விட்டேக்கர் புற்றுப்பல்லி
விட்டேக்கர் புற்றுப்பல்லி (Whitaker's termite hill gecko, உயிரியல் பெயர்: Hemidactylus whitakeri) என்பது தென்னிந்தியாவில் காணப்படும் ஒரு பல்லியினம்.[2][3] இப்பல்லி கறையான் புற்றுகளில் காணப்படும். புகழ்பெற்ற ஊர்வனவியலாளர் உரோமுலசு விட்டேக்கர் பெயரால் அழைக்கப்படுகிறது.
விட்டேக்கர் புற்றுப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. whitakeri
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus whitakeri Mirza, Gowande, Patil, Ambekar, & Patel, 2018 |
தோற்றம்
தொகுவிட்டேக்கர் புற்றுப்பல்லிகள் வால் நீங்கலாக 45 முதல் 60 மி.மீ. வரை வளரக்கூடிய நடுத்தர நீளமுடைய பல்லிகள். இவை தடிப்பான தோற்றமுடையவை. முதுகுப்புறம் மென்பழுப்பு நிறத்திலிருக்கும். அதன்மீது கறுப்பு விளிம்புடைய மெல்லிய வெள்ளைப் பட்டைகள் காணப்படும். தலைமுதல் வாலின் அடிப்பகுதிவரை தட்டையாகவும், வால் சிறிது அமிழ்ந்த முட்டைவடிவிலும் இருக்கும்.
இளம்பார்ப்புகளின் வெள்ளைப் பட்டைகளிடையே கருநிறம் மேவியிருக்கும்.
பரம்பல்
தொகுவிட்டேக்கர் புற்றுப்பல்லிகள் தென்னிந்தியாவில் காணப்படுபவை. வடக்கே கருநாடகத்தின் அம்பியிலும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலும் மேற்கில் சாராவதியிலும் கிழக்கில் சோழமண்டலக் கடற்கரை நெடுகில் சென்னை முதல் புதுச்சேரி வரையிலும் தெற்கில் திருநெல்வேலியிலும் இவை பதிவாகியுள்ளன. இவற்றுக்கிடைப்பட்ட பகுதியில் இவை காணப்படுகின்றன. முதலில் ஆவணப்படுத்திய பல்லியும் அதைத்தொடர்ந்து பதிவான பல்லிகளும் பெங்களூரைச் சுற்றிக் காணப்பட்டன. இவற்றையொத்த வாழிடத்தை விரும்பும் தென்னிந்தியப் புற்றுப்பல்லியும் நெல்லூரில் தொடங்கி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hemidactylus whitakeri | IUCN RedList". iucnredlist.org.
- ↑ Hemidactylus whitakeri at the Reptarium.cz Reptile Database. Accessed 15 August 2016.
- ↑ 3.0 3.1 3.2 ZA, Mirzan; GG, Gowande; R, Patil; M, Ambekar; H, Patel (2018-08-02). "First appearance deceives many: disentangling the Hemidactylus triedrus species complex using an integrated approach.". PeerJ 6: e5341. doi:10.7717/peerj.5341. பப்மெட்:30083464.