விக்கிப்பீடியா:பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் குறித்த கொள்கை
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை உடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்த கொள்கைப் பக்கம்.
தமிழ்நாட்டு அரசுக்கு முன் வைக்கும் பரிந்துரைகள்
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சியும் கட்டாய தமிழ் விசைப்பலகைகளும்
தொகுதமிழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பு பெற்ற தமிழ்99 தட்டச்சு முறையைப் பயன்படுத்த வேண்டும். தமிழ் நிலப்பகுதிகள் விற்பனையாகும் கணினிகளில் ஆங்கிலம் / தமிழ்99 முறை தமிழ் விசைப்பலகைகள் இரண்டும் கலந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அல்லது, அத்தகையை கணினிகள் / விசைப்பலகைகள் விற்போருக்குச் சலுகை அளிக்க வேண்டும். குறைந்தது, அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளில் தமிழ்99 விசைப்பலகையைக் கட்டாயமாக்க வேண்டும்.
கட்டற்ற உள்ளடக்கங்கள்
தொகுஅரசு நிதியில் உருவாகும் அறிவாக்கங்கள் அனைத்தையும் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, பல்கலைக்கழக வெளியீடுகள், அருங்காட்சியக ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள், அறிவியற் கலைக்களஞ்சியம் போன்றவை. கட்டற்ற உரிமத்தில் அறிவிக்கப்படும் அனைத்து ஆக்கங்களையும் http://www.tamilvu.org/library/libindex.htm , http://textbooksonline.tn.nic.in/ போன்ற தளங்கள் மூலம் பொதுப்பயன்பாட்டுக்குத் தர வேண்டும். இவை PDF ஆவணமாக மட்டுமன்றி, ஒருங்குறி முறையில் உரை வடிவில் கிடைக்கப்பெற வேண்டும்.
பொதுக் கல்வி / பாட நூலில் விக்கிப்பீடியா
தொகுபள்ளிக் கல்வியில், தமிழ் அல்லது சமூக அறிவியல் நூலில் (தற்கால வரலாறு, குடிமையியல்) விக்கிப்பீடியாவைப் பற்றி ஒரு பாடம் இடம் பெற வேண்டும். தற்போது கல்விசார் கூடுதல் பயிற்சிகளில் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா குறித்து சிறப்புப் பயிற்சிகள் தரப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழாசிரியர் (புலவர்) கல்வித்திட்டத்திலும் முதலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் யாவும் தமிழிலும்
தொகுஅரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் தகவல் தரும் முதன்மை மொழியாக தமிழ் இருக்க வேண்டும். இது ஒருங்குறி உரை வடிவில் இருக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.