விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு42
கூகுள் மொழிபெயர்ப்பாளர் மதிப்பீட்டுப் பணிக்கு நடுவர்கள் தேவை
தொகுகூகுள் மொழிபெயர்ப்பாளர் மதிப்பீட்டுப் பணிக்கு நடுவர்கள் தேவை
த.விக்சனரியில் சொற்பதிவேற்றம்
தொகுகோவைத் தமிழ்மாநாட்டில் தமிழக அரசு அளித்தக் கொடைச்சொற்களில், நம்மிடமில்லாச்சொற்களை கீழ்கண்ட தொடுப்பில் உள்ளவாறு தானியங்கி முறையில் பதிவேற்ற உள்ளோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் பதிவேற உள்ளன. இதன்மூலம் தமிழ்விக்சனரி 17வது இடத்திலிருந்து, முதல் 10இடங்களுக்குள் சென்றடையும். தங்களின் கருத்துகளை அங்கு வாக்களித்து, மேல காணப்படும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். விக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் இதுவரை 14நபர்கள் வாக்களித்துள்ளனர். நீங்களும் வருக! வணக்கம்.--த* உழவன் 17:48, 13 அக்டோபர் 2010 (UTC)
த.வி-யில் தமிழ் எண்கள்
தொகுநண்பர்களே! அன்பு வணக்கம்.
அனைவரும் எப்படியிருக்கிறீர்கள்? பலநாள் கழித்து வந்திருக்கிறேன். ஒரு நல்ல விவாதத்தைத் தொடங்கி வைக்கலாம் என எண்ணம்.
நம் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் எண்களைப் பயன்படுத்துவது பற்றி அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்? இது இயலுமா? செய்யலாமா? எல்லோரும் கூடி விவாதிக்கலாம் வருகிறீர்களா?
அன்புடன் அழைப்பது உங்கள்: --இ.பு.ஞானப்பிரகாசன் 15:19, 15 அக்டோபர் 2010 (UTC)
- 1,2,3, என்னும் எண்களே போதும். தமிழ் எண்கள் (தமிழ் எழுத்துவடிவ எண்கள்) வேண்டாம் என்பது என் தனிக்கருத்து. தற்போதுள்ள 1,2,3,4 முதலானவைகூட தமிழ் எண்களில் மறுவடிவு என்று என் தமிழாசிரியர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதனை பட வடிவில் காட்டினால்தான் விளங்கும். 2,3,5,7, முதலானவை எளிதாக உணரலாம் (ஆனால் 1,4,6,9 உம் தமிழின் திரிபு என்று கற்றேன்). ஆனால் இவை உண்மை என்று நான் கூறவில்லை!! நான் கேட்டது நம்பும்படியாக இருந்தது என்றுமட்டும் கூறுகிறேன். எது எப்படியாயினும், எண்களை மாற்றவேண்டாம். கருத்தாக்கத்தில், நல்ல பொருள் பொதிந்த தமிழ்க் கலைச்சொற்களோடு புதிய செய்திகளை எழுதுவதிலும் அவற்றைத் தீட்டுவதில் கவனம் செலுத்துவோம். --செல்வா 20:03, 15 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். இந்திய அரேபிய எண்களையே கல்வி முறையில் பெரும்பாலானோர் கற்பதால் தமிழ் எண்களுக்கு மாற்றுவது த.விக்கியை பயன்படுத்துவோருக்கும் எழுதுவோருக்கும் பளுவைக் கூட்டுமென்பது என் கருத்து.
