியர் idioma francés (en francés: le français, la langue française) என்றும் கூறுகின்றார்கள். பிரெஞ்ச்சு, பிரெஞ்சு என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. பிரான்சிய மக்களை டாய்ட்சு மொழியர் Franzosen என்று கூறுகின்றனர். இவை யாவும் பிரான்சிய என்பதற்கு நெருக்கமான ஒலிப்பாக உள்ளது. --செல்வா 20:58, 15 டிசம்பர் 2008 (UTC)

இது பற்றி யாரும் சிந்தித்தீர்களா? --செல்வா 15:20, 19 டிசம்பர் 2008 (UTC)


இதை ஒரு மாற்றுச்சொல்லாகக் கட்டுரைகளில் இடலாம். அடிக்குறிப்பில் விளக்கமும் தரலாம். முதன்மைப்படுத்தலாமா என்பதற்கு மற்ற பங்களிப்பாளர்களின் கருத்தையும் வரவேற்பையும் பொருத்தே முடிவு செய்ய முடியும். -- சுந்தர் \பேச்சு 17:35, 19 டிசம்பர் 2008 (UTC)

கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு

ஐரோப்பிய மொழிகளில் கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் எப்போது, எவ்வாறு எப்படித் தோன்றின என்று அறிதல் வேண்டும். எகிப்திய மொழியில் இருந்து கிரேக்கர்களும், கிரேக்கத்தில் இருந்து அரபு மொழியிலும், அரபு மொழியில் இருந்து இலத்தீனிலும், கடைசியாக இலத்தீனில் இருந்து ஐரோப்பிய மொழிகளிலும் கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு வளர்ந்தன. அவர்கள் யாவரும் தத்தம் மொழிகளிலும் புதிய நூல்களும் இயற்றினர். இன்னும் சமசுகிருதம், உருசிய மொழி, என்று எத்தனையோ மொழிகளில் தோன்றி வளர்ந்த வரலாறுகளும் அறிய வேண்டும். குறிப்பாக தமிழ் மொழியில் இருந்த நூல்கள் பற்றியும் அறிய வேண்டும். பிற ஐரோப்பிய மொழிகளில் - செக், அங்கேரிய, போலந்திய மொழி போன்றவற்றில் - என்னென்ன நூல்கள் இருந்தன அவற்றின் பங்கு என்ன என்று அறிதல் வேண்டும். நிப்பானிய, சீன, கொரிய மொழிகளில் வளர்ச்சி பற்றியும் அறிதல் வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய மொழிகளில் அறிவியல் இலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிவது தமிழ் மொழியில் இவற்றை உருவாக்கி வளர்க்க உதவும். ஆங்கிலத்தில் கடந்த 100-150 ஆண்டுகளாகத்தான், உலகத்தவர் உழைப்பால் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. இன்றும் நாள்தோறும் கடுமையக பலர் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இன்னும் அம்மொழியில் இலக்கிய வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதனை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழில் விக்கி போன்ற கலைக்களஞ்சிய உருப்படிகள் யாவரும் பயன்பெறுமாறு அமைக்க வேண்டும். இது தொடர்பாக மிகச்சிறிதளவாவது தொடர்புடைய மேற்கோள்களைத் தொகுக்க எண்ணியுள்ளேன். இப்போதைக்கு பயனர்:செல்வா/மேற்கோள்கள் என்னும் பக்கத்தில் தொகுக்க இருக்கின்றேன். இப்பக்கத்தில் நீங்களும் மேற்கோள்களைச் சேர்க்கலாம். உங்கள் கையொப்பம் அல்லது பெயரையையும், சேர்த்த நாளையும் இட வேண்டுகிறேன். இவை பக்க வரலாற்றில் இருக்கும் எனினும் இட்டவர் குறிப்பைச் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 16:35, 16 டிசம்பர் 2008 (UTC)


கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் தமிழில் (இன்ப) இலக்கிய வரலாறு எழுதப்பட்ட அளவுக்கு தமிழின் அறிவியல்/உரைநடை படைப்புகள் வரலாறு எழுதப்படவில்லை என்றார். தமிழ்க் கணிதம், மருத்துவத் தமிழ், அறிவியல் தமிழ் சட்டத் தமிழ் என்று நானும் சில குறிப்புகள் சேத்து வருகிறேன்.

முன்னர் ஒருமுறை நீங்கள் தமிழில் தொழில்கலை கலைச்சொற்கள் அழிந்துவருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்னும் எமக்கு ஒரு குறுகிய கால அவகாசம் உண்டு.

மேலே தரப்பட்ட சுட்டிகளில் மரவேலை, நெசவு போன்ற துறைகளின் கலைச்சொற் பட்டியல்கள் உள்ளன. இவை 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதே போன்று வேறு பல பட்டியல்களும் உண்டு. ஆனால் அவை இணையத்தில் இல்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல நானும் மேற்கோள்களாச் சேப்பேன். நன்றி. --Natkeeran 22:04, 16 டிசம்பர் 2008 (UTC)

சுட்டுகளுக்கும், ஒத்த கருத்துக்கும் நன்றி நற்கீரன். தமிழர்களில் மிகப்பெரும்பாலோர் (90-97%) தொழிற்கலைஞர்கள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்களை ஆண்டு வந்திருக்கின்றனர். அருகி வந்தாலும் இன்றும் உண்டு; தொகுப்பார் இல்லை, அல்லது குறைவு. வியப்பூட்டும் பொருள் செறிவு உடையவை இச்சொற்கள். அணைகளும், கோயில்களும் கோட்டைகளும் ஆக்கல், நூறாயிரக்கணக்கான மருந்துகளும், இசை நுணுக்கங்களும், கருவிகளும், படைக்கலன்கள் ஆக்கல், நகைகள் ஆக்கல், அதற்கான தொழிற்வினைக்கருவிகள், கப்பல்கள் கட்டல், தோல்வினைப்பொருட்கள், பாய், ஆடை நெசவு, மாழை (உலோக)ப் பொருட்கள் உருவாக்குதல் என்று எத்தனையோ கலைகள் இருந்தன. கணிதம், வானியல், நேரம், நாழிகை கணித்தல், பல்வேறு அளவிடு கருவிகள் படைத்தல் இருந்தன. தக்க அறிவில்லாமல் இன்றும் நிற்கும் கோயில்களும் அணைகளும் செய்தல் இயலாத ஒன்று. வடிவவியல், மற்றும் நூற்றுக்கணக்கான கணிதவியல் அறிந்திருக்க வேண்டும். இராசராச சோழன் காலத்தில் உள்ள நில அளவைத் துல்லியம் அக்காலத்தில் வேறு எங்குமே காண இயலாதது என்று வேற்று நாட்டு அறிஞர் ஒருவர் (நிப்பானியரோ வேறு யாரோ ஒருவரோ) எங்கோ எழுதியதை படித்துள்ளேன் (குறிப்பு மீண்டும் கிடைத்தால் இங்கு எங்கேனும் சேர்க்கின்றேன்). கருநாடக நாட்டில் உள்ள சில கட்டிடங்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள் உதவியுடன் செய்தது என்பர். --செல்வா 22:32, 16 டிசம்பர் 2008 (UTC)
நானும் என்னாலான மேற்கோள்களைச் சேர்க்க முயல்கிறேன். நல்ல முயற்சி. -- சுந்தர் \பேச்சு 04:33, 17 டிசம்பர் 2008 (UTC)

அரிய படங்கள்

ஆங்கிலேய நூலகத்தின் அரிய படங்கள் இங்கு கிடைக்கின்றன. இவற்றில் காப்புரிமை இறந்த பழைய படங்களை commons:பொதுக்கோப்பகத்தில் பதிவேற்றி இங்கு நம் கட்டுரைகளில் பயன்படுத்தலாம். இந்த வினவல் பல தொடர்புடைய படங்களைக் காட்டுகிறது. இங்கிருந்து இருளரின் படத்தைப் பெற்று கட்டுரையில் இணைத்துள்ளேன். [1], [2], [3] போன்றவற்றையும் காணலாம். -- சுந்தர் \பேச்சு 11:16, 18 டிசம்பர் 2008 (UTC)

Full size printable image என்ற இணைப்பைச் சொடுக்கி பெரிய படத்தைப் பதிவேற்றுங்கள். மலையாளிகளை மலைவாழ் மக்கள் என்று நிறுவும் படம்! இலங்கை, அதிலும் கொழும்பு பேட்டை[4]! -- சுந்தர் \பேச்சு 11:22, 18 டிசம்பர் 2008 (UTC)
மிக்க நன்றி சுந்தர். இதனை நானும் இதனை முன்னர் பார்த்து இருக்கின்றேன், ஆனால் உங்களைப் போல அழகாக ஆற்றுப்படுத்த மறந்துவிட்டேன். தோடர் என்னும் கட்டுரையை ஆக்கும் பொழுது இதனை அறிந்தேன், அங்கு பயன்படுத்தியும் இருக்கின்றேன். மிக அருமையான பதிவுகள். இவற்றை இலவசமாகப் பெற இருப்பது நல்வாய்ப்பு. ஆற்றுப்படுத்தியதற்கு மிக்க நன்றி. --செல்வா 15:19, 19 டிசம்பர் 2008 (UTC)

