விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 28, 2012
- தங்கநாற்கரச் சாலைத் திட்டம் (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.
- மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு தாயும் சேயும் பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது
- மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த மூக்கறு போரில் இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.
- சையது உசேன் மொகிசின் என்பவர் இந்திய வரைபடம் வரையப்பட்ட பெரிய இந்திய நெடுவரை வில் முறைக்கான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர்.
- தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.