வி. கே. பாண்டியன்
வி. கே. பாண்டியன் (பிறப்பு: வி. கார்த்திகேய பாண்டியன், 29 மே 1974) என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் இ.ஆ.ப அதிகாரியும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினரும் ஆவார். 1999 இல் குடிமைப் பணிக்கு தேர்வானவரான பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தனிச் செயலாளராகவும், ஒடிசா அரசின் முதல்வரின் முயற்சிகளின் செயலாளராகவும் பணியாற்றினார். [1] [2] [3]
வி. கே. பாண்டியன் | |
---|---|
2023 இல் வி. கே. பாண்டியன் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1974 கூத்தப்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | வேளாண்மையில் முதுகலைப் பட்டம் |
பணி | ஓய்வுபெற்ற இ.ஆப. அலுவலர், 5டி தலைவர் (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரம், உரு மாற்றீடு) |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் (2023 - தற்போது) |
வாழ்க்கைத் துணை | சுஜாதா ஆர். கார்த்திகேயன், |
துவக்க வாழ்க்கையும் கல்வியும்
தொகுபாண்டியன் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கூத்தப்பட்டி என்ற சிற்றூரில் 1974, மே, 28 அன்று பிறந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார். மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண்மையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
பாண்டியன் 2000 ஆண்டு இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வென்று பஞ்சாப்பில் இ.ஆ.ப. அதிகாரியானார். ஒடியாவைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியான சுஜாதா ரௌட்டைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒடிசா மாநிலப் பணிக்கு மாறினார். அது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதலில் கலஹண்டி மாவட்டத்தில் தர்மகரின் சாராட்சியராகப் தனது பணியைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு ஒடிசா முதலமைச்சரின் அலுவலகப் பணியில் இணைந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பகமான தளபதி ஆனார். வி. கே. பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
தொழில்
தொகுஇவர் 2000 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். முதலில் 2002இல் கலஹண்டி மாவட்டத்தில் தர்மகரின் சாராட்சியராக நியமிக்கப்பட்டார். அப்போது வேளாண் மக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார். 2004 இல் ரூர்கேலாவின் கூடுதல் ஆட்சியராக பதவியேற்றார். அப்போது 20 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ரூர்கேலா மேம்பாட்டு ஆணையத்தை ஐந்து மாதங்களில் மீட்டெடுத்தார். 2005 ஆம் ஆண்டு மயூர்பஞ்சு மாவட்ட ஆட்சியராக நியமிக்கபட்டார். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்க ஒற்றை சாளரமுறையை அமல்படுத்தினார். கஞ்சம் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபோது அங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். அச்சமயத்தில் 12 இலட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்தார். நேரடி மானியத் திட்டத்துக்கு நேரடி முன்னுதரானமாக தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
2011இல் முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2023 வரை அப் பதவியில் இருந்தார். [4] [5] [6] 2012 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் நவீன் பட்நாய்க் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பியாரிமோகன் மகாபோத்ரா பிஜு ஜனதா தள ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டார். இச்சதியை பாண்டியன் வெற்றிகரமாமாக முறியடித்தார். அப்போதிலிருந்து நவீன் பட்நாய்க்கின் வலதுகரமாக பாண்டியன் ஆனார். அதன் பிறகு பாண்டியனின் ஆலோசனையின் பேரில் ஒடிசாவில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தபட்டன.[7]
2023 ஆம் ஆண்டு, அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, பாண்டியன் முழுநேர அரசியலில் இறங்கினார். பின்னர் பாண்டியன் 5டி (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரம், உரு மாற்றீடு) முன்முயற்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இது கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்டதாகும். [8]
பாண்டியன் 2023, நவம்பர், 27 அன்று, கட்சித் தலைவரும் ஒடிசாவின் முதலமைச்சருமான நவீன் பட்நாய்க் முன்னிலையில் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். [9]
அண்மையில், பாண்டியன், நவீன் பட்நாயக்கின் அறிவுறுத்தலின் பேரில், யாத்ரீகர்களின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீமந்திர் பரிக்ரமா திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இவர் மாநிலம் முழுவதும் உள்ள பழமையான, புகழ்பெற்ற கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் உயர்நிலை பள்ளி மேம்பாடு திட்டத்தில் முதலமைச்சருக்கு உதவியாக பணிபுரிந்தார். பாண்டியன் ஒடிசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளை மாற்றியமைத்த பெருமைக்குரியவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் சக இ.ஆ.ப அதிகாரியான சுஜாதா ஆர். கார்த்திகேயனை மணந்தார். [10]
அங்கீகாரம்
தொகுஒடிசா மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டிற்கு பாண்டியன் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் விதமாக ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பை போட்டியின் போது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பானது எஃப்ஐஎச் தலைவர் விருதை 2023. சனவரி. 29 அன்று இவருக்கு வழங்கியது. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "V Karthikeyan Pandian: 'Super CM' or efficient bureaucrat". The Times of India. 2018-02-11. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/v-karthikeyan-pandian-super-cm-or-efficient-bureaucrat/articleshow/62872968.cms?from=mdr.
- ↑ "FIH honour for Odisha IAS officer V K Pandian". The Times of India. 2021-05-23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/fih-honour-for-odisha-ias-officer-v-k-pandian/articleshow/82874059.cms?from=mdr.
- ↑ "Odisha CM Naveen Patnaik's aide gets cabinet rank". The Economic Times. 2023-10-25. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/odisha-cm-naveen-patnaiks-aide-gets-cabinet-rank/articleshow/104680948.cms.
- ↑ "Day after quitting IAS, Odisha Chief Minister's aide V.K. Pandian takes up key roles". https://www.thehindu.com/news/national/other-states/rise-of-tamil-nadu-born-ias-officer-in-odishas-public-life/article67452770.ece.
- ↑ "CM Patnaik's Private Secretary VK Pandian gets additional responsibility of 5Ts". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
- ↑ "V.K. Pandian, Odisha's influential bureaucrat". https://www.thehindu.com/opinion/op-ed/vk-pandian-odishas-influential-bureaucrat/article67019398.ece.
- ↑ "ஒடிசாவில் தமிழர் வி.கே.பாண்டியன் செல்வாக்கால் எதிர்க்கட்சிகள் கலக்கம்". 2024-05-25.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Barik, Satyasundar (24 October 2023). "Day after quitting IAS, Odisha Chief Minister’s aide V.K. Pandian takes up key roles" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/rise-of-tamil-nadu-born-ias-officer-in-odishas-public-life/article67452770.ece.
- ↑ "Naveen Patnaik’s ex-private secretary VK Pandian joins BJD; likely to get number-2 position in party" (in en). The Indian Express. 27 November 2023. https://indianexpress.com/article/india/vk-pandian-naveen-patnaik-joins-bjo-odisha-elections-9044003/.
- ↑ Sharma, Nootan (2023-09-19). "Odisha is becoming an IAS state. Patnaik-Pandian combo is changing grammar of governance". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
- ↑ "FIH honour for Odisha IAS officer V K Pandian". The Times of India. 23 May 2021. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/fih-honour-for-odisha-ias-officer-v-k-pandian/articleshow/82874059.cms?frmapp=yes&from=mdr.