விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025

முதற்கட்ட உரையாடல்

தொகு

01-டிசம்பர்-2024 அன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில், புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவது குறித்து பயனர்:சத்திரத்தான் உரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விரிவான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றது. உள்ளகப்பயிற்சியை வழங்குவதற்கான கொள்கைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல் திட்டப் பக்கத்தை உருவாக்கிட அப்போது பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கம் உருவாக்கப்பட்டு, இறுதிவடிவம் தருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை நமது பரப்புரை நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கருதி இந்தத் திட்டப் பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். @சத்திரத்தான் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவது குறித்து ஒரு விளக்கவுரையை இங்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் இந்தத் திட்டப் பக்கத்தை விரிவாக்கம் செய்ய உதவிகரமாக இருக்கும். முன்மொழிவின் வரைவை முடித்ததும் ஆலமரத்தடியில் அறிவித்து, மற்ற பயனர்களின் கருத்துகளையும் பெறுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 10 திசம்பர் 2024 (UTC)Reply

புதுக்கோட்டை கல்லூரியின் விருப்பம்

தொகு

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை 2023-24 கல்வியாண்டு முதல் மாற்றியமைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் பெரும்பான்மையான கல்லூரிகளில் உள்ளகப் பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இளநிலை முதுநிலை மாணவர்கள் முதலாமாண்டு முடிவில் 20/30 மணி நேரப் பயிற்சியினை தொழிலகம்/நிறுவனம்/ஊடகம் உள்ளிட்ட பிற அமைப்பில் பெற்று அதற்கான அறிக்கையினை சான்றிதழுடன் கல்லூரிக்கு சமர்ப்பிக்கவேண்டும். இச்சான்று அடிப்படையில் 2 தரப்புள்ளிகள் வழங்கப்படும். இது அவர்களுடைய பாடத்திட்டத்துடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தஞ்சாவூர் 20ஆம் ஆண்டு பயனர் கூடத்தில் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில், 2024 சூன் மாதம் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியதன் அடிப்படையில் விக்கியில் உள்ளக பயிற்சி வாய்ப்புக் குறித்தும் கருத்து தெரிவித்தேன். இதன் அடிப்படையில் இக்கல்லூரி விருப்பம் தெரிவித்து தொடர்பு கொண்டனர். முதல் கட்டமாக 50 பேருக்குத் தமிழ்த் துறையின் சார்பில் விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னர் நடைபெற்ற உள்ளகப் பயிற்சியின் அடிப்படையில் இப்பயிற்சியினை அமைக்கலாம் என்பது எனது கருத்து. சத்திரத்தான் (பேச்சு) 04:20, 15 திசம்பர் 2024 (UTC)Reply

