விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவில் எழுத பத்து எளிய விதிகள்

விக்கிப்பீடியா உலகின் மிகவும் வெற்றிகரமான இணைய கலைக்களஞ்சியம் ஆகும். இதன் ஆங்கிலமொழி பதிப்பு ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை கொண்டுள்ளன. இதுவே அநேகமாக இதுவரை அறிந்த மிகப்பெரிய சேகரிப்பு ஆகும். மேலும் மிகவும் பரவலாக அணுகக்கூடியது. விக்கிப்பீடியாவை இணைய அணுகலுடன் எவரும் திருத்தலாம். ஆனால் அது நம்பகமான தகவலை அளிக்கிறதா? 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கிப்பீடியாவின் அறிவியல் கட்டுரைகள் என்பது தொழில்முறையில் ஏற்படுத்தப்பட்ட மற்ற கலைக்களஞ்சியத்திற்கும் ஒப்பிடத்தக்கதாக உள்ளது என தெரியவந்தது.[1] இதனால் தன்னார்வாளர்கள் வியக்கத்தக்க துல்லியமான உள்ளடக்கத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் முடியும் என்று தெரிவிக்கிறது.


விதி 1: ஒரு கணக்கை பதிவு செய்யவும் தொகு

எந்தப் பார்வையாளரும் விக்கிப்பீடியாவை எளிதில் திருத்த முடியும் என்றாலும், ஒரு பயனர் கணக்கை உருவாக்குவது பல நன்மைகளை வழங்குகிறது. முதலில், இது உங்களுக்கு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. இது எதிர்மறையாக தோன்றலாம், ஒரு புனைப் பெயரில் பதிவுசெய்துள்ளவர்களின் முகவரி உண்மையில் "அநாமதேயமாக" அதாவது புகுபதிகை செய்யாமல் திருத்துபவர்களை விட அதிகமாக வெளியில் தெரியவில்லை. அதாவது, அநாமதேயமாக விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை தொகுப்பவர்களின் ஐ.பி முகவரி வெளிப்படையாகத் தெரியும். நம்மில் சிலபேர் தங்களது உண்மைத் தகவல்களை விக்கியின் கணக்குகளோடு இணைத்திருக்கின்றனர். நீங்கள் விக்கிப்பீடியாவில் புனைப்பெயரைத் தவிர்த்துவிட்டு உங்களது சொந்த பெயரில் பங்களிக்கத் துவங்கினால் பின்வருவனவற்றையும் கருத்தில்கொள்ளவும், உங்கள் முழு தொகுப்புகளின் வரலாறும் எதிர்காலத்தில் ஆர்வமுள்ள வலை தேடுவோர்களுக்கு (சக ஊழியர்கள், மாணவர்கள் அல்லது முதலாளிகள் உட்பட) காலவரையின்றி ஆய்வுக்கு திறந்துவிடப்படும். கல்வி வட்டாரங்களில் இருப்பது போல, ஒரு நல்ல நற்பெயர் உங்கள் விக்கியின் வாழ்க்கைக்கும் உதவுகிறது. பயனர் கணக்கு மூலம் புகுபதிகை செய்பவர்கள் நல்ல பதிவுகள் மற்றும் திருத்தங்களின் தொகுப்புகளை உருவாக்க முடியும். மேலும் நீங்கள் நிலையான, மரியாதைக்குரிய அடையாளமாக இருந்தால், மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் ஒத்துழைப்பினை பெறுவது எளிதாகிறது. கடைசியாக, ஒரு பதிவு செய்யப்பட்ட கணக்கின் வழியே புகுபதிகை செய்வதன் மூலம், இங்கு நீங்கள் முன்பே திருத்திய கட்டுரைகளை கண்காணிப்பதற்கான "கவனிப்பு பட்டியல்" உள்ளிட்ட மேம்பட்ட தொகுத்தல் அம்சங்களை அணுகலாம்.

