விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு33

தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் - பேர்கன், நோர்வே

தொகு
 
 

நேற்று 27.03.10 அன்று நோர்வேயில் பேர்கன் நகரிலுள்ள அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு தமிழ்விக்கிப்பீடியாபற்றி ஒரு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். 25 பேர் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஆர்வத்துடன் வந்து பங்கெடுத்தனர். பலருக்கும் அப்படி த.வி ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தாலும், அதைத் தெரிந்து கொண்டதும், தமிழில் இப்படியான முயற்சியை எண்ணி மகிழ்ந்ததுடன், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தமது விருப்பத்தையும் தெரிவித்தனர். தமிழ் விக்கியில் பங்களிப்புபற்றி ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டனர். முழுமையாக செய்முறையை நேற்று செய்து காட்ட முடியாமல் போனமையால், பிறிதொரு நாளில் அதை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கிழமை விடுமுறையானதால், அதைத் தொடர்ந்து வரும் ஒரு சனிக்கிழமையில் மீண்டும் அங்கே அவர்களுக்கு த.வி. யில் பங்களிக்கும் முறைபற்றி விளக்கிச் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் செப்டம்பர் மாதத்தில் ஓரிரு நாட்கள் நோர்வேயின் பல பகுதிகளிலுமிருந்து இங்கே பேர்கனில் பலரும் கூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், அப்போதும் நாம் இதுபோன்றதொரு அறிமுகம் செய்ய முடியும் என்றும் கூறினார். --கலை 23:09, 28 மார்ச் 2010 (UTC)

மிகவும் மகிழ்ச்சியான செய்தி கலை! பாராட்டுகள்! தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்ய பவர் பயிண்ட் (திரைக் குறிப்புகள்) வேண்டும் என்றால் நற்கீரனோ, ரவியோ தந்து உதவ முடியும். இவை பரத்தீடு (presentation) செய்ய உதவும். அடுத்த சனிக்கிழமைக்குப் பிறகு உங்கள் செய்திகளை இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி. --செல்வா 00:58, 29 மார்ச் 2010 (UTC)


நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் பணி.

-- மகிழ்நன் 03:03, 29 மார்ச் 2010 (UTC)

பாராட்டுக்களுக்கு நன்றி செல்வா, மகிழ்நன்.

செல்வா! நக்கீரன் ஏற்கனவே திரைக் குறிப்புக்கள் அனுப்பியிருந்தார். அதில் மேலும் சில மாற்றங்கள் செய்து, இற்றைப்படுத்திய பின்னர், Power Point Presentation கொண்டுதான் த.வி. அறிமுகத்தை அங்கே செய்திருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட படத்தை முடிந்தால் பின்னர் இங்கே இணைக்கிறேன். த.வி பற்றி, அதன் கொள்கைகள், அங்கே மற்றையோருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய, அங்கே பங்களிக்க வேண்டிய தேவை, அவசியம் பற்றி எடுத்துச் சொன்னேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம்வரை அந்தக் கூட்டம் நீடித்தது. தமிழ் அகரமுதலி பற்றியும் ஆர்வமாகக் கேட்டு அறிந்தனர். அங்கே எப்படி சொற்களைத் தேடுவது என்று சில சொற்களைத் தேடியும் பார்த்தோம். மேலும் விக்கிமேற்கோள்களையும் எடுத்துப் பார்த்தோம்.

அவர்களுக்கு நேரடியாக ஒரு கட்டுரையை எப்படி ஆரம்பித்து எழுதுவது என்பதுபற்றியும் சொல்லிக் கொடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு நேரம் போதாமல் இருந்ததால், அதை இன்னொருமுறை செய்வதாக முடிவெடுத்தோம். அதுபற்றி பின்னர் இங்கே அறியத் தருகின்றேன். நன்றி. --கலை 09:33, 29 மார்ச் 2010 (UTC)

நல்ல முயற்சி, கலை. புலம்பெயர் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் விக்கியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலரையும் ஒருங்கே சென்றடைவதற்குச் சிறந்த வழி. நோர்வே, அண்டை நாடுகள் முழுமைக்குமான தமிழர் அறிவுக் கூடல்களில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் நன்று--ரவி 13:51, 29 மார்ச் 2010 (UTC)

கலை, தமிழ் விக்கியின் பரப்புரை முயற்சிகளில் புதிய முனை ஒன்றைத் திறந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சியைத் தொடருங்கள். எனது நல்வாழ்த்துக்கள். மயூரநாதன் 15:16, 29 மார்ச் 2010 (UTC)

வாழ்த்துக்களுக்கு நன்றி ரவி, மயூரநாதன். மாணவர்களுக்கும் அறிமுகம் செய்வதுபற்றி அன்றே யோசித்தோம். ஆனாலும், முதலில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு இதனை செய்து பின்னர், நேரத்தைப் பொறுத்து மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணினோம்.--கலை 23:14, 29 மார்ச் 2010 (UTC)
அப்படியே விக்கிசெய்திகளையும் அறிமுகப்படுத்தி விடுங்கள். உள்ளூரில் செய்தி எழுத ஆர்வமாக இருப்பவர்களை அறிமுகப்படுத்துங்கள்.--Kanags \உரையாடு 01:41, 30 மார்ச் 2010 (UTC)
கலைக்கு மிக்க நன்றிகள். பல்வேறு பழுக்களுக்குள் மத்தியிலும் இவர் இதை செய்துள்ளார். ஒரு சில ஒளிப்படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 01:40, 30 மார்ச் 2010 (UTC)
பாராட்டுகள் கலை. இந்நிகழ்வைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை வெளியுறவு விக்கியில் பதிந்து வைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:15, 30 மார்ச் 2010 (UTC)
Kanags, Natkeeran, சுந்தர் நன்றிகள். Kanags! அன்று விக்கிசெய்தி பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் விபரமாகப் பேசவில்லை. அடுத்த கூட்டத்தில், எப்படி எழுதுவது என்று சொல்லும்போது செய்திகளையும் பார்க்கிறோம். சுந்தர்! விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், இதுபற்றிய சிறு குறிப்பை எழுதுகின்றேன். ஆனால் எங்கே சிறுகுறிப்பை இடுவது? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே முதல் பக்கத்திலா, அல்லது Event எனக் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திலா? என்ன தலைப்பில் கொடுப்பது என அறியத்தாருங்கள். Natkeeran! உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நோர்வேயில் த.வி. அறிமுகம் செய்யும்படி என்னைத் தூண்டினீர்கள் :) கலை 11:08, 30 மார்ச் 2010 (UTC)
ஒளிப்படங்களை இங்கே மேலே இணைத்திருக்கிறேன்.--கலை 13:40, 30 மார்ச் 2010 (UTC)
மிக்க நன்றி. இதெல்லாம் அருமையான வரலாற்றுப் பதிவுகள் கலை! வந்து பங்குகொண்ட தமிழார்வலர்களையும் போற்றுகின்றேன். --செல்வா 15:16, 30 மார்ச் 2010 (UTC)
நல்ல முயற்சி. தொடர்க உங்கள் தமிழ்ப் பணி. வாழ்த்துகள் -:) --Ragunathan 10:00, 1 ஏப்ரல் 2010 (UTC)
மிகவும் நல்ல முயற்சி. தகவல் பக்கங்களை ஆக்குதலுக்கு ஈடான - இன்னும் சொல்லப் போனால், அதனினும் மேலான ஒரு பணியை செய்துள்ளீர்கள். உள்ளூர்த் தமிழ் மக்களுக்குள்ள இந்த ஆர்வத்தை மேலும் தூண்டி அவர்களை விக்கிப்பீடியர்களாக மாற்றுங்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளைச் செய்து வாருங்கள். --பரிதிமதி 06:34, 2 ஏப்ரல் 2010 (UTC)
தாங்கள் தரும் ஊக்கத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றி Ragunathan, பரிதிமதி. --கலை 23:27, 5 ஏப்ரல் 2010 (UTC)
கலை, உங்கள் ஆர்வமும் முனைப்பும் அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளக்கூடியது. நீங்கள் ஏற்றிவைத்த இந்த தீபம் நந்தாவிளக்காகத் திகழ பங்குகொண்டவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.வாழ்க உங்கள் பணி. --மணியன் 06:18, 6 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி மணியன்.--கலை 12:06, 15 மே 2010 (UTC)[பதிலளி]

இரு முக்கிய நுட்ப முன்னேற்றங்கள் - wysiwyg தொகுப்பி பற்றிய விளக்கம், தமிழ் தட்டச்சு

தொகு
  • எழுத்துப்பெயர்ப்பு தட்டச்சை நாம் பரிசோதித்தோம். ஏன் நிறைவேற்றவில்லை?
  • wysiwyg தொகுப்பி பயனர் தெரிவாக உள்ளது. அதை default ஆக செய்யலாமா? அல்லது அது பற்றி விளக்கப் பக்கம் தரலாமா?

--Natkeeran 01:52, 30 மார்ச் 2010 (UTC)

பத்திரிக்கையாளர் சந்திப்பு

தொகு

31 மார்ச்சு 2010 காலை சென்னையில் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் விக்கி போட்டி உள்ளிட்ட தமிழ் இணைய மாநாட்டு நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு அரசின் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்நிகழ்வில் பரிதிமதி, தேனி சுப்பிரமணி, சுந்தர் ஆகியோருடன் நானும் கலந்து கொள்கிறேன். நன்றி--ரவி 08:04, 30 மார்ச் 2010 (UTC)

எல்லாம் நன்றாக நடக்க எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:16, 30 மார்ச் 2010 (UTC)

சுவரொட்டி வெளியீடு

தொகு

இன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து நடத்தும் பல்கலைக்கழக/கல்லூரி/பல்தொழில்நுட்பப் பயிலக மாணவர்களுக்கான ’’’விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி’’’ அறிவிப்புக்கான சுவரொட்டி வெளியீடு நடைபெற்றது.

