வித்தியாசாகர் சேது

வித்தியாசாகர் சேது அல்லது ஊக்ளி ஆற்றின் இரண்டாவது பாலம், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களை ஊக்லி ஆற்றின் மீது கட்டப்பட்ட இப்பாலத்தின் வழியாக இணைக்கிறது. இப்பாலம் 822.96-மீட்டர்-long (2,700 அடி) நீளம் மற்றும் 35 மீட்டர்கள் (115 அடி) அகலம் கொண்டது. இதில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கல்வியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவாக, 1992ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பாலம் எஃகு வடக்கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. [2] இப்பாலம் கட்டுவதற்கான செலவு ரூபாய் 388 கோடி ஆகும். இதனை ஊக்லி ஆறு திட்ட ஆணையரால் வடிவமைக்கப்பட்டது.[3]இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல இடது பக்கம் மூன்று வரிசையும், வலது பக்கம் மூன்று வரிசைகளும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 12ன் ஒரு பகுதியாக இப்பாலம் உள்ளது.

வித்தியாசாகர் சேது
படித்துறையிலிருந்து மாலைநேரத்தில் வித்தியாசாகர் பாலத்தின் காட்சி
அதிகாரப் பூர்வ பெயர் வித்தியாசாகர் சேது
பிற பெயர்கள் இரண்டாவது ஊக்லி பாலம்
போக்குவரத்து கோனா விரைவுச்சாலை (தேசிய நெடுஞ்சாலை 12ன் ஒரு பகுதி)
தாண்டுவது ஊக்லி ஆறு
இடம் கொல்கத்தா மற்றும் ஹவுரா, மேற்கு வங்காளம்
பராமரிப்பு ஊக்ளி ஆறு பாலத்தின் ஆணையர்கள்
வடிவமைப்பு கம்பி வடங்களால் இழுத்துக் கட்டப்பட்ட பாலம்
மொத்த நீளம் 822.96 மீட்டர்கள் (2,700 அடி)
அகலம் 35 மீட்டர்கள் (115 அடி)
அதிகூடிய அகல்வு 457.2 மீட்டர்கள் (1,500 அடி)
Clearance below 26 மீட்டர்கள் (85 அடி)
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து ~90,000 vehicles (as of 2018)[1]
கட்டியவர் பி, பி & ஜெ கட்டுமான நிறுவனம்
கட்டுமானம் தொடங்கிய தேதி சூலை 3, 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-07-03)
திறப்பு நாள் அக்டோபர் 10, 1992; 32 ஆண்டுகள் முன்னர் (1992-10-10)
சுங்கத் தீர்வை சுங்கக் கட்டணம் உண்டு
அமைவு 22°33′26″N 88°19′40″E / 22.557105°N 88.327757°E / 22.557105; 88.327757
ஊக்லி ஆறு படித்துறையிலிருந்து வித்தியாசாகர் பாலத்தின் காட்சி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pay more on 2nd Hooghly bridge | Kolkata News - Times of India". 13 January 2018. https://timesofindia.indiatimes.com/city/kolkata/pay-more-on-2nd-hooghly-bridge/articleshow/62481349.cms. 
  2. "Vidyasagar Setu / 2nd Hooghly Bridge - Kolkata, West Bengal". bbjconst.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-11.
  3. "History". Kolkata Port Trust: Government of India. Archived from the original on 13 ஏப்பிரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்பிரவரி 2011.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாசாகர்_சேது&oldid=4147537" இலிருந்து மீள்விக்கப்பட்டது