விபா பக்சி
விபா பக்சி (Vibha Bakshi) (பிறப்பு 23 செப்டம்பர் 1970) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், பத்திரிகையாளரும் மற்றும் பொறுப்புள்ள திரைப்படங்களை உருவாக்கிய நிறுவனரும் ஆவார். பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் படங்களுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.
விபா பக்சி | |
---|---|
விபா பக்சி | |
பிறப்பு | 23 செப்டம்பர் 1970 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | {{மதிப்புறு முனைவர் பட்டம், டாக்டர் ஆஃப் ஹியூமன் லெட்டர்ஸ்|இளங்கலை அறிவியல்}} |
படித்த கல்வி நிறுவனங்கள் | பாஸ்டன் பல்கலைக்கழகம் |
பணி | திரைத்தயாரிப்பாளர் |
விருதுகள் | 4 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா |
2018 ஆம் ஆண்டில், விபாவுக்கு ஒரு பத்திரிகையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக பணியாற்றியதற்காக அவரது பாசறைப் பல்கலைக்கழகமான பாஸ்டன் பல்கலைக்கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜான் லூயிஸ் மற்றும் விஞ்ஞானி டாக்டர் அந்தோனி ஃபாசி ஆகியோருடன் சேர்ந்து அவர் இந்த கௌரவத்தைப் பெற்றார். [1] இவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு பள்ளியில் தொடக்க பேச்சாளராக இருந்தார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் விபாவின் மிகவும் குறிப்பிடத்தக்க படங்களில் டாட்டர்ஸ் ஆஃப் மதர் இந்தியா மற்றும் சன் ரைஸ் ஆகியவை அடங்கும். இரண்டு படங்களும் இந்திய குடியரசுத் தலைவரின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றவை ஆகும்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுவிபா 23 செப்டம்பர் 1970 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை, வேத் சாப்ரா, ஒரு தொழிலதிபரும் 2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸின் கணிப்பின்படி முதல் 100 வணிகத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவரது தாயார் கீதா சாப்ரா ஒரு கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விபா கான்வென்ட் ஆப் ஜீசஸ் அன்ட் மேரி பள்ளியிலும் மற்றும் மும்பை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதழியல் மற்றும் ஒளிபரப்பியலில் இளங்கலைப் படிப்புக்காக இவர் அமெரிக்கா சென்றார். இவர் 1993 ஆம் ஆண்டில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் 1999 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பியல் தொடர்பான கல்வியில் பட்டயச்சான்றிதழைப் பெற்றார்.
தொழில்
தொகுவிபா மும்பையில் உள்ள ப்ளஸ் சேனல் ஒளிபரப்பு இதழில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் ஜிஈ நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியான சிஎன்பிசி (இந்தியா) அலைவரிசையில் பணியில் சேர்ந்தார். [2]
2004 ஆம் ஆண்டில், விபா பக்சி ஆஸ்கார் விருது பெற்ற மரியான் டீலியோவுடன் இணை தயாரிப்பாளரானார். இவர்களின் படங்களில் அமெரிக்க அரசின் எம்மி விருது வென்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துதல் தொடர்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக லைஃப் டைம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டெரர் அட் ஹோம் (2005) இருந்தது. எச்பிஓ தொலைக்காட்சிக்கான உலக வெப்பமயமாதல் பிரச்சனைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படமான டூ ஹாட் நாட் டு ஹேண்டில் (2006) என்ற திரைப்படமும் உள்ளடங்கும். [3] [4]
ஏரி உதய்பூர் அரண்மனை, உமைத் பவன் அரண்மனை மற்றும் ராம்பாக் அரண்மனை உள்ளிட்ட தாஜ் உணவகங்களுக்கான இந்தியாவின் மிளிரும் அரண்மனைகள் பற்றிய குறும்படங்கள் இவரது படைப்புகளில் அடங்கும்.
ரத்தன் டாடாவால் வழிநடத்தப்படும் டாடா அறக்கட்டளையின்4 பில்லியன் யூரோ மதிப்பிலான பரோபகார முயற்சியான கொல்கத்தாவின் டாடா மருத்துவ மையத்திற்கான, விபாவின் படம் இந்தியாவில் 29 அலைவரிசைகளில் ஆங்கிலம் மற்றும் 9 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது.