 

இந்த சுவரொட்டியை தமிழ் இணைய மாநாட்டுக் குழுத் தலைவர் முனைவர். அனந்த கிருஷ்ணன் வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, உலகத் தமிழ் மாநாட்டிற்கான தனி அலுவலர் கா.அலாவுதீன், தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் ப.வி.ச.டேவிதார், தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு இணைய மாநாட்டுக் குழு உறுப்பினர்கள் வெங்கட்ரங்கன், அன்டோ பீட்டர், ஆனந்தன் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் ப.அர.நக்கீரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (மொழிபெயர்ப்பு) முனைவர் அருள் நடராசன், திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் நலன் பிரிவு இயக்குனர் முனைவர் மதன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா சார்பில் சுந்தர் (பெங்களூரு), ரவிசங்கர் (கோயம்புத்தூர்), பரிதிமதி (அம்பத்தூர், சென்னை), தேனி. எம்.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரிகைகளில் இந்நிகழ்வு பற்றிய செய்தி

தொகு

தினமலர், இந்து, மாலை முரசு ஆகிய தினசரிகளில் செய்தி ஓரளவு முழுமையாக வந்துள்ளது; தினத்தந்தியில் போட்டியின் தன்மையையே மாற்றி எழுதியுள்ளனர்; தினமணியிலும் விக்கிப்பீடியா பெயரே வரவில்லை; மேலும், பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30, 2010 என்று சில பத்திரிகைகளில் வந்துள்ளதால், கட்டுரை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி தேதி என்று கொடுக்கப்பட வேண்டும்.

  • தினமலரில்: விக்கிபீடியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் தகவல் பக்கங்கள் திரட்டும் போட்டி [1]
  • தி இந்துவில்:Effort to increase Tamil content in Wikipedia [2]
  • தினத்தந்தியில்: உலகத்தமிழ் இணைய மாநாடு: கல்லூரி மாணவர்களுக்கு இணையதள பக்கம் வடிவமைக்கும் போட்டி 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் [3]
  • தினமணியில்: இணையத் தமிழ் மாநாடு: கட்டுரை போட்டிகள் பரிசுக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு [4]
  • விகடன்--ரவி 17:08, 1 ஏப்ரல் 2010 (UTC)
தெளிவான குறிப்புகளும், படமும் மிக அருமை. பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுகள்.--செல்வா 01:30, 2 ஏப்ரல் 2010 (UTC)
அதனைச் சேர்த்தது நான்தான். அங்கு தமிழ் விக்கியில் புகுபதிகை செய்தது செல்லவில்லை. --மணியன் 07:36, 3 ஏப்ரல் 2010 (UTC)

சென்னை சந்திப்பு புகைப்படங்கள்

தொகு

 

படத்தில் இடமிருந்து வலமாக

1. அ.ரவிசங்கர் (கோயம்புத்தூர்), 2. பரிதிமதி (சென்னை) 3. சுந்தர் (பெங்களூரூ), 4. தேனி. எம்.சுப்பிரமணி 5. ப.வி.ச.டேவிதார் இ.ஆ.ப.(தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசு), 6. வெங்கட்ரங்கன் (தலைவர், உத்தமம்) 7. ஆனந்தன், 8. சந்தோஷ் பாபு இ.ஆ.ப. (நிர்வாக இயக்குனர். தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்), 9. முனைவர் மதன்குமார், இயக்குனர், மாணவர் நலன், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி), 10. முனைவர் அருள் நடராசன், இயக்குனர், மொழிபெயர்ப்பு (சென்னை), 11. இனியன் நேரு (தேசிய தகவலறிவியல் மையம், இந்தியா) 12. அருணா, (தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்)


 

படத்தில் இடமிருந்து வலமாக

1. அ.ரவிசங்கர் (கோயம்புத்தூர்), 2. பரிதிமதி (சென்னை) 3. சுந்தர் (பெங்களூரூ), 4. தேனி. எம்.சுப்பிரமணி 5. அன்டோ பீட்டர், கணினித் தமிழ்ச்சங்கம் (சென்னை), 6. முனைவர் அருள் நடராசன் இயக்குனர், மொழிபெயர்ப்பு (சென்னை), 7. யுவராஜ், மாணவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி), 8. முனைவர் மதன்குமார், இயக்குனர், மாணவர் நலன், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி)


மிகவும் சிறப்பான படங்கள். இது தமிழ் விக்கிப்பீடியாவின் மக்கள் தொடர்பு முயற்சிகளில் முக்கியமானதொரு மைல்கல். இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 07:00, 2 ஏப்ரல் 2010 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கிய வரலாற்று நிகழ்வான இந்த முயற்சியில் முன்னணியில் பணியாற்றி த.விக்கு முகம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.--மணியன் 07:40, 3 ஏப்ரல் 2010 (UTC)

Are we losing mother tongue?

தொகு

Are we losing mother tongue? --Natkeeran 00:40, 31 மார்ச் 2010 (UTC)

பகுப்புகள் பற்றிய ஆய்வும் கருத்துக்களும்

தொகு

தமிழ் விக்சனரியில் த.உழவனுடன் இணைந்து பகுப்புக்கள் பற்றிய பல துப்புரவு பணிகளைச் செய்துள்ளேன்.

தற்போது தமிழ் விக்சனரியின் பகுப்புகள் பகுதியையும், தமிழ் விக்கிப்பீடியாவின் பகுப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால், தமிழ் விக்சனரி மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. அதே மாதிரி தமிழ் விக்கிப்பீடியாவின் பகுப்புகள் பகுதியை முடிந்த அளவு ஒழுங்கு செய்ய எண்ணியுள்ளேன்.

பகுப்புகளை ஏன் சரி செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை கீழே ஒரு உதாரணத்துடன் விளக்கியுள்ளேன்.

  1. வாழும் நபர்கள் (36)
  2. வாழும் மக்கள் (124)
  3. வாழும் மனிதர்கள் (46)
  4. வாழும் மாந்தர் (1)

என்று நான்கு பகுப்புகள் ஒரே கருத்தை குறிப்பிடுகின்றன. ஆகவே இவை நான்கையும் ஒரே பகுப்பாக ---வாழும் மக்கள் --- என்ற பகுப்பில் இணைத்து விட்டால் நன்றாக இருக்கும்.

இது மாதிரி பல இடங்களில் உள்ளன. ஆகவே இந்த ஒழுங்குபடுத்தும் துப்புரவு பணியில் ஈடுபட விரும்புகிறேன். ஆகவே அதிகாரிகளின் சம்மதத்தையும் கருத்துக்களையும் அறிய ஆவல். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:10, 1 ஏப்ரல் 2010 (UTC)

பெரியண்ணன், இது இன்றியமையாத பணி. அயராமல் இதைச்செய்த உங்களுக்கு பாராட்டுகள். இப்பணிக்கென எந்தெந்த கருவிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என அறிய ஆவல். தானுலவி உதவியாக இருக்கும், பயன்படுத்த எளிது. பைவிக்கித் தானியங்கிக் கட்டமைப்பு இன்னும் நிறைய வசதிகளைக் கொண்டது, ஆனால் சற்று பயிற்சி வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:47, 1 ஏப்ரல் 2010 (UTC)
  • சுந்தர் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. நான் AWB--- தானுலவியை உபயோகிக்கிறேன். தமிழ் விக்சனரியில் AWB---பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அது தமிழ்-ஆங்கிலத்தில் விளக்க உரையுடன் உள்ளது. பார்க்கவும்
  • AWB--- தானுலவியை பயன்படுத்தி பல செயல்களை சுலபமாக செய்துள்ளோம். தமிழ் விக்கிப்பீடியாவில் பகுப்ப்கள் பற்றிய துப்புரவு பணி தொடங்க தங்களது அனுமதி கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இந்த துப்புரவு பணியை தொடர்ந்து செய்வேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:30, 1 ஏப்ரல் 2010 (UTC)
பெரியண்ணன், அனுமதி என்றெல்லாம் பெரிய வார்த்தை சொல்லாதீர்கள். :) பகுப்பு மாற்றங்களை ஒரு பக்கத்தில் பட்டியலிட்டு, மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்று செயல்படுத்தினால் நன்று. -- சுந்தர் \பேச்சு 11:45, 1 ஏப்ரல் 2010 (UTC)
தானுலவியைப் பற்றிய உங்கள் அருமையான விளக்கப் பக்கத்தை இங்கு விக்கிப்பீடியாவிலும் சேர்க்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:54, 1 ஏப்ரல் 2010 (UTC)

பெரியண்ணன், நல்ல முயற்சி. ”வாழும் மக்கள்” என்பதை விட வாழும் நபர்கள் பொருத்தமாக இருக்கும். மக்கள் என்பது ஒரு இனக்குழுவையே விக்கியில் விளங்கிக்கொள்ளப்படுகிறது.--Kanags \உரையாடு 09:54, 1 ஏப்ரல் 2010 (UTC)
  • Kanags --- அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கூறியபடி --- வாழும் நபர்கள் --- என்று, மேற்கூறிய 4 பகுப்புகளையும் ஒரே பகுப்பாக மாற்றம் செய்வேன். நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:34, 1 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் விலை அமெரிக்க வெள்ளி 5.99!

