விக்கிப்பீடியா:வழிகாட்டல்களின் பட்டியல்

ஒழுங்கு அல்லது நடத்தை விதிகள்

தொகு

நடத்தை விதிகளை பின்வரும் இணைப்புகள் விளக்குகின்றன.

நல்லெண்ண நம்பிக்கை
சிறு திருத்தம் செய்யும் பயனரும் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பங்கெடுக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவருடைய திருத்தங்கள் ஏற்கதக்காதவைகளாக இருப்பினும் அவரின் மனம் வேதனையுரும் படி செய்யக் கூடாது.
பரப்புரை
விக்கிப்பீடியாவை உங்களைப் பற்றியோ, உங்களுடைய வலைதளம், நிறுவனம் போன்றவற்றினைப் பற்றி பரப்புரை செய்ய பயன்படுத்தக் கூடாது.
நற்பழக்கவழக்கங்கள்
பங்களிப்பாளர்கள் பல்வேறு எண்ணங்களையும், பல்வேறு பின்புலத்தினயும் கொண்டவர்கள் என்பதால் ஒருவர் போலவே பங்களிப்பார் என்று எண்ணுதல் இயலாது. எவ்வாறு பங்களிப்பு செய்தாலும் உடன் பங்களிப்பவர்களுக்கு மரியாதை தந்து கலைக்களஞ்சியத்தினை வளர்க்க வேண்டும்.
தயவுசெய்து புதுவருனரை காயப்படுத்த வேண்டாம்
நிறைய புதிய பங்களிப்பாளர்கள் விக்கிப்பீடியாவைப் பற்றி போதிய விழிப்புணர்வின்றி தொகுக்கலாம். அவ்வாறு தொகுக்கும் பொழுது அவர்களால் செய்யப்படும் இடையூருகளால், அவர்களின் பால் கோபம் கொள்ளுதலோ, அவர்களைப் புண்படுத்தும் படி செயல்படுவதோ விக்கிப்பீடியாவை வளர்க்க உதவாது. அவர்கள் மிகச் சிறந்த பங்களிப்பாளர்களாக பிற்காலத்தில் வர வாய்ப்புண்டு என்பதை கருத்தில் கொண்டு புது வருனருக்கு விக்கிப்பீடியாவைப் பற்றி தெரியப்படுத்துல் வேண்டும்.
கையெழுத்து
விக்கிப்பீடியாவின் உரையாடல் பக்கங்களில் கையெழுத்திடுவது மிகச்சிறந்த பழக்கமாகும். இதன் மூலம் உரையாடலில் பங்கேற்றவர்களையும், காலத்தினையும் அறிய இயலும். உரையாடல் பக்கங்களில் கையெழுத்திட ~~~~ என்ற குறியீட்டினைப் பயன்படுத்தலாம்.
பேச்சுப் பக்கம்
கலைக்களஞ்சியத்தின் வளர்ச்சிக்காக விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டுரையும் பேச்சுப் பக்கத்தினை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு கட்டுரை குறித்தான உரையாடல்களில் மட்டும் ஈடுபட்டு கட்டுரையை வளர்த்தெடுக்கலாம்.
பயனர் பக்கம்
உங்களைப் பற்றிய தகவல்களை உங்களுடைய நடையிலேயே தந்திட பயனர் பக்கம் உதவுகிறது. இதில் உங்களைப் பற்றிய சிறு குறிப்புகள், செயல்பாடுகள், உங்களுடையப் படம் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம். எனினும் விக்கிப்பீடியா வலைப்பூவோ, சமூக வலைதளமோ, வலையில் எழுத இடம் தரும் தளமோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளடக்கம்

தொகு
தன்வரலாறு
கட்டுரைகளில் தன்வரலாற்றினை இணைக்கும் பொழுது ஏற்படும் தவறுகள் நிறைய உள்ளன. எனவே தக்க மேற்கோள்களுடன் இணைத்தலே வரவேற்கப்படுகிறது.
மேற்கோள் சுட்டுதல்
வெளி இணைப்புகள்

நீக்குதல்

தொகு

நீக்குதலுக்கான வழிகாட்டல்களும் செயல்முறைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