- செல்வா, நீங்கள் சொல்வதைப் போலவே 1990களில் என் பள்ளி தமிழாசிரியரும் கூறினார். ஒரு graphical comparison அட்டவணையை எதோவொரு புத்தகத்திலிருந்து எடுத்து வந்து காட்டினார். இந்திய-அரேபிய எண்கள் எப்படி தமிழ் எண்களிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென அந்த அட்டவணை விளக்கியது. ஞானப்பிரகாசத்தின் இடுகையைப் பார்த்தவுடன் அதைப்பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன். இதைப்பற்றி ஏதேனும் ஆய்வு நூல்/கட்டுரை உள்ளதா? நீங்கள் சொல்லும்வரை, எங்கள் தமிழய்யா மிகைபடுத்தி சொல்லியிருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அதைப்பற்றி இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.--சோடாபாட்டில் 20:36, 15 அக்டோபர் 2010 (UTC)
- தமிழ் எண்களிலிருந்தே 1,2,3, ... போன்ற (அராபிய எண்கள் என்று சொல்லப்படும்) எண்கள் தோன்றின என்ற கருத்தை, மு.வ. அவர்கள் எழுதிய ஒர் நூலில் என்று எண்ணுகிறேன், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நூலகத்தில் படித்தேன். அதிலே அவ்வெண்கள் பல்வேறு காலகட்டங்களினூடாக வளர்ந்த முறை வரிவடிவங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மு.வ. எழுதிய சில நூல்கள் இப்பொழுது என்னிடம் உள்ளன. அவற்றில் இருந்தால் பின்னர் அறியத்தருகிறேன். ஆனாலும் பின்னர் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி குறித்து எழுதியவர்கள் இது குறித்து கருத்துக்கள் எதுவும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தற்காலத்தில் இது ஆய்வாளர்களால் ஏற்கப்படாத கருத்தாக இருக்கக்கூடும். --- மயூரநாதன் 06:41, 16 அக்டோபர் 2010 (UTC)
- நான் மேலே குறிப்பிட்டது மு. வரதராசன் எழுதிய "மொழிவரலாறு" என்னும் நூலில், (முதற்பதிப்பு 1954. என்னிடம் உள்ளது 2006 ஆண்டின் பதிப்பு.) எண்கள் எனத் தலைப்பிட்ட 28 ஆம் அத்தியாயத்தில் காணப்படுகின்றது. அப்பகுதியின் படப்படியையும் இணைத்துள்ளேன் பார்க்கவும். --- மயூரநாதன் 09:56, 16 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி மயூரநாதன். பயனுள்ளதாக இருந்தது. அடுத்த முறை நூலகத்துக்குப் போகும்போது மு. வ வின் நூல்களை எடுத்து படிக்கப் போகிறேன்.--சோடாபாட்டில் 11:06, 16 அக்டோபர் 2010 (UTC)
- மிக்க நன்றி மயூரநாதன். 1,2,3 என்பன ஐயம் திரிபற தமிழ் முறையே (அல்லது பிராமி முறையே), பிறபலவும் இவ்வகைத்தே. தமிழில் மூன்றுசுழி ணகர எழுத்து எவ்வாறு I போன்று உள்ள பிராமி எழுத்தில் இருந்து வந்தது என்பதை ஐயத்துக்கு இடமின்றி காட்ட முடியும் (முதலில் பார்க்க மிக வேறானதாகத் தெரியும், ஆனால் எப்படி கையை எடுக்காமல் வரையும் பொழுது சுழிகள் ஏற்படுகின்றன என்பது சுவையானது - ஏறத்தாழ + என்னும் குறியில் இருந்து க போலவும், மூன்று கிடைக்கோட்டில் இருந்து 3 வருவதும்,இரண்டு கிடைக்கோட்டில் இருந்து உ வருவதும் போன்றதே). மீண்டும் மிக்க நன்றி மயூரநாதன்.--செல்வா 02:44, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி மயூரநாதன். பயனுள்ளதாக இருந்தது. அடுத்த முறை நூலகத்துக்குப் போகும்போது மு. வ வின் நூல்களை எடுத்து படிக்கப் போகிறேன்.--சோடாபாட்டில் 11:06, 16 அக்டோபர் 2010 (UTC)
- இவ்வுரையாடலில் கலந்து கொண்டோருக்கு நன்றி. மிகவும் பயனுள்ள அதே நேரத்தில் மேலும் ஆராய வேண்டிய விடயம். படிமத்தை இணைத்தமைக்கும் மு.வ அவர்களின் நூலைப் பற்றித் தெரிவித்தமைக்கும் நன்றி மயூரநாதன்.