தொகு

அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐப்பாடு, ஐப்பேடு கருவிகளுக்கான செயலிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் இந்தச் செயலி தமிழ் விக்கிப்பீடியாவை ஐபாடுகளில் தருவதாகவும் $5.99 கொடுத்து வாங்க வேண்டும் என்றும் இருந்ததைக் கண்டு வியந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 13:15, 3 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி சுந்தர். ஒருங்குறியில் (யூனிக்கோட்டில்), தமிழுக்கு உரியவாறு இடப்பங்கீடு செய்யாததால் விளையும் குழப்பங்களையும் பாருங்கள். ஓர் இடைமுகம் அமைத்த்து சீர் செய்ய வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கு ஒரு குறியிடம் வேண்டும் என்று முதல்நாளில் இருந்து நம்மில் பலரும் கூறிவந்தும் கேட்காததால் நிகழும் குலைவுகள். --செல்வா 17:19, 3 ஏப்ரல் 2010 (UTC)
ஆம், அந்தக் கட்டமைப்பை ஒழுங்காக அமைத்திருந்தால் இந்நேரம் எந்த ஒரு மொழியையும் போல தமிழும் புதிய கருவிகளில் இயல்பாய் புழங்கியிருக்கும். மொழியியல் கணித்தலிலும் கூட இந்தத் தவறான அமைப்பினால் பல இடர்களை நாங்கள் சந்தித்துள்ளோம். இவற்றைப் பட்டியலிட்டு அனுப்ப எண்ணியுள்ளேன். யானைக்கும் பூனைக்கும் ஒரே மாதிரியான தொழுவம் கட்ட முடியுமா? -- சுந்தர் \பேச்சு 05:01, 4 ஏப்ரல் 2010 (UTC)

இதில் என்ன கொடுமை என்றால் அவர்கள் காட்டியுள்ள திரைக்காட்சிகளில் தமிழ் ஒருங்குறிப் பிரச்சினை கூடத் தீர்ந்ததாகத் தெரியவில்லை. கொம்பு வேறு கொக்கி வேறாகப் பிரிந்து தெரிகின்றன. தமிழ் ஒருங்குறி நல்ல முறையில் இருந்தாலும் கூட வழமையான செல்பேசிப் பதிப்புத் தளங்களில் இருந்து மாறுபட்ட சிறப்பு வசதிகளுடன் இது போன்ற செயலிகள் வரலாம் தான்--ரவி 08:34, 4 ஏப்ரல் 2010 (UTC)

மொழியின் உயிர்ப்பும் வழக்கறும் தீவாய்ப்புகளும் - யுனெசுக்கோ ஆவணம்

தொகு

About 97% of the world’s people speak about 4% of the world’s languages; and conversely, about 96% of the world’s languages are spoken by about 3% of the world’s people (Bernard 1996: 142). Most of the world’s language heterogeneity, then, is under the stewardship of a very small number of people.

திராவிட மொழிகள் அனைத்துமே சேர்ந்து உலக மக்கள்தொகையில் < 4% தான். தமிழர்கள் ஏறத்தாழ 1% தான். ஆகவே, தமிழில் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் தமிழுக்கு இயல்பான வகையில் முன்னுரிமை தந்து செயல்படுவது தவறல்ல, கடமை ஆகும், பொறுப்புடைய செயலாகும். மொழிப் பாதுகாப்பு, உரிமை, பொறுப்பு என்பதனவற்றையும் மீறி தமிழ்ச்சொற்கள் மிகப் பெரும்பான்மையான தமிழர்களுக்கு புரிவதும், சொற்கள் தங்களுக்குள் ஒன்றுக்கு ஒன்று வலுவூட்டி நிற்பதும்(ஒருவகையான சிக்கனம் (economy), பொருள்திறன் (semantic efficiency) தருவதும்), தமிழ்ச்சொற்கள் எளிதாகவும் பன்முகத்துடனும் கிளைத்துப் பெருகுவதும் என பல நன்மைகளும் உண்டு.

--செல்வா 17:18, 3 ஏப்ரல் 2010 (UTC)

பேராசிரியர் தோவெ இசுக்குட்னாபு-கங்காசு அவர்களுடைய பக்கத்தையும், மொழியுரிமைகள் நிறுவனம் பற்றியும் காண்க--செல்வா 22:43, 3 ஏப்ரல் 2010 (UTC)


செல்வா, தரவுகளில் தமிழ் 4% மொழிகளுக்குள் வரும். தமிழ் ஒரு தேயும் மொழிதான். ஆனால் ஒப்பீட்டளவில், பேசும் மக்கள் தொகை அடிப்படையில் (முதல் 20 மொழிகளில் ஒன்று), அமைப்பு ஆதரவு அடிப்படையில் (மூன்று நாடுகளில் அலுவல் மொழி) தமிழால் மிஞ்சி நிற்க முடியும் என்று நினைக்கிறேன். எத்தனையோ ஆபிரிக்க மொழிகள், வட தென் அமெரிக்க மொழிகள், சீன மொழிகள், இந்திய மொழிகள் தமிழை விட வலிந்த நிலையில் உள்ளன. அவைக்கு அழிவு நிச்சியம். --Natkeeran 01:28, 4 ஏப்ரல் 2010 (UTC)

கட்டாயம் வலுவாக உயிர்ப்புடன் நிற்கும். முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு முன்னேகவும் முடியும், ஆனால் விழிப்புடன் உழைக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகவும் கூடும். அந்த ஐநா ஆவணத்தில் என் கணிப்பில் தமிழ் 5 ஆம் நிலையில் இல்லை, 4 இல் இல்லை, 3 இல் உள்ளது (பக்கங்கள் 7, 8 பார்க்கவும்). திட்டமிட்ட அழிப்புகள் நெடுங்காலமாக நடந்து வந்துள்ளன, இன்று இன்னும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் நடைபெறுகின்றன. அதே ஆவணத்தில், கூறுவதைக் கேளுங்கள் (சிலவற்றை நான் அச்சு எழுத்தில் மாற்றிக்காட்டியுள்ளேன்): In all parts of the world, members of ethnolinguistic minorities are increasingly abandoning their native language in favour of another language, including in childrearing and formal education. Among ethnolinguistic communities, a variety of opinions on the future prospects of their languages can be observed. Some speakers of endangered languages come to consider their own language backward and impractical. Such negative views are often directly related to the socioeconomic pressure of a dominant speech community. Other speakers of endangered languages, however, attempt to directly counter these threats to their language, and commit themselves to language stabilization and revitalization activities. (பக்கம் 4)

Language endangerment may be the result of external forces such as military, economic, religious, cultural, or educational subjugation, or it may be caused by internal forces, such as a community’s negative attitude towards its own language. Internal pressures often have their source in external ones, and both halt the intergenerational transmission of linguistic and cultural traditions. Many indigenous peoples, associating their disadvantaged social position with their culture, have come to believe that their languages are not worth retaining. (பக்கம் 2)

தமிழர்களின் பண்பாட்டு அறிவுக்கூறுகள் பல்லாயிரக்கணக்கில் அழிந்துள்ளன. இவற்றை ஆவணப்படுத்தக் கூட இல்லை. நான் சிறுவனாக இருந்த பொழுது எனக்குத் தெரிந்த சீற்றூர்களில் மிகப்பலருக்கும் தெரிந்த செடிகொடிகளும், அவற்றின் பயன்பாடுகளும் இன்று யாருக்குமே தெரியவில்லை. பற்பல மருத்துவ நுட்பங்கள், பல்வேறு கலை நுட்பங்கள், பன்னூற்றுக்கணக்கான தொழிற்கலைகள் அழிந்துவிட்டன, இன்னும் அழிந்துகொண்டு வருகின்றன. கல்வித்துறைகளில் நம்மொழியில் கற்கும் நிலையை மிகவும் குன்றிய நிலையிலேயே பெற்றுள்ளோம். தமிழர்களில் சிறுகுறுக்களும், ஊடடகங்கள் பலவும் மிகக் கெடுதிகள் செய்து வருகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் விஞ்சி மிகத் துடிப்புடன் தமிழ் செழிக்கும் என்றே நானும் நம்புகின்றேன். ஆனால் விழிப்புணர்வும் விடா உழைப்பும் வேண்டும். அரசுகளும் பிற நல்ல நிறுவனங்களும் உதவக்கூடும். --செல்வா 03:05, 4 ஏப்ரல் 2010 (UTC) திராவிட மொழிகள் பேசுவோர் மொத்தம் 200 மில்லியன். உலக மக்கள்தொகை 6.8 பில்லியன் பார்க்கவும். எனவே 2.94% ஆனால் ஆனால் தமிழர்கள் 1.1% (75 மில்லியன் எனக்கொண்டால்). --செல்வா 03:10, 4 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி அறிவிப்பு இல்லையே...

தொகு

உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி குறித்த செய்திகள் அல்லது அதற்கான குறிப்புகளுடனான இணைப்புகளோ இதுவரை [உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான தளத்தில்] இல்லை. பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணினித் தமிழ் வரைகலைப் போட்டிக்கு பதிவுச் செய்ய வேண்டிய இணையப்பக்கம் குறித்த இணைப்பு உள்ளது. அவர்களுடன் தொடர்பு கொண்டு விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி குறித்த இணையப் பக்கம் குறித்த தகவலுடன் இணைப்பும் அளிக்கச் சொல்லலாமே...? --Theni.M.Subramani 17:06, 4 ஏப்ரல் 2010 (UTC)

இது குறித்து மாநாட்டு இணையத் தள பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம். அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்--ரவி 05:17, 5 ஏப்ரல் 2010 (UTC)

இந்தப் பக்கத்தில் அறிவிப்பு உள்ளது. தலைப்பு உட்பட சில மாற்றங்களைக் கோரி உள்ளோம். செய்வார்கள் என எதிர்பார்ப்போம்--ரவி 06:01, 6 ஏப்ரல் 2010 (UTC)

Tamil wikinews Accreditation Requests

தொகு

I requested Wikinews Accreditation Request. Kindly vote for me to serve better for tamil wikinews. ta:பயனர்:mahir78, 19:36, 4 ஏப்ரல் 2010 (UTC)

