விக்கிப்பீடியா பேச்சு:இந்த வாரக் கூட்டு முயற்சி

I think no need to vote or support the nominated articles.If you have any objections to the topic you might indicate it below the topic.Otherwise all topic suggestions by the currenly active contributors can be selected as COTW one by one. since we are very few here, voting may not be necessary.All of the contributors are requested to suggest one topic each.--ரவி (பேச்சு) 05:28, 25 ஏப் 2005 (UTC)


Since there was a delay in suggesting topics by everyone for COTW, I have added few more topics.Hope this is fine. In the later weeks we may follow a strict rule of one contributor should suggest one topic alone :)--ரவி (பேச்சு) 06:35, 29 ஏப் 2005 (UTC)


The first COTW effort was encouraging. The important article INDIA was improved with more translations and pictures. I look forward to much active contributions in the coming weeks. I also invite everyone to add the topics of their choice for COTW in the coming weeks. Thanks--ரவி (பேச்சு) 23:59, 2 மே 2005 (UTC)Reply


பலரும் ஆர்வமெடுத்து பங்களிக்கத் தூண்டும் COTW தலைப்புகளை நீங்களும் பரிந்துரைக்கலாமே! திருக்குறள், திருவள்ளுவர், மகாத்மா காந்தி ஆகியவை எனக்குத் தோன்றும் தலைப்புகளில் சில. ஆனால், நான் ஏற்கனவே 5 தலைப்புகளை பரிந்துரைத்து விட்டதால், பிறரும் பரிந்துரைக்கட்டுமே எனக் காத்திருக்கிறேன். --ரவி (பேச்சு) 16:35, 27 மே 2005 (UTC)Reply

As long as there is less participation, we can let it remain there for 2 weeks. For example "Tamil" article was close to completion when the next COTW was started, so I couldn't start working on the new COTW. I suggest en:Manmohan Singh for a few simple reasons. It is an important article, the current content in English (though grossly insufficient) is not too much to translate and we get a picture for free. In the initial days, easy to complete articles can be chosen so as to instill confidence in ourselves. -- Sundar 07:26, 28 மே 2005 (UTC)Reply

next COTW கட்டுரை?

தொகு

அடுத்த கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான தலைப்புகளை தயவு செய்து பரிந்துரையுங்கள்.ஒன்றுக்கு மேறுபட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்--ரவி (பேச்சு) 11:23, 30 செப்டெம்பர் 2005 (UTC)Reply

விவேகானந்தர், இந்திய இரயில்வே ஆகியன எனது பரிந்துரைகள்.--சிவகுமார் 11:37, 30 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி, சிவகுமார். மற்றவர்கள் பரிந்துரைகளுக்கும் காத்திருக்கிறேன். எல்லார் பரிந்துரையையும் ஓட்டெடுப்பு அவசியமின்றி ஒவ்வொரு வாரமாக செயல்படுத்தலாம். நம் பயனர்கள் அனைவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் எந்த வரிசையில் அவரவர்களுடைய தலைப்புகள் செயல்படுத்தப்பட்டாலும் பொருட்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். எனினும், அவரவர் கல்விப் பின்புலத்தையும் தாண்டி அனைவரும் ஆர்வத்துடனும் திறமாகவும் பங்களிக்கத்தக்க வகையில் பொதுவான கட்டுரைத் தலைப்புகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி (பேச்சு) 11:51, 30 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அடுத்த கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்கான தலைப்புகளை தயவு செய்து பரிந்துரையுங்கள்.ஒன்றுக்கு மேறுபட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்--ரவி 18:13, 24 நவம்பர் 2005 (UTC)Reply

ரவி, உங்களை போலவே நானும் இரண்டு தலைப்புக்கள் முன்னர் பரிந்துரை செய்திருக்கின்றேன். ஆனால், வேறுயாரும் பரிந்துரை செய்யாவிடத்து பின்வரும் தலைப்புக்களை பரிசீயுங்கள்.

பெண்ணியம் (Feminism)
இணையம் (Internet)
சாதி அமைப்பு (Caste System)

--Natkeeran 18:55, 24 நவம்பர் 2005 (UTC)Reply

பெண்ணியம், சாதி அமைப்பு குறித்த கட்டுரைகள் இன்றியமையாதவை தான் என்றாலும், அவற்றை எழுதுவதில் ஆர்வமும் நிபுணத்துவமும் உடைய கணிசமான பயனர்கள் தற்பொழுது இல்லையோ என்று எண்ணுகிறேன். விக்கிபீடியாவில் பல்துறைப் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை, கூட்டு முயற்சிக் கட்டுரைத் தலைப்புகள் தனிநபர் ஆர்வம், புலமையையும் தாண்டி எளிதில் பங்களிக்கத் தூண்டுமாறு இருத்தல் நலம் எனக் கருதுகிறேன். விக்கிபீடியாவுக்கு வருகை தரும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்களை நம்பி இணையம் கட்டுரையை தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். வேறு யாரும் தலைப்புகள் பரிந்துரைத்தால் அதற்கும் முன்னுரிமை தருவோம்--ரவி 19:09, 24 நவம்பர் 2005 (UTC)Reply