எப்பொழுது ௧,௨,௩,௪ போன்ற எண் எழுத்துக்கள் அறிமுகமானது?, எப்பொழுது அதன் பயன்பாடு இல்லாமற் போனது? இதில் முதற் கேள்விக்குப் பதில் காண இயலுதல் சிக்கல் எனினும் இரண்டாவது கேள்விக்கு விடை கிடைக்குமாயின் நன்றாக இருக்கும். --சி. செந்தி 09:58, 18 அக்டோபர் 2010 (UTC)
RfC: Indic Sysop Proposal
தொகுKindly take a moment to read the Indic Sysop proposal in meta and express your opinion. Thanks --Jyothis 19:53, 15 அக்டோபர் 2010 (UTC)
இந்தியன் எக்சுப்பிரசு செய்தி
தொகுhttp://www.indianexpress.com/news/aapka-apna-wikipedia/698406/0 - சுந்தர் \பேச்சு 08:52, 16 அக்டோபர் 2010 (UTC)
- வாழ்த்துக்கள் சுந்தர், விண்மீன் குறிப்பு அருமை:).--Kanags \உரையாடுக 10:47, 18 அக்டோபர் 2010 (UTC)
- வாழ்த்துக்கள்! சுந்தர், செல்வா, மயூரநாதன்; வடமொழிச்சொற்கள் நீக்கப்பட்டு முற்றிலும் தூயதமிழில் கட்டுரைகளைத் தருவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு நற் தமிழைக் காட்டும் தமிழ் விக்கிபீடியாவைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. --சி. செந்தி 11:52, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி, சிறீதரன், செந்தி. சோபா நன்றாகத் தொடுத்து எழுதியுள்ளார். இக்கட்டுரை உலகெங்கிலும் உள்ள விக்கிக்குழுமங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வழியாக ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் வந்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 12:17, 18 அக்டோபர் 2010 (UTC) பி.கு. ஒரேயொரு சிறு பிழை. 500-க்கும் குறைவான என்று நான் கூறியதைத் தவறுதலாக 500-க்கும் மேலாக என்று தவறுதலாக எழுதிவிட்டார்.
- அதனால் என்ன, சுந்தர்? விரைந்து எழுதிவிடுங்கள் :) செந்தி நன்றி. ஒரேயொரு திருத்தம். வடமொழிச்சொற்களை நீக்குவதும், முற்றிலும் தூய தமிழில் எழுதுவதும், நோக்கம் அல்ல, ஆனால் இயன்றவிடங்களில் நல்ல பொருள் துலங்கும் (விளங்கும்) தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தந்து கட்டுரைகள் ஆக்குவதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது. நல்ல தமிழ்ச் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உணர்த்தி, பொருள் செறிவு கூட்டுகின்றன என்பது பரவலாக அறிந்த உண்மை. மேலும் அப்படியான சொற்கள் பொதுத் தமிழ் மரபானவை. நாம் ஏராளமான வடமொழி, ஆங்கிலம், அரபி, பாரசீகச் சொற்களையும் பிறமொழிச்சொற்ககளையும் ஆண்டுதான் வருகிறோம். ஆனால் தமிழ்ச்சொற்கள் நன்றாகப் பொருளுணர்த்திக் கிளைத்துப் பெருகும். நற்றமிழைப் போற்றுவோம், அதே நேரத்தில் வடமொழி உட்பட எம்மொழிச்சொற்களையும் வலிந்து விலக்க வேண்டியதில்லை. இவை என் தனிக்கருத்துகள்தாம்.--செல்வா 14:55, 18 அக்டோபர் 2010 (UTC)
- முற்றிலும் தூய தமிழ் என்பது உடனே சாத்தியம் இல்லைதான், எதிர்காலத்தில் இப்படி வந்தால் மிக நன்று எனும் ஆதங்கத்தில் கூறிவிட்டேன். அந்தக்கட்டுரையில் உள்ள நட்சத்திரம் - விண்மீன் இதற்கு உந்தலாக இருந்தது.:)--சி. செந்தி 15:16, 18 அக்டோபர் 2010 (UTC)
- ஆம், செல்வா, நற்றமிழ் என்பதே நோக்கம். நீங்கள் சொன்னதுபோல ஒரு நல்ல தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தும்போது அத்துடன் வரும் மற்ற தொடர்புடையனவும் வலுப்பெறும். முகிலனுக்குக்கூட விண்மீனையும் நட்சத்திரத்தையும் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அவன் ஏற்கனவே தண்ணீரில் மின்னும் மீன்களைப் பார்த்துள்ளதாலும், அது மின்னுவதால் அப்பெயர் கொண்டது என்று சொல்லியிருந்ததாலும், "வானத்தில் மின்னுது பாத்தியா? அதுதான் விண்மீன்" என்று சொல்லியபோது அவனுக்கு நினைவில் நின்றுவிட்டது. இப்போது மீனையும் மறப்பதில்லை, விண்மீனையும் மறப்பதில்லை. -- சுந்தர் \பேச்சு 16:15, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி, சிறீதரன், செந்தி. சோபா நன்றாகத் தொடுத்து எழுதியுள்ளார். இக்கட்டுரை உலகெங்கிலும் உள்ள விக்கிக்குழுமங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வழியாக ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் வந்தால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 12:17, 18 அக்டோபர் 2010 (UTC) பி.கு. ஒரேயொரு சிறு பிழை. 500-க்கும் குறைவான என்று நான் கூறியதைத் தவறுதலாக 500-க்கும் மேலாக என்று தவறுதலாக எழுதிவிட்டார்.