மாகிர், //I am the first person designed the tamil wiki news (ta.wikinews.org) home page and invited and promoting tamil wikinews to the public.// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனினும் தங்கள் நேரடிப் பங்களிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. உங்கள் பரப்புரைகள் பற்றியும் மேல் விவரங்கள் அறிய விரும்புகிறேன்.
எனது பங்களிப்பு மிகக் குறைவே, அதனால் சற்றே அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் விக்கி செய்திகள், நேரடியான நிகழ்வுகளையே பகிர்ந்துகொள்ள வலியுறுத்துகின்றன. வலைப்பதிவு செய்திகளிலிருந்து வெட்டி ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆங்கில விக்கிசெய்திகளின் நிபந்தனையாகவுள்ளது. இது அனைத்து விக்கி செய்திகளுக்கும் பொருந்தும்தானே. நான் நேரடியாக என்னால் முடிந்த அளவில் விழாக்களில் பங்கு பெற்று செய்திகளை, புகைப்படங்களை சேகரித்து வழங்க முடியும். நேரடிப் பங்களிப்பாளர்கள் (first hand journalist) இருப்பது விக்கி செய்தியின் நன்பகத்தன்மையையும், வாசகர் வட்டத்தையும் வளர்க்கும்.
(will promote என்றிருக்கவேண்டும்) அத்துடன் எனக்குள்ள தொழில்நுட்ப திறமைகளையும் தமிழ் விக்கி செய்திகளுக்கும், நிர்வாகிகளுக்கும் வழங்க முடியும். தற்போது கூட மின்னஞ்சல்(tamil.wikinews gmail.com, குழுமம் ta_wikinews googlegroups, டுவிட்டர் (http://twitter.com/tamil_wikinews) ஆரம்பித்திருக்கிறேன். இதனை விக்கி நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன். இவைகள் மூலம் மக்களிடம் விக்கி செய்திகளை சென்று சேர்க்க முடியும். விக்கி செய்தியோடையை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் சேர்த்து விக்கியின் பயனையும் வாசகர், பங்களிப்பாளர் வட்டங்களை வளர்க்க உத்தேசித்துள்ளேன். தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு போன்று விக்கி செய்திக்கும் கூட்டாக வலைப்பதிவு தொடங்கி பங்காற்றவும் எண்ணம் உள்ளது.

//Reason: with this accreditation can directly attend govt events and meet people in various personalities. // என்று குறிப்பிட்டுள்ளதால் இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு ஈடான ஒப்புதல் எனக் கருதலாமா? எனில், இது குறித்து மிக விரிவாக விக்கி செய்திகளிலோ இங்கோ உரையாடி கொள்கை முடிவு எடுத்துத் தான் செயல்பட வேண்டி இருக்கும்.

முதலில், இந்த accreditation கிடைப்பதால் பயனருக்கு என்னென்ன உரிமைகள் கிடைக்கின்றன எனத் தெளிவாக அறிய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிக்கையாளர் அடையாள அட்டை ஒன்றுக்கு ஓரளவு மதிப்பும் சலுகைகளும் உண்டு (இலவசப் பயணம் முதல் இலவச வீடு வரை). எனவே, விக்கி செய்திகள் மூலம் கொடுக்கும் முறையான ஒப்புதல்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. சிலர் இதை முறைகேடாக பயன்படுத்தலாம் என்பது என் கவலை (மாகிர் அல்ல. ஆனால், வேறு சிலர் மேல் இத்தயக்கம் உண்டு)--ரவி 05:02, 5 ஏப்ரல் 2010 (UTC)

//இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு// சமமானது தான் என்றாலும்,
//(இலவசப் பயணம் முதல் இலவச வீடு வரை)// கிடைக்க முடியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களில் சேர்ந்திருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கலாம். ஓருவேளை விக்கமீடியா இந்திய அலுவலகத்திலிருந்து கொடுக்கப்படும் அடையாள அட்டை இதுபோன்ற சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யலாம். இந்த அடையாள அட்டை மூலம் மிகச்சிறப்பாக அதிக ஆர்வத்துடன் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மூத்த விக்கிபீடியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த accreditation முடிவை விட்டுவிடுகிறேன். நேர்மாறான முடிவு பற்றி கவலையில்லை, தொடர்ந்து பங்களிக்க முடிவுசெய்துள்ளேன். --mahir 07:11, 5 ஏப்ரல் 2010 (UTC)
மாகிர், உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. உங்கள் முன்வைப்பு வரும் முன்னரே தற்செயலாக தேனி எம்.சுப்பிரமணி தந்த தகவலையடுத்து இரவியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, இதைப் பற்றிய முறையான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் உணர்ந்தோம். இரவியின் கருத்து பெரும்பாலும் அதன் வெளிப்பாடு தான். -- சுந்தர் \பேச்சு 07:55, 5 ஏப்ரல் 2010 (UTC)

புரிதலுக்கு நன்றி மாகிர். நீங்கள் குறிப்பிட்டுள்ள பல பணிகளை இந்த ஒப்புதல் இல்லாமலேயே கூட செய்யலாம் என்பதால் உங்கள் தொடர் பங்களிப்பு நன்மை பயக்கும். தமிழ் விக்கி செய்திகள் மிகவும் தொடக்க நிலையிலேயே உள்ளது. விக்கி செய்திகள் பங்களிப்பாளர் சமூகம் சற்று வளர்ந்த பிறகு இது போன்ற ஒப்புதல்களுக்கான உரிமைகள், தகுதிகள், வழிமுறைகள் பற்றி உரையாடி கொள்கை முடிவு எடுத்துச் செயற்படலாம். நன்றி. --ரவி 11:22, 7 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ் விக்சனரியர்களுக்கு நன்றி

தொகு

வணக்கம். முன்பு தமிழ் விக்சனரியில் முனைப்பாக இருந்த பலர் ஓய்ந்துள்ள நிலையில் த. உழவன், திருச்சி பெரியண்ணன், பழ.கந்தசாமி, பரிதிமதி உள்ளிட்டோர் அங்கு மிகவும் முனைப்போடும் பொறுப்போடும் விக்சனரியை வளர்த்து வருவதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விக்கித் திட்டங்களில் தமிழ் விக்சனரி அளவு விக்கிப்பீடியா அல்லாத திட்டங்கள் வளர்வது குறைவு. விக்சனரி ஆலமரத்தடிக்குச் சென்று நம் அனைவரின் தொடர் உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பது அவர்களுக்கு ஊக்கமாக அமையும். --ரவி 06:17, 5 ஏப்ரல் 2010 (UTC)

ஆம், அதே போல விக்கிசெய்திகளையும் சென்று பாருங்கள். சிறீதரன் கனகு பெரும்பாலும் தனியொருவராக உழைத்து வருகின்றார். விக்சனரியில் தானியல் பாண்டியன், தெரன்சு போன்றவர்களோடு நானும் சிறிது பங்களித்தாலும்,இத் திட்டங்களில் நாம் அனைவரும் சற்று பங்களிக்க வேண்டும். இக் கட்டுரைப் போட்டிக்குப்பின் விக்கிப்பீடியர்கள் ஒழுங்குசெய்ய வேண்டும். இவை ஒன்றுக்கு ஒன்று துணை செய்யும் உறவுத்திட்டங்கள். --செல்வா 19:12, 5 ஏப்ரல் 2010 (UTC)

ஆம், தமிழ் விக்சனரியும் தமிழ் விக்கி செய்திகளும் இந்திய மொழிகளில் முன்னணியில் உள்ளன. சற்று உழைத்தால் விக்கி மூலத்தையும் விக்கி நூல்களையும் கூட இந்நிலைக்குக் கொண்டு வரலாம். த.உழவன், பழ.கந்தசாமி போல் விக்கிப்பீடியா அல்லா பிற திட்டங்கள் மீது முழு ஈடுபாடு கொண்டு உழைப்போரை நாம் பெற்றிருப்பது நம் நற்பேறு. சிறீதரன், நற்கீரன், மயூரநாதன் ஆகியோரைக் கடந்த சில ஆண்டுகளாகப் பாராட்டிப் பாராட்டி எனக்குக் களைத்துப் போய் விட்டதால் அவர்களுக்குச் சில மாதங்கள் விடுப்பு :) --ரவி 06:33, 6 ஏப்ரல் 2010 (UTC)

விக்கிமீடியா நிறவனத்தின் புதிய உறுப்பினர்

தொகு

விக்கிமீடியா ஃபவுண்டேசனுக்குப் புதிய உறுப்பினராக பிகாசா தத்தா அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் சனிக்கிழமை பெங்களூரில் அவருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு விரைவில் வரும். இயன்ற அளவு கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். பெங்களூருக்கு வரக்கூடியவர்கள் இயன்றால் கலந்து கொள்ளவும். -- சுந்தர் \பேச்சு 07:22, 5 ஏப்ரல் 2010 (UTC)

இணைய மாநாட்டு வலைப்பூ

தொகு

http://tamilinternetconference.blogspot.com/

உத்தமத்தின் வலைத்தளத்தில் இந்த வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பத்திரிகைகளில் வந்தவற்றை அப்படியே இட்டிருப்பதனால். ஒன்றுக்கொன்று முரணான தகவல்களாக இருக்கின்றன. மயூரநாதன் 15:47, 5 ஏப்ரல் 2010 (UTC)

இந்தப் பக்கத்தில் அறிவிப்பு உள்ளது. தலைப்பு உட்பட சில மாற்றங்களைக் கோரி உள்ளோம். செய்வார்கள் என எதிர்பார்ப்போம்--ரவி 06:02, 6 ஏப்ரல் 2010 (UTC)

தமிழிலும் பிற உலக மொழிகளிலும் வெளியான முதல் அச்சு நூல்கள்

தொகு

விருபா பக்கத்தைப் பார்க்கவும் --செல்வா 20:55, 5 ஏப்ரல் 2010 (UTC) முதல் தமிழ்நூல் 1554 இல் லிசுபனில் அச்சாகியது. இந்தியாவில் முதல் அச்சுக்கூடம் 1556இல். 1577-9 ஆண்டுகளில் பலநிகழ்வுகள். மேலுள்ள பக்கத்தில் இருந்து ஒரு பத்தி மேற்கோள் [விருபா வலையில் சுட்டியுள்ள சான்றுகோள் செய்தி: Tamil Culture தொகுதி vii ( 1958 ஜூலை ) இதழில் வெளிவந்த கட்டுரை. மொழி பெயர்ப்பு ; தே.சிவகணேஷ் - ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்]:

