விக்டோரியா பெரிய பாலைவனம்

கிரேட் விக்டோரியா பாலைவனம் (Great Victoria Desert), ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு குறைந்த மக்கள் தொகை கொண்ட பாலைவனம் ஆகும். இது உலகின் 7வது பெரிய பாலைவனம் ஆகும்.[1] இப்பாலைவன மணல் செம்மண் நிறத்தில் உள்ளது.

கிரேட் விக்டோரியா பாலைவனம்
பாம்ப வடிவ ஏரி, தெற்கு ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் கிரேட் விக்டோரியா பாலைவனம் (சிவப்பு நிறத்தில்)
சூழலியல்
மண்டலம்Australasian realm
பல்லுயிர்த் தொகுதிபாலைவனம் மற்றும் புதர் நிலங்கள்
எல்லைகள்
பட்டியல்
  • புதர்களுடன் கூடிய மத்திய குன்றுத் தொடர்கள்
  • கூல்கார்டி காடுகள்
  • ஐர் மற்றும் யார்க் மல்லீ
  • பெரு மணல் தனாமி பாலைவனம்
  • கிப்சன் பாலைவனம்
  • நுல்லார்போர் சமவெளி புதர் நிலங்கள்
  • திரானி-துருட்டு கற்களான பாலைவனம்
  • மேற்கு ஆஸ்திரேலியாவின் முல்கா புதர் நிலங்கள்
புவியியல்
பரப்பளவு422,466 km2 (163,115 sq mi)
நாடுஆஸ்திரேலியா
மாநிலங்கள்தெற்கு ஆஸ்திரேலியாமற்றும் மேற்கு ஆஸ்திரேலியா
வளங்காப்பு
வளங்காப்பு நிலைRelatively stable/intact
பாதுகாக்கப்பட்டது129,367 சகிமீ2%
கோனி சூ நெடுஞ்சாலை
தெற்கு ஆஸ்திரேலியாவில் முன்னர் பிரித்தானியர்கள் அணு சக்தி சோதனை செய்த மாரலிங்கா பகுதி
கைர்டுனெர் ஏரி தேசியப் பூங்கா

வரலாறு

தொகு

1875ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆய்வாளர் எர்னஸ்ட் கில்ஸ் என்பவர இந்த பாலைவனத்தைக் கடந்த முதல் ஐரோப்பியர் ஆனார். அப்போதைய ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு பெருமை சேர்க்க , இப்பாலைவனத்திற்கு கிரேட் விக்டோரிய பாலைவனம் எனப்பெயரிட்டார். 1891ஆம் ஆண்டில், டேவிட் லிண்ட்சே வடக்கிலிருந்து தெற்காக இப்பாலைவனத்தை கடந்து சென்றார். 1903 மற்றும் 1908க்கு இடையில், ஃபிராங்க் ஹான் தங்கத்திற்கான பகுதியை ஆய்வு செய்தார். லென் பீடில் 1960களில் இப்பகுதியை ஆய்வு செய்தார்.

புவியியல்

தொகு

இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனமாகும்.[2] இதில் சில மணல்மேடுகள், புல்வெளிகள், புதர்கள், குறு மரங்கள் மற்றும் பாலைவன நடைபாதைகள் மற்றும் உப்பு ஏரிகள் கொண்டது.. இது கிழக்கிலிருந்து மேற்காக 700 கிலோ மீட்டர் (430 மைல்) நீளமும்; 3,48,750 சதுர கிலோ மீட்டர் (134,650 சதுர மைல்) பரப்பளவும் கொண்டுள்ளது. கிரேட் விக்டோரியா பாலைவனம் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிழக்கு கோல்ட்ஃபீல்ட்ஸ் பகுதியிலிருந்து, தெற்கு ஆஸ்திரேலியாவின் காவ்லர் மலைத்தொடர்கள் வரை நீண்டுள்ளது.

கிரேட் விக்டோரியா பாலைவனத்தின் மேற்கில் மேற்கு ஆஸ்திரேலியாவின் மாலே பகுதியும், வடமேற்கில் சிறிய மணற்பாங்கான பாலைவனமும் வடக்கே கிப்சன் பாலைவனம் மற்றும் மத்திய மலைத்தொடரும், செரிக் புதர் நிலங்களும், கிழக்கே திராரி பாலைவனம் மற்றும் தெற்கே சரளைக் கற்களுடன் கூடிய புதர் பாலைவனம் அமைந்துள்ளது. .

வானிலை

தொகு

கிரேட் விக்டோபரியா பாலைவனத்தில் மழைப்பொழிவு குறைவாகவும் ஒழுங்கற்றதாகவும் உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு 200 முதல் 250 மில்லி மீட்டர் (7.9 முதல் 9.8 அங்குலம்). இங்கு ஆண்டிற்கு பதினைந்து முதல் இருபது முறை இடியுடன் கூடிய மழை பெய்யும். . கோடையில் வெப்பநிலை 32 முதல் 40 °C (90 முதல் 104 °F) வரையிலும், குளிர்காலத்தில் 18 முதல் 23 °C (64 முதல் 73 °F) வரையிலும் இருக்கும்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கோகரா, மிர்னிங் மற்றும் பிட்ஜன்ட்ஜட்ஜாரா உள்ளிட்ட பூர்வீக ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிரேட் விக்டோரியா பாலைவனப் பகுதியில் உள்ள பழங்குடி இளைஞர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் புதிய திட்டங்களுடன் பணிபுரிகின்றனர்..[3][4]

இப்பாலைவனம் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இருந்தபோதிலும், கரடுமுரடான சாலைகள் கிரேட் விக்டோரியாவைக் கடந்து செல்கிறது. இதில் கோனி சூ நெடுஞ்சாலை மற்றும் ஆன் பீடில் நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும். இப்பகுதியில் மனித நடவடிக்கைகளில் சில சுரங்கம் மற்றும் அணு ஆயுத சோதனைகளும் அடங்கும்.

சூழல்

தொகு
 
ஆஸ்திரேலியாவின் தட்ப வெப்ப வரைபடம்

இயற்கைக்கான உலகளாவிய நிதியம் கிரேட் விக்டோரியா பாலைவன வன விலங்குகள் மற்றும் தாவரங்களை காத்து சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவுகிறது. கிரேட் விக்டோரியா பாலைவனம் என்றும் ஆஸ்திரேலிய ஐபிஆர்ஏ (ஐபிஆர்ஏ) பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பகுதி விவசாயப் பயன்பாட்டைக் குறைவாகக் கொண்டிருப்பதால், சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரிய அளவில் மாறாமல் உள்ளது.. வனப்பகுதியின் சில பகுதிகள் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மாமுங்காரி பாதுகாப்பு பூங்கா உள்ளிட்ட பகுதிகளாகும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள உலக உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாகும்.

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

இப்பாலைவனத்தில் புதர்ச் செடிகள் அதிகாமாகவும்; குறுமரங்கள் குறைவாக உள்ளது. டிங்கோ நாய்கள் நரிகள், உடும்புகள், பண்டி-பண்டி எனும் விஷப் பாம்புகள் காணப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. The 10 Largest Deserts In The World
  2. Great Victoria Desert – The Largest Desert in Australia. Birgit Bradtke. Retrieved 26 March 2013.
  3. Wilurarra Creative 2011;
  4. "Southern Australia". World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Victoria Desert
என்பதில் ஊடகங்கள் உள்ளன.