வித்யா (ஞானம்)

வித்யா (சமஸ்கிருதம்: विद्या) முதன்மையாக விஞ்ஞானம், கற்றல், தத்துவம், அறிவு, புலமைத்துவம், உண்மை - பொய் அறியும் அறிவு ஆகியவற்றை குறிக்கும்.[1]. அதன் வேர் வித் (சமஸ்கிருதம்: विद्) என்பது - அதாவது, காரணம் கண்டுபிடித்தல், அறிதல், பெறுதல் அல்லது புரிதல்[2]. வித்யா என்றால் "ஞானம்" அல்லது "தெளிவு" என்ற பொருளில் தென் ஆசிய மொழிகளான பாலி மற்றும் சிங்களத்தில் வழங்கப்படுகிறது.[3][4]. இது ஒரு பிரபலமான இந்தியப் பெயர். இந்தோனேசியாவிலும் இந்தப் பெயர் புழக்கத்தில் உள்ளது. இந்து மதத்தில் புராண கருத்துப்படி இந்தப்பெயர் ஞானம் மற்றும் கற்றலைக் குறிக்கும். வித்யாவுக்கு எதிர்ச்சொல் அவித்யா (அறியாமை அல்லது தவறான தகவல்) ஆகும்.

இந்து சமயப்படி வித்யா என்பது கீழ் கண்ட ஆறு இந்து தத்துவங்களையும் கற்பதாகும்.[5]

சரஸ்வதியின் அடைமொழி

தொகு
 
சரஸ்வதி தேவி, ராஜா ரவி வர்மா ஓவியம்

வித்யா என்னும் பெயர் இந்து கடவுளான சரஸ்வதியின் அடைமொழி ஆகும். இந்து நம்பிக்கைப்படி சரஸ்வதி, பிரம்மாவின் மனைவி. சரஸ்வதிக்கு உயர்ந்த தெய்வீக பெண் சக்தி உண்டு, அது மனிதர்களை தூய்மைப்படுத்தி, வலுப்படுத்தி, உயர்த்தும் என்பது நம்பிக்கை. அதனால் அவர் கலைமகள் ஆவர்.

சரஸ்வதி ஞானம், இசை, காலை, அறிவு மற்றும் கல்வியின் கடவுள். இவர் முப்பெரும் தேவிகளாம், சரஸ்வதி, லட்சுமி, பார்வதியில் ஒருவர். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு, சிவனின் படைத்தல், காத்தல், அளித்தால் தொழிலில் உறுதுணையாக இருப்பர்[6]. காலத்தில் பழமையான ருக் வேதத்தில் வித்யா என்ற சொல் காணப்படவில்லை. பிற்கால வேத நூல்களான அதர்வண வேதத்திலும், யசுர் வேதம் மற்றும் உபநிடதங்களின் ஒரு பகுதியான பிரமாணங்களிலும் வித்யா என்ற சொல் காணப்படுகிறது.[7] அவர் கலைமகளாக வேத காலம் முதல் இன்றுவரை உள்ளார். சரஸ்வதி வழிபாடு இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.[8]. அன்று சிறு குழந்தைகளுக்குக் கைப்பிடித்து எழுதச் சொல்லிக்கொடுப்பர். இந்தியாவில் சமணம் மற்றும் புத்த மதத்திலும் சரஸ்வதியை வழிபடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Archibald Edward Gough. Philosophy of the Upanishads. Trubner & Co. p. 48.
  2. "Spokensanskrit.de Dictionary". Spokensanskrit.de.
  3. Gandhi, Maneka (2004). The Penguin Book of Hindu Names for Girls. New Delhi: Penguin Books. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-303169-7. இணையக் கணினி நூலக மைய எண் 60454994. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  4. Gandhi, Maneka (2004). The Penguin Book of Hindu Names for Boys. New Delhi: Penguin Books. p. 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-303168-0. இணையக் கணினி நூலக மைய எண் 60391724. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  5. Going to school in South Asia. Greenwood Publishing Group. p. 75.
  6. Encyclopaedia of Hinduism, p. 1214; Sarup & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-064-1
  7. Thomas B.Coburn. Devi Mahatmya. Motilal Banarsidass. p. 189.
  8. Vasant Panchami Saraswati Puja பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம், Know India – Odisha Fairs and Festivals
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_(ஞானம்)&oldid=3913746" இலிருந்து மீள்விக்கப்பட்டது