விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை

(விக்கிப்பீடியா:V இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


நடைமுறையில் `மெய்யறிதன்மை`க் கொள்கை

தொகு
  1. கட்டுரைகள், நம்பத்தகுந்தவர்களால், பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமைதல் வேண்டும்.
  2. புதிய உள்ளடக்கங்களைச் சேர்க்கும் தொகுப்பாளர்கள், நம்பத்தகுந்த மூலங்களைச் சான்று காட்டவேண்டும். இல்லையேல், வேறு தொகுப்பாளர்கள் இதன் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வியெழுப்பவோ, அப்பகுதியை நீக்கிவிடவோ கூடும்.
  3. சான்று காட்டவேண்டிய பொறுப்பு, குறித்த பகுதியைத் தொகுத்தவருக்கே உரியது, அதனை நீக்க விரும்புபவருக்கு அல்ல.


விக்கிப்பீடியாவில் சேர்ப்பதற்கான அடிப்படை 'உண்மையை விட மெய்யறிதன்மையே. "மெய்யறிதல்" என்று இங்கு குறிப்பிடப்படுவது, விக்கிப்பீடியாவில் பதிக்கப்பட்டுள்ள தகவலை எந்தவொரு வாசகரும் முன்னரே அச்சில் உள்ள ஓர் நம்பகமான மூலங்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ள இயலுவதாகும். தொகுப்பாளர்கள் கேள்வியெழுப்பப்பட்ட (கேள்வி எழக்கூடிய) பகுதிகளுக்கு நம்பகமான மூலங்களைச் சான்றாகக் காட்ட வேண்டும்.

விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் மூன்று கொள்கைகளில் ஒன்றாகும். மற்ற இரண்டு கொள்கைகள் சொந்த ஆய்வு கூடாது மற்றும் விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு. இவை மூன்றும் இணைந்து விக்கியின் முதன்மைபெயர்வெளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளடக்கத்தின் வகை மற்றும் தரத்தினை முடிவாக்குகின்றன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காணக்கூடாது. தொகுப்பாளர்கள் அனைவரும் இவை மூன்றினையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் அடித்தளமாக அமைந்துள்ள இக்கொள்கைகளை மாற்றவேண்டுமெனில், நிறுவனர் அளவில் விவாதிக்கப்பட வேண்டும்.

சான்று காட்டுவதற்கான பொறுப்பு

தொகு
எவ்வாறு மேற்கோள்கள் இடுவது என்ற உதவிக்கு விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல் பார்க்கவும்

ஓர் உரையை உள்ளடக்கத்தில் சேர்க்கும் அல்லது மாற்றும் தொகுப்பாளருக்கு அது குறித்த சான்றினை வழங்கும் பொறுப்பு உள்ளது. கேள்விக்குட்பட்ட அல்லது உட்படக்கூடிய எந்தவொரு பகுதிக்கும், சான்றானது நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து மேற்கோளாகத் தரப்பட வேண்டும். எந்த ஒரு கட்டுரைக்கு நம்பத்தக்க சான்று, மூன்றாம் தரப்பிலிருந்து கொடுக்கமுடியாதோ, அது விக்கிப்பீடியாவிற்கு உரியது அன்று.

சான்று காட்டப்படாத எந்தவொரு பகுதியும் நீக்கப்படலாம் எனினும் தொகுப்பாளர்களுக்கு சான்று வழங்க வாய்ப்பு நல்கப்பட வேண்டும். ஏதாவதொரு உரைக்குச் சான்று காட்டப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,அதனை பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தவும். இல்லாவிடில், குறிப்பிட்ட வரியின் அருகே {{சான்று தேவை}} என்ற வார்ப்புருவை இட்டோ, அல்லது முழுக் கட்டுரைக்கும் {{சான்றில்லை}} அல்லது {{சரிபார்க்கப்படாதது}} என்ற வார்ப்புருவை இட்டோ குறியிடலாம். தவிர தக்கச் சான்றுகள் தரப்படும்வரை, சரிபார்க்கப்படாத உரைகளுக்கு முன்னர் <!-- என்றும் உரையின் பின்னர் --> என்றும் இட்டுக் காட்சிப்படுத்தலில் இருந்து மறைக்கலாம். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்ற விளக்கத்தைத் தொகுத்தல் சுருக்கத்திலும், பேச்சுப்பக்கத்திலும் இடவும். [1]

இவ்வாறு தொகுப்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதை நீண்ட நாட்கள் விட்டு வைக்கக்கூடாது. முக்கியமாக, வாழும் நபர்கள் குறித்த கருத்துக்கள், சான்று கொடுக்கப்படாவிட்டால் உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும். நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுவார்: "இதன் முக்கியத்துவத்தை மேலும் விளக்க முடியாது. 'நான் கேள்விப்பட்டுள்ளேன்' போன்ற வரிகளுக்குக் கூடச் 'சான்று தேவை' வார்ப்புரு இடும் இயல்பை உடைய தொகுப்பாளர்கள் உள்ளனர். இது தவறு. இது உடனடியாக சான்று கொடுக்கப்படாவிட்டால் நீக்கப்பட வேண்டும். எல்லாத் தகவல்களுக்கும் இது பொருந்தினாலும், வாழும் நபர்களைக் குறித்த எதிர்மறைத் தகவல்களுக்கு இது முதன்மையானது." [2]

உயிரோடு இருப்பவர்களின் வரலாறுகள்

தொகு

ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டும், சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டும், வாழும் நபர்களைக்குறித்த வாழ்க்கை வரலாற்றுக் கூற்றுகளில் சிறப்புக் கவனம் தேவை. வாழும் நபர்களைக் குறித்த சர்ச்சைக்குரிய, சான்றுகளில்லாத அல்லது சரியான சான்று தரப்படாத, உரைகளை உடனடியாக நீக்கவும். அவற்றை பேச்சுப்பக்கத்திலும் இட வேண்டாம். [3] இது முதன்மைப் பெயர்வெளிக்கு மட்டுமல்லாது முழு விக்கிப்பீடியாத் தளத்திற்கும் பொருந்தும்.