ஒலித்திரிபுக் குறி முயற்சி

முன்பொரு முறை ஒலித்திரிபுக்குறிகள் இருந்தால் தேடு பொறிகளில் சிக்கவில்லை என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. அண்மையில் ஒரு சில கட்டுரைகளுக்கு மாற்றுவழிகள் அமைத்தேன். அவற்றில் ^ மற்ரும் முன்கொட்டு ' ஆகியவை இருந்தன. விக்கியின் தேடு பொறியில் இக்குறிகளை மட்டும் இட்டு இடம் விடத்தொடங்கினாலே, இக்குறி முதலாக உள்ள சொற்கள் கிட்டுகின்றன. மேலும், கூகுள் தேடுபெட்டியிலும் ^சக்கீரா என்று இட்டால் அது சக்கீரா என்னும் சொற்கள் வரும் இடங்களைக் காட்டுகின்றன. எனவே ^சண்முகம் என்று இட்டுத்தேடினால், சண்முகம் என்னும் சொற்கள் வரும் இடங்களைக் காட்டுகின்றன. இது பற்றி மேலும் இரண்டொரு நாட்கள் கழித்து தேடிப்பார்த்து எவ்வாறு வேலை செய்கின்றது எனப் பார்க்கலாம். --செல்வா 15:19, 19 டிசம்பர் 2008 (UTC)

சண்முகம் என்று தேடினால் ^சண்முகம் என்ற தலைப்புடைய கட்டுரை சிக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:30, 6 ஜனவரி 2009 (UTC)
சிக்காவிட்டாலும் வழிமாற்றுகள் தரலாம். இருந்தும் ஆய்வுக்காகவே கேட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 16:33, 6 ஜனவரி 2009 (UTC)
சண்முகம் என்று பல பக்கங்களில் வரக்கூடும் ஆகையால் ^சண்முகம் என்பது தேர்வு செய்யப்பட்டாலும், 10,000 பக்கங்களில் எங்கேனும் இருக்கலாம். ஆனால் ஆலசன் என்று கூகுளில் தேடினால், 'ஆலசன் என்னும் சொல் பொறுக்கப்படுவதைக் காணலாம் இப்பக்கத்தைச் சுட்டுகின்றது, பார்க்க.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நான் "'ஆலசன்'" போன்ற சொற்களை எண்ணித்தான் கேட்டேன். உங்கள் எடுத்துக்காட்டின்படி அந்தச்சிக்கலுமில்லை என உணர்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:51, 6 ஜனவரி 2009 (UTC)
சக்கீரா என்று கூகுளில் தேடிப்பாருங்கள். ^சக்கீரா என்னும் சொல்லும் பொறுக்கப்பட்டு அழுத்த எழுத்துக்களில் எழுதிக் காட்டுவதைப் பார்க்கலாம். ஆகவே இந்தச் சிக்கல் இல்லை என்று நினைக்கிறேன். இத் தலைப்பில் மொத்தம் 5 பக்கங்கள்தான் இருப்பதால் இதனைத் தெளிவாக உணரலாம். --செல்வா 19:27, 6 ஜனவரி 2009 (UTC)
இன்னொரு சிறு மெய்த்தேர்வு: கூகுளில் உசாகல்யாணி என்றிட்டுத் தேடினால் ஒன்றும் சிக்கவில்லை ஆனால் உ^சாகல்யாணி என்று தேடினால் ஒரு பக்கம் பொறுக்கப்படுகின்றது. எனவே இடையே வரும் ஒலித்திரிபுக்குறிகள் எவ்வாறு பொது தேடுபொறிகளில் சிக்குகின்றன என்று அறிதல் வேண்டும். யாகூ தேடலில் இவ்விரண்டுக்குமே (உசாகல்யாணி, உ^சாகல்யாணி) ஒன்றும் பொறுக்கப்படவில்லை. --செல்வா 19:47, 6 ஜனவரி 2009 (UTC)

இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை நத்தார் வாழ்த்துகள்

டெரன்சு, தானியல் மற்றும் கொண்டாடும் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை, நத்தார் வாழ்த்துகள்! அன்புடன் --செல்வா 08:22, 25 டிசம்பர் 2008 (UTC)

அனைவருக்கும் நத்தார்/கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். --Natkeeran 17:25, 25 டிசம்பர் 2008 (UTC)

அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். விக்கித் தாத்தா ரொம்ப நல்லா இருக்கு :)--உமாபதி \பேச்சு 17:31, 25 டிசம்பர் 2008 (UTC)

எல்லோருக்கும் எனது மனமுவந்த நத்தார் வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:33, 25 டிசம்பர் 2008 (UTC)

முதற்பக்கத்தின் வடிவமைப்பு

நம் முதற்பக்கம் நன்றாக உள்ளது. ஆனால் வரவேற்பு மொழியும், முதற்பக்கத்தின் வடிவமைப்பும் சிறிது மாற்றல் வேண்டும் என நினைக்கிறேன். குறிப்பாக "முதற்பக்கக் கட்டுரைகள்" "செய்திகளில்" முதலான கட்டங்களின் தலைப்பை ஒரு பட்டைக்குள் இட்டுக் காட்டல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். கட்டுரைப் பகுப்புகளும் (வாயில்கள்) வேறுவிதமாக அழகாக காட்டல் வேண்டும் என நினைக்கிறேன். பொதுவாக வரவேற்பு, தலைப்பைத் தவிர மற்ற எல்லாமும் தமிழ் விக்கியில் அழகாக உள்ளன. வரவேற்புப் பட்டையை மாற்ற சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.இங்கு பார்க்கவும். ஒப்பீட்டுக்கு, ஆங்கிலம் அல்லது டேனிசிய பக்கத்தையோ, இந்தி, மராத்தி பக்கத்தையோ பார்க்கலாம். எனக்கு மராத்தியும் இந்தியும் பிடித்துள்ளது. பிற பயனர்களும் கருத்துத் தெரிவித்தால் மாற்றங்கள் செய்யலாம். தெரன்சு, சுந்தர் போன்றவர்கள் உதவக்கூடும். நன்றி. --செல்வா 01:40, 3 டிசம்பர் 2008 (UTC)

 • அ, ஆ, இ, ஈ ஆகியவை இப்போது இருக்கும் தெரிவுகள். ஈ da/en பின்பற்றி செய்யப்பட்டது.
 • தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை தேவை. அதையே முதல் இணைப்பாக தர வேண்டும்.
--Natkeeran 02:28, 3 டிசம்பர் 2008 (UTC)
எனக்கு 'ஈ' குறியீடிடப்பட்ட அமைப்பு பிடித்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 14:18, 5 டிசம்பர் 2008 (UTC)
எனக்கும் ஈ என்னும் தேர்வு பிடித்துள்ளது, ஆனால் இட-வலமாக உள்ள அகலத்தைக் குறைக்க வேண்டும். யாரேனும் இத்திருத்தத்தைச் செய்து, முதற்பக்க வடிவமைப்பை மாற்ற்றலாம். மேலும் தலைப்புகளை ("முதற்பக்கக் கட்டுரைகள்", "செய்திகளில்" முதலானவை) ஒரு கட்டம்கட்டிய பட்டையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். டேனிசிய பக்கத்தையோ, இந்தி, மராத்தி முதலான விக்கி முகப்புகளையோ பார்க்கலாம். --செல்வா 14:28, 5 டிசம்பர் 2008 (UTC)
'ஈ' தான் எனக்கும் பிடித்துள்ளது. மயூரநாதன் 20:42, 6 டிசம்பர் 2008 (UTC)

பட்டைகள்

வார்ப்புரு:Mainpage v2
செல்வா கூறிய மாதிரி முதற்பக்க பகுதிகள் பட்டைகளுக்குள் இடப்பட்டுள்ளன. முன்னர் இப்படி இருந்தது. எளிமையாக இருக்கும் என்று கருதி நீக்கினோம் என்று நினைக்கிறேன். எப்படி இருக்கிறது. புதுமாதிரி மாற்றுவதா, அல்லது பழையதை அப்படியே விடுவதா. கருத்துக்கள் வேண்டப்படுகின்றன. நன்றி. --Natkeeran 00:58, 30 டிசம்பர் 2008 (UTC)

பட்டைகள் இருப்பது அழகாக உள்ளது (என் கண்களுக்கு). என் வாக்கு பட்டைகள் சேர்ப்பதற்கு. நன்றி நற்கீரன். --செல்வா 05:10, 30 டிசம்பர் 2008 (UTC)

பட்டைகள் அழகாக உள்ளன.--Kanags \பேச்சு 06:00, 30 டிசம்பர் 2008 (UTC)


எனக்கும் நன்றாகவே தோன்றுகிறது. விரைவில் மாற்றிவிடுகிறேன். நன்றி. --Natkeeran 13:21, 30 டிசம்பர் 2008 (UTC)
பட்டைகளுடன் அழகாகவே உள்ளது. மயூரநாதன் 16:53, 30 டிசம்பர் 2008 (UTC)

Google Tamil Translation is a possibility

We can recommend Tamil Wikitionary for word collection; however there do not exist lot of Tamil-English Bilingual documents.

