விரித்திசையன் வரைகலை

விரித்திசையன் வரைகலை (Scalable Vector Graphics (SVG) என்பது எக்ஸ்எம்எல் அடிப்படையிலான திசையன் வரைகலை ஆகும். இது ஈரளவு வெளி வரைகலைகளுக்காகவும், நகர்நிலைப் படங்களுக்காவும் உருவாக்கப் பட்டன. 1999 முதல் , உலகளாவிய வலைச் சேர்த்தியம் (W3C) என்ற அமைப்பு இதன் சீர்தரத்தை மேலாண்மைச் செய்கிறது.

விரித்திசையன் வரைகலை
கோப்பு நீட்சிs.svg   .svgz
அஞ்சல் நீட்சிimage/svg+xml[1][2]
சீர் சரவகைக் காட்டி(UTI)public.svg-image
உருவாக்குனர்W3C
தோற்றம்4 செப்டம்பர் 2001 (22 ஆண்டுகள் முன்னர்) (2001-09-04)
அண்மைய வெளியீடு
1.1 (இரண்டாம் பதிப்பு)
(16 ஆகத்து 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-08-16))
இயல்புதிசையன் வரைகலை
வடிவ நீட்சிஎக்ஸ்எம்எல்
சீர்தரம்W3C SVG
திறநிலை வடிவம்?ஆம்
இணையம்www.w3.org/Graphics/SVG/

இவ்வகைக் கோப்புகளின் படங்களும், அவற்றின் இயல்புகளும், எக்ஸ்எம்எல் உரைக்கோப்புகளில் வரையறுக்கப் படுகின்றன. இதனால் இக்கோப்புகளில் தேடவும், உள்ளடக்கம் செய்யவும், படிவ நிரலாக்க மொழி, தரவுகளைச் சுருக்கியும் வைக்க முடியும். அதனால் இக்கோப்புகளை உரைத்தொகுப்பிகளிலும், அதைப்போலவே, வரைகலை மென்பொருள் மூலமும் திறந்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பெரும்பாலான புதிய உலாவிகளான, பயர் பாக்சு, இண்டர்நெட் எக்சுபுளோரர், கூகிள் குரோம், ஒபேரா, சபாரி, இசுப்பார்ட்டன் (உலாவி) போன்றவைகள், இவ்வகைக் கோப்புகளை எளிதாகவும், விரைவாகவும், தடையின்றியும் படத்தை வழங்குகின்றன.

விக்கிமீடியத்திட்டங்களில் பெரும்பாலான இவ்வகைக் கோப்புகள் ஒரு மொழியில் உருவாக்கப் பட்டு அது பன்மொழிகளுக்கு எளிதாக உரைத்தொகுப்பிகள் வழியே மாற்றப்படுகின்றன. மேலும், இவ்வகைக் கோப்புகளை உருவாக்க, இங்சுகேப்பு (Inkscape) என்ற கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டு அடிப்படையில் முதன்மைப் பெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Media Type Registration for image/svg+xml". W3C. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
  2. "XML Media Types". பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
SVG in Tamil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரித்திசையன்_வரைகலை&oldid=3044006" இலிருந்து மீள்விக்கப்பட்டது