வீணா மாலிக்

பாகிஸ்தானிய நடிகை

வீணா மாலிக் (Veena Malik) என்று அழைக்கப்படும் ஜாகிதா மாலிக் (பிறப்பு: பிப்ரவரி 26, 1984) ஒரு பாக்கிதான் நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நேரடி நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சி ஆளுமையும் பாக்கித்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றிய நடிகை ஆவார்.[3]

வீணா மாலிக்
தாய்மொழியில் பெயர்وينا ملک
பிறப்புஜாகிதா மாலிக்
26 பிப்ரவரி 1976
இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கிதான்
தேசியம்பாக்கிதானியர்
பணி
 • நடிகை
 • வடிவழகி
 • தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–2016
வாழ்க்கைத்
துணை
ஆசாத் பசீர் கான் கட்டக்[1]
(தி. 2013; ம.மு. 2018)
பிள்ளைகள்2[2]

வீணா 2000 ஆம் ஆண்டில் சஜ்ஜாத் குலின் தேரே பியார் மெயின் என்ற திரைப்படத்தின் மூலம், திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில், இவர் அக்பர் கானின் யே தில் ஆப் கா ஹுவா மற்றும் சாசி புன்னோ ஆகிய படங்களில் நடித்தார், பின்னர் கோய் துஜ் சா கஹான் (2005), மொஹாபத்தான் சச்சியன் (2007), கியுன் தும் சே இட்னா பியார் ஹை (2005) போன்ற பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடித்தார்.

2008ல், கபி பியார் நா கர்ணன் மற்றும் இஷ்க் பீ பர்வா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டில், பாலிவுட்டில் தால் மெய்ன் குச் காலா ஹை என்ற நகைச்சுவைப் படத்தில் அவர் நடித்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டு, நகைச்சுவை-நாடகமான ஜிண்டகி 50-50, சூப்பர்மாடல் மற்றும் கன்னட திரைப்படமான டர்ட்டி பிக்சர்", சில்க் சக்காத் மாகா ஆகியவற்றில் தோன்றினார். அவர் 2014 திகில் திரைப்படமான மும்பை 125 கி.மீ 3 டி யிலும் நடித்துள்ளார். மேலும், அவர் 2010 இல் பிக் பாஸில் ஒரு போட்டியாளராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

வீணா, இளமையில் ஜகிதா மாலிக் என்கிற பெயரில் அழைக்கப்பட்டார்.[4] இவர், ஒரு பஞ்சாபி குடும்பத்தில் 1984 பிப்ரவரி 26 அன்று[5] பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபின் இராவல்பிண்டியில் மாலிக் முகமது அஸ்லம் மற்றும் அவரது மனைவி ஜீனத் மாலிக் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[6]

தொழில்

தொகு

தொலைக்காட்சி

தொகு

2002 ஆம் ஆண்டில், வீணா பிரைம் டிவி தொடரான பிரைம் குப்ஷப் [7] ஐ தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் வழியாக, அவரின் நகைச்சுவைத் திறனுக்கான புதிய வாய்ப்புகளைப் பெற்றார். மேலும் அவர் அவ்வப்போது, ஒரு மணிநேர நிகழ்ச்சியில் நடிகர்களைப் போல பேசி, நடித்து அவர்களை பிரதிபலிக்கிறார்.

ஜீயோ தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹம் சப் உமீத் சே ஹைனை வீணா தொகுத்து வழங்கினார். அதில் அவரது நகைச்சுவைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.[8][9] 2007 ஆம் ஆண்டில், அவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் பங்குகொண்டு, அந்த நிகழ்ச்சியின் 'மிகவும் பகட்டான பிரபலமான பெண்' என்கிற விருதினைப் பெற்றார்.

அக்டோபர் 2010 இல், வீணா இந்திய தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் சீசன் 4 இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.[10]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வீணா தொழிலதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டாக்கை 25 டிசம்பர் 2013 அன்று துபாயில் திருமணம் செய்து கொண்டார்.[11] வீணா மாலிக் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மூன்று முறை காபாவுக்கு விஜயம் செய்ததாகக் கூறியுள்ளார்.[12]

அறப்பணி

தொகு

வீணா இரண்டு ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அனாதைக் குழந்தைகளுடன் பணிபுரியும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமத்தில் ஒரு குழந்தைக்கு அவர் நிதியுதவி செய்கிறார்.