Please respond to the request for help in the comment section. −முன்நிற்கும் கருத்து 216.123.169.252 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆம், பங்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தவருடைய மடல்முகவரியைப் பெற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:15, 18 அக்டோபர் 2010 (UTC)
- நமது தட்டச்சு உதவிப் பக்கத்தை கொடுத்திருக்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.--சோடாபாட்டில் 16:36, 18 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுபெங்களூரில், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிறும் இந்திய விக்கிமீடியர் சந்திப்பு நடந்து வருகிறது. தற்போது, இந்தியாவின் இன்னும் பல நகரங்களிலும் விக்கிப்பீடியர் நடமாட்டம் தென்படுகிறது :) வரும், நவம்பர் 14 ஞாயிறு அன்று இந்தச் சந்திப்பை ஒட்டி, ஒரு விக்கி மாரத்தான் நடத்தலாமா என்று எண்ணுகிறோம். அதாவது, நேரடியாகவோ இந்தச் சந்திப்புகளில் இருந்தோ உலகின் எந்தப் பகுதியில் உள்ள தத்தம் வீடுகளில் இருந்தோ இந்திய விக்கிமீடியா திட்டங்களில் நேரடியாகத் தொகுப்புப் பணியில் ஈடுபடுவது. வெறுமனே பேசிக்கொண்டே இராமல், பார்வையாளராக வருவோரையும் விக்கிப்பீடியர்களாக மாற்றுவது இதன் வெளிப்படை நோக்கம். நீண்ட நாட்களாக தொகுப்பு வேலை செய்யாமல் இருக்கும் என்னைப் போன்றோரையும் பங்களிக்க வைப்பது உள்நோக்கம் :) இதன் மூலம், 24 மணி நேரத்தில் ஒவ்வொரு விக்கி திட்டத்திலும் எந்த அளவுக்கு உச்சகட்ட பங்களிப்பு செய்ய முடிகிறது என்று பார்க்கலாம். இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். அனைவரும் இந்த நாளை ஒதுக்கி தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்து நமது தமிழ் விக்கி சமூகத்தின் பங்களிப்புத் திறனை உறுதி செய்யலாம் என்று எதிர்பார்க்கிறேன் :)--இரவி 08:02, 19 அக்டோபர் 2010 (UTC)
- அன்னிக்கு எதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு /இலக்கு கொடுங்க, அப்பத்தான் நானெல்லாம் ஒழுங்கா வேலை செயவேன் :-)--சோடாபாட்டில் 08:07, 19 அக்டோபர் 2010 (UTC)
சோடா பாட்டில், தலைப்பு / இலக்கு இல்லாமலே இந்த அளவு தொகுக்கும் உங்களுக்கு இலக்கு வைத்தால் ... :) குறிப்பிட்ட வேலைத்திட்டம், இலக்கு வைத்தால் எல்லோராலும் உற்சாகத்தோடு பங்களிக்க முடியாது என்பதால், அவரவர்களுக்குப் பிடித்த தலைப்புகள், வேலைகளைச் செய்யலாம் என இந்திய விக்கிமீடியா குழுமத்தில் உரையாடினோம். எனினும், தமிழ் விக்கிக்கு என்று சில திட்டங்களை முன்வைத்து விரும்பியவர்கள் அதனை எடுத்துச் செய்யலாம் எனக்கூறலாம். எடுத்துக்காட்டுக்கு,
- படம் இல்லா கட்டுரைகளில் படம் சேர்ப்பது (குறைந்தது 200 கட்டுரைகள்)
- உதவிப் பக்கங்கள் சேர்ப்பது
- துப்புரவு
- விக்கியாக்கம்
- 200 புதிய கட்டுரைகள் (பத்து பேர் ஆளுக்கு 3, 4 மணி நேரம் ஈடுபட்டால் கண்டிப்பாக இயலும்)
என சில தெளிவான இலக்குகள் வைக்கலாம். --இரவி 08:20, 19 அக்டோபர் 2010 (UTC)