Next topics????--ரவி 17:15, 22 டிசம்பர் 2005 (UTC)

Inidan History, Human Evolution -- சிவகுமார் 17:21, 22 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன், சிவகுமார் நீங்களே மேலே பரிந்துரைத்துள்ள தலைப்புகள் தற்பொழுதுள்ள பயனர் அனைவரின் ஆவலைத் தூண்டுமா எனத்தெரியவில்லை. மிக முக்கிய நாடுகளான ரஷ்யா, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், மக்கள் சீனக் குடியரசு ஆகியவற்றை பற்றி வருகிற வாரங்களில் கூட்டு முயற்சி செய்யலாம் என்பது என் பரிந்துரை--ரவி 16:52, 29 டிசம்பர் 2005 (UTC)

சீனாவுக்கு எனது ஆதரவு -- சிவகுமார் 17:00, 29 டிசம்பர் 2005 (UTC)
சீனாவுக்கு எனது ஆதரவு --Natkeeran 19:35, 30 டிசம்பர் 2005 (UTC)
சீனாவுக்கு எனது ஆதரவு --kalanithe

தமிழக் நாணயவியலுக்கான குறிப்புதவிகள்

தொகு
  1. காசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, (முதற்பதிப்பு 1999)
  2. பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

அதில் மேற்கோள் இடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சென்னை நூலகத்தில் ரெபரன்சிற்காக வைத்திருப்பதாக கேள்வி. பண்டைய தமிழகம் புத்தகத்தில் குறுநில மன்னர்கள், மூவேந்தர் மற்றும் சாதவாகன மன்னர்களின் நாணயங்கல்,பற்றியும் இருந்தது அப்புத்தகம் தற்போது என்னிடம் இல்லையென்பதால் தற்போது அவற்றை பற்றி எழுத இயல்வில்லை--தென்காசி சுப்பிரமணியன் 09:53, 29 சனவரி 2012 (UTC)Reply

வார்ப்புரு

தொகு

சில நாட்கள் முன் நல்ல செய்திகளை உ.தெ. பரிந்துரை ப்குதியில் பரிந்துரையுங்கக்ள், முக்கியப்படத்தை சிறப்புப்ப்ட பரிந்துரையுங்கள் போன்ற அறிவிப்புகள் வந்தனவே? அதைப்போல கூட்டுமுயற்சிக் கட்டுரைக்கு அறிவிப்பு இட்டால் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 04:51, 28 பெப்ரவரி 2012 (UTC)

நல்ல யோசனை. அடுத்த ஒரு மாதத்துக்குத் தள அறிவிப்புகளுக்கு ஓய்வு தர இருப்பதால், தற்போதைக்கு அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் மேற்பகுதியில் அறிவிப்பு வருமாறு செய்துள்ளேன். மீண்டும் தள அறிவிப்புகளைக் கொண்டு வரும் போது நீங்கள் சொல்லியவாறு செய்யலாம். நன்றி--இரவி 07:10, 28 பெப்ரவரி 2012 (UTC)

வேண்டுகோள்

தொகு

இங்கு பரிந்துரைகளை நானும் இரவியும் மட்டுமே இடுகிறோம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 26 மார்ச் 2012 (UTC)

இற்றைப்படுத்தல் தாமதம்

தொகு

இந்தவாரக்கூட்டுமுயற்சிக்கட்டுரை முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கவனிக்கவும்.--பிரஷாந் (பேச்சு) 07:53, 16 சூலை 2012 (UTC)Reply

முதற்பக்கத்தில் சேர்த்தல்.

தொகு

இக்கூட்டு முயற்சி கட்டுரை அறிவிப்பை முதற்பக்கத்தில் சேர்க்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:26, 23 சூலை 2012 (UTC)Reply

பேச்சு:முதற் பக்கத்தில் பதில் அளிக்கிறேன்--இரவி (பேச்சு) 17:21, 23 சூலை 2012 (UTC)Reply

கூட்டு முயற்சியில் பகுப்பு

தொகு

பகுப்புகளை கூட்டு முயற்சியில் சேர்க்கலாமே. விரைவுப்பகுப்பியையும் மறைமுகமாக பரிந்துரைத்த மாதிரி இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:44, 23 சூலை 2012 (UTC)Reply

கட்டுரைகளுக்குப் பகுப்பு இடும் பணியை ஒரு கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம் என்கிறீர்களா? பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கட்டுரையை மேம்படுத்துவதே கூட்டு முயற்சித் திட்டமாக பல்வேறு விக்கிப்பீடியாக்களில் நடைமுறையில் உள்ளது. ஒரு தெளிவான பணியைத் தருவது கூடுதல் விளைவுகளைத் தரும். கட்டுரைகளுக்குப் பகுப்பு இடுவது போன்ற பல்வேறு துப்புரவு / மேம்பாட்டு முயற்சிகளுக்கு கவனம் ஈர்க்கும் வண்ணமாக அண்மைய மாற்றங்களில் தரவுகளை இட்டு வருகிறோம். அது ஓரளவு பயன் அளிக்கிறது--இரவி (பேச்சு) 17:21, 23 சூலை 2012 (UTC)Reply

