வீச்சு (இயற்பியல்)
வீச்சு(இயற்பியல்) (amplitude) என்பது ஒரு காலமுறைச் சார்பு கொண்ட மாறி ஆகும். இது அலைநீளம் மற்றும் கால அளவில் ஒரு சுற்றில் ஏற்படும் மாற்றத்தின் அளவு ஆகும். அது அலையின் பெருமம் மற்றும் சிறுமத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. பழைய புத்தகங்களில் கட்டங்களைக் கொண்டு வீச்சு விளக்கப்பட்டுள்ளது.[1]
வரையறைகள்
தொகுமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு
தொகுஅலையின் நேர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (முகடு) எதிர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (அகடு) இடையேயுள்ள தூரம் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு என அழைக்கப்படுகிறது. அலைவுகாட்டிகளைக் கொண்டு மின்னியல் அலைவுகளின் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சை அளக்கலாம். அலைவுகாட்டிகள் அலைவுகளை நேரடியாக அளக்கப் பயன்படுகிறது.
அதிகபட்ச வீச்சு
தொகுதொலைத்தொடர்பு, ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் அலைவுகளிலுள்ள மாற்றங்களை அதிகபட்ச வீச்சு என அளக்கப்படுகிறது. ஒரு சைன் அலையை மாதிரியாகக் கொண்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படுகின்றன.
பகுதி வீச்சு
தொகுமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் பாதி அளவு பகுதி வீச்சு ஆகும்.[2][3]
வானியல்சார் பொருட்களில் சுழற்சிப் பாதையில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு அளக்கப்படுகிறது. நட்சத்திரங்களின் அருகிலுள்ள புறக்கோள்களைக் டாப்ளர் நிறமாலையியலைக் கொண்டு கண்டறிய பகுதி வீச்சு என்ற கோட்பாடு பயன்படுகிறது.[4]
சராசரி வர்க்க மூல வீச்சு
தொகுசராசரி வர்க்க மூல வீச்சு என்பது மின்பொறியியலில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. ஓய்வு நிலையிலிருந்து செங்குத்தாகச் செல்லும் அலையின் வரைபடத்தைக் கொண்டு வீச்சின் சராசரி வர்க்க மூலம் காணப்படுகிறது.[5] அதாவது மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி வர்க்க மூல அளவாகும்.
இரைச்சல் போன்ற அலையமைப்புக்களின் சராசரி வர்க்க மூல அளவைக் காண்பதன் மூலம் இவற்றின் இயற்பியல் பண்புகள் கண்டறியப்படுகின்றன. மின்காந்த அலைகள் மற்றும் ஒலியலைகள் ஆகியவற்றின் திறனைக் கண்டறிய சராசரி வர்க்க மூல அளவு பயன்படுகிறது.[6]
மேலும் சில குறிப்புகள்
தொகுசைன் அலைகள், சதுர அலைகள் மற்றும் முக்கோண அலைகள் போன்ற குறிப்பிட்ட கால அளவில் மாறும் அலைகளின் பண்புகளைக் கண்டறிய அதிக பட்ச வீச்சு பயன்படுகிறது. ஆனால் மாறுபடும் அலைகளின் பண்புகளை அறிய வர்க்க மூல சராசரி வீச்சு பயன்படுகிறது. முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் அளவின் பாதியைக் கொண்டு அதிக பட்ச வீச்சு என்பது மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது. நேர்திசை மின்னோட்டத்தின் வீச்சு என்பது எப்போதும் மாறததாக இருக்கும்.
துடிப்பு வீச்சு
தொகுதொலைத் தொடர்புத் துறையில் துடிப்பு வீச்சின் அளவு மின்னழுத்தின் அளவையும், உள்ளீடு அலையின் துடிப்பையும் கொண்டு அளக்கப்படுகிறது. இவ் வகை வீச்சுகள் சராசரியாகவோ, உடனடியாகவோ, அதிகபட்ச அளவாகவோ மற்றும் சராசரி வர்க்க மூலமாகவோ அளவிடப்படுகிறது.[7]
வீச்சிற்கான சமன்பாடு
தொகுஎளிய அலைகளின் சமன்பாடு
என்பது அலையின் வீச்சாகும்,
என்பது அலையின் அலைவுறும் மாறி,
என்பது அலைகளின் கோண அதிர்வெண்,
என்பது அலைகளின் கால அளவாகும்,
and என்பது அலைகளின் தன்னிச்சையான மாறிலிகள்.
அலகுகள்
தொகுஅலைகளின் வகையைப் பொறுத்து வீச்சின் அலகு மாறுபடுகிறது.
அலைகளின் அமைப்பில் அதிர்வுறும் ஒரு கம்பியானது நீரில் ஏற்படுத்தும் வீச்சானது இடப்பெயர்ச்சியின் அலகைக் கொண்டிருக்கும்.
ஒலியலை வீச்சின் இருமடி டெசிபெல் என்ற அலகால் அளக்கப்படுகிறது. வீச்சின் இருமடி ஒலியின் உரப்பைக் குறிக்கிறது.
மின்காந்த அலைகளில் ஒளியணுக்களின் வீச்சானது அதனுடன் தொடர்புடைய மின்புலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. வீச்சுப் பண்பேற்றத்தில் அலைகளின் செறிவு, உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது. அதிர்வெண் பண்பேற்றத்தில் அலைகளின் அதிர்வெண், உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது.
மாறுநிலை வீச்சு முகப்புகள்
தொகுஒரு அலையின் வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அது திசையிலியாக இருக்கும். வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறும் அமைப்பாக இருந்தால், அது திசையனாக இருக்கும்.
மேற் சுரங்கள், அதிர்வெண் பண்பேற்றம், வீச்சுப் பண்பேற்றம் ஆகிய அமைப்புகளில் வீச்சானது மாறும் அல்லது மாறாத அளவாக இருக்கும்.[8]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Knopp, Konrad; Bagemihl, Frederick (1996). Theory of Functions Parts I and II. Dover Publications. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-69219-7.
- ↑ Tatum, J. B. Physics – Celestial Mechanics. Paragraph 18.2.12. 2007. Retrieved 2008-08-22.
- ↑ Regents of the University of California. Universe of Light: What is the Amplitude of a Wave? 1996. Retrieved 2008-08-22.
- ↑ Goldvais, Uriel A. Exoplanets பரணிடப்பட்டது 2021-03-03 at the வந்தவழி இயந்திரம், pp. 2–3. Retrieved 2008-08-22.
- ↑ Department of Communicative Disorders University of Wisconsin–Madison. RMS Amplitude பரணிடப்பட்டது 2013-09-11 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2008-08-22.
- ↑ Ward, Electrical Engineering Science, pp. 141–142, McGraw-Hill, 1971.
- ↑ This article incorporates public domain material from the General Services Administration document "Federal Standard 1037C".
- ↑ "Additive Sound Synthesizer Project with CODE!". www.pitt.edu.[தொடர்பிழந்த இணைப்பு]