வியாழன் பனிக்கட்டி நிலாக்கள் ஆய்வுக்கலம்
வியாழன் பனிக்கட்டி நிலாக்கள் ஆய்வுக்கலம் (Jupiter Icy Moons Explorer, JUICE, "யூசு") என்பது கோள்களுக்கு இடையேயான ஓர் ஆய்வு விண்கலமாகும், இது 2023 ஏப்ரல் 14 அன்று ஏர்பஸ் டிஃபென்ஸ் ஸ்பேசு என்ற முக்கிய ஒப்பந்தக்காரரைக் கொண்டு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்டது. வியாழனின் மூன்று கலிலியன் நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, யூரோப்பா ஆகிய மூன்று நிலவுகளை ஆய்வு செய்ய இந்தப் பணி திட்டமிடப்பட்டுள்ளது. அவை அவற்றின் பனிக்கட்டி மேற்பரப்புகளுக்கு அடியில் குறிப்பிடத்தக்க திரவ நீரின் கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, இதனால் அவை உயிரினங்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்கும்.[4][5] பனிக்கட்டி இல்லாத நிலவான எரிமலைச் செயலில் உள்ள ஐயோவில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தவில்லை.
JUICE விண்கலம் பற்றிய கலைஞரின் கைவண்ணம் | |
திட்ட வகை | கோள் அறிவியல் |
---|---|
இயக்குபவர் | ஐ.வி.நி |
திட்டக் காலம் | விண்கலத்தின் கட்டங்கள்: 8 ஆண்டுகள் அறிவியல் கட்டம்: 3.5 ஆண்டுகள் முடிவுற்றது: 1 ஆண்டு, 8 மாதம்-கள் and 3 நாள்-கள் |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு | Airbus Defence and Space |
ஏவல் திணிவு | 5,963 கிகி (13,146 இறா) |
உலர் நிறை | 2,405 கிகி (5,302 இறா) |
திறன் | 820 வாட்டு[1] சூரியத் தகடின் மூலம் ~100 m2 (1,100 sq ft)[2] |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 14 ஏப்ரல் 2023 12:14 ஒசநே[3] |
ஏவுகலன் | ஆரியான் 5 ECA |
ஏவலிடம் | கயானா விண்வெளி மையம் |
ஒப்பந்தக்காரர் | ஆரியானசுப்பேசு |
நிலா-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | ஆகத்து 2024 |
புவி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | ஆகத்து 2024 |
வெள்ளி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 31 ஆகத்து 2025 |
புவி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 29 செப்டம்பர் 2026 |
புவி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 18 சனவரி 2029 |
223 ரோசா-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 15 அக்டோபர் 2029 (திட்டம்) |
வியாழன் சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | சூலை 2031 (திட்டம்) |
Departed orbit | திசம்பர் 2034 (திட்டம்) |
கனிமீடு சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | திசம்பர் 2034 (திட்டம்) |
இவ்விண்கலம் 2023 ஏப்ரல் 14 அன்று 12:14 மணிக்கு[3] ஏவப்பட்டது. பயணத்திற்கான உந்துசக்தியைப் பெறுவதற்காக கோள்களின் ஈர்ப்பு விசைகளின் தள்ளுகையை நான்கு முறை விண்கலம் பயன்படுத்தும். எட்டு ஆண்டுப் பயணத்திற்குப் பிறகு 2031 சூலை மாதத்தில் இது வியாழனை அடையும்.[6][7] 2034 திசம்பரில், விண்கலம் அதன் நெருக்கமான அறிவியல் பணிக்காகக் கனிமீடின் சுற்றுப்பாதையில் நுழையும்,[6] இதன் மூலம் பூமியின் நிலாவைத் தவிர வேறு நிலவைச் சுற்றி வரும் முதல் விண்கலம் என்ற சாதனையை ஏற்படுத்தும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அண்டத்திற்கான தொலைநோக்கு என்ற அறிவியல் திட்டத்திற்காக இந்த ஆய்வுக்கலத் திட்டத்தின் தேர்வு 2012 மே 2 அன்று அறிவிக்கப்பட்டது.[8][9] இதன் செயல்பாடுகளின் காலத்திலேயே நாசாவும் யூரோப்பா கிளிப்பர் என்ற திட்டத்தை 2024 இல் தொடங்கவிருக்கிறது.
