விக்கிப்பீடியா பேச்சு:பொது அறிவுக் கேள்வி பதில்
முந்திய உரையாடல்கள்
தொகுகேள்விகள்?
தொகு- அதிபெரிய நட்சத்திரம் எது?
- எத்தனை கிரகங்கள் பால்வெளியில் உண்டு?
- - பால்வெளியில் 200~400 பில்லியன் விண்மீன்களும் கிரகங்களும் உள்ளதாக சொல்கிறார்கள் [3]. எனவே கேள்வியை எத்தனை கிரகங்கள் சூரிய மண்டலத்தில் உண்டு? என கேட்கலாம். விடை: 8, முன்பு கிரகமாக கணிக்கப்பட்டிருந்த புளுட்டோ இப்போது அத்தகுதியை இழந்துவிட்டது.
- பூமிக்கு அருகில் உள்ள கிரகம் எது?
- - வெள்ளி (41,388,960 கிமீ) ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செவ்வாய் அருகில் இருக்கும்.
--Natkeeran 23:41, 26 மே 2007 (UTC)
- முதன் முதலில் இந்திய மொழிகளில் அச்சில் ஏறிய மொழி - தமிழ் (உறுதி செய்யமுடியவில்லை)
- மொழிஞாயிறு எனப்படுபவர் - தேவநேயப் பாவாணர்
- பொங்கல் பண்டிகையின் நோக்கம் - இயற்கைக்கு நன்றி செலுத்துதல் (
- மிகச்சிறிய தனிமம் - ஐதரசன்
- நீரின் மூலக்கூறு வாய்பாடு - H2O
- தனது குட்டியை பையில் வைத்து வளர்க்கும் உயிரினம் - கங்காரு
- எது ஒருவித்திலைத் தாவரம் அன்று ? மூங்கில் வாழை வேம்பு கரும்
- முடியில் உள்ள புரதம் - கெரட்டின் கைட்டின் ஆல்புமின் குளோபுலின்
- பூச்சிகளின் கண் எத்தகையது - கூட்டுக்கண் (மற்றக் வகைக் கண்கள் எவை?)
- சிலந்தி வலை எதனால் ஆனது ? கொழுப்பு புரதம் ஸ்டார்ச் பெக்டின்
- நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் ? கடிபட்ட இடத்தை சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவ வேண்டும் (சற்று நீண்டு விட்டது)
- செவ்வக வடிவமாய் இல்லாத உலகின் ஒரே கொடி - நேபாளக் கொடி (உறுதி செய்ய வேண்டும் - பார்க்க:நேபாளத்தின் கொடி)
- எகிப்து அரசர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - பாரோக்கள் (சேர்க்கலாம்)
- பாண்டியனின் சின்னம் அல்லாதது எது ? மீன் வேம்பு பனை (நான்கு பதில்கள் வேண்டும்)
- ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை? நீலகேசி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், சூளாமணி.
- நீர்ச் சூடேற்றியில் நிகழும் ஆற்றல் மாற்றம் என்ன ? மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக (?)
- பிளிம் சால் கோடுகள் எங்கு வரையப்பட்டு இருக்கும் ? கப்பலில் (?)
- மையுறிஞ்சும் தாளின் அடிப்படையில் உள்ள இயற்பியல் தத்துவம் - தந்துகிக் கவர்ச்சி விசை
- சேற்றுப் புண்ணை உண்டாக்குவது எவை? பாக்டீரியா பூஞ்சை வைரசு கொக்கிப்புழு (மற்றப் பதில்கள் தேவை)
- அம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
- பெனிசிலினைக் கண்டறிந்தவர் - அலெக்சாண்டர் ஃபிளம்மிங்
- கல்லணை கட்டப் பொருளுதவி செய்த மன்னன் - கரிகாலன்
- கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவன் - இராசேந்திர சோழன்
- எது புறத்திணை அன்று ? பொதுவியல் பாடாண் வெட்சி குறிஞ்சி
- மருமக்கள் வழி மான்மியம் நூலை எழுதியவர் - கவிமணி
- யாழ் நூல் எழுதியவர் - விபுலாநந்தர்
- கருணாமிர்த சாகரம் எழுதியவர் - ஆபிரகாம் பண்டிதர்
- ஆழிக்குமரன் என்று அழைக்கப்பட்டவர் - ஆனந்தன்
- பூச்சி உண்ணும் தாவரத்திற்கு உதாரணம் - நெப்பந்தஸ், வீனஸ் பூச்சி பிடிப்பான்
- எது பாலூட்டி அன்று ? எலி முயல் வௌவால் பெங்குயின்
- எது திறந்த மூல மென்பொருள் அன்று? விண்டோசு 7 ஆன்ட்ராய்டு லினக்சு உபுண்டு
- இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி ? மேரி கியூரி
- பாமியான் புத்தர் சிலைகள் எந்த நாட்டில் இருந்தன ? ஈரான் ஆப்கானிஸ்தானம் திபெத் சீனா