--Natkeeran 19:39, 30 டிசம்பர் 2008 (UTC)

नामविश्व भाषांतरण

Dear Friends,
undersigned wants to put following request at https://bugzilla.wikimedia.org/ to programmers of MediaWiki software to make apropriate changes in Sanskrit Language Wikipedia.Undersigned requests openions or support from those who know Sanskrit Language.Please do reply at your earliest or post your comment directly at संस्कृत विकिपीडिया:ग्रामस्य चौपालम्
Mahitgar १५:०३, १ पौषमाघे २००९ (UTC)


Dear Wikimedia Programmers,
Since undersigned wants to create new articles in Sanskrit Language Wikipedia specialy in "Wikipedia" and "Help" Namespace;Correction in Namespace Names will help me and Sanskrit Language Wikipedia a Long way. We kindly request following localisation of Sanskrit Language Wikipedia at https://bugzilla.wikimedia.org/
 • Namespace Current English Name 'Wikipedia' change the same to Sanskrit विकिपीडिया
  • Namespace Current semi-English Name 'Wikipediaसंभाषणं' change the same to Sanskrit विकिपीडिया संभाषणं
 • Namespace Current English Name 'MediaWiki' change the same to Sanskrit मिडियाविकि
  • Namespace Current English Name 'MediaWiki talk' change the same to Sanskrit मिडियाविकि संभाषणं
 • Namespace Current English Name 'Template' change the same to Sanskrit बिंबधर
  • Namespace Current English Name 'Template talk' change the same to Sanskrit बिंबधर संभाषणं
 • Namespace Current Sanskrit Name 'उपकार:'(stands for 'Help') change the same to Sanskrit साहाय्य
  • Namespace Current Sanskrit Name 'उपकारसंभाषणं' (stands for 'Help talk') change the same to Sanskrit साहाय्य संभाषणं
Notes:
1)बिंबधर is a newly created applied term for Template.बिंब means an image that can transclude,and since a wikipedia template holds and helps transclude an image term created in sanskrit is बिंबधर
2)Help Namespace 'उपकार:' is being requested to be changed since 'उपकार:' means 'favour' where as right word for 'Help' in Sanskrit is available and is साहाय्य so this namespace change is being requested.
Please do reply at your earliest or post your comment directly at संस्कृत विकिपीडिया:ग्रामस्य चौपालम्


Mahitgar १५:०३, १ पौषमाघे २००९ (UTC)

"அறிவியற்" பெயர்களின் தமிழ் வடிவம்

தனிமங்கள் போன்று மற்ற அனைத்துலகிலும் அறியப்படும் பெயர்கள், தங்கள் மொழியின் இயல்பின் படியே எழுதப்படும் என்பது அறிதல் வேண்டும். எடுத்துக்காட்டாக Hydrogen, Helium என்னும் சொற்களில் வரும் முதலெழுத்து H, எசுப்பானிய மொழி, இத்தாலிய மொழி ஆகியவற்றில் ஒலிப்பில்லாத எழுத்து. அவர்கள் அவற்றை நீக்கியோ, அல்லது வேண்டியவாறு மாற்றியோதான் பயன்படுத்துகிறார்கள். இந்தாலியர்கள் Hydrogen என்பதை, Idrogeno என்கிறார்கள். நாம் தமிழில் ஐதரசன் என கூறுவது பொருந்தும் என்பதை நோக்குக. Helium என்பதை இத்தாலியர்கள் Elio என்கிறார்கள். இதனை நாம் கட்டாயம் ஈலியம் எனலாம். அது மட்டுமல்ல, ஐதரசனை 1968 முதல் நீரதை, நீரகம், நீரியம் என்னும் சொற்களால் சிறுபானமையரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஐதரசனை டாய்ட்சு மொழியில் Wasserstoff ("நீர்ப்பொருள்") என்று கூறுகிறார்கள். டாய்ட்சு மொழியாளர் மட்டுமல்ல, பிற பலமொழியாளர்களும் நீர் என்னும் சொல்லின் அடிப்படையிலேயே ஆக்கி ஆள்கின்றனர். எடுத்துக்காட்டாக போலந்தியர் pl:Wodór, பின்லாந்திய மொழி சுவீடிய மொழி , மற்றும் உருசிய மொழி என்று பலமொழிகளைக் காட்டலாம். அவர்கள் Hydrogen என்று ஆளவில்லை என்பதை உற்று நோக்க வேண்டும். எனவே தமிழில் நீரியம், நீரதை, நீரகம் என்னும் ஏதேனும் ஒன்றை முதன்மைப்படுத்துவதில் தவறில்லை. எப்படியாயினும், ஐதரசன் என்று எழுதுவதில் தவறொன்றும் இல்லை. அதே போல Strontium, Scandium, Stannum (Tin) என்னும் சொற்களை எசுப்பானிய மொழியில் Estroncio, Escandio, Estaño என்று முன்னே எகரம் சேர்த்துத்தான் எழுதுகின்றனர். நாம் ஏன் எசுட்ரான்சியம் (எசுத்ரான்சியம்), எசுக்காண்டியம், எசுத்தானம் (வெள்ளீயம்) என வழங்கலாகாது? ஸ்ட்ரான்ஷியம், ஸ்காண்டியம் ஸ்டானம் என்றுதான் எழுத வேண்டும் என்று கூறுவோர் மொழி மரபுகளை அறியாதவர் அல்லது மதிக்காதவர் என்று பொருள் கொள்ள வேண்டியிருக்கின்றது. முதலெழுத்து காற்றொலி சகரமாக இருப்பின் முன்னே ஓர் உயிரெழுத்து இட்டு எழுதினால் ஏறத்தாழ சரியாக இருக்கும். Strontium என்று ஆங்கிலத்தில் உள்ளதை இத்தாலியர் Stronzio என்கிறார்கள், எசுப்பானியர் Estroncio என்கிறார்கள். இவர்கள் Strontium என்று எழுதவில்லை (உரோமன் எழுத்துக்களைப் பயன்படுத்துபவர்களாக இருந்தும்) என்பதை உற்று நோக்க வேண்டும். மேலும் பின்னொட்டு ஒலிப்பும் -சியோ என்பதாக உள்ளது (-ஷியம் என்று இல்லை). எனவே ஆங்கிலத்தில் இருப்பது போலவே இருக்க வேண்டும் என்னும் கூற்று பல மொழி மரபுகளை அறியாதவர், தமிழ் மொழிமரபுகளைப் போற்றாதவர் கூற்று. ஆகவே ஐதரசன், ஈலியம், எசுத்திரான்சியம், எசுக்காண்டியம் என்றெல்லாம் தமிழ் மரபை ஒட்டி எழுதுவதே சரியானது. இதன் அடிப்படையில் கட்டுரைகளை மாற்ற விரும்புகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். பிற எழுத்துக்கூட்டல்களுக்கும் கட்டாயம் வழிமாற்றுகள் இருக்கும். --செல்வா 16:06, 6 ஜனவரி 2009 (UTC)