காலக்கோடு
தொகுஏவுதலும் வழித்தடமும்
தொகுஏவுகலன் 2023 ஏப்ரல் 14 12:14 மணிக்கு கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.[10] இதனைத் தொடர்ந்து, வியாழனுக்கான வழித்தடத்தில் விண்கலத்தைச் செலுத்துவதற்காக பின்வரும் திட்டமிடப்பட்ட ஈர்ப்பு உதவிகள் பெறப்படும்: ஆகத்து 2024 இல் பூமி-சந்திரன் அமைப்பை அணுகல், ஆகத்து 2025 இல் வெள்ளியை அணுகல், செப்டம்பர் 2026 இல் பூமியின் இரண்டாவது அணுகல், இறுதியாக 2029 சனவரியில் பூமியின் அணுகல்.[6]
விண்கலம் சிறுகோள் பட்டையை இரண்டு தடவைகள் கடந்து செல்லும். 223 ரோசா என்ற சிறுகோளை 2029 அக்டோபரில் அணுகும்.[11][12]
வியாழனின் நிலாக்களுக்கு வருகை
தொகுசூலை 2031 இல் வியாழனின் அமைப்பிற்குள் வரும் போது, விண்கலம் 7.5 மணி நேரம் கழித்து வியாழனின் சுற்றுப்பாதையில் செருகுவதற்கான திட்டத்தில் முதலில் முதலில் கனிமீடை அணுகும். முதல் சுற்றுப்பாதை நீளமாக இருக்கும், அடுத்தடுத்த சுற்றுப்பாதைகள் காலப்போக்கில் படிப்படியாகக் குறைக்கப்படும், இதன் விளைவாக வியாழனைச் சுற்றி ஒரு வட்ட சுற்றுப்பாதை ஏற்படுகிறது.[6]
முதல் யூரோப்பா அணுகல் சூலை 2032 இல் நடைபெறும். வியாழனின் துருவப் பகுதிகளை ஆராய்வதற்கும் வியாழனின் காந்த மண்டலத்தை ஆய்வு செய்வதற்கும் விண்கலம் அதிக சாய்வான சுற்றுப்பாதையில் நுழையும்.[6]
கனிமீடில் சுற்றுப்பாதை செருகல்
தொகுதிசம்பர் 2034 இல், கனிமீடைச் சுற்றி ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நுழையும். முதல் சுற்றுப்பாதை 5,000 கிமீ (3,100 மைல்) தொலைவில் இருக்கும். 2035 ஆம் ஆண்டில், கனிமீடின் மேற்பரப்பில் இருந்து 500 கிமீ (310 மைல்) உயரத்தில் உள்ள வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நுழையும்.[6] கனிமீடின் கட்டமைப்பையும் காந்த மண்டலத்தையும் மேலதிகமாக ஆராயும்.
கனிமீடில் திடமிடப்பட்டுள்ள சுற்றுப்பாதை விலக்கம்
தொகுவிண்கலம் அதன் எஞ்சிய உந்துசக்தியை உட்கொள்ளும் போது, அது 2035 ஆம் ஆண்டின் இறுதியில் கனிமீடின் சுற்றுப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு கனிமீடின் மீது மோதுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.[6]
இவற்றையும் பார்க்க
தொகு- யூனோ – நடப்பில் உள்ள வியாழன் சுற்றுக்கலன்
- வியாழன் அணுகல்கள்: வொயேஜர் 1 / 2; காசினி-ஐசென்; நியூ ஹரைசன்ஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ Pultarova, Tereza (24 March 2017). "Europe's Jupiter explorer mission moves to prototype production". SpaceNews இம் மூலத்தில் இருந்து 30 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220130033839/https://spacenews.com/europes-jupiter-explorer-mission-moves-to-prototype-production/.
- ↑ Amos, Jonathan (9 December 2015). "Juice mission: Deal signed to build Jupiter probe". BBC News இம் மூலத்தில் இருந்து 7 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180907213008/https://www.bbc.com/news/science-environment-35051034.
- ↑ 3.0 3.1 "European Space Agency: Blast off for Jupiter icy moons mission" (in en-GB). BBC News. 14 April 2023 இம் மூலத்தில் இருந்து 14 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230414114037/https://www.bbc.com/news/science-environment-65273857.
- ↑ Clark, Stuart (5 March 2023). "'It's like finding needles in a haystack': the mission to discover if Jupiter's moons support life". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 7 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230307013722/https://www.theguardian.com/science/2023/mar/05/could-jupiters-icy-moons-support-life. பார்த்த நாள்: 7 March 2023.
- ↑ "ESA—Selection of the L1 mission" (PDF). ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். 17 April 2012. Archived (PDF) from the original on 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Juice's journey and Jupiter system tour". ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். 29 March 2022. Archived from the original on 24 September 2022. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
- ↑ "JUpiter ICy moons Explorer (JUICE)". தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம். NASA. 28 October 2021. Archived from the original on 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
- ↑ Amos, Jonathan (2 May 2012). "ESA selects 1bn-euro Juice probe to Jupiter". BBC News. Archived from the original on 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
- ↑ Howell, Elizabeth (13 February 2017). "JUICE: Exploring Jupiter's Moons". Space.com. Archived from the original on 26 May 2020. பார்க்கப்பட்ட நாள் 18 May 2020.
- ↑ "ESA's Juice lifts off on quest to discover secrets of Jupiter's icy moons". ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். 14 April 2023. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 14 April 2023.
- ↑ Avdellidou, C.; Pajola, M.; Lucchetti, A.; Agostini, L.; Delbo, M.; Mazzotta Epifani, E.; Bourdelle De Micas, J.; Devogèle, M. et al. (2021). "Characterisation of the main belt asteroid (223) Rosa". Astronomy & Astrophysics 656: L18. doi:10.1051/0004-6361/202142600. Bibcode: 2021A&A...656L..18A.
- ↑ Warren, Haygen (20 March 2023). "As launch approaches, JUICE project manager discusses trajectories and science". NASASpaceFlight.com. Archived from the original on 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 12 April 2023.
வெளி இணைப்புகள்
தொகு- ESA's JUICE page
- Future Planetary Exploration JUICE – Jupiter Ganymede Orbiter Revised Proposal
- Jupiter Icy Moons Explorer (2011) (OPAG October 2011 Presentations)
- JUICE (JUpiter ICy moons Explorer) (OPAG March 2012 Presentations)
- JUICE-JAPAN – சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
- JUICE – நாசா
- JUICE article on eoPortal by ESA