விக்கிப்பீடியா பேச்சு:பயனர் பெயர்
பயனர்கள் தங்கள் பயனர் பெயர்களில் சாதிப் பெயரைச் சேர்க்கும் போக்கு தென்படத் தொடங்கியிருக்கிறது. சிலர் தங்கள் பயனர் பக்கங்களிலும் பேச்சுப் பக்கங்களிலும் குறிப்பிடுகிறார்கள். அனைவரும் சாதிப்பற்றால் சேர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. முதற்பெயர் கடைசிப் பெயர் என்ற முறைமையைப் பின்பற்றிச் செய்வதாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்து வளர்ந்த தமிழர்கள் அந்தந்த ஊர்களில் உள்ளது போல் பெயரின் இறுதியில் சாதியையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மராத்தி விக்கிப்பீடியாவில் சாதியை முன்வைத்துப் பயனர்களிடேயே சிறு குழுக்கள் உருவாவதாக ஒரு செவி வழிச் செய்தி எல்லாம் வருவதால், தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தப் போக்கை முறையான கொள்கை மூலம் தவிர்க்க வேண்டும். ஒரே ஒரு குழப்பம்: அகமது பட்டேல், மாதவன் நாயர் போன்று தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள சாதிப் பெயர் கணக்குகளைக் கொண்டு பங்களிப்போரிடம் என்ன அணுகுமுறை மேற்கொள்வது என்பதே.
- பயனர் பெயர்களில் (தமிழ்நாட்டுச்?)சாதி அடையாளம் கூடாது. இருந்தால் பயனர் பெயரை மாற்ற வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் எந்த ஒரு பக்கத்திலும் தங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது.
ஆகிய இரண்டு பரிந்துரைகளை முறையான கொள்கையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:29, 14 சூன் 2013 (UTC)
விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:38, 14 சூன் 2013 (UTC)
- விருப்பம்----ஸ்ரீதர் (பேச்சு) 07:40, 14 சூன் 2013 (UTC)
- விருப்பம்-- :) # நி $ ஆதவன் # ( உரையாட ) 15:19, 29 சூன் 2013 (UTC)
- விருப்பம்--Nan (பேச்சு) 20:44, 29 சூன் 2013 (UTC)
- விருப்பம்-- :) # நி $ ஆதவன் # ( உரையாட ) 15:19, 29 சூன் 2013 (UTC)
- இரவி அவர்களே, தாங்கள் சில காலம் கழித்து தங்கள் முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வேண்டிய நிலை வரலாம். சாதியம் என்ற போக்கு தற்போது வெளிச்சமூகத்தில் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பெயருக்குப் பின்னால் சாதியின் பட்டப்பெயரை இணைத்துக் கொள்ள இயக்கங்கள் வலியுருத்திக் கொண்டிருக்கின்றன. பொதுச் சமூகக் குறியீட்டினையும் இணைத்துக் கொள்ளும் வழக்கமும் தொடங்கியிருக்கிறது. தலித் என்ற அடைமொழியை தனது பெயருடன் இணைத்து அடிக்கப்பட்ட போஸ்டர்களை சென்னையில் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகம் தன் கட்டுகளை உடைத்தெரிந்துவிட்டு மேலெழும் வகையிலான இச்செயல்களுக்கு விக்கிப்பீடியா தடை விதிப்பது சரியாக இருக்காது. அலோசிக்கவும். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 29 சூன் 2013 (UTC)
- வழிமொழிகிறேன். விக்கியில் ஒருவருடைய சாதி அடையாளம் தேவையற்றது. எப்படி அரிமா சங்கம் போன்ற தன்னார்வக் குழுக்களிலும், பணிபுரியும் நிறுவனங்களிலும் பொதுவில் சாதியைக் குறிப்பிடுவது விரும்பப்படுவதில்லையோ அதேபோலத்தான் நமக்கும். இதனால் ஒருவருடைய பங்களிப்புக்கு எவ்விதத் தடையும் இல்லை. காட்டாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்வியலை எழுத வேண்டுமானால் கட்டுரைகளில் சான்றுடன் எழுதுவோம். அதற்குப் பயனருடைய சாதி அடையாளம் தேவையில்லையே, செகதீசுவரன்? மாறாக, சாதி குறிப்பிடாமல் எழுதும்போது நடுநிலை காக்கப்படுகிறது, தவறான உள்நோக்கம் கற்பிக்கும் வாய்ப்பும் இல்லாமற் போகிறது. -- சுந்தர் \பேச்சு 04:21, 1 சூலை 2013 (UTC)