- வால்கா நதி எந்த நாட்டில் ஓடுகிறது? சீனா ருசியா இசுப்பானயம் ஒல்லாந்து
- சோடியம் குளோரைடு என்பது எதன் வேதிப்பெயர் ? சாதாரண உப்பு சமையல் சோடா சலவை சோடா படிகாரம்
- மணலின் வேதிப்பெயர் என்ன? சிலிகன் சிலிகா (சிலிகன் டை ஆக்சைடு) சிலிகேட் சிலிகோன்
- வினிகரில் உள்ள அமிலம் எது? அசுகார்பிக் ஐதரோகுளோரிக் மலோனிக் அசிட்டிக்
- கெப்ளர் எந்த துறை அறிஞர்? வேதியியல் உயிரியல் பொருளியல் இயற்பியல்
- ஆடம் சுமித் எந்த துறை அறிஞர்? வேதியியல் உயிரியல் பொருளியல் இயற்பியல்
- மனித உடலில் உள்ள உடல குரோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு? 23 46 44 22
- விந்தணுவில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு? 1 2 23 46
--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 02:28, 16 மார்ச் 2011 (UTC)
- மிக்க நன்றி? --Natkeeran 03:02, 16 மார்ச் 2011 (UTC)
நல்ல பகுதி
தொகுஇன்றுதான் இந்தக் கட்டுரைப் பகுதியைப் பார்த்தேன். துறைகள் வாரியாகத் தனித்தனியாகப் பகுப்புகள் கொண்டு பல பக்கங்களை உருவாக்கலாம். இந்தப் பகுதி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாது வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கும் உதவும். உரையாடல் பக்கத்தில் அதற்கான விடைகளை வரிசைப்படுத்திக் கொடுக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:05, 14 மார்ச் 2011 (UTC)
தமிழ்
தொகுதமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எத்தனை? இதற்கான விடைகளாக 1.31 , 2.216, 3.247, 4.246 கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்து இது எதுவும் விடையில்லை. விடைகளை முழு எண்ணாக கொடுத்தால் நன்றாயிருக்கும். --குறும்பன் 14:33, 14 மார்ச் 2011 (UTC)
நான் தவறாக புரிந்து கொண்டேன் :)) 1. என்பதற்கு பதில் 1) என்று இருந்தால் பார்த்தவுடன் புரிவதில் சிக்கல் இருக்காது --குறும்பன் 14:37, 14 மார்ச் 2011 (UTC)
துறைகள்
தொகு- அறிவியலும் கணிதமும் (உயிரியல், இயற்பியல், வேதியியல், வானியல் உட்பட)
- புவியியல்
- சமூகம், வரலாறு, சமூக அறிவியல்கள்
- தொழில்நுட்பம்
- மொழிகள் - தமிழ்
வயதுப் பிரிவுகள்
தொகு- ஐந்து வயதுக்கு உட்பட்டோர்
- 5 - 9
- 9 - 14
- 14 - 17
- 17+
கேள்விகள்
தொகு- தமிழின் முதல் பேசும் திரைப்படம் - காளிதாஸ்
- 1789ல் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதால் எந்த நிகழ்வு தொடங்கியது - பிரெஞ்சுப் புரட்சி
- பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
- வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கட்டபொம்மனாக நடித்தவர் - சிவாஜி கணேசன்
- தமிழ்நாட்டின் முந்தைய பெயர் சென்னை மாநிலம்
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடியவர் கணியன் பூங்குன்றனார்
- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நகரம் - டென் ஹாக்
- அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் மிகவும் இளையவர் - ஜான் எஃப். கென்னடி
- நோபல் பரிசு வாங்கிய முதல் பெண் / இரு முறை நோபல் பரிசு வாங்கிய ஒரே அறிவியலாளார் - மேரி கியூரி
--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 16 மார்ச் 2011 (UTC)
ஏன்?
தொகுபொது அறிவு வினா விடை என்றில்லாமல் ஏன் கேள்வி என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது? இது பற்றி ஏற்கனவே "அகேகே" பேச்சுப்பக்கத்தில் கருத்து கூறப்பட்டுள்ளது. கேள்வி என்ற சொல் ஒருபோதும் QUESTION என்ற பொருள் தாராது. அது HEARING என்ற பொருளை மட்டுமே தரும். (ஆதாரம்: திருக்குறள் கேள்வி அதிகாரம். இங்கு!)