விதி 2: ஐந்து தூண்களை அறிக தொகு

"ஐந்து தூண்கள்" என்று அழைக்கப்படும் சில பரந்த கொள்கைகள் உள்ளன; அதனை விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்யும் போது அனைத்து ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். விஞ்ஞானிகள் அல்லது அறிஞர்கள் மிக முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியது, விக்கிப்பீடியா என்பது முதல் சிந்தனை அல்லது ஆராய்ச்சியினை வெளியிடும் இடம் அல்ல என்பதுதான். அதே சமயத்தில், உங்களின் தனிப்பட்ட கோட்பாட்டை மேம்படுத்துவதற்கோ அல்லது வெளியிடப்படாத/அங்கீகரிக்கப்படாத முடிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பொருத்தமான இடமும் இதுவல்ல. விக்கீப்பிடியா உங்களது தனிப்பட்ட கோட்பாடுகளை விவாதிக்கும் மேடையோ அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளை விவாதிக்கும் தளமோ அல்ல. இந்த அடிப்படையில் ஆசிரியர் தலையங்கம் போன்ற கட்டுரைகளை எழுத துணைபுரியும் வலைப்பதிவு போன்ற புதிய ஊடகங்களிலிருந்து விக்கிப்பீடியாவானது முற்றிலும் வேறுபடுகிறது. விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்வது என்பது அறிவியலின் மீது உங்களுக்கு இருக்கும் உண்மையான ஈடுபாட்டை காட்டுகிறது. ஆனால் இங்கும் கருத்து வேறுபாடுகள் குறிப்பாக உரையாடல் பக்கங்களில் கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது போன்ற தருணங்களில் விவாதங்கள் தவிர்க்க முடியாமல் எழும். கருத்துவேறுபாடு இருப்பினும் பிற ஆசிரியர்களை ஒத்துழைப்பாளர்களாக கருதுங்கள், அவர்களிடம் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் விக்கிப்பிடியாவில் குறிப்பாக விவாதங்களின் பொழுது மன அழுத்தமாக இருப்பதை உணர்ந்தால் விடுபதிகை செய்து சிறிது நேரத்திற்கு பிறகு வரவும். ஏனென்றால் மற்ற அறிவியல் நிறுவனங்களை போன்று கட்டுரைகளை எழுதுவதற்கு விக்கிப்பிடியாவில் காலநிர்ணயம் எதுவும் கிடையாது.

விதி 3: துணிவோடு, ஆனால் பொறுப்போடு இருங்கள் தொகு

எந்த விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு தேவைப்படுகிறது. இன்று விக்கிப்பீடியாவின் அளவு ஒப்பிடமுடியாதபொழுதும், அதன் நீடித்த வெற்றிக்கு பல்லாயிரக்கணக்கான தன்னார்வாளர்களின் பங்களிப்பையே சார்ந்திருக்கிறது. எனவே, விக்கிப்பீடியா அதன் அனைத்துப் பயனர்களும் துணிவோடு இருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது: நீங்கள் ஒரு பிழையைப் பார்த்தவுடன் அதனை சரிசெய்யவும். நீங்கள் ஒரு கட்டுரையை மேம்படுத்த முடியும் என்றால், தயவுசெய்து அவ்வாறு செய்யுங்கள். இருப்பினும், பொறுப்பற்ற தன்மையிலிருந்து துணிவினை வேறுபடுத்துவது முக்கியம். சிறியதாகத் தொடங்குங்கள்: முதன் முயற்சியிலேயே பயன்பாட்டிலிருக்கும் அறிவியலின் வரலாறு போன்றதொரு பெரிய கட்டுரைகளை முழுவதுமாக எழுதும் முன்பு, அதுபோன்ற பெரிய கட்டுரைகளின் பத்திகளில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்த பழகிக்கொள்ளவும். பின்பு சிறிய கட்டுரைகளைத் தொடங்குங்கள்; புதிய பயனர்களுக்கு விக்கிப்பீடியாவில் பங்களிக்க தயக்கமிருக்கலாம், தாங்கள் தவறுகள் இழைக்கலாம் என்ற பயமிருக்கும் அது தேவை அற்றது. நீங்கள் முதல் கட்டுரையை எழுதும்பொழுது நடக்கவிருக்கும் மோசமான நிகழ்வென்பது, உங்களது கட்டுரை சீர்திருத்தத்திற்குட்பட்டது என அனுபவம் வாய்ந்தவிக்கிப்பீடியர்களால் கருதப்பட்டால் திருப்பி பெறப்படும். அவ்வாறு நேரிடின் அனுபவம் வாய்ந்த விக்கீப்பிடியர்களின் பேச்சுப்பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடி போன்ற ஒத்தாசை பக்கங்களிலோ ஆலோசனைகளை பெற்று, இந்த படிப்பினையை நேர்மறையாக எடுத்துக்கொண்டு முன்னேறிச்செல்லவும்.