ஊடகங்களில்

தொகு

வீணா தனது பிறந்தநாளில் ஒரு நிமிடத்தில் அதிகபட்ச முத்தங்களைப் பெற்றதற்காக கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்தார்.[13][14] சல்மான் கானின் சாதனையை வீழ்த்தி நேரடி நிகழ்ச்சியான கின்னஸ் உலக சாதனை - ஆப் இந்தியா டோடெகாவில் சாதனை படைத்தார்.[15]

2012 இல் வெளியிடப்பட்ட, எஃப்ஹெச்எம் இந்தியாவின் "100 கவர்ச்சியான பெண்களின் பட்டியலில்" இவர் 26 வது இடத்தைப் பிடித்திருந்தார். இப் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி, மேகன் பாக்ஸ், பாரிஸ் ஹில்டன், கிம் கர்தாஷியன், ஷில்பா ஷெட்டி மற்றும் சோனம் கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .[16]

குறிப்புகள்

தொகு
 1. "Veena Malik Confirms Divorce With Asad Bashir Khan in a Heartbreaking Interview! - Brandsynario". 18 May 2018. Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
 2. Ali Zain (23 September 2015). "Veena Malik gives birth to a baby girl". Daily Pakistan Global இம் மூலத்தில் இருந்து 29 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151029033515/http://en.dailypakistan.com.pk/lifestyle/veena-malik-gives-birth-to-a-baby-girl/. /
 3. "Veena Malik Khan (@iVeenaKhan) - Twitter". twitter.com. Archived from the original on 19 June 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
 4. "I have a split personality: Veena Malik". m.indiatoday.in. Archived from the original on 15 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
 5. وینا ملک آج اپنی29ویں سالگرہ بھارت میں منائیں گی பரணிடப்பட்டது 21 சூலை 2019 at the வந்தவழி இயந்திரம், Daily Dunya
 6. "I am not settling scores with Asif, says Veena Malik". Ndtv.com. Archived from the original on 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
 7. "ON AIR: prime gupshup". Dawn. Archived from the original on 28 September 2008. பார்க்கப்பட்ட நாள் 11 August 2008.
 8. "INSTEP: Bright lights, small village". Jang Group. Archived from the original on 15 April 2009. பார்க்கப்பட்ட நாள் 9 April 2010.
 9. "Lux Style Awards 2007". Archived from the original on 21 September 2008. பார்க்கப்பட்ட நாள் 17 June 2008.
 10. Chawla, Sonal (11 September 2010). "Veena Malik in Bigg Boss 4". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/Mohd-Asifs-ex-in-Bigg-Boss-4/articleshow/6529159.cms. பார்த்த நாள்: 2 October 2010. 
 11. Desk, Web (25 December 2013). "Veena Malik gets hitched". The Express Tribune இம் மூலத்தில் இருந்து 29 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150629012305/http://tribune.com.pk/story/650295/break-up-queen-veena-malik-to-get-engaged-in-dubai-today/. பார்த்த நாள்: 8 March 2014. 
 12. "I visited the Kaaba thrice and cried for forgiveness: Veena Malik". The Express Tribune. 19 June 2019 இம் மூலத்தில் இருந்து 14 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190814234353/https://tribune.com.pk/story/1995612/4-visited-kaaba-thrice-cried-forgiveness-veena-malik/. பார்த்த நாள்: 19 June 2019. 
 13. "Veena Malik breaks Salman Khan's record". Emirates 24/7. 28 February 2013. http://www.emirates247.com/news-in-images/veena-malik-breaks-salman-khan-s-record-2013-02-28-1.496865. பார்த்த நாள்: 8 March 2014. 
 14. "Veena Malik admits kissing spree a publicity stunt". 28 February 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Veena-Malik-admits-kissing-spree-a-publicity-stunt/articleshow/18711188.cms. பார்த்த நாள்: 8 March 2014. 
 15. "Veena Malik Scores a Century". Mtv.in.com. 1 March 2013 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111205534/http://mtv.in.com/blogs/movies/gossip/veena-malik-scores-a-century-50191049.html?india. பார்த்த நாள்: 8 March 2014. 
 16. Roopa Modha (9 July 2012). "Veena Malik Beats Angelina Jolie and Kim Kardashian?". UrbanAsian. Archived from the original on 12 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_மாலிக்&oldid=3946653" இலிருந்து மீள்விக்கப்பட்டது