விக்கிப்பீடியா:நலமுரண்

(விக்கிப்பீடியா:COI இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:COI


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


நலமுரண் பங்களிப்பு என்பது உங்களைப் பற்றியோ உங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வேலை அளிப்பவர்களைப் பற்றியோ நிதி முதலிய பிற காரணங்களால் நீங்கள் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றியோ விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் குறிக்கும். இத்தகைய வெளியுறவுகள் நலமுரணுடன் செயற்படத் தூண்டுதலாக அமையலாம்.

நலமுரண் என்பது ஒருவரின் உண்மையான சாய்வினைக் குறித்தது அன்று. இது ஒருவர் இரு வேறு பொறுப்புகளைக் கொண்டிருக்கும் போது முன்னுரிமைகள் முரண்படுவதால் சாய்வுடன் செயற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது. இது ஒருவரின் மனநிலையைப் பற்றியோ நேர்மையைப் பற்றியோ எந்த ஒரு முன்முடிவையும் எடுப்பதன்று. நலமுரண் ஏற்படுவதற்கான சூழலை மட்டுமே இது குறிக்கிறது.

விக்கிப்பீடியா நலமுரணுடன் பங்களிப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக வலியுறுத்துகிறது. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்கள் விக்கிப்பீடியாவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதோடு தொடர்புடைய நபர்களுக்குப் பொதுவெளியில் உளைச்சலைத் தரலாம். நலமுரண் பங்களிப்புகள் வழமையான விக்கிப்பீடியா செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் போது தொடர்புடைய பயனர் கணக்குகள் தடை செய்யப்படக்கூடும்.

இவ்வாறு உங்களுக்குத் தொடர்புடைய கட்டுரைகளில் மாற்றங்கள் வேண்டுமெனில், குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுகோள் இடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:நலமுரண்&oldid=3801892" இலிருந்து மீள்விக்கப்பட்டது