விதி 4: உங்கள் பார்வையாளர்களை அறியுங்கள் தொகு

விக்கிப்பீடியா முக்கியமாக நிபுணர்களை இலக்காகக் கொள்ளவில்லை; ஆகையால், கட்டுரைகளில் தொழில்நுட்ப விவரங்களின் நிலை சாமன்யர்களாலும் புரிந்துகொள்ளக்கூடிய சமநிலையில் இருக்க வேண்டும். அறிவியல் உள்ளடக்கம் கொண்ட கட்டுரையில் பங்களிக்கும் போது, நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள் - ஒரு உயர்நிலைப் பள்ளி பார்வையாளரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விரிவாக எழுத வேண்டும் என்று. எனவே இது சிக்கலான கருத்துக்களை எளிதாக அனைவராலும் அணுகக்கூடிய, ஒப்புதல் அளிக்கக்கூடிய முறையில் விளக்கும் வகையில் எழுதுவதென்பது சவாலானதாக இருக்கும். ஆனால் அந்த விடாமுயற்சிக்கு மதிப்புள்ளது. அடுத்தமுறை நீங்கள் கையெழுத்துப் பிரதியை எழுதும்போது அல்லது இளங்கலை வகுப்புக்கு கற்பிக்கும்பொழுது அதன் நன்மைகளை அறுவடை செய்வீர்கள்.

விதி 5: பதிப்புரிமையை மீறாதீர்கள் தொகு

விக்கிப்பீடியாவின் அனைத்து உள்ளடக்கமும் அனைவராலும் இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையில் திறந்த கட்டற்ற உரிமையின் கீழ் உள்ளது. இதன் விளைவாக, பதிப்புரிமை கட்டுப்பாட்டின் கீழுள்ள இலவசமற்ற உள்ளடக்கத்தை அது ஏற்காது. விஞ்ஞான பொது நூலகங்களிலுள்ள திறந்த அணுகல் உரிமமுள்ள சில பத்திரிகைகள் விக்கிபீடியாவின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருந்தால், அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் சமீபத்தில் படித்த ஆய்வுக்கட்டுரைகளின் பத்திகளையோ, புள்ளிவிவரங்களையோ நகல் எடுக்கவேண்டாம், இது பதிப்புரிமைக்கு எதிரானது என்று அடையாளமிடப்பட்டு உடனடியாக நீக்கப்படலாம். மாறாக உங்கள் சொந்த ஆய்வுக்கட்டுரைகளை வீக்கிப்பிடியா பயன்படுத்த அனுமதிக்கலாம், ஆனாலும் நீங்கள் மீண்டும் அதனை திரும்பபெற நினைத்தால் அது சிக்கலானது, நேரவிரயமும் கூட. எனவே உங்கள் கட்டுரைகளை எளிமையான மொழியில் மாற்றியமைப்பது அல்லது அதை இன்னும் எளிதாக அணுகும் உருவத்தை செய்வது பெரும்பாலும் சிறந்தது. இது விக்கிப்பீடியாவின் நிபுணத்துவம் இல்லாத வாசகர்களுக்காக மிகவும் பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்துகிறது (விதி 4 ஐப் பார்க்கவும்).