- இரவி, இது ஒரு சிறப்பான திட்டம். இதை முதலில் இந்திய விக்கி மடற்குழுவில் நீங்கள் முன்மொழிந்தபோதே எனக்குப் பிடித்து விட்டது. கட்டாயம் செய்வோம். சேர்ந்தியங்கும்போது எவ்வளவு பயன் விளையும் என்பதை இது காட்டும். -- சுந்தர் \பேச்சு 08:27, 19 அக்டோபர் 2010 (UTC)
ஆமாம், சுந்தர். சேர்ந்து + இயங்கும் போது எனத் தனித்தனியாகவும் முக்கியத்துவம் தர வேண்டும் :) விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் பக்கத்தில் இதற்கான ஒருங்கிணைப்பைச் செய்யலாம். தமிழ் விக்கி செய்திகள், தமிழ் விக்சனரியிலும் இத்திட்டத்தை மேற்கொள்ளலாம். --இரவி 09:05, 19 அக்டோபர் 2010 (UTC)
விக்கிமீடியா சென்னை சந்திப்பு
தொகுஅனைவருக்கும் வணக்கம், பெங்களூர்,மும்பை,தில்லி,ஹைதராபாத் சந்திப்புகளை தொடர்ந்து இப்பொழுது சென்னையிலும் விக்கிமீடியா சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வரைகிறது.சென்னையில் இருக்கும் தமிழ் விக்கியர்கள் யாரேனும் உதவ முடிந்தால் சுந்தரையோ / என்னையோ தொடர்பு கொள்ளுங்கள், நிறைய வேலை இருக்கின்றது. தேதி மட்டும் 14 நவம்பர். இடம் உறுதிசெய்யப்பட வேண்டும். ஓர் காலத்தில் en:User:Ganeshk,en:User:Planemad,en:User:Ravichandar84 (மன்னிக்கவும் நான் த.விக்கியிற்கு புதிது,பயனர்களை அவ்வளவாக தெரியாது) போன்ற மிக சிறப்பான பயனர்களை தந்த சென்னையில் இப்போது விக்கியர்கள் மிக குறைவாக உள்ளனர். விக்கி சந்திப்பின் மூலம் விக்கி சமூகத்தை சென்னையில் வளர்க்க வேண்டும்.தமிழகத்தின் தலைநகரில் த.விக்கியர்களின் எண்ணிக்கையும் வளர வேண்டும் :) உதவிக்கு நன்றி. ஸ்ரீகாந்த் 18:00, 20 அக்டோபர் 2010 (UTC)
- மாகிருடன் பேசினேன். நாளை இடத்தைப் பார்த்து உறுதி செய்வதாகக் கூறி உள்ளார்--இரவி 10:20, 21 அக்டோபர் 2010 (UTC)
பண்பாடு அறிவுத்தொகுதிகளுக்கான இக்காலத்திய அணுக்கம்
தொகுhttp://lists.wikimedia.org/pipermail/wikipedia-l/2010-October/031283.html - International Forum on Access to Culture and Knowledge in the Digital Era: Barcelona 28 -31 October 2010 -- சுந்தர் \பேச்சு 11:41, 21 அக்டோபர் 2010 (UTC)
சிறப்புக் கட்டுரை முன்மொழிவு
தொகுஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி இங்கு பரிந்துரைத்துள்ளேன். உங்கள் ஆதரவு/கருத்துக்களை பதிந்தால் நல்லது. நன்றி. --அராபத்* عرفات 15:07, 21 அக்டோபர் 2010 (UTC)
மழலையருக்கான விக்கிபீடியா தமிழ் பக்கங்கள்
தொகுILUGC தமிழ் குழுமத்தில் SAG.அருண் மழலையர்க்காக ஓர் விக்கி குறுந்தட்டு செய்ய ஆர்வமுண்டன் இருக்கிறார். நாம் இதற்கான கட்டுரை பட்டியல் தயாரித்து உதவினால் நாமும் மலையாள விக்கி போல குறுந்தட்டு வெளியிடலாம். அவரது திட்ட பக்கம்.அவரை இங்கே அழைக்கிறேன், நாம் இந்த திட்டத்தை இணைந்து நடத்தலாம். ஸ்ரீகாந்த் 14:10, 24 அக்டோபர் 2010 (UTC)
ஸ்ரீகாந்த், தகவலை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நிச்சயம் இந்த திட்டத்தை நாம் இணைந்து நடத்தலாம், தங்களுடைய கருந்த்துக்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். -- அருண் 14:36:49 , 24 அக்டோபர் 2010 (UTC)