மூலங்கள்

தொகு
பார்க்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்

கட்டுரைகள், நம்பத்தக்க மூன்றாம் தரப்புப் பதிக்கப்பட்ட மூலங்களைச் சான்றாகக் கொண்டு தகவல்களைச் சரிபார்க்கக் கூடியவையாக, துல்லியமாக அமைதல் வேண்டும். மேற்கோளிடப்படும் கருத்துடன் இயைந்த சான்றுகள் தேவை; தீவிரமான கருத்துக்களுக்கு அந்த அளவு வலுவான சான்றுகள் தேவை.

ஐயத்துக்கிடமான நம்பகத்தன்மை கொண்ட மூலங்கள்

தொகு

பொதுவாக, நம்பகத்தன்மையில்லாத மூலங்கள் என்பவை, தகவல்களைச் சரிபார்க்க இயலாது என்ற பெயர்பெற்றவை அல்லது தகவல் சரிபார்ப்பு வசதிகள் தராத மற்றும் தொகுப்பாசிரியர் மேலாண்மை இல்லாதவை ஆகும். அவை, தொகுப்பவர் குறித்த கட்டுரைகளில் மட்டுமே பயன்படுத்தப்படலாம்.(கீழே பார்க்கவும்.) அவற்றைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகள், மூன்றாம் நபர்கள் மானநட்ட வழக்கு தொடுக்கக்கூடியவனவாக இருத்தலாகாது.

குறுக்கு வழி:
WP:V#SELF

சொந்தப்பதிப்பு மூலங்கள் (இணையம் மற்றும் அச்சு வடிவம்)

தொகு

எவரும் இணையத்தில் வலைத்தளம் அமைத்து அல்லது தம்பொருட் செலவில் அச்சிட்டு ஒரு `துறை வல்லுன`ராக அறிவிக்கலாம். ஆகவே சொந்தப் பதிப்புகள், தனிப்பட்டவர் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் பெரும்பாலும் விரும்பத்தகாத மூலங்களாகும்.

நன்கறிந்த குறிப்பிட்ட துறை தொழில்முறை ஆய்வாளர் மற்றும் பரவலாக அறியப்பட்ட இதழாளர் ஒருவரின் சொந்தப் பதிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படலாம். அவர்தம் முந்தைய பதிப்புகள் நன்கறியப்பட்ட பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சிறு எச்சரிக்கை: குறிப்பிட்டப் பகுதி, பதிவேற்றப்பட வேண்டிய அளவு முதன்மையான தகவலாக இருப்பின், வேறொருவர் அதனைச் செய்திருப்பார்.

நூலாசிரியர்(கள்) பற்றிய கட்டுரைகளில் சொந்தப்பதிப்பு மற்றும் ஐயத்துக்கிடமான மூலங்கள்

தொகு

கீழ்வரும் நேரங்களில், சொந்தப்பதிப்பு மற்றும் ஐயத்துக்கிடமான மூலங்கள், நூலாசிரியர்(கள்) பற்றிய கட்டுரைகளில் பயன்படுத்தப்படலாம்:

  • அவை அவர்களின் புகழுக்குப் பொருத்தமானவை;
  • சர்ச்சைக்குரியவை அல்ல;
  • சுயவிளம்பரம் அடிப்பதாக இல்லை;
  • கட்டுரைப் பொருளுக்குத் தொடர்பற்ற நிகழ்வுகள் அல்லது மூன்றாம்நபர் குறித்த கூற்றுகள் குறிக்காதிருத்தல்;
  • அதனை எழுதியவர் யார் என்ற ஐயம் இல்லாதிருத்தல்.

தமிழ் தவிர்ந்த ஏனைய மொழியிலுள்ள மூலங்கள்

தொகு

இது, தமிழ்மொழி விக்கிப்பீடியா ஆதலால், பயனர்களின் வசதிகருதித் தமிழ்மொழி மூலங்களிலிருந்து சான்று தருவது விரும்பத்தக்கது.

வேறு மொழிகளிலிருந்து சான்றுகள் தரவேண்டியிருக்கும்போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.

  • மூலங்களை நேரடியாக மேற்கோளிடும்போது, பொதுவாக பதிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் தொகுப்பவரின் சொந்த மொழிபெயர்ப்பை விட விரும்பப்படுகின்றன.
  • அவ்வாறில்லாமல் சொந்த மொழிபெயர்ப்புகள் மேற்கோளிடும்போது,வாசகர்கள் சரிபார்க்கும் வகையில், பிறமொழி மூலத்தின் இருப்பு மேற்கோளிடப்பட வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. See Help:Editing#Basic text formatting: "Invisible comments to editors only appear while editing the page. If you wish to make comments to the public, you should usually go on the talk page."
  2. Jimmy Wales (2006-05-16). ""Zero information is preferred to misleading or false information"". WikiEN-l electronic mailing list archive. பார்க்கப்பட்ட நாள் 2006-06-11.
  3. Jimmy Wales (2006-05-19). ""Zero information is preferred to misleading or false information" (followup post clarifying intent)". WikiEN-l electronic mailing list archive. பார்க்கப்பட்ட நாள் 2006-06-11.

மேலும் அறிய

தொகு
  • ஜிம்மி வேல்ஸ். "WikiEN-l insist on sources", WikiEN-l மின்னஞ்சல் பட்டியல், சூலை 19, 2006.