இவர் 2015 ஆம் ஆண்டில் மும்பை காவல்துறையினருக்காகன் பெண்கள் பாதுகாப்பு பிரச்சாரத்தை இயக்கி தயாரித்தார். இந்த பணிக்காக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிசு இவரைப் பாராட்டினார். [5]
இவரது சமீபத்திய பாலின உரிமைகள் படங்களான சன் ரைஸ் மற்றும் டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா ஆகியவை உலகளவில் பாலின சமத்துவமின்மை மற்றும் பாலின நீதி தொடர்பான கதை சொல்லும் முறையை மாற்றி வருகின்றன. [6]
டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா
தொகுவிபாவின் டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா திரைப்படம், 2015 ஆம் ஆண்டில் 62 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சமூகப் பிரச்சினைகளுக்கான திரைப்படமாக வென்றது. [7] [8] இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக, இவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இரண்டு விருதுகளைப் பெற்றார். தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர்கள் அமைப்பு, நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலின வன்முறை பற்றிய எரியும் பிரச்சினையில் கவனத்தை ஈர்த்தது பற்றி விவரித்தது. இந்த திரைப்படம் வியாகாம் 18' 10 அலைவரிசைகளில் 8 மொழிகளில் ஒரே நேரத்தில் முதன்மை நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் ஆவணத் திரைப்படங்கள் வரலாற்றில் இத்தகைய சிறப்பினைப் பெற்ற முதல் படமாக இது அமைந்துள்ளது. [9] [10] [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Honorary Degree Goes to Filmmaker Shining a Light on Gender Violence". Bostonia. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ "A world of gender equality". Herald Goa. 20 November 2019. https://www.heraldgoa.in/Cafe/A-world-of-gender-equality/153771.
- ↑ "Daughters of Mother India: Vibha Bakshi's documentary is an exploration of why our society keeps failing women". Firstpost. 8 March 2016. https://www.firstpost.com/politics/daughters-of-mother-india-vibha-bakshis-documentary-is-an-exploration-of-why-our-society-keeps-failing-women-2660268.html.
- ↑ "Documentary Daughters of Mother India tackles horror with hope". Calgary Herald. 26 January 2017. https://calgaryherald.com/entertainment/movies/documentary-daughters-of-mother-india-tackles-horror-with-hope/.Volmers, Eric (26 January 2017). "Documentary Daughters of Mother India tackles horror with hope". Calgary Herald.
- ↑ "'Daughters of Mother India' in syllabus of 200 Maharashtra schools". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 28 April 2015. https://www.business-standard.com/article/news-ians/daughters-of-mother-india-in-syllabus-of-200-maharashtra-schools-115042800900_1.html.
- ↑ "Vibha Bakshi's film 'Son Rise' is knocking down patriarchy world over". Lifestyle Asia India (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ Mohanka, Payal (4 January 2016). "‘Daughters of Mother India’ Breaks the Silence on Gender Violence" (in en). The Quint. https://www.thequint.com/voices/women/daughters-of-mother-india-breaks-the-silence-on-gender-violence.
- ↑ Beaumont-Thomas, Ben (26 March 2015). "Documentary about gang rape wins Indian national film award". தி கார்டியன். https://www.theguardian.com/film/2015/mar/26/documentary-daughters-of-mother-india-national-film-award.
- ↑ Bangs, Molly (4 December 2015). "Documentary Teaches Indian Police The Reality Of Reporting Rape" (in en). HuffPost. https://www.huffingtonpost.in/entry/daughters-of-india_n_56449736e4b060377347cbab.
- ↑ Nyay, Bushan (15 December 2015). "India's Viacom18 to Air Doc on Delhi Gang Rape Case Aftermath" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/indias-viacom18-air-doc-delhi-848922.
- ↑ Kumar, Anuj (17 December 2015). "Finding hope amidst hysteria" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/finding-hope-amidst-hysteria/article8000831.ece.