- அருண்,
- நல்ல முயற்சி!. நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள். முதலில் கட்டுரைத் தலைப்புகளைத் தேர்வு செய்ய வேண்டுமா? எவ்வளவு கட்டுரைகள். குறைந்த ப்டசம் நீளமென்று ஏதேனும் அளவுகோல் உண்டா?--சோடாபாட்டில் 14:55, 24 அக்டோபர் 2010 (UTC)
- சோடாபாட்டில்,
- நன்றி. எத்தனை கட்டுரைகள் என்று இன்னும் முடிவு செய்யவில்லை, இருந்தாலும் மலயாள விக்கிப்பீடியா குறுந்தட்டில் 500 கட்டுரைகளை உள்ளடிக்கி உள்ளார்கள். நாம் DVD ஆக அதிக கட்டுரைகளுடன் வெளியிடலாம். 2000திலிருந்து 3000 வரை கட்டுரைகள் இருந்தால் நலமாக இருக்கும். கட்டுரைகள் அளவைப்பற்றி கவலை வேண்டாம். நாம் ஏன் இவர்களைப் போல ஒரு விக்கிப்பீடியா தொகுப்பை உருவாக்கக் கூடாது? - அருண் Sun Oct 24 16:22:45 UTC 2010
- அருண், நல்ல முயற்சி, முதற் கட்டமாக இங்கு திட்ட பக்கம் ஒன்றை உருவாக்கி குழந்தைகளுக்கான கட்டுரைகளை குறிப்பிட்ட இலக்கு வைத்து பட்டியலிட்டு தொகுத்துவாருங்கள். சென்னையில் நவம்பர் 14 அன்று நடைபெற இருக்கும் விக்கி மாரத்தனில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அங்கு, திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று ஒரு யோசனை கிடைக்கலாம். -- மாஹிர் 05:42, 27 அக்டோபர் 2010 (UTC)
அருண், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். தங்கள் முயற்சியை தமிழ் விக்கிப்பீடியாவில் வைத்தே ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். விக்கிப்பீடியாவுக்கு வெளியே தனிப்பட்ட வலைத்தளங்களில் பங்களிப்பதற்கு யோசிப்பேன். நன்றி--இரவி 18:50, 27 அக்டோபர் 2010 (UTC)
வெளி இணைப்புக் கொள்கை
தொகுஇங்கே வெளி இணைப்பு கொள்கைக்கான வரைவுப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் இட வேண்டுகிறேன். யாருக்கும் மறுப்பு / மாற்று கருத்து இல்லையெனில் ஒரு வார காலத்துக்கு பிறகு கொள்கையாக ஏற்றுக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.--சோடாபாட்டில் 11:56, 25 அக்டோபர் 2010 (UTC)
மும்பையில் முக்கிய கூட்டம்
தொகுசிம்மி வேல்சு இந்தியாவுக்கு குறும்பயணமாக வருவதை ஒட்டி மும்பையில் விக்கிப்பீடியர்களுக்கான சந்திப்பு ஒன்று நிகழவிருக்கிறது. இதில் நம்மில் ஒருவரேனும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். மணியன் கலந்து கொள்ள இயலுமா எனத் தெரிவிக்கவும். இடங்கள் நிரம்பிவிட வாய்ப்பு உள்ளதால் எனக்கு உடனடியாக மடலனுப்பினால் இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளருடன் தொடர்புபடுத்தி விடுகிறேன். இக்கூட்டத்தை ஒட்டி தனியாக வேறு சிறு குழுக் கூட்டங்களும் நடக்கவுள்ளன. எனக்கு அவற்றுக்கான அழைப்பு வந்துள்ளது, ஆனால் கலந்து கொள்ள இயலவில்லை. வாய்ப்பு இருந்தால் அவற்றுள் எவற்றிலேனும் மணியனை கலந்து கொள்ளச் செய்யலாம் (உறுதியாகத் தெரியவில்லை). இந்நேரத்தில் நமது அண்மைய முன்னேற்றங்களைப் (25,000 கட்டுரைகள், தமிழ் விக்சனரியில் ~2 இலட்சம் சொற்றொடர்கள், விக்கி செய்திகளில் முதல் 15 இடங்கள் என) பட்டியலிட்டு அச்சில் சிம்மியிடம் தந்தால் எங்கேனும் அவர் செய்தி வெளியீட்டில் குறிப்பிடக்கூடும். நேரம் மிகக் குறைவாக உள்ளது. விரைவில் செயல்பட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:18, 26 அக்டோபர் 2010 (UTC)