விதி 6. மேற்கோள், மேற்கோள், மேற்கோள் தொகு

விக்கிப்பீடியாவினை சாத்தியப்படக்கூடிய மிக உயர்ந்த தரமாக பராமரிக்க, விக்கி உண்மையை ஒப்புக்கொள்வது என்ற கடுமையான உட்பிரிவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு அறிக்கையையும் நம்பகமான, வெளியிடப்பட்ட மூலத்தினை (அதிகப்படியான சுய மேற்கோள்களை குறிப்பிடுவது பற்றி விதிகள் 7 மற்றும் 8 ஐ காண்க) குறிப்பிடுவதன் மூலம் இது சிறந்த முறையில் நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலான விஞ்ஞானிகள்/ஆசிரியர்கள், ஒரு பரந்த இலக்கியத்தினை எளிதாக அணுகவும், அதனை அவர்களின் எழுத்தை ஆதரிக்க உள்மேற்கோள்களாகப் பயன்படுத்துவதில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எதிர்காலத்தில் மேற்கோள்கள் இல்லாத உள்ளடக்கம் எந்த நேரத்திலும் விக்கிப்பீடியாவில் இருந்து சரிபார்க்கப்படாத உள்ளடக்கமாக கருதப்பட்டு அகற்றப்படலாம் என்பதால், சவால் செய்யப்படக்கூடிய நிலையிலிருக்கும் ஒவ்வொரு அறிக்கையுடனும் ஆதரவு மேற்கோள்களை வழங்குவது அவசியமாகிறது. முடிந்தவரை இரண்டாம் நிலை ஆதாரங்களுக்கு(மதிப்புரைகள் அல்லது புத்தக அத்தியாயங்கள் போன்றவை) முக்கியத்துவம் கொடுங்கள்.விக்கிபீடியாவின் இந்த அணுகுமுறை, நிபுணத்துவம் வாய்ந்த தகவலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த நுழைவு புள்ளி ஆகும். உங்கள் மேற்கோள்கள் (நம்பகமான, இலவசமாக அணுகக்கூடிய ஆன்லைன் ஆதாரங்கள் உதாரணமாக உயிரியல் தரவுத்தளங்கள் அல்லது திறந்த அணுகல் பத்திரிகைகளின்) நேரடி மீத்தொடுப்புக்களை (ஹைப்பர்லிங்) ஈடுவதன் மூலம், பிற ஆசிரியர்கள் உங்கள் உள்ளடக்கத்தை விரைவாக சரிபார்க்க முடியும், மேலும் வாசகர்களுக்கு அதிக விவரங்களைக் கூறும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை உடனடியாக அணுகுவதும் எளிதாகிறது.

விதி 7. சுய விளம்பரத்தை தவிர்க்கவும் தொகு

பலர் தங்களைப் பற்றி தாங்களாகவே விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுத அல்லது தொகுக்க ஆசைப்படுகிறார்கள். அந்த முயற்சிகளை ஆரம்பத்திலே நிராகரிக்கவும். உங்களைப் பற்றிய சுயதகவல்கள் ஒரு கலைக்களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு போதுமானதாக இருந்தால், இறுதியில் வேறு யாராவது உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதுவார்கள்.ஒரு தனிப்பட்ட இணையப் பக்கத்தைப் போலல்லாமல், விக்கிபீடியாவிலுள்ள உங்கள் சுயவிவரம் உங்களால் கட்டுப்படுத்த இயலாது என்பதை நினைவில்கொள்ளவும். மேலும் உங்களைப் பற்றியுள்ள கட்டுரையை நீங்கள் விளம்பர படுத்தமுடியாது, ஆயினும் அந்தக் கட்டுரையில் ஏதேனும் தகவல்பிழை இருந்தால், விக்கிப்பீடியாவின் விதிகளை மீறாமல், அந்த கட்டுரையின் உரையாடல் பகுதியில் குறிப்பிடுவதன் மூலம் மற்ற ஆசிரியர்களால் திருத்த வழிசெய்யலாம். கட்டுரைகளில் உங்கள் வழிகாட்டிகள், சகாக்கள், போட்டியாளர்கள், கண்டுபிடிப்புகள், குடும்பம், நண்பர்கள் அல்லது திட்டங்களைப் பற்றி எழுதுவதற்கு முன்பு இருமுறை யோசிக்கவும். அது உங்களை கருத்துவேற்றுமகளிலோ அல்லது தற்செயலான சார்பு நிலையை நோக்கித் தள்ளுகிறது. மேலும் எந்த கட்டுரைகளையாவது தொகுக்கும்பொழுது நீங்கள் தனிப்பட்ட ஆர்வம் அல்லது நிதி சார்ந்த பயன் பெறுவதாக இருந்தால், உரையாடல் பக்கத்தில் மற்ற ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் பெற்று பதிவிடுக.