செல்வாவின் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 16:33, 6 ஜனவரி 2009 (UTC)
மறுக்கமுடியாத நேர்மையான கூற்றாகவே படுகிறது. Hydrogen என்பதே கூட நீராகுபொருள் என்று பொருள்படுவதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் ஐதரசன் போன்றவற்றை முதன்மைப்படுத்தலாம். அண்மையில் தூத்துக்குடியில் ஒருவர் தனக்கு மீயொலி நோட்டம் பார்க்க வேண்டும் என்பதை கான் எடுக்க வேண்டும் என்றார். ஒருவேளை நோட்டம் என்பதை அறிஞர்களும், அரசினரும், அலுவலரும், மருத்துவரும், ஊடகங்களும் பயன்படுத்தினால் அந்தப் பிணியாளருக்கு எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்? நோட்டம் என்பதை நாம் பயன்படுத்தினால் திணிப்பு என்கின்றனர், "scan" என்பதை வாயால் சொல்ல வருந்துபவரிடம் அதை வலிந்து புகுத்துவதை என்னவென்பது? -- சுந்தர் \பேச்சு 16:47, 6 ஜனவரி 2009 (UTC)
பேச்சு:ஹீலியம் மறுமொழி தரவேண்டும் என்று நினைத்துவிட்டு தவறவிட்டு விட்டேன். Helium என்பது எப்படி ஈலியன் என்று வருகிறது? ஏன் கீலியம் என்று வராது என்று விளக்கினா நன்று. இது என் அறியாமையே. கீலியன் நல்லதென்று கூறவரவில்லை. தங்கம் என்பதை கோட் எனபதில்லை. இரும்பு என்பதை அயர்ன் என்பதில்லை. இந்த நடைமுறை நன்றே. ஆனால் சேர்மங்களை தமிழ்ப்படுத்தும் பொழுது சிக்கல் வருகிறது. Iron chelate என்பதை எவ்வாறு கூறுவது. மேலும் ஓக்சியன் என்றே முதன்மைப்படுத்துகிறோம். ஆனால் உயிர்வாயு என்பது வழக்கத்தில் இருக்கிறது. எனவே எந்த எந்த தனிமங்கள் தமிழ்ப் பெயர்கள் கொண்டிருக்கும் என்பதையும் சற்று வரையறை செய்ய வேண்டும். --Natkeeran 17:09, 6 ஜனவரி 2009 (UTC)
கீலியம் என்பது keelium என்று ஒலிக்க வேண்டும். முதலொலி காற்றொலி கரமாக வரவேண்டும் எனில் இஃகீலியம் என்று கூறினால் நெருக்கமாக இருக்கும். ஈலியம் என்பது H நீங்கிய உயிரொலியுடன் ஒலிப்பது தமிழ் மரபு. அனுமன், அரி, அரன் (Hanuman, Hari, Haran), இம்சை (Himsa), இமாலயம் (Himalaya), இந்தோளம் (Hindolam), உண்டி (Hundi) என்று பல கூறலாம். இத்தாலிய மொழியிலும் இதே போன்றுதான். நாம் இட்லர் (Hitler) என்று கூறும்பொழுது H ஐ நீக்கிவிட்டு அடுத்து வரும் உயிரொலியைக் கொண்டு எழுதுகிறோம். Iron chelate என்பதை நாம் இரும்பு செலேட் என்று எழுதலாமே. பெரிக் (ferric), பெரசு (ferrous) என்றும் சொல்லலாம். ஆங்கிலத்திலும் இண்டியம் டின் ஆக்சைடு என்னும் பொழுதோ, சோடியம் குளோரைடு ன்னும் பொழுதோ, டங்சிட்டன் எக்சா புளூரைடு என்னும் பொழுதோ அறிவியற்குறியீடுகளுக்கும் வழங்கும் பெயர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கும்.--செல்வா 17:39, 6 ஜனவரி 2009 (UTC)
நாம் Hungary என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நாட்டை அங்கேரி என்கிறோம், அந்நாட்டினருக்கு அருகாமையில் இருக்கும் இத்தாலியர்கள் அந்நாட்டை Ungheria என்கிறார்கள். அங்கேரியர்கள் தங்கள் நாட்டின் பெயரை மாகியரோர்சாகு (Magyarország, IPA /mɒɟɒrorsaːɡ/) என்பது போல ஒலிக்கிறார்கள். தமிழை ஒரு கிள்ளுக்கீரையாக மதிப்பவர்கள், அதன் மொழிமரபுகளைப் போற்றவேண்டும் என்னும் அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் செய்வதைப் பின்பற்றுவது தவறாகும். ஆங்கிலத்தில் Broken Window Thesis அல்லது Cialdi effect என்று ஒன்று உண்டு. சிறுகச் சிறுக சீர்குலைப்பு செய்வதை அனுமதித்தால், மேலும் மேலும் சீர்குலைப்புகள் நீகழும் என்பது உண்மை. இது பற்றி அறிவியல் எனப்பொருள்படும் சயன்சு (Science) என்னும் ஆங்கில ஆய்விதழில் மிக அண்மையில் ஓர் ஆய்வுக்கட்டுரை வந்துள்ளது. இது பற்றி பின்னர் எழுதுகிறேன். சீர்குலைப்புகளை முடிந்த அளவுக்கு எதிர்த்தும், தடுத்தும் வரவில்லை என்றால், சீர்குலைப்புகள் பல வழிகளில் மேலும் கிளைத்துப் பெருகும் என்பது ஆய்வு முடிவுமட்டுமல்ல, நேர் துய்ப்பறிவு. முதல் எழுத்தை புள்ளி வைத்த மெய்யெழுத்துகளில் எழுதும் பழக்கம் அண்மையில் பெருகி வருகின்றது. கிரியா போன்ற அகராதிகள் பொறுபற்ற முறையில் எழுதி வழி வகுத்துள்ளார்கள். வேலியே பயிரை மேய்கிறது என்பார்களே அந்த வகையில். தமிழில் மெய்யெழுத்தில் ஒரு சொல் தொடங்குவதை இங்கு விக்கியில் தவிர்க்கப் பரிந்துரைக்க வேண்டும் என்பதைவிட கொள்கை முடிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது பற்றி நான் இட்ட வேண்டுகோள் இன்னும் அப்படியே உள்ளது. --செல்வா 17:39, 6 ஜனவரி 2009 (UTC)
விளக்கத்துக்கு நன்றி. கருத்துக்களுடன் உடன்பாடே. --Natkeeran 20:00, 6 ஜனவரி 2009 (UTC)

மெய்யெழுத்தில் சொல் தொடங்குதல்

கொள்கை வகுப்பதற்கான முன்மொழிவு - பயனர் கருத்து வேண்டல்

எந்தத் தலைப்பும் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது என்பதை பரிந்துரையாக அல்ல, கொள்கையாக அறிவிக்க முன்மொழிகிறேன். தமிழ்மொழியின் மரபுகளில் இது முக்கியமானவற்றுள் ஒன்று. தமிழ் மொழி இலக்கண வரம்புகள் கொண்ட மொழி. நெடுங்காலமாகவே இப்படி இலக்கண வரம்புகளுடன் உள்ள ஒருசில மொழிகளில் ஒன்று. 2500 ஆண்டுகளுக்கு மேலாக செழிப்புடன் வாழ்ந்து வரும் மொழி. இதன் மொழி மரபுகளை மீறி நடத்தல் தமிழ் விக்கிப்பீடியாவில் தவிர்ப்பது நல்லது, கடமையும் கூட. ஒன்றை எவ்வாறு கொள்கையாக அறிந்து அறிவிப்பது என்பது பற்றி அறிந்தவர்கள் (சுந்தர்? மயூரநாதன்? ரவி? மற்றும் யாரேனும்?) வழிகாட்ட வேண்டுகிறேன். --செல்வா 16:58, 27 டிசம்பர் 2008 (UTC)

இது ஒரு முக்கியமான கருத்து. இது பற்றி பயனர்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். இதனை ஆலமரத்திலும் இடுகின்றேன்.

--செல்வா 20:04, 6 ஜனவரி 2009 (UTC)

எந்த தமிழ் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது குறிப்பாக தலைப்பு கூடவே கூடாது. --குறும்பன் 22:54, 6 ஜனவரி 2009 (UTC)
இது ஒரு அடிப்படை தமிழ் இலக்கண விதி. இதை நாம் நிச்சியம் பின்பற்ற வேண்டும். விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கையேடு பரிந்துரைக்கலாம். அல்லது விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கொள்கைகள் என்று உருவாக்கி அதில் இடலாம். --Natkeeran 19:58, 6 ஜனவரி 2009 (UTC)

வழிமொழிகிறேன். விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கணக் கொள்கைகள் பக்கத்தில் பரிந்துரைத்து ஒரு வாரம் கழித்து கொள்கையாக அறிவிக்கலாம்--ரவி 04:00, 7 ஜனவரி 2009 (UTC)

அடிப்படையான மறுக்க முடியாத இலக்கண மரபு. கட்டாயம் கொள்கையாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:02, 7 ஜனவரி 2009 (UTC)

இலங்கை - தமிழகம் T எழுத்துப்பெயர்ப்பு

இலங்கையில் t என்ற எழுத்தை ர என்று எழுதுவது குறித்து பலமுறை உரையாடியுள்ளோம். ஆனால், புதுக்கோட்டையில் உள்ள பல பாமரர்கள், மழலை மாறா குழந்தைகள் t, d என்ற எழுத்து வரும் இடங்களில் ர என்ற உச்சரிப்பதைக் கண்டு வியந்தேன். எடுத்துக்காட்டுக்கு - train = ரெயின், duty = ரூட்டி. ஒலிப்பியல் நோக்கில் t - ர என்பவற்றுக்குத் தொடர்பு உண்டா? இலங்கைத் தமிழர்களின் எழுத்துப் பெயர்ப்பு இதை உணர்ந்தது தானா?--ரவி 04:36, 7 ஜனவரி 2009 (UTC)

ஒலிப்பியல் அடிப்படையில் கட்டாயம் தொடர்புண்டு. இந்த இரு ஒலிகளுமே பல்வரிசைக்கு அருகிலுள்ள அண்ணத்தை நா வருடுதல் வழி பிறப்பவை. தொல்காப்பியத்தில் பிறப்பியலில் பின்வருமாறு உள்ளது.
டகார ணகாரம் நுனி நா அண்ணம். (91)

ட, ண என்னும் எழுத்துக்கள் நாக்கின் நுனியும் மேல்வாய் நுனியும் பொருந்தப் பிறக்கும்.

