விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூலை 4 - 6

உலோ.செந்தமிழ்க்கோதை, பரிதிமதி, ப. இரமேஷ், அன்புமுனுசாமி, அருளரசன், பார்வதி, ஹிபாயத்துல்லா, உழவன், தமிழ்ப்பரிதி மாரி... வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை இங்கு இடலாம். வலியுறுத்தவில்லை; நீங்கள் விரும்பினால் இடலாம்! உதாரணம்:- முடிந்த பயிற்சியின்போது பதிவு செய்யப்பட்டவை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:18, 4 சூலை 2017 (UTC)

சென்னைதொகு

திருவள்ளூர்தொகு

காஞ்சிபுரம்தொகு

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் கிரசென்ட் பல்கலைக்கழகத்தில் , 28 ஆசிரிய, ஆசிரியைகளுக்குக் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை தமிழ் விக்கிப்பீடியா முதல் நாள் (04.07.2017) பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பொறுப்பு முதல்வர் திருமதி C. பிருந்தா அவர்கள் மற்றும் பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் N. அன்பழகன் , கோ . கந்தவேல் வாழ்த்திப் பேசினர்.

04.07.2017 முதல்நாள் நிகழ்வுகள்தொகு

தமிழ் விக்கிப்பீடியா-அறிமுகம், புதிய பயனர் கணக்கு உருவாக்கும் முறை, மணல்தொட்டி அறிமுகம், மொழிபெயர்ப்பின் அவசியம், நடைக் கையேடு ஆகிய தலைப்புகள் குறித்து மாநில கருத்தாளர் ப .இரமேஷ் பயிற்சி அளித்தார் . அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய பயனர் கணக்குத் தொடங்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்து அனுப்பியிருந்த ஆங்கில விக்கிப்பீடியா தலைப்புகள் மொழிபெயர்த்துப் பதிவேற்றம் செய்திட வேண்டி ஒவ்வொருவருக்கும் பிரித்து அளிக்கப்பட்டது.

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்தொகு

05.07.2017 இரண்டாம் நாள் நிகழ்வுகள்தொகு

இரண்டாம் நாள் பயிற்சியில் பங்கேற்பாளர்கள் தாங்கள் எழுதிக் கொண்டு வந்த கட்டுரைகளைத் தட்டச்சுசெய்து பதிவேற்றும் பணியினை மேற்கொண்டனர். திரு . ரவி அவர்கள் பரிந்துரைத்த தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தேவைப்படும் காஞ்சிபுரம் மாவட்ட கட்டுரைகள் பங்கேற்பாளர்களுக்கு ஐந்து தலைப்புகள் வீதம் பிரித்து வழங்கப்பட்டன. அத்தலைப்புகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து மொழிபெயர்த்தனர். அதனை சரிபார்ப்பிற்குப்பின் பதிவேற்றம் செய்தனர்.

தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பு விருந்தினர்களான திரு. சீனுவாசன், திரு.முனுசாமி ஆகிய இருவரும் வருகைபுரிந்தனர். அவர்களை மாநில கருத்தாளர் திரு. ப .இரமேஷ் அவர்களும் , திரு .நி .அன்பழகன் அவர்களும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர் . இரண்டாம் அமர்வில் ஒரு கட்டுரையில் மேற்கோள்கள் எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றி கருத்தாளர் திரு.ப.இரமேஷ் எடுத்துரைத்தார். மேற்கோள் இடம்பெற வேண்டிய முக்கியத்துவத்தைக் கூறியதுடன் அதனை இணைக்கும் பயிற்சியினைப் பங்கேற்பாளர்கள் மேற்கொள்வதைப் பிற கருத்தாளர்கள் நேரடியாக மேற்பார்வை செய்து அதனை ஒழுபடுத்தினர் . மூன்றாம் அமர்வில் கட்டுரையில் மேற்கோள் சேர்க்கும் முறையினைத் தொடர்ந்து கட்டுரையில் படங்களை இணைக்கும் முறையினை கருத்தாளர்கள் திரு.நி.அன்பழகன், திரு.ப.இரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து பயிற்சி அளித்தனர். கூகுளில் உள்ள படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தாங்களாகவே எடுத்த புகைப்படங்களையே இணைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திரு. சீனுவாசன் அவர்கள் படத்தொகுப்பு எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதனையும் தவறான கருத்துகளையோ தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள கருத்துகளையோ மீண்டும் பதிவு செய்தால் அதனை தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகத்தினர் அதனை நீக்க வாய்ப்புள்ளது. எனவே தரும் தகவல் சரியான மேற்கோள் மற்றும் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதப்பட வேண்டுமெனில் அதன் நடை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். அறிமுகமாக மட்டுமே இல்லாமல் கூடுதலாகக் கருத்தினைத் தரும் வகையில் கட்டுரை அமைய வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார். இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக, சிறப்பு விருந்தினர் திரு.முனுசாமி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சான்றாக ஒரு கட்டுரையினை எடுத்துக்கொண்டு பயனர் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்கள் பதிவேற்றிய கட்டுரைகளைக் கொண்டே அவர்கள் செய்த பிழைகளைத் திருத்தியும், பங்கேற்பாளர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைக் களைந்தும் சிறப்புற பயிற்சியளித்தார். பங்கேற்பாளர்கள் தாங்கள் படைத்த கட்டுரைகளின் எண்ணிக்கையை அனைவருடனும் பகிர்ந்து மகிழ்ந்தனர். 252 கட்டுரைகள் பதிவேற்றத்துடன் இரண்டாம் நாள் பயிற்சி இனிதே முடிவடைந்தது.

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்தொகு

மூன்றாம் நாள் பயிற்சி 06.07.2017தொகு

மூன்றாம் நாள் பயிற்சியில் பங்கேற்பாளர்கள் தாங்கள் எழுதிய கட்டுரைகளை எவ்வாறு திருத்துவது , என்பது பற்றியும் திரு .ரவி அவர்கள் குறிப்பிட்டவாறு விக்கிப்பீடியா தரத்துக்கு கட்டுரைகள் எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது . மாநில கருத்தாளர் .திரு. ப .இரமேஷ் , மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , திரு.அன்பு முனுசாமி , திரு. சீனிவாசன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர் . பெரும்பாலான ஆசிரியர்கள் விக்கி நடைக்கு ஏற்ற தரமான கட்டுரைகளை உருவாக்கினர் .

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்தொகு

தர்மபுரிதொகு

சேலம்தொகு

ஈரோடுதொகு

நாமக்கல்தொகு

திருப்பூர்தொகு

நீலகிரிதொகு

கோயம்புத்தூர்தொகு