வி. கருப்பசாமி பாண்டியன்
வி. கருப்பசாமி பாண்டியன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக பணியாற்றினார். தற்போது அஇஅதிமுகவில் உள்ளார்.
வி. கருப்பசாமி பாண்டியன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
வாழ்கை வரலாறு
தொகுபாண்டியன் அதிமுக நிறுவனரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான ம. கோ. ராமச்சந்திரனின் ஆதரவாளராக இருந்தார். இராமச்சந்திரனாலும் அதன்பிறகு கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஆகிய இருவராலும் 1972இல் இருந்து கட்சியில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1996இல் இவர் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[1]
1977 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக பாண்டியன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பின்னர் மே 2, 2000 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
2015 ஆம் ஆண்டு மே மாதம் திமுகவில் இருந்து தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சூலை 26, 2016 இல் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திசம்பர் 2016இல் அவரது மரணத்திற்குப் பின்னர், வி. கே. சசிகலா அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். பின்னர் வி. கே. சசிகலா, தினகரனை கட்சியின் துணைத் தலைமைச் செயலாளராக அறிவித்தார். 2011இல் ஜெயலலிதாவுக்கு 'துரோகம்' செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியின் உயர் பதவியில் நியமிப்பதை என்னால் தன்னால் முடியாது என்று கூறி தன் பதவியை ராஜினாமா செய்தார்.[4] கருணாநிதியின் மறைவையடுத்து திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் ஆன பிறகு 2018, ஆகத்து 31 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.[5] இதனிடையே தனக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஆதங்கத்தில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் இருந்தார். இதனால் திமுகவில் இருந்து விலகி, சனவரி 5, 2020இல் மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karuppasamy Pandian back in AIADMK fold". The Hindu. 27 July 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Karuppasamy-Pandian-back-in-AIADMK-fold/article14510861.ece. பார்த்த நாள்: 2017-05-06.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ Sudhakar, P. (15 February 2017). "Karuppasamy Pandian resigns as AIADMK organising secretary". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Karuppasamy-Pandian-resigns-as-AIADMK-organising-secretary/article17307279.ece. பார்த்த நாள்: 2017-05-06.
- ↑ "கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்". செய்தி. இந்து தமிழ். 31 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நெல்லை கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்".நக்கீரன் (05 சனவரி, 2020)