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃ ஆயிரண்டும் பிறக்கும். (94)

நுனிநாக்கு மேலெழும்பி மேல் வாயில் தடவ ற, ன பிறக்கும்.

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (95)

நுனிநாக்கு மேலெழும்பி மேல் வாய்ப்பகுதியைத் தொட ர, ழ என்னும் எழுத்துக்கள் தோன்றும்.

வேறு எங்கோ தொல்காப்பியத்தில் அல்லது நன்னூலில் பிறப்பிடம் ஒன்றே என்றாலும் பழகிப்பார்த்தால் வேறுபாடு புரியும் என்று கண்டதாக நினைவு. ஆங்கிலச்சொற்களின் எழுத்துப் பெயர்ப்பில் தென்தமிழகக் கடலோர வழக்கு யாழ் வழக்கை ஒத்திருப்பதைக் கண்டுள்ளேன். தூத்துக்குடியில் Peter என்பதை பீற்றர் என்றே எழுதுகின்றனர். -- சுந்தர் \பேச்சு 05:44, 7 ஜனவரி 2009 (UTC)

ரவி, எனக்கறிந்த வரையில். Train - றெயின், duty- டியுரி. மயூரநாதன் வேறுபடுவார் என்று நினைக்கிறேன்.--Natkeeran 13:48, 7 ஜனவரி 2009 (UTC)
Train = ட்றெயின், duty - டியூட்டி. இவற்றை தமிழ் மூலம் ஆங்கிலம் படிப்பவர்களுக்கு எழுதினால் பயன்படும்.--Kanags \பேச்சு 20:37, 7 ஜனவரி 2009 (UTC)

தொடர்ந்து ஒரே இடத்துக்கு இணைப்பு தருதல்

தொடர்ந்து ஒரே இடத்துக்கு இணைப்பு தருதல் எவ்வளவு பொருத்தம் என்பது பற்றி ஒரு வழிகாட்டல் வேண்டும். குறிப்பாக ஒரு இடத்துக்கு இணைப்பு மட்டும் பங்களிப்பது விளம்பரமா என்று எண்ணத்தோன்றூகிறது. எந்த இணைப்பென்றாலும் ஒரு முழுமையான கட்டுரையாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது தகுமா. --Natkeeran 22:36, 8 ஜனவரி 2009 (UTC)

எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டால் கருத்து சொல்ல இயலும்.--ரவி 17:36, 12 ஜனவரி 2009 (UTC)

தமிழில் மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் பற்றி அரிய ஆய்வுக் கட்டுரைகள்

புதிய பரிணாமங்கள் --Natkeeran 22:42, 8 ஜனவரி 2009 (UTC)

மேலுள்ள இணைப்பில் பக்கம் 97 உக்குப் பின் அறிவியல் செய்திகளை மொழி பெயர்ப்பு செய்வதை பற்றி உள்லது. அதற்கு முன்னர், சட்டத்தமிழும் நல்ல கருத்துகள் கொண்டுள்ளன. சட்டத் தமிழில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொழுது உள்ள இடர்ப்பாடுகளைப் பற்றிக் கூறவில்லை. இவை மொழிகளுக்கு இடையே உள்ள இயல்பான ஓர் இடர். கடைசிப் பிரிவுகளில் உள்ள கட்டுரைகள் பயனூடையதாக இருக்கலாம். பொதுவாக மொழி பெயர்ப்பு என்பதை விட, கருத்தைத் தெளிவாக உள்வாங்கி தமிழில் படைத்தலே சிறந்தது (இது பெரும்பாலும் மூல மொழியை ஒத்தே இருக்கலாம், ஆனால் தமிழில் சொல்லும் பொழுது தமிழில் தெளிவாக விளங்குமாறு இருத்தல் வேண்டும். புதிதாக ஆக்கி சேர்க்கும் சொற்களையும், கட்டுரையிலேயே விளக்கலாம். அப்படித்தான் ஆங்கிலத்திலும், பிறமொழிகளிலும் அவர்கள் செய்கிறார்கள்.

--செல்வா 23:33, 8 ஜனவரி 2009 (UTC)

ஹ என்னும் எழுத்தின் பயன்பாடு

உலகில் மிகப்பெரிய மொழிகளாகவும் பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள பிரான்சிய மொழி, எசுப்பானிய மொழி ஆகியவற்றிலும், இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்தில் உள்ள H என்னும் எழுத்தின் ஒலிப்பு கிடையாது. பேச்சு:ஹேரோடோட்டஸ் என்னும் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். நாம் தமிழில் எரோடோட்டச்சு (Herodotus), ஓமர் (Homer) முதலான பெயர்களை வழிவழியாக தமிழில் எழுதுவதைப் போல, தமிழில் வழங்காத H ஒலியை நீக்கி, அடுத்து வரும் உயிரொலியைப் பற்றி எழுதுதல் பொருந்தும். பரவலான ஒப்புதல் இருந்தால் தமிழ் வழக்கத்தின் படியே நாம் இங்கு தமிழ் விக்கியிலும் எழுதலாம். Hamburg என்னும் நகரின் பெயரை இத்தாலியர் Amburgo என்று எழுதுகிறார்கள். நாம் ஏன் ஆம்புர்கு என்று எழுதலாகாது? --செல்வா 05:36, 11 ஜனவரி 2009 (UTC)

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஹாம்பர்க் என்பதற்கு வழிமாற்று இருக்கலாம். --குறும்பன் 16:02, 12 ஜனவரி 2009 (UTC)
ஓட்டல், இந்து சமயம், அனுமார் என்று ஹ தவிர்த்து எழுதும் வழக்கம் தமிழிலும் நெடுங்காலமாக உண்டு. எனவே, தயங்காமல் நாமும் எல்லா இடத்திலும் ஹ தவிர்த்து எழுதலாம் என்பதை வழிமொழிகிறேன். கிரந்தம் தவிர்த்து எழுத விரும்புவோருக்கான வழிமுறைகளைக் காணலாம்.--ரவி 17:42, 12 ஜனவரி 2009 (UTC)
தமிழில் நெடுங்காலமாக "வடவெழுத்து ஒரீஇ" (வடவெழுத்து நீக்கி) எழுதும் வழக்கம் உண்டு. நான் கூற வந்தது அது மட்டுமல்ல. H என்னும் எழுத்து இருந்தும், இத்தாலிய, மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள் அவற்றை விட்டோ, அல்லது அவர்கள் மொழியின் இயல்பின்படி ஒலிக்காமலோதான் பயன்படுத்துகிறார்கள். தமிழர்களில் சிலர் (என்னையும் சேர்த்தே) ஏதோ ஹீலியம், ஹைட்ரஜன் என்றுதான் எழுத வேண்டும், அறிவியல் சொற்களுக்கு இவை இன்றியமையாதது என்று எழுதி தவறான பாதையில் இட்டுச்செல்கிறார்கள். இத்தாலிய மொழியில் Helium என்பதை Elio என்னும் போது நாம் ஏன் ஈலியன் என்று எழுதலாகாது? ஆகவே எளிமை கருதியும், தமிழ் மொழியின் இயல்பு கருதியும், நெடுங்கால வழக்கு கருதியும், இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய எல்லா இடங்களிலும் ஹ என்னும் எழுத்தைத் தவிர்த்து எழுதுதல் நல்லது. ஆனால் செயல் படுத்தும் முன்னர் பயனர்கள் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும், நீங்களும், மயூரநாதன், சுந்தர், சிவக்குமார் போன்றோரும் ஒரு கருத்தை எவ்வாறு முன்மொழிந்து, கருத்தாடி, கொள்கையாய் அறிவிக்க வேண்டும் என்னும் வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டும். கருத்துகளை முறைப்படி முன் வைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் கருத்தாடி, பயனர்களின் ஏற்பு இருந்தால் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். --செல்வா 18:00, 12 ஜனவரி 2009 (UTC)

H எழுத்து தொடர்பில் ஹ தவிர்த்து எழுதும் போது இந்து, அனுமார், ஓட்டல் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் Hong Kong எப்படி எழுதுவது?நான் "கொங் கொங்" என்று பயன்படுத்துகின்றேன். இருப்பினும் இது பொருத்தமானதாக இல்லை. உங்கள் பரிந்துரை என்ன? --HK Arun 20:20, 12 ஜனவரி 2009 (UTC)