@சத்திரத்தான் விரிவாக விளக்கியமைக்கு நன்றி! கல்லூரி தொடர்பான விவரங்களை திட்டப் பக்கத்தில் இட்டுள்ளேன். இந்தத் திட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தவேண்டும், எப்போது ஆரம்பித்து எப்போது முடிக்கவேண்டும் ஆகியனவற்றை தொடர்ந்து உரையாடி முடிவு செய்வோம். எவ்வாறு நடத்தவேண்டும் என்பது குறித்தும் ஒருமித்த கருத்தை எட்டுவோம். இந்தத் திட்டத்திற்கான முறைப்படியான அறிவிப்பை ஆலமரத்தடியில் இடுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:57, 16 திசம்பர் 2024 (UTC)Reply
எத்துறை மாணவர்கள் என்று கேட்க வந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். தமிழ்த் துறை மாணவர்கள் என்பதும் நமக்கு நல்லது தான். இளநிலை எத்தனை மாணவர்கள், முதுநிலை எத்தனை மாணவர்கள்? முதலாமாண்டு முடிவில் அவர்கள் அறிக்கை தர வேண்டும் என்றால், அவர்களின் முதலாமாண்டு எப்போது முடியப் போகிறது? இரண்டாம் semester முடிந்து வரும் விடுமுறைக் காலத்தில் இந்தப் பயிற்சி நடைபெற வேண்டுமா? இல்லை, இப்போதிருந்தே இணைய வழி தொடங்கி நடத்தலாமா? பிற துறைகளில் internship என்பது தேர்வுகள் முடிந்த விடுமுறைக் காலத்தில் பிற நிறுவனங்களில் பங்கு கொள்வதாக இருக்கும். இல்லையெனில், இறுதி semester முழுக்கவே இதற்கு ஒதுக்குவார்கள். இளநிலை, முதுநிலை மாணவர்கள் இந்த internship மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய learning outcomes என்று கல்லூரி/பல்கலை ஏதாவது நிர்ணயித்துள்ளதா? இந்த விவரங்கள் கிடைத்தால் மேற்கொண்டு பயிற்சித் திட்டத்தை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும்? - இரவி (பேச்சு) 13:52, 16 திசம்பர் 2024 (UTC)Reply
திரு இரவி அவர்களுக்கு, வணக்கம். உள்ளகப் பயிற்சி என்பது கலை அறிவியல் கல்லூரிகளில் தற்பொழுதுதான் அறிமுகம் ஆகின்றது. இளநிலை மாணவர்களைப் பொறுத்தவரையில் நான்காம் பருவத்தின் முடிவில் நடைபெறும். முதுநிலை மாணவர்கள் என்றால் இரண்டாம் பருவ முடிவில் நடைபெறும். இக்கல்லூரிதான் முதலில் நம்மிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதன் முதலாக அறிமுகம் ஆவதால் 2023ஆம் கல்வி ஆண்டில் முடித்தவர்கள் கல்வியினை முடிப்பதற்குள் முடிக்கவேண்டும். பயிற்சியின் நிறைவாக சான்றிதழுடன் பயிற்சி அறிக்கை சமர்பிக்கவேண்டும். பயிற்சி நேரடி பயிற்சியாக அமைந்தால் நல்லது. நேரடியாக கலந்துகொள்ள இயலா விருப்பம் உள்ள வெளிநாட்டு விக்கிப்பீடியர்களை இணையவழியில் பங்கேற்க செய்யலாம். அதிக பட்சம் 30 மணி நேரம் என்பதால் பயிற்சி பெறுபவர்கள் கட்டுரைகளை இணையத்தில் உருவாக்கச் செலவிடும் நேரத்தினையும் கணக்கிட்டு பயிற்சியினை அமைத்துக்கொள்ளலாம். இருநாட்கள் நேரடி பயிற்சி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. பெரும்பாண்மையான மாணவர்கள் தமிழ்/ஆங்கிலத் துறையினைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அனைவரும் இளநிலை மாணவர்களே! --சத்திரத்தான் (பேச்சு) 14:39, 16 திசம்பர் 2024 (UTC)Reply
சரி, இளநிலை தமிழ்/ஆங்கிலத் துறை மாணவர்கள் 50 பேர் முதற்கட்டமாகப் பயிற்சிக்கு இணைவர், அவர்களுக்குச் சனவரி 2025 தொடங்கி ஏப்ரல் 2025க்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். கண்டிப்பாக அவர்கள் கட்டுரைகள் இயற்றுவது உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபடுவதையும் சேர்த்துத் தான் பயிற்சிக் காலம் கணக்கிடப்பட வேண்டும். இவர்கள் இப்பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய learning outcomes என்ன என்பதைக் கல்லூரி/பல்கலை அறியத் தந்தால் உதவும். அப்படி எதுவும் அவர்கள் தரப்பில் இல்லையென்றால், அதையும் நாம் வரையறுக்க வேண்டியிருக்கும். @TNSE Mahalingam VNR போன்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு உதவ முடியும் என்று கருதுகிறேன். அந்த learning outcomesஐ வரையறை செய்து விட்டுப் பிறகு அதன் அடிப்படையில் விக்கிப்பீடியா சார்பாக எத்தனை மணிநேரங்கள்/நாட்கள் பயிற்சி வழங்குவது, அதை இணையம் வழி வழங்குவதா நேரடியாக வழங்குவதா என்பதைப் பிறகு திட்டத்தின் தேவைக்கு ஏற்ப முடிவு செய்வோம். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் என்று எண்ணாமல், இது போல் இனி ஆர்வம் காட்டக்கூடிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்பயிற்சிக்கான பயிற்சி வளாகம்/அரங்கம் உள்ளிட்ட ஆதரவு, பிற தேவைப்படும் நிதி உதவிகளைக் கல்லூரி வழங்குமா? இல்லை, விக்கிப்பீடியா சார்பாக இதற்கு நிதி செலவிடும் தேவை ஏதும் எழுமா? நம் தரப்பில் நிதி செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது எவ்வளவாக இருக்கும், அதனை எங்கிருந்து எப்படிப் பெறுவது என்பதையும் உரையாட வேண்டும். -இரவி (பேச்சு) 15:00, 16 திசம்பர் 2024 (UTC)Reply
விரிவான திட்டமிடலுடன் உள்ளகப் பயிற்சி தொடர்பான முன்னெடுப்பை துவங்கியுள்ள @சத்திரத்தான் அவர்களுக்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், ஜெ. ஜெ. கல்லூரியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளித்த வகையிலும், இப்பயிற்சிக்கான உதவிகள் ஏதேனும் தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.நன்றி--தியாகு கணேஷ் (பேச்சு) 15:18, 16 திசம்பர் 2024 (UTC)Reply
மகிழ்ச்சி தியாகு கணேஷ் அவர்களே. பயிற்சி வழங்குவது மட்டும்தான் நமது பணி மற்ற ஏற்பாடுகளை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்பதால், பயிற்சியின் போது அவசியம் கலந்துகொள்ளவும். --சத்திரத்தான் (பேச்சு) 15:38, 16 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams: விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கத்தை ஆரம்பித்து ஒரு வடிவம் தர முயற்சித்துள்ளேன். 2020, 2021 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் வரைவை எழுதியுள்ளேன். இதனை தாய்த் திட்டப் பக்கம் (program page) எனக் கருதலாம். கொள்கை, நெறிமுறை, வழிமுறைகள் இவற்றை உள்ளடக்கிய ஒரு பக்கமாக உருவாக்கிவிட்டால், இனிவரும் காலங்களில் guidelines ஆவணமாகக் கருதலாம். இதனை வளர்த்தெடுத்து, இறுதி வடிவம் தர உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 16 திசம்பர் 2024 (UTC)Reply
முந்தைய உள்ளகப் பயிற்சித் திட்டங்கள் கோவிட்-19 காலத்தில் நடந்தவை என்பதால், இணையம் வழியாக முழுப் பயிற்சியும் தரப்பட்டுள்ளன. இப்போது திட்டமிடப்படும் பயிற்சியை முதலில் நேரடியாக தந்துவிட்டு பின்னர் இணையத்தில் தொடரலாம் எனப் பரிந்துரைக்கிறேன். மாணவர்களுடனான தொடர்பு இங்கு சிறப்பானதாக அமையும். கல்லூரி அழைத்திருக்கும் நிலையில், இணைவாக்க முறையில் செயல்படுத்துவதை பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிமீடியா சமூகமானது கல்லூரியின் மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும்போது, கல்லூரி நிர்வாகம் இதனை ஏற்பார்கள் என்று கருதுகிறேன். பயனர்:சத்திரத்தான் இந்த முன்னெடுப்பு குறித்து பேச ஆரம்பித்தபோதே இணைவாக்க முறையில் நடத்த இயலும் எனக் கூறியிருந்தார். நேரடியாக நடைபெறும் பயிற்சிப் பட்டறைக்கான கூட்ட அரங்கம், கணினி ஆய்வகம் ஆகியவை இயல்பாகவே கல்லூரியின் வளங்கள் தான். மற்ற தேவைகளான - பயிற்சியாளர்களின் பயணம், தங்கும் அறை, உணவு, உள்ளூர்ப் போக்குவரத்து, பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ஆகியவற்றில் எவற்றை கல்லூரி நிர்வாகம் கவனித்துக்கொள்ளும் என்பது குறித்து அவர்களிடம் பேசலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 17 திசம்பர் 2024 (UTC)Reply
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025".