- தங்கள் கருத்தினை மறுக்கவில்லை நண்பரே. ஆனால் தலித் போன்ற அடைமொழிகளோடு கூடிய பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்க வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெயரே அதுவாக இருக்கும் பொழுது எப்படி மறுக்க இயலும் என கேட்கிறேன். இந்தக் கொள்கை வரையரைகள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பிரட்சனைகளை சந்திக்கலாம் என்றே வலியுறுத்துகிறேன். இன்னும் பரவலாக இந்த வழக்கம் வரவில்லை என்பதால் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எனக்கு தெரிந்ததை வலியுறுத்தியுள்ளேன். அவ்வளவே :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:27, 1 சூலை 2013 (UTC)
- ஓ, பெயரிலேயே சேர்க்கிறார்களா? இது எனக்குப் புதுச்செய்திதான். முன்புபோல பின்னொட்டு என்றால் முதற்பெயரை மட்டும் குறிப்பிடலாம். -- சுந்தர் \பேச்சு 04:49, 1 சூலை 2013 (UTC)
சுந்தர் சுட்டியது போல் நாம் செய்யும் பணிக்குச் சாதி அடையாளம் தேவையில்லை. திராவிட இயக்கத் தாக்கத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் தனது சாதி அடையாளத்தைப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிப்படுத்துவது ஒரு வகையான நாகரிகம் குறைவான செயலாகவும் கூட பார்க்கப்படுகிறது. சுவரொட்டிகளில் திருமண அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் இடும் வழக்கம் இருப்பதை அறிவேன். ஒடுக்கப்பட்ட சாதிகளும் ஒரு எதிர்வினையாக இவ்வாறு செய்வதையும் அறிவேன். சமூகம் நிறைய விதங்களில் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், எது நல்ல மாற்றம் எது தீவிளைவுகளைத் தரக்கூடிய மாற்றம் என்று சீர்தூக்கிப் பார்த்து நாம் செயல்படலாம் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, தமிங்கிலம் கூட தற்போதுள்ள சமூக வழக்கம் தான். ஆனால், நாம் அதனைப் பின்பற்றுவதில்லை. ஒருவரின் அலுவல் முறைப்பெயரில் கூட சாதிப் பெயர் பின்னொட்டாக இருந்தாலும், விக்கிப்பீடியாவில் அந்த அடையாளத்தைக் காட்ட வேண்டாம் என்று கோருவதில் தவறில்லை.
20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் பல தலைவர்களின் பெயர்களைக் கொண்டிருந்தன. இவை சாதி அடையாளங்களாக முன்வைக்கப்பட்டு பெரும் வன்முறை நிகழ்ந்த பிறகு, ஒட்டு மொத்தமாக அனைத்து தலைவர்கள் பெயர்களையும் நீக்கினார்கள். இது பிற்போக்கான நடவடிக்கையா முற்போக்கான நடவடிக்கையா என்பதைக் காலம் சொல்லும். அனைத்துச் சாதி அடையாளங்களையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது எப்படி ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும் என்று புரியவில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உரிமை என்ற போர்வையில் ஒடுக்கி வரும் சாதிகள் தங்கள் பெருமையைப் பறைசாற்றவே இந்தச் சாதிப் பெயர் சேர்த்தல் பயன்படுகிறது.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகளில் யாரையும் பெயர் சொல்லித் தோழமையுடன் பணியாற்ற முடிகிறது. தமிழிணையத்தில் வேறு எங்கும் காணாத அளவுக்கு அனைத்து நாட்டுத் தமிழரும் ஒற்றுமையாகப் பணி புரிகிறோம். சாதி அடையாளங்களை வெளிப்படுத்த அனுமதித்தால் இந்த நல்லுறவுச் சூழல் குலைய வாய்ப்புண்டு, உரையாடல்களில் சாய்வு வர வாய்ப்புண்டு என்றே அஞ்சுகிறேன். தனிப்பட்ட முறையில், எந்தச் சாதிப்பெயர் ஒட்டிய பயனரின் பெயரையும் பார்க்க எனக்கு உகப்பாக இல்லை. இது எனது பக்குவமின்மையாகக் கூட இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் நல்லுறவுச் சூழல் குலையக்கூடாது. அதே வேளை, இது ஒரு தணிக்கை முறையாகவும் காணப்படக்கூடாது. நன்றி.--இரவி (பேச்சு) 07:43, 1 சூலை 2013 (UTC)
- வணக்கம் @Ravidreams, Sundar, Jagadeeswarann99, Selvasivagurunathan m, Srithern, and Aathavan jaffna: சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இது வேறொரு வடிவத்தில் இருக்கிறது. அதாவது பெயர்களில் சாதி பெயரினை வைப்பது குறைந்து அவர்களின் பயனர் பக்கங்களில் சாதிப் பெருமைகளை பேசிவருகிறார்கள். மேலும் கட்சி சங்கங்கள் போன்ற (உ.ம் சில) பெயர்கள் வருவது அதிகரித்துள்ளது. எனவே //விக்கிப்பீடியா இவற்றைத் தவிர்க்க பரிந்துரைக்கிறது:// என்பதனை கட்டாயமாக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 03:36, 11 ஏப்ரல் 2020 (UTC)