ஆங்க் காங் அல்லது ஆங்க் காங்கு என்று கூறலாம். ஆங்கில ஒலிப்புமே அப்பகுதியின் சீன மொழி ஒலிப்புக்கு மாறானதாகவே இருக்கும். ஆகவே நமக்குப் புரியுமாறு, ஓரளவிற்கு ஒலிப்பு காட்டுமாறு இருந்தால் போதுமானது. ஆங்கில ஒலிப்பு மாதிரியே இருக்க வேண்டுமென்றாலும், ஃஆங்க் காங் என்றால் சரியாக இருக்கும். முதல் எழுத்தாக ஆய்த எழுத்து வருவது அவ்வளவு சரியில்லை என்று கருதுவோர், அஃகோங்க் காங் என்றோ அஃகோங்க் காங்கு என்றும் எழுதலாம். --செல்வா 21:14, 12 ஜனவரி 2009 (UTC)
ஹ எழுத்து தவிர்ப்பதில் எனக்கும் உடன்பாடே. ஏற்கனவே ஆங்காங் என்ற பயன்பாடு தமிழகத்தில் உண்டு. ஆங்காங்கு என எழுதுவதில் எனக்கு பெரிதும் உடன்பாடில்லை. (தமிழ் இலக்கணத்தின் படி அது சரியானதாக இருக்கலாம்). அதனால் ஆங்காங் (தமிழக முறை-பரவலானது), ஒங்கொங் (ஈழ முறையில்) எழுதலாம் என்பது என் பரிந்துரை. ஆயுத எழுத்தைப் பாவிப்பது மேலும் குழப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்பது என் கருத்து.--Kanags \பேச்சு 21:51, 12 ஜனவரி 2009 (UTC)
கனகு, நீங்கள், //ஆயுத எழுத்தைப் பாவிப்பது மேலும் குழப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்பது என் கருத்து// என்று எதனால் சொல்லுகின்றீர்கள் என்று விளக்க முடியுமா? H என்பதற்கு நெருக்கமான ஒலி ஆய்த எழுத்துதான். நீங்கள் அஃது, இஃது, உஃது, எஃகு ஆகிய சொற்களை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். தமிழில் நிறைய சொற்களில் ஆய்த எழுத்து பயன்படுகின்றது.ஆனால் தற்பொழுது பரவலாக அறியப்படும் சொற்கள் அஃது, இஃது, எஃகு, பஃறுளி ஆறு என்பன மட்டுமே, ஆனால் மேலும் பல சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு: அஃகல் (குறைதல், நுணுகல்), அஃகுல்லி (எங்கள் வீட்டில் செய்யும் உக்காரி என்னும் சிற்றுண்டி), அஃறிணை, அஃதை (திக்கற்றவர், இன்று அகதி என்பதுதான்), அஃகுள் (அக்குள்- கை தோளில் சேரும் இடத்தில் கையின் அடிப்புறம்), அஃபோதம் (நிலாமுகிப் புள் என்னும் பரவை. இதனை சகோரம் என்றும் சொல்வர்), அஃகேனம் (மூன்று புள்ளிகளால் குறிக்கப்படும் ஆய்த எழுத்து). எஃகம் ( = கூர்மை, ஆயுதம், வேல், எறிபடை, வாள், சூலம்), எஃகு (உருக்கு, மனவொடுக்கம், எதிர்த்தாக்கு, எட்டு, உதைத்தேறு, கைக் குழந்தைகளை எஃகு என்று கூறி ஊக்குவிப்பது இன்றும் எங்கள் வீடுகளில் உண்டு, எஃகுதல் என்பது வினை), எஃகுதல் என்றால் நீளுதல் என்றும் பொருள். எஃகுறுதல் என்றால் (இளகி) அறுக்கப்படுதல், எஃகுதலலென்றால் நெகிழ்தல் என்னும் பொருளும் உண்டு (எஃகுறுதல் = அறுக்கபடுதல் என்னும் பொருளும் இதன் வழி வருவதே). எஃகுபடுதல் = இளகின நிலையை அடைதல். எஃகுக்கோல் = பஞ்சுகொட்டும் வில். எஃகுச்செவி = நுனித்தறியுஞ்செவி (இறுகின செவி அல்ல, நெகிழ்ந்து நுட்பமாய்க் கேட்கும் செவி). ஒஃகல், ஒஃகுதல் = ஒதுங்குதல், பின் வாங்குதல். கஃகான் = ககரம், கஃசு = காற்பலம், கஃறு என்பது நிலத்தை உணர்த்தும் குறிப்பு மொழி, கஃறெனல் = கறுத்து விளங்குதல், கறுப்பாகுதல். சஃகுல்லி = மோட்சம், ஒரு வகை சிற்றுண்டி. , பஃறி = மரக்கலம், இரேவதி என்னும் நாள்மீன், பஃறியா = நெய்தல் நிலமாக்கள், பஃறுளி = ஓர் ஆறு, மஃகான் = மகரம், வெஃகல் = ஆவல் பெருக்கம், மிகுவிருப்பம், வெஃகாமை = வேண்டாமை.--செல்வா 00:52, 13 ஜனவரி 2009 (UTC)
மேலுள்ள எல்லாச் சொற்களிலும் ஆய்தம் சற்று அடித்தொண்டை ஒலிதான். நேரடியான H அல்ல. ஆனால், ஆய்த எழுத்திற்கு நெருக்கமான ஒலிப்பு H தான் (நேரான ஒலிப்பு அல்ல, நெருக்கமான ஒலிப்பு). ஃஆ என்பது Haa என்று ஒலிக்கும். இது செயற்கையாக ஃப என்றால் fa என்பது போல அல்ல. உண்மையிலேயே ஃஅ, ஃஆ, ஃஇ முதலியன Ha, Haa, Hi ("He" போல)என்று ஒலிக்கும். எஃகு என்பது போல இஃகிட்லர் என்பதை iHitlar என்று ஒலிக்க வேண்டும்.--செல்வா 00:52, 13 ஜனவரி 2009 (UTC)
நான் ஆயுத எழுத்துக்கு எதிரானவனல்ல. ஆனாலும் வழக்கத்திலிருக்கும் முறையை ஏன் நாம் மாற்ற வேண்டும்? அதனால் மேலும் குழப்பமடையலாம் என்றே அப்படிச் சொன்னேன். ஓட்டல், இந்து சமயம், அனுமார் போன்ற சொற்களில் ஆயுத எழுத்து எங்கே போனது? அதுபோலவே ஆங்காங் என்ற சொல்லில் ஆயுத எழுத்து தேவையில்லை என்பதே என் கருத்து. அது சரி, ஆயுதம் தானே சரி. ஆய்தம் என்று ஏன் எழுதுகிறீர்கள்? அல்லது ஆயிதம் என்றல்லவா தமிழில் எழுதுவது முறை?--Kanags \பேச்சு 02:06, 13 ஜனவரி 2009 (UTC)
அண்மைக்காலத்தில் தொடர்ந்து பங்களிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். அனுமன், இந்தி போன்ற சொற்களில் பொதுவழக்கு ஆதரவும் உள்ளதால் என்ற எழுத்தை முழுமையாக தவிர்ப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே கருதுகிறேன். செல்வா கேட்டபடி, கொள்கை முன்வடிவுகளை இடுவதற்கும், கருத்து தெரிவிக்கவும், வாக்கெடுப்புக்கும் (தேவையிருந்தால்) ஒரு முறைமை உருவாக்க வேண்டும். பின்னர் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 02:29, 13 ஜனவரி 2009 (UTC)

ஆங்கிலத்தில் IPA இருப்பது போல், ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டிய இடங்களில் தமிழ் மூலம் எழுதிக் காட்ட நாம் சில குறியீடுகளைக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், அது ஒரு போதும் பொது வழக்காகாது. ஆங்கிலத்தில் எல்லா ஒலிகளையும் 26 எழுத்துகள் கொண்டு எழுதுவது போல் நாமும் 247 தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதுவது நலம். பெரும்பான்மை மக்கள் பேச்சு வழக்கில் கிரந்த ஒலிகள் தவிர்த்தே பேசுகிறார்கள். அதை எழுதிக் காட்ட இருக்கிற தமிழ் எழுத்துகளே போதும்.

ஆய்தம் H ஒலியை ஒத்து இருந்தாலும் சொல்லின் முதலில் ஆய்தம் வருவது போன்ற இல்லாத வழக்கங்களைத் திணிப்பது தவறு. ஆய்தம் இயல்பாகத் தமிழ்ச் சொற்களில் வரும் இடங்களில் மட்டும் அதைப் பயன்படுத்துவது நலம். மொழியில் இல்லாத எழுத்துகளைத் திணிப்பது போன்றே, மக்களுக்கு இயல்பாக வராத ஒலிகளைத் திணிப்பதும் தவறே ஆகும். கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து குறியீடுகளைக் கொண்டு வந்தாலும், மக்கள் மீதான இந்த ஒலித்திணிப்பு தொடரவே செய்யும். எனவே, இவ்வொலிகள், அதைத் திணிக்கும் கருவிகளான எழுத்துகள், குறியீடுகளை முற்றிலும் புறக்கணிப்பதே என் பரிந்துரை. --ரவி 04:38, 13 ஜனவரி 2009 (UTC)

ஒத்திசை கொள்கை தேவை

கிரந்த எழுத்துக்களில் மிகவும் பரவலான பயன்பாட்டில் இருப்பது ஸ். அதற்கு அடுத்ததாக இருப்பது ஜ, மற்றும் ஹ. இவை தவிர ஜு, ஜூ ஆகியவை ஜுன் ஜூலை ஆகிய இரு முக்கிய சொற்களில் இருக்கின்றன. இதே எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்பட்ட வேறு எந்த சொற்களை நான் அறியேன். ஷ, ஷ் போன்றவை குறைந்த பயன்பாட்டில் இருக்கிறது. எனவே ஹ என்ற எழுத்துக்கு மட்டும் கொள்கை வகுப்பது தகாது. ஹ ஒ, ஸ ச, ஜ ?, ஜு யு, ஜூ யூ எவை தமிழ் ஒலுப்பு முறைக்கு ஒத்த வரும் என்று எடுத்துகாட்டுகளுடன் பரிந்துரை தருவது நன்று. மேலும் அந்த அந்த பயனர்கள் இயற்றிய கட்டுரைகளில் தகுந்த மாற்றங்கள் செய்யலாம். அல்லது முதன்மைக் கட்டுரை ஆக்குனர் ஆட்சோபிக்க மாட்டார் என்று தெரிந்தால் மாற்றங்கள் செய்யலாம்.

