விசுவாசராவ்

சிறீமந்த் விசுவாசராவ் பேஷ்வா (Shrimant Vishwasrao Peshwa) (22 சூலை 1742 - 14 சனவரி 1761) மராட்டியப் பேரரசின் புனேவைச் சேர்ந்த பேஷ்வா, பாலாஜி பாஜி ராவ் பட்டின் மூத்த மகனாவார். மேலும் மராட்டியப் பேரரசின் பேஷ்வா என்ற பட்டத்தின் வாரிசு ஆவார். இவர் தனது சிறு வயதிலிருந்தே நிர்வாகம் மற்றும் போரில் பயிற்சி பெற்றிருந்தார். 1760 இல் நடந்த சிந்த்கேடா மற்றும் உத்கீர் போரில் பங்கேற்றதன் மூலம் மராட்டிய காலாட்படையிடம் இவரது வீரம் பேசப்பட்டது. [1]

சிறீமந்த்
விசுவாச ராவ்
சிறீமந்த் விசுவாசராவ் (பல்லால்) பேஷ்வாவின் படம். இந்த உருவப்படம் இந்தியாவின் புனேவின் பார்வதியிலுள்ள பேஷ்வா நினைவிடத்தின் ஒரு பகுதியாகும்
மராட்டியப் பேரரசின் பேஷ்வா
பதவியில்
22 சூலை 1742 – 14 சனவரி 1761
ஆட்சியாளர்பாலாஜி பாஜி ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1742-07-22)22 சூலை 1742
சனிவார்வாடா, புனே, மராட்டியப் பேரரசு
இறப்பு14 சனவரி 1761(1761-01-14) (அகவை 19)
பானிப்பத், முகலாயப் பேரரசு.
துணைவர்இலட்சுமி பாய் (துர்காபாய் தீக்சித்-பட்வர்த்தன்)
உறவுகள்மாதவராவ் (சகோதரர்)
பேஷ்வா நாராயணராவ் (சகோதரர்)
சதாசிவராவ் பாவ் (மாமா)
இரகுநாதராவ் (மாமா)
சம்ஷேர் பகதூர் (மாமா)

பாஜிராவ்(Grandfather)

காஷிபாய்(Grandmother)
பெற்றோர்(s)பாலாஜி பாஜி ராவ் (தந்தை)
கோபிகாபாய் (தாயார்)
Military service
பற்றிணைப்புமராட்டியப் பேரரசு
போர்கள்/யுத்தங்கள்மூன்றாம் பானிபட் போர்

மூன்றாம் பானிபட் போரில், பஷ்தூன் அதிகாரி ஒருவர் சுட்ட துப்பாக்கியால் இவர் தலையில் தாக்கப்பட்டு [2] இறந்தார். கிராண்ட் டஃப் என்பாரது என்பாரது கருத்துப்படி, இவரது மரணம் குறித்து கேள்விப்பட்ட மல்கர் ராவ் ஓல்கர் குறைந்தது 10,000 வீரர்களுடன் களத்தில் இருந்து பின்வாங்கினார் எனத் தெரிகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

 
மராட்டிய கூட்டமைப்பு 1760 ஆம் ஆண்டில் (நீல பகுதி) தக்காணத்திலிருந்து இன்றைய பாக்கித்தான் வரை நீண்டிருந்தது.

விசுவாசராவ் புனேவுக்கு அருகிலுள்ள சூப் பகுதியில் பாலாஜி பாஜி ராவின் மூத்த மகனாகப் பிறந்தார் (புனேவுக்கு அருகிலுள்ள சாகாஜியின் ஆட்சிப்பகுதி). இவர் நிர்வாக விஷயங்களில் பயிற்சியளிக்கப்பட்டார். மேலும், இவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இராணுவ பயிற்சிக்கு ஆளானார். இவர், தனது தாத்தா பாஜிராவின் தோற்றத்தை மரபுரிமையாகக் கொண்டிருந்தார். மேலும், இவர் நல்ல தோற்றப் பொழிவையும் கொண்டிருந்தார். [3]

திருமணம் தொகு

இவர், 1750 மே 2 அன்று அரி பாலகிருட்டிண தீட்சித்-பட்வர்தனின் மகள் இலட்சுமிபாய் என்பவரை மணந்தார். [4] 

இறப்பு தொகு

மூன்றாம் பானிபட் போரில் ஒரு தளபதியாக இருந்த விசுவாச ராவ் முன் வரிசையில் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு, காயமடைந்து இறந்தார். [5]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. http://ketkardnyankosh.com/index.php/2012-09-06-10-45-30/10573-2013-03-05-07-25-35
  2. See Rawlinson (1926), Account of the last Battle of Panipat, Oxford UP, np. And also D R Lal, 'Third Battle of Panipat- an historical account' Lahore: FC College Press, 1932, p 174. Lal states citing contemporary Afghan sources that the officer in question was probably one Bahadar Khan Tarin, aa
  3. Abhas Verma, "Third Battle of Panipat", Bhartiya Kala Prakashan, ISBN 9788180903397
  4. Kasture, Kaustubha; कस्तुरे, कौस्तुभ.. Peśavāī : Mahārāshṭrācyā itihāsātīla eka suvarṇapāna. Mumbaī. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-922379-8-5. இணையக் கணினி நூலக மையம்:948661274. https://www.worldcat.org/oclc/948661274. 
  5. Rawlinson above

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவாசராவ்&oldid=3089266" இலிருந்து மீள்விக்கப்பட்டது