தமிழ்நாட்டில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. 1584இல் தான் சீனாவில் முதல் அச்சாக்கம் ஐரோப்பியர்களால் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் 1590இலும் பிலிப்பைன்ஸில் 1593லும் முதல் அச்சாக்கம் நடைபெற்றது. 1584இல் பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் ஸ்பானிஷ் (Spanish) குய்ச்வா (Quichua) மற்றும் அய்மாரா (Aymara) மொழியில் அச்சிடப்பட்ட ‘Doctrina’ என்ற நூல்தான் உலகின் வெளிச்சத்திற்கு வந்த முதல் அச்சு நூலாகும். இருப்பினும் ஆடெக் (Aztec) மற்றும் ஸ்பானிஷ் (Spanish) மொழியில் வெளியான ‘Doctrina’வின் எந்தப் பிரதியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்படவில்லை. இப்பிரதி மெக்சிகோ (Mexico) நகரத்தில் 1539இல் அச்சடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் கங்கோலியர்களுக்காக (Congolese) அவர்களின் மொழியில் 1624இல் தான் முதல் அச்சாக்கம் செய்யப்பட்டது. இதில் 1554ஆம் ஆண்டு லிஸ்பனில் அச்சிடப்பட்ட தமிழ் சிறுவெளியீடான ‘Cartilha’வில் உள்ள வரிகளே இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தனது முதல் நூலை 1563இல் அச்சிட்டது. கான்ஸ்டாண்டினோபிள் (Constantinople) தன் முதல் அச்சுக்கூடத்தை 1727இலும் கிரீஸ் (Greece) 1821இலும் நிறுவியது. இவ்வாறாக 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் மேற்கத்திய நாடுகளில் அச்சிடப்பட்ட மாதிரிகளினும் முதன்மையாகக் கருதப்படுகிறது. இச்செயல்பாடு ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே அவர்களை உடனடியாக நம் அருகாமைக்கு கொண்டுவந்துள்ளது.(7)
(7). See references to early printing in the works quoted above of Americo Cortez Pinto, Da famosa Arte, and Georg Schurhammer and G.W. Cottrell, The first printing in Indic Characters, O.C., cf. S.H. Steinberg, Five hundred years of printing, Penguins ltd., Harmondsworth, Middlesex (England), 1955. The Welsh Bible was printed in 1588 and the first book in Irish was published in 1571.

--செல்வா 21:11, 5 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பு தொடர்பில் பின்னூட்டம்

தொகு

அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பல கட்டுரைகளைப் படிக்கவே முடியவில்லை. சில பரவாயில்லை. இது பற்றிய பின்னூட்டத்தை விரைந்து அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் பதிந்து பகுப்பு:கூகுள் தமிழாக்கம் தொடர்பான பின்னூட்டம் என்ற பகுப்பில் அப்பேச்சுப் பக்கங்களில் இடுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். நாளைக்குள் பெரும்பாலான கருத்துக்களை இங்கனம் தொகுத்து விட்டால் கூகுள் ஒருங்கிணைப்பாளரிடம் அதைத் தெரிவிக்க ஏதுவாகும். அவர்கள் இச்சிக்கல்களைத் தீர்க்க முடியாவிட்டால் அறிவியல், நுட்பத் தலைப்புகளை விடுத்து வரலாறு மற்றும் பொதுத் தலைப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்கலாமா? அப்படியும் முடியாதென்றால் இத்திட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். :( -- சுந்தர் \பேச்சு 07:35, 7 ஏப்ரல் 2010 (UTC)

இலக்கணத்தப்பு எதாவாது இருந்தால் மற்றவர்கள் திருத்த வேண்டியதுதானே? இதில் சோம்பேறித்தனம் காட்டலாகாது. இது நீங்கள் போட்ட திட்டமா, நீங்கள் நிறுத்துவதற்க்கு? ஆவ்ரலர்கள் எழுதுவதில் பிழை இருந்தால் திருத்தாமல், யாரும் மொழி பெயர்க்கக் கூடாது என்றி நினைப்பதற்க்கு உங்களுக்கு உரிமை இல்லை.--217.169.51.254 12:43, 7 ஏப்ரல் 2010 (UTC)
@217.169.51.254 இந்த உரையாடல் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் பற்றி மட்டுமே. முதலில் இத்திட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சுருக்கமாக, கூகுள் நிறுவனம் சில தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களை ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தி ஆங்கில விக்கியில் இருந்து தமிழ் விக்கியில் மொழிபெயர்த்து இடுகிறார்கள். இத்திட்டம் கடந்த சில மாதங்களாக நடக்கிறது. இத்திட்டத்தில் உள்ள குறைகளை அறிந்து கூகுளுடன் பேசி வருகிறோம். இதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்கு கொள்ளும் வழமையான பங்களிப்பாளர்கள் அனைவரும் அறிவர். தன்னார்வத்தின் பேரில் ஒருவர் பங்களித்தால் அவரின் பங்களிப்பை இதைக் காட்டு பல மடங்கு குறைகள் இருந்தாலும் வரவேற்று, அரவணைத்தே செயல்படுகிறோம். அவரின் பங்களிப்பை கூடித் திருத்தவே செய்கிறோம். அவரும் நம் கருத்துக்களைக் கேட்டுத் திருத்திக் கொண்டு மேம்பட்ட பங்களிப்புகள் நல்க வாய்ப்புண்டு. ஆனால், கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இதுவரை கருத்தைக் கேட்டுத் திருத்தி செயல்படும் நிலை இல்லை. அதற்கான வழிமுறைகளை ஆய்ந்து வருகிறோம். ஒரு முறை செய்தால் தவறு. திரும்பத் திரும்பச் செய்தால் தப்பு. இந்தத் தப்பை அடுத்தவர்கள் வேலை மெனக்கெட்டு திருத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை--ரவி 16:59, 7 ஏப்ரல் 2010 (UTC)
Ravidreams, are you saying those who have contributed Google translated articles have been paid by Google to do the translation on per article basis or some other basis?--86.3.119.35 18:52, 7 ஏப்ரல் 2010 (UTC)
I don't know the exact basis, but I understand that it is by paid translators.--செல்வா 18:56, 7 ஏப்ரல் 2010 (UTC)
அருள் கூர்ந்து அண்மையில் கூகுள் திட்டத்தின்வழி மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் ஒரு பத்து கட்டுரைகளையாவது மதிப்பீடு செய்து, பின்னூட்டத்தை அந்தந்த பேச்சுப் பக்கங்களில் இடுங்கள். அத்துடன், பேச்சுப் பக்கங்களை பகுப்பு:கூகுள்_தமிழாக்கக்_கட்டுரைகள் என்ற பகுப்பில் இடுங்கள். ஏற்கனவே உள்ள பின்னூட்டப் பக்கங்களிலும் இவ்வாறு இடுதல் நல்லது. அதன்பின்னால் கூகுள் ஒருங்கிணைப்பாளரிடம் அப்பகுப்பை சுட்டிக் காட்டலாம். -- சுந்தர் \பேச்சு 09:33, 7 ஏப்ரல் 2010 (UTC)
சுந்தர்! நானும் சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, எவ்வளவு திருத்துவது என்று புரியாமல் விட்டு விட்டேன். சிவப்பு நிற இணைப்புக்கள் அதிகளவில் இருப்பதும், ஆங்கிலச் சொற்கள் மிக அதிகளவில் இருப்பதும், முக்கியமான பிரச்சனையாக உள்ளது. நானும் சில கட்டுரைகளைப் பார்க்க முயற்சிக்கிறேன். பார்க்கும்போதே, அவற்றை திருத்தவும் வேண்டுமா? அப்படி திருத்தி விட்டால் என்ன தவறு எனக் காட்ட முடியாதே, அதனால் கேட்கின்றேன். --கலை 09:46, 7 ஏப்ரல் 2010 (UTC)

@கலை, தற்போது திருத்த வேண்டாம். ஒரே குறையைப் பல்வேறு கட்டுரைகளில் சுட்டிக் காட்ட வேண்டாம். குறை வகைக்கு ஒன்றாக பல்வேறு கட்டுரைகளில் கருத்துகளை இடலாம். @சுந்தர், அறிவியல்-நுட்பம் மட்டுமடல்ல எல்லா துறைக் கட்டுரைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. பெரும்பாலும், இது தனி ஒரு நிறுவனம் / மொழிபெயர்ப்பாளர் சார்ந்து இருக்கும். இப்பணியை முடுக்கி விட்டதற்கு நன்றி. நானும் சில கட்டுரைகளை மதிப்பிடுகிறேன்--ரவி 09:58, 7 ஏப்ரல் 2010 (UTC)

//ஒரே குறையைப் பல்வேறு கட்டுரைகளில் சுட்டிக் காட்ட வேண்டாம். குறை வகைக்கு ஒன்றாக பல்வேறு கட்டுரைகளில் கருத்துகளை இடலாம்.// ஏன் அப்படி எனப் புரியவில்லையே? பொதுவாக உள்ள குறைகள் உள்ளிணைப்பு தவறாகக் கொடுப்பதனால் மிக அதிகளவில் சிவப்பு நிறத்தில் இணைப்புக்கள் காணப்படுதல், ஆங்கிலச் சொற்கள் அளவுக்கதிகமாக தமிழில் அப்படியே எழுதப்பட்டிருப்பதும்தான். அவற்றை எல்லாக் கட்டுரைகளிலும் கொடுத்தால், அது ஒரு பொதுவான பிரச்சனை என்று புரிந்துகொண்டு, தவறைச் சரிசெய்ய முனைய மாட்டார்களா? மேலும் உள்ளிணைப்பு கொடுக்கும்போது, சரியான முறையில் கொடுக்கப்படாமையால், கட்டுரைகள் இருந்தாலும், அவை நீல நிறத்தில் அடையாளப் படுத்தப்படாமல், சிவப்பு நிறத்தில் தெரிகிறது. --கலை 10:19, 7 ஏப்ரல் 2010 (UTC)

@கலை, ஆங்கிலச் சொற்கள், சிகப்பு இணைப்புகள் போன்ற பிரச்சினை ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்கள். மீண்டும் மீண்டும் ஒரே பிரச்சினைகளையே எல்லா இடங்களிலும் எழுதினால் எழுதுபவர், படிப்பவர் இருவருமே அயர்ந்து விடுவார்கள்.