தமிழ் ஒலிப்புக்கு ஒத்து வரும் கிரந்த ஒலி என்று ஏதும் இருக்கிறதா தெரியவில்லை. கஞ்சி, இஞ்சி போன்ற சொற்கள் இருப்பதால் ஜி என்ற கிரந்த ஒலி தமிழுக்கு ஒத்து வருவதாக சிலர் சொல்வார்கள்!!! பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கில் கவனித்தவரை எல்லா கிரந்த ஒலிகளுமே தமிழ்வயமாகியே ஒலிக்கின்றன. ரமேஷ் என்று பெயர் வைப்பார்கள். ஆனால், அழைக்கும் போது வரும் ஒலி ரமேசு என்றே இருக்கும். ஹ வுக்கு மட்டும் தனியாக கொள்கை ஆக்காமல் எல்லா கிரந்த ஒலிகளுக்கும் கொள்கை ஆக்குவதே சரியாக இருக்கும். ஆனால், நடைமுறை காரணங்களால், இலகுவாக கருத்து ஒற்றுமை ஏற்படும் ஹ தவிர்ப்பு போன்றவற்றை முதலில் செயல்படுத்தலாம் என்று நினைக்கிறேன்--ரவி 04:26, 13 ஜனவரி 2009 (UTC)

ரவி, தமிழில் பல "கிரந்த" எழுத்தின் ஒலிகள் கட்டாயம் உள்ளன, ஆனால் தமிழில் முறையான இடங்களில்தான் வரும். பல "கிரந்த" ஒலிகள் தமிழ் ஒலியும் கூடத்தான், ஆனால் முறை பிறழ்ந்து வரலாகாது. இது "கிரந்த" ஒலிகளுக்கும் மட்டும் அல்ல. தமிழ் ஒலி என்று கூறும், ழகரம், டகரம், ணகரம் போன்றவற்றுக்கும் பொருந்தும். பிறமொழிகள் போல் அல்லாமல் தமிழில், ஒரு சொல்லின் முதல் ஒலிகளாக வரும் எழுத்துகள் யாவை, கடைசி எழுத்துகளாக வருவன யாவை, எந்த எழுத்துக்கு அடுத்து எந்த எந்த எழுத்துகள் வரலாம் என்பன நுட்பமாய் ஆய்ந்து விதிகள் வகுத்துள்ளனர். தமிழில் முதலில் B, G முதலிய ஒலிகள் வரலாகாது. ஆகவே Bill Gates என்பதை எழுத இயலாது. இபில் இகேட்சு என்றால் அந்த B, G வரும். ஆனால் இகேட்சு என்பதை igaytchu என்று ஒலிக்க வேண்டும். ஆகவே உயிரொலியை முன்னே சேர்த்தால் G, D, Dh, B ஆகியவற்றைப் பெறலாம். இகார்டனர் (Gardener) இடேவிட் (David), இடம்டம் வானூர்தி நிலையம் (Dumdum Airport) , இபில் (Bill). ஜ என்னும் ஒலிப்பு இஞ்சி, கொஞ்சு, தஞ்சம், பஞ்சு போன்ற சொற்களில் உண்டு ஆனால் ராஜா என்பதை ரா(ஞ்)சா என்று எழுதினால்தான் காட்ட முடியும். ஹ என்னும் ஒலி ஆய்தம் கொண்டு காட்டலாம். ஷ என்பது ஏறத்தாழ ழ்ச என்னும் ஒலிப்புதான். ஸ என்பது தமிழில் உள்ள பசி, காசு, பேசு முதலான சொர்களில் உள்ளதே (ஏறத்தாழ). ஸ்க்கூல் என்பதை இசுக்கூல் என்றால் காற்ரொலி சகரம் வரும். தமிழில் மெய்யொலி கூட்டங்கள் அவ்வளவாக வராது, அவை தமிழ் மொழியின் இயல்புக்கு முரணானது. இடையே உயிரொலி இட்டுப் பிரித்து ஒலிப்பதே நம் மொழிக்கு இயல்பானது. எனவே இசுக்கூல் என்றால் தவறில்லை. இதனை பழிப்பவர்கள், கிண்டல் செய்பவர்கள், மொழியில் பல மொழிகளின் இயல்புகளை அறியாதவர். --செல்வா 05:41, 13 ஜனவரி 2009 (UTC)


கிரந்த எழுத்துக்களை கூடிய மட்டிலும் குறைவாகப் பயன்படுத்தலாம் என்பதே இப்போதைக்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். கிரந்தம் அறவே இல்லாமல் எழுதலாம், என்றாலும் ஆனால் அது எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுதல் வேண்டும். கிரந்தம் இல்லாமல் எழுத தமிழில் தெளிவான முறைகள் உள்ளன. இம்முறைகளைக் கைவிடுவதாலேயே குழப்பங்கள் வருகின்றன. சீனிவாசன், சிரீதரன் என்று எழுதி வந்தவர்கள் இன்று ஸ்ரீநிவாஸந், ஸ்ரீதர் என்று எழுத வேண்டும் என்கிறார்கள். இப்பொழுது சுபஸ்ரீ , ஜெயஸ்ரீ என்பது போல மேலும் மேலும் பெருக்கிக்கொண்டே போகிறார்கள். இப்பெயர்களை சுபசிரீ, செயசிரீ என்றுதான் தமிழில் எழுத வேண்டும் என்பதை இவர்கள் மதிப்பதில்லை. எனவேதான் இந்தப் போராட்டம். நாம் இங்கே தமிழ் விக்கியில் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் கீழ்க்காணும் முறைகள் ஒரு தீர்வு (ஒரே தீர்வு இல்லை)

 • ஸ் - கடைசி எழுத்தாக இருந்தால் சு என்று குறிக்கலாம். சில இடங்களில் குழப்பம் தரலாம், ஆனால் அது எல்லல மொழிகளிலும் உள்ளதே. தமிழில் புலி, புளி, புழி, அலகு, அழகு, அளகு என்பனவற்றை ஆங்கிலத்தில் வேறுபடுத்திக்காட்ட இயலாதது போலவே. கடைசி ஸ் - எ.கா சாக்ரட்டீசு, போசு (Bose).
 • இடையே ஸ் வந்தால் சி, சு முதலான எழுத்துக்களில் குறிப்பிடலாம். அரிசுட்டாட்டில் அல்லது அரிசிட்டாட்டல். பாசிட்டன் அல்லது பாசுட்டன் (Boston)
 • முதலில் ஸ் வந்தால் முன்னே இகரம், அகரம் உகரம் சேர்க்கலாம். எசுப்பானிய மொழியில் Strontium என்பதை Estroncio என்றும். Scandium என்பதை Escandio என்றும் எழுதுகிறார்கள். அதுபோலவே, தமிழில் எசுட்ரான்சியம், எசுக்காண்டியம் என்று கூறலாம். முன்னே ஒரு உயிரெழுத்தை சேர்த்தால் ஸ் ஒலி தானே வந்து விடும். எ.கா: பசி, காசு, ஏசு, தூசு ஆகிய சொற்களைப் பார்க்கலாம். ஒலிப்பில் சிறு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது ஏற்புடையதே. சுவீடன், சிக்காண்டினேவியா என்பது போல. ஸ்நேகம் என்பதை சினேகம் என்று எழுதுவதைப் போல. பிற இடங்களில் ஸ் என்னும் எழுத்தை முற்றிலுமாக விட்டு விட்டும் எழுதலாம். ஸ்தலம் என்பதைத் தமிழில் தலம் என்று எழுதுவதை போல. ஸ்தூலம் என்பதை தூலம் என்பது போல.
 • ஷ என்னும் எழுத்தை தமிழில் வழக்கமாக ட வாக பயன்படுத்துவது முறை. புஷ்பம் = புட்பம், விஷயம் = விடயம், விபீஷ்ணன் = விபீடணன், கிருஷ்ணன் = கிருட்டினன். ரிஷி அல்லது ருஷி என்னும் சொல்லைத் தமிழில் இருடி என்று கூறுவது தொல் வழக்கம். மாற்று முறை வேண்டுமென்றால், ஓரளவிற்குத் தமிழ் முறையை மீறி வருவது ஆனால் தமிழ் எழுத்துக்களால் வருவது ஷ் = ழ்ச்.