அருள் கூர்ந்து ஒரு தவறானச் சொற்பயன்பாட்டிற்கு விக்கிப்பீடியாவும் அடிமையாக வேண்டாம் என்று கருதுகிறேன். இப்பக்கத்தை நகர்த்துவது தொடர்பாக நிர்வாகிகளும் பயனர்களும் எண்ணிப்பார்க்கவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:47, 16 மார்ச் 2011 (UTC)
- சூர்ய பிரகாசு எழுப்பும் கேள்விக்கு உகந்த பதில் சென்னைப் பேரகரமுதலியில் உள்ளது. அங்கே கேள்வி என்னும் சொல்லுக்கு வினா என்னும் பொருள் உண்டு என்பது தொல்காப்பிய மற்றும் நன்னூல் உரைகளிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டுள்ளது. காண்க: - கேள்வி - பொருள்
இருப்பினும், தமிழகத்தில் பொதுவாக கேள்வி - பதில் என்றும் வினா - விடை என்றும் கூறுவது வழக்கம். எனவே கேள்வி - விடை என்பதை மாற்றி, கேள்வி-பதில் என்றோ வினா-விடை என்றோ அமைத்தால் பொருத்தமாகலாம்.--பவுல்-Paul 01:26, 17 மார்ச் 2011 (UTC)
நான்கு பதில்கள், எளிமையான கேள்விகள்
தொகுபல பயனர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். நன்றி. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதிலகள் பரிந்துரைக்கவும். மிக வயது குறைந்தவர்களுக்கு ஏற்ற கேள்விகளையும் பரிந்துரைக்கவும். --Natkeeran 00:24, 17 மார்ச் 2011 (UTC)
நம் நாட்டில்
தொகு\\கீழே வரும் எந்தப் பாம்பு நம் நாட்டில் காடுகளில் காணப்படுவதில்லை\\ எனும் கேள்வியில் நம் நாட்டில் எனும் பதம் புலம்பெயர்ந்து வாழும் நம் சிறுவர்களுக்கு குழப்பமாயிருக்கும் அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 03:48, 17 மார்ச் 2011 (UTC)
- குழப்பம் ஏற்படக்கூடும் என்பதால் இந்தியாவிலோ இலங்கையிலோ என்று மாற்றிவிடலாம். அப்படியே மாற்றுகிறேன். --பவுல்-Paul 23:06, 17 மார்ச் 2011 (UTC)
5 வயதுக்கு உட்பட்டோர்
தொகு- தமிழ்நாடு எந்த நாட்டில் உள்ளது?
- இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர்
- யாழ்பாணம் எந்த நாட்டில் உள்ளது?
- தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, பிரிட்டன்
- பரப்பளவு அடிப்படையில் கனடாவின் பெரிய மாகாணம் எது?
- ஒன்டாரியோ, பிரிட்டிசு கொலம்பியா, குயூபெக், அல்பரடா
- ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரம் எது?
- நியூயார்க், சிகாகோ, வாசிங்டன் டி. சி, லாஸ் ஏஞ்சலஸ்
- நூறை விட பெரிய எண் எது? (எழுத்தில் இக்கேள்வி இருக்கவேண்டும், நூறு என்பதை 100 என்று எண்ணில் குறிக்கவேண்டாம் - 5வயதுக்கு ஏற்ற கேள்வியா என தெரியவில்லை)
- தொன்னூற்று ஒன்பது, ஐம்பது, நூற்றி ஒன்பது, எண்பத்தி ஐந்து
- காட்டு ராசா எனப்படும் விலங்கு எது?
- புலி, யானை, வேங்கை, சிங்கம்
- உயரமான விலங்கு எது?
- ஒட்டகம், யானை, ஒட்டகச்சவிங்கி, கங்காரு
- நிலத்தில் உள்ள பெரிய விலங்கு எது?
- சிங்கம், யானை, ஒட்டகம், மாடு
--குறும்பன் 16:55, 18 மார்ச் 2011 (UTC)
பங்களிப்பு விதம்
தொகுநான் வினாக்களையும் அதற்கான விருப்பங்களையும் மட்டும் பல பிரிவுகளில் சேர்க்கிறேன். தயவு செய்து யாரேனும் அவற்றை இன்ன இன்ன வயதுக்கு ஏற்றவை என்று பகுத்துவிடுங்கள். அதைக் கணிப்பதில் எனக்குப் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. எனக்கு தெரிந்த அத்தனை வினாக்களையும் சேர்க்கிறேன்...
நான் ஒரு முறை வினாடி-வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று எங்கள் மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு வாங்கியுள்ளேன் என்பதை விக்கி நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்... :) --சூர்ய பிரகாசு.ச.அ. 10:08, 19 மார்ச் 2011 (UTC)
நிகழ்ச்சி நன்றாக நடந்ததா?
தொகுநற்கீரன், நிகழ்ச்சி நன்றாக நடந்ததா? படங்கள், குறிப்புகள் சேர்த்தால் நன்று. --14.96.213.242 15:05, 27 மார்ச் 2011 (UTC) குறிப்புகள் இங்கே - விக்கிப்பீடியா:மார்ச் 19, 2011 சிறுவர் நாள் அறிமுகம்--சோடாபாட்டில்உரையாடுக 15:29, 27 மார்ச் 2011 (UTC)
பரிந்துரை
தொகுஇது ஒரு சிறந்த திட்டம். பெரிய கட்டுரைகளை வாசித்து அவற்றை விளங்கிக் கொள்வதிலும்பார்க்க இது இலகுவானது. விடைகளை சொடுக்கும்போது அவற்றுக்கான கட்டுரைகளுக்கு வழிகாட்டாது சரியான விடையா அல்லது தவறானதா என அறியும் வண்ணம் இருபக்கங்களை உருவாக்கி அவற்றுக்கு வழிகாட்டச் செய்தல் பொருத்தமெனக் கருதுகிறேன். --Prash 04:34, 8 செப்டெம்பர் 2011 (UTC)