@சுந்தர், ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ஒரு கட்டுரை என எடுத்து மதிப்பிடலாம். இதனால் ஒரே மாதிரியான விமர்சனங்களைத் தவிர்க்கலாம். அனைவருக்கும் அவரவர் மொழிபெயர்ப்பு பற்றிய கருத்து போய் சேரும். மதிப்பிட்ட பிறகு, கூகுள் ஒருங்கிணைப்புப் பக்கத்தில் இந்த விவரங்களைப் பதிந்து வைத்தால், இது வரை மதிப்பிடாத மொழிபெயர்ப்பாளர்களாகப் பார்த்துச் செய்யலாம்--ரவி 10:37, 7 ஏப்ரல் 2010 (UTC)

சரி. கட்டுரை, பின்னூட்டம், மொழிபெயர்த்தவர் என்று ஒரு அட்டவணையை ஒருங்கிணைப்புப் பக்கத்தில் இட்டு விடலாம், ரவி. -- சுந்தர் \பேச்சு 10:45, 7 ஏப்ரல் 2010 (UTC)

அட்டவணைப் பக்கத்தை உருவாக்கி விட்டேன். பகுப்பு:கூகுள் தமிழாக்கப் பங்களிப்பாளர்கள் பக்கத்தில் இருந்து ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ஒரு கட்டுரை என்று முதலில் மதிப்பிடலாம்--ரவி 11:38, 7 ஏப்ரல் 2010 (UTC)

வளர்முகமாக நம் கருத்துகளைத் தெரிவிப்போம். கட்டுரையில் முதல் சில பத்திகளைத் திருத்திவிட்டு, மீதம் உள்ளதை வெட்டி பேச்சுப் பக்கத்தில் இடலாம். பிறகு சிறுகச் சிறுகத் திருத்தி உள்ளிடலாம். கலைக்களஞ்சியத்தின் தரம் வெகுவாகக் குறைகின்றது என்பதால் இப்படிச் செய்ய வேண்டியுள்ளது. வருவதை வேண்டாம் எனச் சொல்ல வேண்டாம், தக்கவாறு திருத்தி ஏற்பது நம் கடன். கூகுளுடன் முறைப்படி கருத்துகளை வைத்து வீண் பணியைக் குறைக்கலாம். கூகுள் இம்மொழி பெயர்ப்புகளைச் செய்வதற்கான பின் புலங்கள் உள்ளன, அவற்றின் குறிக்கோளின் படியும், நல்ல மொழிபெயர்ப்புகள் அவர்களுக்குத் தேவை. ஆகவே அவர்களோடு கருதுறவாடுவது தேவை. மொழிபெயர்க்க அவர்கள் பணம் தருவதுபோல, திருத்துவதற்கும் பணம் தர வேண்டும் எனக் கேட்கலாம் :) :) எப்படியாயினும் தலைப்புகளின் கட்டுப்பாடுகள் ஏதும் இடுவது முறையல்ல (என் கருத்துப்படி). அவர்கள் சில நடிகர்கள், ஒய்யாளர்கள் (பேச^சன் மாடல்கள்) ஐரோப்பிய சாய்வுள்ள தலைப்புகள் பற்றியெல்லாம் எழுதலாம். அவர்களின் நோக்கம் பல்வேறு தலைப்புகளில் தமிழில் எழுதுவது பற்றிய தேவை இருக்கலாம். ஆனால் நம் நேரமும் வீணாகாதவாறு அவர்களுடன் இணக்கமாகப் பேசி நல்ல முடிவெடுக்க வேண்டுகிறேன். மொழிபெயர்ப்பில் மிகப்பல குறைகள் இருப்பினும், அவை யாவுமே பல்வேறு கோணங்களில் நல்வரவே. கூகுளிடம் சொல்லி, முறைப்படி திருத்துவோருக்கும் ஊதியப்பணி வழங்குமாறு கேட்கலாம் (வேடிக்கை இல்லை). --செல்வா 13:47, 7 ஏப்ரல் 2010 (UTC)
//வருவதை வேண்டாம் எனச் சொல்ல வேண்டாம், தக்கவாறு திருத்தி ஏற்பது நம் கடன்.// செல்வா, வருவதை ஏற்பது நம் கடன். ஆனால், தருபவர்கள் விக்கியின் நலன் கருதித் தருகிறார்களா தங்கள் நலன் கருதித் தருகிறார்களா என்பது முக்கியக் கேள்வி அல்லவா? இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை கூகுள் நலனே சற்று மேலோங்கி இருப்பதாக உணர்கிறேன்
மொழிபெயர்ப்பின் தரம் மட்டுமே பிரச்சினை இல்லை. கூகுளின் செயற்பாடு பல அடிப்படை விக்கி தத்துவங்களுக்கு முரணாக உள்ளது. இதைப் போல் ஆங்கில விக்கியில் எழுதி இருந்தால் ஒரே கட்டுரையில் தடை செய்திருப்பார்கள். வங்காள விக்கியில் ஏற்கனவே தடை செய்துள்ளார்கள். எனினும், இந்திய மொழிகள் விக்கிகளுக்கு உள்ள குறுகிய வளங்கள், கூகுள் - விக்கி இரு பக்கத்து நன்மைகளைக் கருத்தில் கொண்டே நாம் கூகுளுடன் உரையாடி வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களாவது இது குறித்து மேலும் உரையாடி இணக்க முடிவு, நல்விளைவு ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்து வரவில்லை என்றால், வேறு எந்த வகைகளில் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செய்யலாம் என்றும் சிந்திக்கலாம்.
தன்னார்வத்தின் பேரில் பங்களிக்கும் ஒருவர் இதை விடப் பத்து மடங்கு தப்பும் தவறுமாக எழுதினால் கூட கண்டிப்பாக அரவணைத்துத் திருத்துவது சரி. ஆனால், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் தரம் சற்று கூடுதலாக அல்லவா இருக்க வேண்டும்? அதுவும் அவர்கள் தங்கள் பிழைகளில் இருந்து கற்றுக் கொள்வதில்லை / கற்றுக் கொள்ள நாளாகிறது என்பது மிகப் பெரிய பிரச்சினை. அதற்குள் அதே பிழையுடன் சில நூறு கட்டுரைகள் குவியும். இவற்றைத் திருத்துவதில் நம் வளங்கள் சிதறுவது சரியா? பேச்சுப் பக்கத்தில் இட்டால் கூட அது தமிழ் விக்கியின் தரத்தைக் குறைப்பதாகவே அமையும்.--ரவி 16:59, 7 ஏப்ரல் 2010 (UTC)
என்ன உளரல்?? விக்கி பங்களிப்பவர் அனைவரும் சொந்த ஆர்வில்தான் செய்கின்றனர், கட்டுரை எழுதுவதற்க்கொ, திருத்துவதற்க்கொ யார்ரும் பனம் கொடுப்பதில்லை, வாங்குவதில்லை. செல்வா "ஊதியப்பணி வழங்குமாறு கேட்கலாம் " என்கிறார். யாரிடம் கேட்கப்போகிறார்? −முன்நிற்கும் கருத்து 217.169.51.254 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
@217.169.51.254 உளறல் இல்லை. கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் விக்கியில் சேர்க்கப்படும் கட்டுரைகளை தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கு காசு கொடுத்தே கூகுள் செய்கிறது. ஆனால், அவர்கள் முதல் முறை மொழிபெயர்ப்பு செய்வதோடு நிறுத்தி விடுகிறார்கள். திருத்தம் செய்கிறார்கள் இல்லை. இவ்வாறு, அவர்களையே (அல்லது, இதற்கான வேறு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு) திருத்தம் செய்வதற்கும் (தனியாக காசு கொடுத்தோ கொடுக்காமலோ) கேட்கலாம் என்பதே செல்வா சொல்ல வருவது. --ரவி 15:20, 7 ஏப்ரல் 2010 (UTC)
சிவப்பு இணைப்புக்கு இப்பக்கத்தைக் காடலாம் --செல்வா 14:48, 7 ஏப்ரல் 2010 (UTC)
@217.169.51.254 உளறல் போன்ற சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். இங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்புடன் பேசி வருகிறோம், அப்படித்தான் பேச வேண்டும்.
கூகுள் மொழிபெயர்ப்பாளர் திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு கருத்து சொல்லுங்கள். -- சுந்தர் \பேச்சு 15:47, 7 ஏப்ரல் 2010 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்பாளர் திட்டத்தில் பணிபுரிவோர்கள் google translator toolkit என்ற மென்பொருளை பயன்படுத்துகிறார்களா ? அப்படியானால் மொழிப்பெயர்க்க படும் கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்பை குறைப்பதற்கு ஒரு வழி உள்ளது . அவ்வாறு மொழிபெயர்ப்பவர்கள் ஒவ்வொரு வரியாகத்தான் மொழிப்பெயர்ப்பார்கள் . அப்பொழுது ஒவ்வொரு வரிலும் ஆங்கிலக் கட்டுரையில் உள்ள சொல் இணைப்பு தமிழில் மொழிபெயர்க்கும் பொழுதும் அதற்கான் குறியீடு காணப்படும் . மொழிப் பெயர்க்கும் பொழுது அவர்கள் அக்குறியீடுகளை நீக்கி எழுதினால் போதுமானது. அவர்களை மொழிப் பெயர்க்கும் பொழுது அந்த இணைப்பு குறியீடுகளை முற்றிலும் நீக்கிவிட சொன்னால் போதுமானது. பிறகு நாம் வேண்டும் என்றால் இணைப்புகளை மட்டும் சேர்த்து கொள்வோம் . இதனால் அவர்களுக்கு வேலை எளிமையாகிவிடும் . நாமும் கட்டுரை நடையை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் .
இது சரியில்லை என்றால் , இதற்கென ஒரு வசதி google translator toolkit இல் உருவாக்க வேண்டும் . அதாவது அவர்கள் மொழிப்பெயர்க்கும் பொழுது toolkit என்ற துணைக்கருவிகளில் தமிழ் விக்கிப்பீடியாவை (விக்சனரி) இணைத்தால் போதும் . இதனால் நாம் பயன்படுத்துகிற சொற்களை புரிந்து கொண்டு அவர்கள் மொழிப்பெயர்க்க முடியும் . விக்சனரி யையும் , கூகிள் தமிழ் அகராதியையும் இணைக்க அவர்களுடன் இணைந்து பேசலாம் . இதனால் நாம் எழுதிய கட்டுரைகள் , பயன்படுத்துகிற சொற்கள் போன்றவற்றை அவர்கள் அறிந்து செயல் படமுடியும் .
இதனை செய்தால் 90 விழுக்காடு நாம் இந்த இடர்பாடுகளை தீர்த்து விடலாம் . நன்றி . --இராஜ்குமார் 05:42, 8 ஏப்ரல் 2010 (UTC)
இணைப்பு குறியீடுகள் இவ்வாறாக இருக்கும் , {0}Mobile (sculpture){/0}, a hanging artwork (or toy) . இந்த வரியில் உள்ள {0} {/0} என்பது mobile (sculpture) என்பதின் இணைப்பு குறியீடுகள் . இது போன்று 0,1,2, என்று ஒரு வரியில் உள்ள இணைப்புகள் நீண்டு கொண்டே செல்லும் . மொழிபெயர்ப்பவர்கள் இதனை {0} கைப்பேசி {/0} என்றோ அல்லது {0} கைப்பேசி (ச்கில்ப்டுரே){/0} என்று பலவிதமாக மொழிபெயர்க்க கூடும் .அவர்களிடம் கைப்பேசி என்று மட்டும் மொழிப்பெயர்க்க சொன்னால் போதும் ஆனது . இது எனது கருத்து . --இராஜ்குமார் 05:51, 8 ஏப்ரல் 2010 (UTC)
கூகிள் நிறுவனமும் இதற்காக சில முயற்சிகளை உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன் . நாம் அவர்களை முடிக்கி விட்டால் மேலும் அவர்கள் விரைவாக செயல் படுவார்கள் . --இராஜ்குமார் 06:15, 8 ஏப்ரல் 2010 (UTC)
விரிவாக நுணுகியறிந்து சொன்னமைக்கு நன்றி, இராஜ்குமார். அவர்களுடன் தொடர்பு கொண்டு சிக்கலைத் தெரிவித்துள்ளோம். மென்பொருள் வளர்ச்சிக் குழுவினரிடம் சொல்லி சரி செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இரவியும் மொழிபெயர்ப்புத் தரம் பற்றி எடுத்துச் சொல்லியுள்ளார். செல்வாவின் அறிவுரைப்படி, பயன் கருதி, சற்று பொறுமை காக்க எண்ணியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:41, 8 ஏப்ரல் 2010 (UTC)