- சுந்தர்,தற்சமயம் நான் சென்னைக்கு மாறியுள்ளேன். மும்பைக்கு விக்கிப்பீடியா நிகழ்வு ஏதேனும் வராதா என்று ஏங்கியிருந்த நேரத்தில் வராது இப்போது வந்துள்ளதே :(.சென்னையில் இடம் மாறல் தொடர்பான தனிப்பட்டச் செயல்களில் மும்முரமாக இருப்பதால் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.--மணியன் 06:02, 26 அக்டோபர் 2010 (UTC)
பரவாயில்லை, மணியன். நவம்பர் 14, 2010 அன்று சென்னையில் இந்திய விக்கியர் சந்திப்பு, மாரத்தானுக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. அதிலும், இனி சென்னையைக் களமாகக் கொண்டு செய்யக்கூடிய பல விக்கிப்பணிகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். சென்னையில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நீங்கள் சென்னைக்கு இடம் மாறியதில் உண்மையில் மகிழ்ச்சியே :)
சுந்தர், இனி இந்தியாவில் இது போல் நிறைய கூட்டங்கள் நடைபெறலாம். எல்லாவற்றிலும் கலந்து கொள்வது இயலாதது. அதே வேளை, தென்னிந்திய விக்கிப்பீடியாக்கள் மிக முனைப்பாக இருக்கும் நிலையில், வணிக நிறுவனங்கள் வழக்கமாகச் செய்வது போல், எல்லா கூட்டங்களையும் வட இந்தியாவிலேயே நடத்த வேண்டாம் என்பதையும் எடுத்துரைப்போம். கூட்டத்தைக் காட்டிலும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நம்மை அளவிடக்கூடிய நோக்கு விக்கிமீடியாவிடம் உண்டு என்று நம்புகிறேன். எனவே, கவலைப்படாது தொடர்ந்து களம் / தளம் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் :)--இரவி 06:11, 26 அக்டோபர் 2010 (UTC)
- பரவாயில்லை மணியன். இரவி சொன்னது போல, இனி சென்னையில் இருந்து செய்யக்கூடிய பணிகள் ஏராளம்.
- இரவி, உண்மைதான். இப்போதைய கூட்டம் மும்பையில் நடப்பது சிம்மியின் வேறு உரை நிகழ்த்தலை ஒட்டியே அமைந்துள்ளது. மற்றபடி இயன்ற அளவு தென்னிந்திய நகரங்களில் நடத்துமாறு கேட்போம். வடகிழக்கு இந்தியாவிலும் சில கூட்டங்களை நடத்த வேண்டும். எதிர்வரும் சென்னைக்கூட்டம் வெற்றியுடன் நடந்ததும் சென்னையும் விக்கிமீடியாவின் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும். தரவுகளை விக்கிமீடியாவில் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். மடற்குழுவில், விக்கிமேனியாவில், கோவை மாநாட்டில், ஊடகங்களில் என நமது பங்களிப்புகள் நல்ல வெளிச்சம் பெற்றுள்ளன. நமது தளத்தை நன்கு வளர்த்துக் கொண்டு போவதே இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்துள்ளது. தொடர்ந்தும் அதிலேயே நாம் முதற்கண் ஆற்றலைச் செலுத்துவோம். -- சுந்தர் \பேச்சு 06:37, 26 அக்டோபர் 2010 (UTC)
- சிம்மி வேல்சின் காட்சியளிப்பு நிகழ்படம் இங்கே ஸ்ரீகாந்த் 16:47, 1 நவம்பர் 2010 (UTC)