விதி 8. உங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் அதிகாரமாக வாதிடாதீர்கள் தொகு

நீங்கள் நிபுணத்துவம் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவதில் கருத்துவேற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லை, உண்மையில், நீங்கள்தான் விக்கிப்பீடியாவிற்கு மிகவும் திறம்பட பங்களிக்க முடியும். விக்கிபீடியாவின் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், "நிபுணர்கள் சிக்கலான கூறுகளை நம்பத்தகுந்த வகையில் குறிப்பிடும்" திறமை கொண்டிருப்பதாக கூறினார். இதன் மூலமே கட்டுரைகளின் தரமானது கணிசமாக மேம்படுகிறது. நீங்கள் நிபுணத்துவம் பெற்ற பகுதியில் கட்டுரைகளை எழுதும்பொழுது மேற்கோள்கள் காட்டுவதற்கு, கவனிக்கதக்க பத்திரிக்கையில் நீங்கள் எழுதிய பத்திகளை மேற்கோள் ஈடலாம் (ஆயினும் விதி 7ஐக் கவனிக்கவும்). இருப்பினும் நீங்கள் தகுந்த ஆதாரம் இல்லாத மேற்கொள்களை கட்டுரைகளில் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் நிபுணத்துவம் பெற்றத் துறையில் தகுந்த ஆதாரமில்லாத கட்டுரைப் பத்திகள் சாமன்யர்களாலான பயனர்களால் கூட கேள்விக்குட்படுத்த முடியும். இது நிபுணர்களுக்கு எரிச்சலைத் தரக்கூடும், ஆனால் இந்த கொள்கையானது விக்கிப்பீடியாவானது கல்வி மேல் வைத்திருக்கும் அதிகப்படியான அக்கறையை குறிக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், நீங்கள் யார், உங்கள் தகுதிகள் அல்லது உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதை அடைந்தீர்கள் என்பதைக் கருத்தில்கொள்ளமால் விக்கிபீடியாவிற்கு நீங்கள் அளித்த பங்களிப்புகளால் மட்டுமே நீங்கள் மதிப்பீடு செய்யப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நிபுணத்துவ அறிவானது நீங்கள் நடுநிலையில் எழுதவும், நம்பகமான, சுயாதீனமான ஆதாரங்களை உருவாக்கவும் ஒரு கருத்தை ஆதரிக்கவுமே உங்களுக்கு உதவுகிறது. கட்டுரைகளில் பங்களிக்கும் பொழுது தகுந்த சரிபார்ப்பை வழங்காவிட்டால், உங்கள் பங்களிப்புகளை நீங்கள் எத்தனை பட்டங்கள் வைத்திருந்தாலும் சரி, சவால் விடுவார்கள்.

விதி 9. நடுநிலையாக மற்றும் தகுந்த கருத்துக்களோடு எழுதவும் தொகு

விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொனி மற்றும் உள்ளடக்கமானது பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். கட்டுரைகளை எழுதும்பொழுது உண்மைகளை அல்லது பொதுவான கருத்துக்களைத் தெரிவியுங்கள், ஒருபொழுதும் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை உண்மை போன்று எழுதாதீர்கள். விக்கிப்பீடியாவில் புதுப் பயனர்கள் சர்ச்சையைத் தோற்றுவிக்கும் கட்டுரைகளை எளிதில் எழுதுகிறார்கள், ஆரம்பநிலையில் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை (விதி 3 ஐப் பார்க்கவும்) நன்கு அறியும் வரையில் இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதை தவிர்த்துவிட்டு நடுநிலையான கட்டுரைகளை எழுதவும்.

விதி 10. உதவி கேட்கவும் தொகு

அனுபவமற்ற புது பயனர்களுக்கு விக்கிப்பீடியா குழப்பமான இடமே. மார்க் அப் மொழிநிரலை கற்றுக்கொள்ளவும். நீங்கள் சிறப்பு டெம்ப்ளேட்டை வார்ப்புரு:Helpme பயன்படுத்தி உதவியை நாடலாம், விரைவில் அனுபவம் வாய்ந்த விக்கிப்பீடியர்கள் உங்கள் பேச்சுப்பக்கத்தில் நேரிடையாக உதவுவர்.

இவற்றையும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. Giles J (15 December 2005). "Internet encyclopaedias go head to head.". Nature 438 (7070): 900-1. doi:10.1038/438900a. பப்மெட்:16355180.