இராஜ்குமார் எழுதியது சரிதான். மொழி பெயர்ப்பவர்களுக்கு விக்கிப்பீடியாவோடு ஓரளவு தொடர்பு இருந்தால்தான் இக் குறியீடுகளின் விளைவுகளை அவர்கள் அறிந்து வீக்கிப்பீடியாவுக்கு ஏற்ற வகையில் மொழி பெயர்க்க முடியும். நானும் இரண்டு கட்டுரைகளை கூகிள் வழியாக மொழி பெயர்த்திருக்கிறேன். முதல் கட்டுரையில் கட்டுரை சேமிக்கப்பட்ட பின்னர் தான் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளையும் கூகிள் மொழிபெயர்ப்பியின் குறியீடுகளின் பொருளையும் அறிந்து கொள்ள முடிந்தது. இரண்டாவது கட்டுரையில் மொழி பெயர்க்கும்போதே குறியீடுகளை நீக்கிவிட்டு மொழிபெயர்க்க முடிந்தது. ஆனால் தொழில் முறையில் மொழி பெயர்ப்பவர்கள் தமது மொழி பெயர்ப்பின் இறுதி வடிவத்தைப் பார்ப்பதற்கோ அல்லது அது விக்கிப்பீடியாவில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று அறிந்து கொள்வதற்கோ முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. மயூரநாதன் 12:33, 8 ஏப்ரல் 2010 (UTC)

சில பரிந்துரைகள் தேவை

தொகு

சலவை செய்யும் தொழில் , மிதியடி தைப்பு தொழில் , ஊர் ஊராய் சென்று ஈயம் பூசுறது போன்ற தொழில் (நான் நகர் தொழில் என்று பரிந்துரைக்கிறேன்) , ஆட்டுக்கல்லு செய்வது , பானை செய்தல் , செங்கல் சோலை , சுண்ணாம்பு செய்வது , மாட்டு லாடம் கட்டுறது . இது போன்ற பல தொழிகளுக்கெல்லாம் நல்ல அழகான கட்டுரை தலைப்பு என்ன வைக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். ஏன் இத கேட்கறனா? நான் ஒரு தலைப்பில் தொகுத்தப்பின் மாற்றுவதற்கு பதில் தெளிவான முடிவெடுத்து பிறகு தொகுக்கலாம் என்று நினைக்கிறேன் . இதெல்லாத்தும் தலைப்பு கிடைத்து விட்டால் ஓராண்டிற்கு பிரச்சனையே இல்லை . -- இராஜ்குமார் 12:13, 7 ஏப்ரல் 2010 (UTC)

கைத்தொழில்கள் என்று ஒரு சொல் உண்டு அது கைவினைத் தொழில்களைக் குறிக்கும். சிறுதொழில்கள் என்றும் ஒரு சொல் உள்ளது. சலவைத்தொழில், மிதியடித் தொழில், ஈயப்பூச்சுத் தொழில், பொளிதல் (அம்மி, ஆட்டுக்கல் பொளிவது), கற்தச்சுத் தொழில் (கல் தச்சன் செய்யும் தொழில்), செங்கல் சூளை வைப்பதைச் சூளைத் தொழில் எனலாம் (சுள்-> சூள்->சுடுவது சூளை சுள்ளிக் குச்சி, சுள்ளாப்பு = வெப்பம், சுள்ளை = சூளை. காளவாய் = சூளை. தமிழில் ள்-ண்-ட் என்று மாறும்). பானை செய்வதைப் பானை வனைதல் என்பர். சுண்ணாம்புக் காளவாய்த் தொழில். மாட்டுக்கு இலாடம் கட்டுதலை, இலாடம் அடித்தல் எனலாம் (தேய்மானத்தைக் குறைக்க மாடுகளுக்கு இரும்பினால் செய்த வளையத்தை குளம்பில் பொருத்துவது - இருப்படி பொருத்துவது). தனித் தலைப்புகளைப் பட்டியலாக இடுங்கள், பின்னர் மற்றவர்கள் பரிந்துரைகள் தரட்டும்.--செல்வா 13:28, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி . திரு.செல்வா. தாங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருகிறீர்கள் . மீண்டும் நன்றி. ஆம் . பட்டியல் போடவேண்டும். --இராஜ்குமார் 04:14, 8 ஏப்ரல் 2010 (UTC)


  • கைத்தொழில் உற்பத்திகள்
  • சலவைத்தொழில்
  • மிதியடி தைப்புத்தொழில் , மிதியடித் தொழில்
  • ஈயப்பூச்சுத் தொழில்
  • கற்தச்சுத் தொழில்
  • செங்கல் சூளை , சூளைத் தொழில்
  • பானை வனை தொழில்
  • சுண்ணாம்புக் காளவாய்த் தொழில்
  • இலாடம் அடிதொழில்

பரிந்துரைகள் மேலேயே செய்யுங்கள் . வேறு தொழில்களும் சேருங்கள் . -- இராஜ்குமார் 10:29, 8 ஏப்ரல் 2010 (UTC)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: அரசியல் நுழைகிறதா?