எ.கா. உஷா = உழ்சா, விபீஷ்ணன் = விபீழ்சணன் , ருஷி = ருழ்சி அல்லது இருழ்சி. போஷாக்கு = போழ்சாக்கு (போசாக்கு). ஒலிப்பு நெருக்கம் காட்டவே ழ்ச் என்னும் முறையைக் காட்டினேன், எல்லா இடத்திலும் பரிந்துரைக்க அல்ல.

 • ஜ, ஜு என்பன கட்டாயம் ச, சூ என எழுதலாம். ஜனவரி என்பதை சனவரி என்று எழுதுவது பெரு வழக்கு. ஜூன், ஜூலை = சூன், சூலை (ஒலிப்பு choon, choolai). ஜெயராமன் = செயராமன் (cheyaraaman). ஜெயஸ்ரீ = செயசிரீ. இடையே வருவது: பங்கஜம் = பங்கயம், பங்கசம்; ராஜம் = ராசம் (ராசு என்று அழைப்பது பெரு வழக்கம்). ரோசா, ராசா, செல்வராசு, தங்கராசு, ராசாத்தி.
 • கடைசியாக பல ஒலிகளை ஒலித்திரிபுக் குறிகள் இட்டுக் காட்ட இயலும். என் பரிந்துரைகளை இங்கே பார்க்கலாம்; என்னுடைய இன்னொரு பரிந்துரையை இங்கே பார்க்கலாம். இதனால் மேலும் பல ஒலியன்களைப் புதிய எழுத்துக்கள் இல்லாமல், தமிழ் எழுத்துக்களின் சிறு திரிபாக அறிந்து சிறுபான்மையான இடங்களில் பயன்படுத்தலாம்.

--செல்வா 05:15, 13 ஜனவரி 2009 (UTC)

  • முழுக்க உடன்படுகிறேன். 'சு' என்பதைச் சொல்லின் இறுதியில் தருவதில் சிலருக்கு தயக்கம் இருக்கலாம். பல இடங்களில் அது குற்றியலுகரமாக வருவதால் ஒலிப்பில் வெகுநெருக்கமாக இருக்குமென்பதைக் காட்ட விரும்புகிறேன். 'ஷ' சொல்லின் இடையில் வருகையில் டகரத்தையும், பிற இடங்களில் சகரத்தையும் பயன்படுத்தலாம். ழ்ச தேவையில்லை என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:14, 13 ஜனவரி 2009 (UTC)
மிகப்பல பொறுப்புகள் இருக்கும் இந்நேரத்திலும், கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சுந்தர். தமிழர்கள், கிழக்கே சீன மொழி முதல் மேற்கே அரபு மொழி, கிரேக்க இலத்தீன் மொழிகளும் இந்தியாவின் வடக்கே ஆரிய மொழிகளையும் காலங்காலமாக நன்கு அறிந்து வந்திருக்கின்றார்கள். பிற ஒலியன்களை அறிந்திருந்த பொழுதும், அவற்றை எல்லாம் எடுத்து ஆளவில்லை. அவ்வொலிகள் உள்ள பிறமொழிச்சொற்களைக் குறிக்க நேர்ந்தால், எப்படி கையாளவேண்டும் என்றும் தெளிவாக விதிகள் வகுத்துள்ளார்கள். எனவே பிறமொழி ஒலியன்களை குறிக்க வசதிகள் இருந்தாலும், அளவிறந்து பயன்படுத்தினால் நம் மொழி சிதையும், கெடும். எளிமையான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நல் உயிர்ப்புடன் இன்றும் வாழ்மொழி. எனவே நான் குறிப்பிட்டதெல்லாம் மிகச் சிறுபானம்மையான இடங்களில் தேர்ந்து ஆளவே. Sha என்பதற்கு ழ்ச என்று பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. பிரான்சிய பெயர்களிலே Jean, Jacques Chirac போன்ற சொற்களிலே வரும் முதல் ஒலியை இழ்சான், இழ்சாக் என்றால் ஒலிப்புத்துல்லியம் கிட்டும். ஆனால் ழ்ச என்னும் ஒலிக்கூட்டல் தமிழ் ஒலிப்புகளை சிதைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. மகிழ்ச்சி, நிகழ்ச்சி என்பனவற்றை magishchi, nigashchi என்று வழங்கும் தீவாய்ப்பு உள்ளது (தமிழ் ஒலிப்பு சிறிது திரிந்துவிடும்). Jean என்பதை நாம் சான் என்றே கூறலாம். John என்பதனையும் நாம் சான் எனலாம். சாக் சிராக் என்றும் கூறலாம். அண்மையில் Jacques Cartier என்னும் கட்டுரையில் இழ்சாக் கார்ட்டியே என்று நான் எழுதினேன். இச்சொல்லை ஏறத்தாழ இப்படித்தான் இங்கு பலுக்குகிறார்கள். ஷாக் கார்ட்டியே என்பதைவிட மிக நெருக்கமான ஒலிப்பு. தமிழ் ழகரமும், மெலிவுற்ற ஷவும் கலந்த ஒலி எனலாம். வட மொழி ஷகர ஒலியிலேயே இன்னும் வலிந்த ஷகரமும் உண்டு. உஷா என்பதில் வரும் ஒலி வேறு ஷங்க்கர் என்னும் சொல்லில் வரும் ஷகரம் வேறு. Jacques Cartier என்னும் சொல்லில் வரும் ஷகரம் இவை இரண்டினைக்காட்டிலும் மெலிந்தது. இப்படி நூற்றுக்கணக்கான ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்ட முற்படுவது, அதுவும் தனி எழுத்துகளால் என்பது தவறான போக்கு என்பது என் கருத்து. தமிழ் எளிமையாகவே இருக்கட்டும். கருத்துகளை நுட்பமாய், விரிவாய், தெளிவாய், நிறைவாய் எழுதுவதில் முனைப்பு காட்டுவோம். ஒலிப்புத் துல்லியத்தை ஒரு சிறு அளவிற்கு மேல் பொருட்படுத்தத் தேவை இல்லை. நாம் எழுதுவது தமிழர்களாகிய நம் மக்களுக்கு. தமிழ் முறைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதுவோம். கூடிய மட்டிலும் பிறமொழி ஒலியன்களை தவிர்த்து, கிரந்தம் தவிர்த்து எழுதுவோம். அனுமன், ஓட்டல், ஓமர், எரோடோட்டசு என்பது போல --செல்வா 14:53, 13 ஜனவரி 2009 (UTC)


கூடிய மட்டிலும் பிறமொழி ஒலியன்களை தவிர்த்து, கிரந்தம் தவிர்த்து எழுதுவோம்.இதனை நாம் ஒத்திசைவு கொள்கையாக்குவோம்.--கலாநிதி 16:33, 13 ஜனவரி 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் கட்டுரைகளுக்கு கூடுதல் உழைப்பு தருவோம்

//கிரந்தச் சொற்கள் தேவையான போது கலக்காமல், வடமொழிச் சொற்களே எதிலும் இல்லாமல் விஞ்ஞானக் கட்டுரைகள் யார் எழுதி வருகிறார் என்பதற்குச் சான்றுகள் காட்டுங்களேன். அவ்விதம் எத்தனை கட்டுரைகள் உள்ளன ?// --ரவி 04:21, 13 ஜனவரி 2009 (UTC)

தமிழ் தமிழாக இருப்பதே தமிழுக்குக் சிறப்பு. முடிந்தவரை அந்நிய மொழி கலப்பு தவிர்ப்பதே நல்லது.

அந்நிய மொழி ஒலிப்புகளும் தம் மொழியில் இருக்க வேண்டும் என விரும்பி உலகில் உள்ள எல்லா ஒலிப்புகளையும் தம்மொழியில் புகுத்திக் கொண்ட சிங்களம் போலாகிவிடக்கூடாது. சிங்களத்தில் மொத்த எழுத்துக்கள் எத்தனை தெரியுமா? 2280. (உலகில் அதிக எழுத்துக்களை கொண்ட மொழி இதுவாக இருக்குமோ!) அன்மையில் 1990 களின் F ஒலிப்புக்கும் எழுத்து உருவாக்கியிருக்கிறார்கள். --HK Arun 07:21, 13 ஜனவரி 2009 (UTC)

நன்றாகச் சொன்னீர்கள் அருண். நன்றி. மேலே இது தொடர்பாகவும் சில கூறியுள்ளேன் பார்க்கவும். --செல்வா 14:56, 13 ஜனவரி 2009 (UTC)