விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 13, 2013
- ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான சிங்கப்புலி அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.
- அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் மருந்துவாழ் மலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.
- ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் அரோகன் எண் என்றழைக்கப்படும்.
- ஆரியக்கூத்து எனப்படும் கழைக்கூத்து என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.
- பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் கொற்றவையை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.