நீக்குதல்
எக்கட்டுரைகளை நீக்குவது என்பது குறித்தான கண்ணோட்டம்.
விரைவான தக்கவைத்தல்
நீக்குதலுக்கான வாக்கெடுப்பில் கட்டுரையின் தேவையை உணர்த்துதல் முலம் கட்டுரையை தக்க வைக்க இயலும். அதாவது நீக்குதலில் இருந்து கட்டுரையை நிறுத்தி வைத்து கட்டுரையை வளர்த்தெடுக்கலாம்.
நிர்வாகிகளுக்கான நீக்குதல் வழிமுறைகள்
விக்கிப்பீடியா நீக்குதல் வழிமுறைகளின் படி நீக்குதலுக்கான கட்டுரை குறித்து நீக்குதலுக்கான வாக்கெடுப்பில் விவாதித்து ஒருமித்த முடிவு எட்டப்பட்ட பின்னர் நீக்கம் செய்யலாம். விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் உள்ள கட்டுரைகள் விரைவாக நீக்கப்படுகின்றன.

தொகுத்தல்

தொகு
கட்டுரை அளவு
கட்டுரையின் உகந்த அளவினைப் பற்றி விவாதிக்கும் கட்டுரை.
துணிவு கொள்
விக்கிப்பீடியாவின் விரைவான வளர்ச்சிக்கு பயனர்களின் துணிவான செயல்பாடுகள் உதவுகின்றன. இதன் மூலம் இலக்கணப் பிழை திருத்தம், புதிய விவரங்கள் சேர்க்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்றன.
பக்கவழி நெறிப்படுத்தல்
ஒரே பெயர் கொண்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளை பக்கவழி நெறிப்படுத்தல் மூலமாக சரியாக அறிய இயலும்.
வகைப்படுத்துதல், பட்டியல்கள் மற்றும் வழிசெலுத்தல் வார்ப்புருக்கள்
சரியான வகைப்படுத்துதலைத் தெரிவு செய்யவதற்கான வழிமுறைகள்
வகைப்படுத்தல்
குறுக்கு வழி

பெயரிடல் மரபு

தொகு
பெயரிடல் மரபு
கட்டுரைகளுக்கு பெயரிடுவதுப் பற்றி விரிவாக விவரிக்கும் பக்கம்.
பகுப்புகளுக்குப் பெயரிடல்
பகுப்புகளுக்குப் பெயரிடும் பொழுது தனித்துவமான, நடுநிலைத் தன்மையுடன் விக்கிப்பீடியா பெயரிடல் மரபினையும் கருதில் கொள்ள வேண்டும்.
கோப்புகளுக்குப் பெயரிடல்
படிமக் கோப்புகள், மற்றும் பிற கோப்புகளுக்கு படிக்க கூடிய வகையில் பெயரிடல் வேண்டும். உதாரணமாக 15444631மதுரை.jpg என்பதற்குப் பதிலாக மதுரைநகரம்.jpg என்று பெயரிடலாம்.

குறிப்பிடத்தக்கமை

தொகு
குறிப்பிடத்தக்கமை
நடைக் கையேடு
கட்டுரையை எழுதும் விதம் பற்றிய வழிகாட்டல்கள் உள்ள பக்கம். ஒரே நடையை அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தும் பொழுது கட்டுரையைப் படிப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும்.
இலக்கங்களை எழுதுதல்
தேதிகள் மற்றும் எண்களை கட்டுரையில் எழுதுகின்ற முறை.
மேற்கோள் சுட்டுதல்
மேற்கோள்கள், கட்டுரையின் சான்றுகளாக அச்சு ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றினை தருதலாகும்.
பக்க வடிவமைப்பு கையேடு
பெரிய அளவிலான கட்டுரைகளானது, பொதுவான கொள்கை வழிகாட்டல்களின் படி வடிவமைப்பு செய்யப்படுகின்றன. அதனால் சிக்கலான கட்டுரைகளையும் எளிமையான வடிவமைப்பினால் எளிதாக படிக்க இயலுகிறது.
மழுப்பலான சொற்களை தவிர்த்தல்

இவற்றையும் காண்க

தொகு