தொகு

வருகிற 2010 சூன் திங்கள் கோவையில் நடைபெறவிருக்கின்ற மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்ததை அறிவோம். அந்த வரலாற்றைச் சுருக்கமாக விக்கிப்பீடியாவில் பதிவுசெய்து, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டிச் சென்று தமிழின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் செயல்படுதலே சிறப்புடைத்து என்றொரு கருத்தை முன்வைத்தேன். ஆனால் பயனர் Hibayathullah அதை நீக்கியுள்ளார். இது பற்றிப் பிற பயனர் கருத்தறிய விழைகின்றேன். --George46 20:48, 8 ஏப்ரல் 2010 (UTC)

நல்லா தானப்பா சொல்லிருக்கு ? என்ன இடர்பாடு என்று தெரியவில்லையே ! --இராஜ்குமார் 20:52, 8 ஏப்ரல் 2010 (UTC)

விமரிசனங்கள் சுருக்கமாகத் தரப்படல் வேண்டும். ஜோர்ஜ் அவர்கள் வலைப்பதிவில் எழுதுவது போல் எழுதியுள்ளார். மேலும் ஜோர்ஜ் தந்துள்ள விமரிசனங்கள் சுருக்கமாக ஏற்கனவே விமரிசனங்கள் என்ற பகுதியில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜோர்ஜ் ஐயா தத விமரிசனப் பகுதியை இபாயத்துல்லா நீக்கியுள்ளது சரியானது என்பதே என் கருத்து. மேலும் விமரிசனங்களை சேர்க்க வேண்டுமானால் வெளி இணைப்பில் வெளித்தொடுப்புக்களை இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:55, 8 ஏப்ரல் 2010 (UTC)


Kanags அவர்களின் கருத்து ஏற்புடையதாகத் தெரிகிறது. நன்றி! The Hindu வெளித்தொகுப்பு இணைக்கப் பார்க்கிறேன். --George46 23:26, 8 ஏப்ரல் 2010 (UTC)

பெங்களூர் சந்திப்பு

தொகு

பெங்களூரில் திங்களொருமுறை நிகழும் விக்கிப்பீடியர்கள் சந்திப்பும், அதையொட்டி விக்கிமீடியா இந்திய பிரிவின் ஏற்பாட்டுக்குழுவின் சந்திப்பும் நேற்று (ஏப்பிரல் 11, 2010) நடைபெற்றது. இதில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் விக்கிமீடியா அறக்கட்டளை உறுப்பினர் பிசாகா தத்தாவும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக நமது கட்டுரைப்போட்டியைப் பற்றி விளக்கினேன். சில படங்கள் இங்கே. -- சுந்தர் \பேச்சு 05:09, 12 ஏப்ரல் 2010 (UTC)

நிகழ்படம் இங்கே. இனி வரும் நாட்களில் உலகில் எங்கிருந்தாலும் இணைய வழியாகக் கலந்து கொள்ள இயலுமாம். -- சுந்தர் \பேச்சு 05:15, 12 ஏப்ரல் 2010 (UTC)
மகிழ்ச்சி சுந்தர். இந்திய விக்கிமீடியா முனைப்புகளுடன் நாம் தொடர்பில் இருப்பது அவசியம். பெங்களூரில் உங்களுக்குத் துணையாக இன்னும் சிலர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை, பெங்களூரில் நாம் கூடுதல் ஆர்வலர்களைப் பெற வேண்டும்--ரவி 13:48, 17 ஏப்ரல் 2010 (UTC)

விக்கி செய்தியில் படிமத்தை எப்படி உபயோகிப்பது - interwiki

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் உள்ள படிமம் ஒன்றை விக்கி செய்தியில் இணைக்க [[:w:ta:படிமம்:GSLV-D3_onpad.jpg]] என்று கொடுத்தேன் ஆனால் வேலை செய்யவில்லை. எப்படி இங்குள்ள புகைப்படத்தை உபயோகிப்பது? மாஹிர் 18:20, 15 ஏப்ரல் 2010 (UTC)

பொது விக்கியில் (விக்கிமீடியா காமன்ஸ்) உள்ள படிமங்களையே ஏனைய விக்கிகளில் இணைக்க முடியும். பொதுவிக்கியில் இந்தப் படிமம் அல்லது அதற்கு ஒத்த படிமக்கள் இருக்கிறதா எனத் தேடிப் பாருங்கள். தமிழ் விக்கிசெய்தியில் படிமங்களை தரவேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 21:50, 15 ஏப்ரல் 2010 (UTC)
தமிழ் விக்கி செய்திகளில் பதிவேற்றத் தடைக்கு காரணம் என்ன?--ரவி 15:55, 17 ஏப்ரல் 2010 (UTC)

விக்கிமீடியா முன்னுரிமைகள்

தொகு

விக்கிமீடியா நிறுவனத்தின் மொழிவாரி வளர்ச்சிக்கான முன்னுரிமை இப்படத்தில் தென்படுகிறது. பொதுவாக வளர்நிலை விக்கிக்களில் ஒன்றாக இந்தி, தெலுங்கு, வங்காளி, மராட்டி, உருது மொழிகளுடன் தமிழைக் கருதுகின்றனர். ஆனால், நாம் உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும் இல்லையென்றால் சில வாய்ப்புகளைத் தவற விட நேரலாம். நாம் திட்டமிடல் விக்கியில் ஓரளவாவது பங்கேற்க வேண்டும். காட்டாக இந்த உரையாடலின் பயனாக சில தகவல்கள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன. -- சுந்தர் \பேச்சு 11:23, 16 ஏப்ரல் 2010 (UTC)

2020ல் தான் தமிழ் ஒரு அடிப்படை நிலையை எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! இது நானே கூட மனதளவில் நினைத்த ஆண்டு தான். இன்னும் போக வேண்டிய தொலைவு.... !!--ரவி 13:48, 17 ஏப்ரல் 2010 (UTC)

Language is powerful within identity

தொகு

Language is powerful within identity

மலையாள விக்கிக் கட்டுரைத் தொகுப்புக் குறுவட்டு

தொகு

மலையாள விக்கி நண்பர்கள் இன்றைய விக்கிக்கூட்டத்தில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைக் குறுவட்டு வடிவில் வெளியிட்டுள்ளனர். நமது முந்தைய திட்டங்களை முடுக்கி விட வேண்டிய தேவையைக் காட்டுகிறது. அவர்கள் இதற்கென ஒருவாக்கிய மென்பொருளைத் தருமாறு கேட்டிருக்கிறேன்.அவர்கள் இதற்கென உருவாக்கிய மென்பொருளையும் சேர்த்தே வெளியிட்டுள்ளனர். இயலுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 06:01, 17 ஏப்ரல் 2010 (UTC)

மலையாள விக்கியர்களின் இப்பணி மிகச் சிறப்பானது. தமிழுக்கு நல்ல ஒரு போட்டி விக்கியாக மலையாளம் உள்ளது. நாம் திட்டமிட்டுச் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. ஆட்கள் தாம் இல்லை :( மலையாள விக்கியின் இன்றைய கூடலைக் காணும்போது கேரளத்துக்குள் நிறைய விக்கி ஆர்வலர்கள் இருப்பது போல் தெரிகிறது. --ரவி 13:48, 17 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ் விக்கிக் குறுவட்டு வெளியிடும் முன்னைய திட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். முதலில் கட்டுரைகளைத் தெரிவு செய்தபின் அவற்றை மேலும் மேம்படுத்தி, அவை அனைத்தையும் ஒரே சீரான தரத்துக்குக் கொண்டுவருவது நல்லது என்பது எனது கருத்து. உடனடியாகவே இத் திட்டத்தைத் தொடங்கலாம். மயூரநாதன் 14:30, 17 ஏப்ரல் 2010 (UTC)

தற்போது கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம், கட்டுரைப் போட்டித் திட்டம் உள்ளிட்டவற்றில் நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி, பட்டறை நடத்துதல், பிற விக்கித் திட்டங்களுக்கு வளங்களைப் பெறுவதற்கான வேலைகளையும் அடுத்த சில மாதங்களில் செய்ய வேண்டி உள்ளது. ஆனால், நம்மிடம் உள்ள ஆள்பலம் மிகக் குறைவே. எனவே, அவசரம் இல்லாத திட்டங்களைச் சற்று ஒத்திப் போடலாம். 2010 அக்டோபர் தொடக்கம் இக்குறுவட்டுத் திட்டத்தைச் செய்தால் நன்று--ரவி 15:55, 17 ஏப்ரல் 2010 (UTC)

சில புதிய நிர்வாகிகளைத் தேர்தெடுப்பது எமது ஆள் வளத்தைக் கூட்டுமா? --Natkeeran 16:16, 17 ஏப்ரல் 2010 (UTC)

நற்கீரன், நான் குறிப்பிடுவது அடிப்படை முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் குறித்து. இருக்கிற பங்களிப்பாளர்களை எல்லாம் நிருவாகிகளாக ஆக்கினாலும் கூட நமக்கு ஆள் வளம் போதாது. நமக்குத் தேவைப்படும் பெரும்பாலான பணிகளைச் செய்ய (எ.கா: உரை திருத்தம், தகவல் சரிபார்ப்பு, உதவிப் பக்கங்கள் உருவாக்கம், விக்கியாக்கம், பட்டறை முயற்சிகள், குறுவட்டு ஆக்கம், புத்தக் ஆக்கம், தானியங்கி நிரல்கள் எழுதல் போன்றவை) நிருவாக அணுக்கம் தேவையற்றது. --ரவி 18:58, 17 ஏப்ரல் 2010 (UTC)

புதுப்பயனர் வரவேற்புக்குத் தானியங்கி?

தொகு

புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புரு இடுவதைத் தானியங்கி மூலம் செய்யலாமா? தமிழ் விக்கிப்பீடியா வரவேற்புக் குழு என்ற பெயரில் செய்யலாம். நாமே தனிப்பட இதனைச் செய்வதில் ஒரு நட்பான அணுகுமுறை இருக்கும். உடனுக்குடன் வரவேற்பு போய் சேர, புதுப்பயனர்கள் கூடக் கூட இது மிகவும் உதவும். பங்களிப்பாளர்கள் குறைவான பிற திட்டங்களுக்கும் உதவும். தானியங்கி மூலம் செய்யலாம் என்றால் தெரன்சு, சுந்தர் போன்றோர் உதவலாம்--ரவி 13:54, 17 ஏப்ரல் 2010 (UTC)

தானியங்கி மூலம் செய்யும் அளவுக்கு அவ்வளவு புதுப் பயனர்களா!! மற்றப் பயனர்களும் சேர்து உதவி, ஒரு மனிதர் செய்வதே விக்கி சமூகத்தை அமைக்க நலமாக இருக்கும். --Natkeeran 15:26, 17 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ் விக்சனரியில் புதுப் பயனர் வரவேற்புப் பணி தேங்கி இருப்பதைக் காணலாம். விக்கி சமூக உணர்வைப் பேண நாமே கைப்படச் செய்வதே உதவும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.--ரவி 15:55, 17 ஏப்ரல் 2010 (UTC)