வி. பா. சிங் பட்னோர்

விஜயேந்தர் பால் சிங் பட்னோர் (பிறப்பு 12 மே 1948) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாபின் 28வது ஆளுநராக இருந்தார் . இவர் மாநிலங்களவை உறுப்பினராக 17 சூன் 2010 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தின் 13வது மக்களவை மற்றும் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1999 முதல் 2009 வரை பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், 4 முறை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் (1977-80, 1985-90, 1993-98, 1998-99) இருந்துள்ளார்.[2]

வி. பா. சிங் பட்னோர்
28வது பஞ்சாப் ஆளுநர் and 14வது சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்
பதவியில்
22 ஆகத்து 2016 [1] – 30 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்
அமரிந்தர் சிங்
முன்னவர் காப்தன் சிங் சோலங்கி
பின்வந்தவர் பன்வாரிலால் புரோகித்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னவர் ராம்பால் உபாத்யா
பின்வந்தவர் சி. பி. ஜோசி
தொகுதி பில்வாரா
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தொகுதி ராஜஸ்தான்
தனிநபர் தகவல்
பிறப்பு பாட்னர், ராஜஸ்தான் இராஜபுதனம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
அல்கா சிங் (தி. 1978)
பிள்ளைகள் 2
இருப்பிடம் பில்வாரா, ராஜஸ்தான் (தனி)
ஆளுநர் இல்லம், பஞ்சாப், சண்டிகர் (அலுவல்)
As of 14 செப்டம்பர், 2006
Source: [1]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சிங் ராஜஸ்தானின் பட்னூரில் கோபால் சிங் மற்றும் ராஜ் கன்வர் நதாவாட் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் வணிக மேலாண்மையில் இளங்கலை முடித்தார்.[3] சிங் அல்கா சிங்கை 25 நவம்பர் 1978-ல் மணந்தார். இவர்களுக்கு அவிஜித் என்ற மகனும், திவிஜா என்ற மகளும் உள்ளனர்.[3]

தொழில்தொகு

பட்னோர் 1977-80, 1985-90, 1993-98 மற்றும் 1998-99 வரை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1988 முதல் 1999 வரை ராஜஸ்தான் அரசில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக சங்கதன் ராஜஸ்தானின் துணைத் தலைவராக இருந்தார்.[4]

இவர் 13வது (1999-2004) மற்றும் 14வது மக்களவையின் (2004-2009) உறுப்பினராகவும் இருந்தார். இங்கு இவர் கடந்த 14 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும், மின்சாரச் சட்டம் 2003ன் வரைவுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். பட்னோர் 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆகத்து 2014ல் மாநிலங்களவையின் துணைத் தலைவர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4]

2003-2004ல் சரிஸ்காவில் அனைத்துப் புலிகளும் வேட்டையாடப்பட்டபோது - சரிஸ்கா தோல்விக்குப் பிறகு, 2005 முதல் 2009 வரை, ராஜஸ்தான் அரசாங்கத்தின் சரிஸ்காவில் (ராஜஸ்தான்) புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் சிறப்புப் பணிக்குழுவின் தலைவராக இருந்தார். ரத்னாதம்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து புலிகளை இடமாற்றம் செய்வதன் மூலம் புலிகளின் மறுவாழ்வு பெற்றது.[4][5]

இவர் 17 ஆகத்து 2016 அன்று பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6] இவர் 30 ஆகத்து 2021 அன்று பதவி விலகினார்.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Najma Heptulla, Mukhi appointed Governors". Business Standard India (Business Standard). 17 August 2016. http://www.business-standard.com/article/news-ians/najma-heptulla-mukhi-appointed-governors-116081700886_1.html. 
  2. "Who is VP Singh Badnore? 5 things to know about the new Punjab governor". Hindustan Times (ஆங்கிலம்). 17 August 2016. 22 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Current Lok Sabha Members Biographical Sketch". 7 November 2007. 7 November 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "The Present Governor". Punjabrajbhavan.gov.in. 10 June 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Save the tiger, save the forests" (in en). The Indian Express. 29 July 2021. https://indianexpress.com/article/opinion/web-edits/save-the-tiger-save-the-forests-7428812/. 
  6. . 18 August 2016. 
  7. . Aug 30, 2021. 

வெளி இணைப்புகள்தொகு

இந்திய மக்களவை
முன்னர்
{{{before}}}
நாடாளுமன்ற உறுப்பினர்
பில்வாரா நாடாளுமன்றத் தொகுதி

1999 – 2009
பின்னர்
{{{after}}}
அரசியல் பதவிகள்
முன்னர்
{{{before}}}
பஞ்சாப் ஆளுநர்
22 ஆகத்து 2016 – 30 ஆகத்து 2021
பின்னர்
{{{after}}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பா._சிங்_பட்னோர்&oldid=3591876" இருந்து மீள்விக்கப்பட்டது