வினீத் சரண்
வினீத் சரண் (Vineet Saran) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1] இவர் கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.
மாண்புமிகு நீதிபதி வினீத் சரண் | |
---|---|
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 ஆகத்து 2018 | |
பரிந்துரைப்பு | தீபக் மிசுரா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
தலைமை நீதிபதி ஒரிசா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 26 பிப்ரவரி 2016 – 6 ஆகத்து 2018 | |
பரிந்துரைப்பு | டீ. எஸ். தாக்கூர் |
நியமிப்பு | பிரணாப் முகர்ஜி |
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் 16 பிப்ரவரி 2015 – 25 பிப்ரவரி 2016 | |
பரிந்துரைப்பு | எச். எல். தத்து |
நியமிப்பு | பிரணாப் முகர்ஜி |
நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 14 பிப்ரவரி 2002 – 15 பிப்ரவரி 2015 | |
பரிந்துரைப்பு | சாம் பிரோஜ் பாருச்சா |
நியமிப்பு | கே. ஆர். நாராயணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 மே 1957 |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
நீதிபதி பணி
தொகுநீதிபதி வினீத் சரண் 1957 மே 11 அன்று பிறந்தார். இவர் 28 ஜூலை 1980 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சட்டம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் பயிற்சி பெற்றார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 16 பிப்ரவரி 2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் பெற்றார். 26 பிப்ரவரி 2016 அன்று ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]
சரண், ஆகஸ்ட் 8, 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Centre Notifies Appointment Of Justices KM Joseph, Indira Banerjee And Vineet Saran As SC Judges". Apoorva Mandhani. Live Law. 3 August 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2018.
- ↑ https://orissahighcourt.nic.in/judges/chief-justices-judges-elevated-to-supreme-court/hon-ble-mr-justice-vineet-saran/
- ↑ https://www.scobserver.in/judges/vineet-saran/