இற்றைப்படுத்தல்

தொகு

தென்காசி இங்கு கேட்டுக்கொண்டதிற்கிணங்க கூட்டு முயற்சி கட்டுரையை இற்றைப்படுத்தி உள்ளேன். நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 05:45, 27 ஆகத்து 2012 (UTC)Reply

கூட்டுமுயற்சியில் பகுப்புகள்

தொகு

ஒரு கட்டுரையை கூட்டுமுயற்சியாக இடுவதற்கு பதிலாக ஒரு பகுப்பையெ கூட்டு முயற்சியாக இட்டால் பங்களிப்புகளை அதிகம் பெற வாய்ப்புள்ளதே? மற்றவர் கூற்றென்னவோ?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:43, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஒரு பகுப்பு என்னும் போதே ஒரே ஆர்வப் புலத்துக்குள் வந்துவிடும். அத்தகைய ஆர்வமுள்ளோரோ ஒரு கட்டுரையிலேயே போதுமான பங்களிக்க இயலாத போது எல்லா கட்டுரைகளிலும் கூடுதல் பங்களிப்பு வந்து விடாது. தவிர, எண்ணற்ற வாய்ப்புகளைத் தருவதன் மூலம் முடிவெடுப்பது சிரமம் ஆகும். அண்மைய மாற்றங்களில் வாரம் 5 கூகுள் கட்டுரைகளை இட்ட போது குறைவான பங்களிப்புகளே வந்ததையும் ஒப்பு நோக்கலாம். கூடுதல் தெரிவுகளால் கூடுதல் பங்களிப்புகள் வருவதற்கு உறுதி இல்லை--இரவி (பேச்சு) 06:19, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

திட்டத்தின் தொடர்ச்சி, பயனர் ஈடுபாடு பற்றி

தொகு

கூட்டு முயற்சிக்கான கட்டுரைத் தலைப்புகளை ஒவ்வொரு வாரமும் தவறாமல் இற்றைப்படுத்துவது நன்று. அப்போது தான் பயனர்கள் அதற்குத் தரும் முக்கியத்துவம் குன்றாமல் இருக்கும். வேலைப்பளு காரணம் என்றால், இன்னும் ஓரிருவர் இந்தத் திட்டத்தில் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்படும் தலைப்பைப் பற்றி ஆர்வமுடன் எழுதக்கூடிய விக்கிப்பீடியர்கள் ஓரிருவராவது இருக்கிறார்களா என்று எண்ணிப்பார்த்து தலைப்புகளை அறிவிக்கலாம். அந்தப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டுப் பங்களிக்கக் கோரலாம். தொடர்ந்து குறைவான பங்களிப்புகளே வந்தால் ஓரிரு மாதங்கள் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் புத்தம் புதிதாகத் தொடங்குவதும் உதவலாம்.--இரவி (பேச்சு) 18:09, 2 பெப்ரவரி 2013 (UTC)

இங்கே கணிதம், வரலாறு, மருத்துவத்துக்கு அதிகம் ஆள் சேர்வது போல் தெரிகிறது. இது போன்று நீங்கள் அறிந்த துறை இருந்தாலும் கூறுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:50, 4 பெப்ரவரி 2013 (UTC)

இடைவேளை

தொகு

அண்மைய சில வாரங்களாக கூட்டு முயற்சிக் கட்டுரைகளுக்குப் போதிய பங்களிப்பில்லை. தற்போது, கட்டுரைப் போட்டியில் ஒவ்வொரு கட்டுரையையுமே விரிவாக்கி வருவதில் அனைவரும் கவனம் செலுத்தி வருவதால், சில காலத்துக்குக் கூட்டு முயற்சித் திட்டத்துக்கு ஓய்வு அளிக்கலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 07:19, 7 சூன் 2013 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 7 சூன் 2013 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 07:35, 7 சூன் 2013 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:45, 7 சூன் 2013 (UTC)Reply
அடடா, இடைவேளை விடுவதற்கு இவ்வளவு விருப்பங்களா :) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.--இரவி (பேச்சு) 18:04, 8 சூன் 2013 (UTC)Reply

இடைவேளை முடிந்து அடுத்த பாகம் தொடர்கிறது. பாலசுப்பிரமணியத்தின் முயற்சி, ஒருங்கிணைப்பில்... --இரவி (பேச்சு) 12:08, 9 சனவரி 2014 (UTC)Reply

மீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சி

தொகு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சியைத் தொடங்கலாம் என்று விரும்புகிறேன். முன்பு போல் முதற்பக்கக் கட்டுரைகள் கிடைப்பதும் அரிதாகி வருவதால், கூடுதல் கவனம் செலுத்தி வாரம் ஒரு கட்டுரையையாவது வளர்த்தெடுக்கலாம். முதல் வாரப் பரிந்துரை: பஞ்சாப் (இந்தியா) :) --இரவி (பேச்சு) 12:44, 24 சூலை 2016 (UTC)Reply

Return to the project page "இந்த வாரக் கூட்டு முயற்சி".