வீரகனூர் கால்நடைச் சந்தை
வீரகனூர் கால்நடை சந்தை (ஆங்கில மொழி: Veeraganur Livetock Market) என்பது சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள கால்நடை வாரச் சந்தையாகும். இது சேலத்திலேயே இரண்டாவது பெரிய சந்தையாகும்.[1][2] வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கி அடுத்த நாள் சனிக்கிழமை பிற்பகல் வரை நடைபெறும். இச்சந்தையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஆடுகள், மாடுகள், காளைகள், கன்றுக்குட்டிகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்கு வருகின்றன.
விற்பனை
தொகு2021 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.[3] 2022 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டரை கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.[4] 2023 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி மூன்று கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "வீரகனூரில், சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தை மீண்டும் துவக்கக் கோரிக்கை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/oct/04/demand-for-reopening-of-the-second-largest-livestock-market-in-salem-district-at-veeraganur-3478298.html. பார்த்த நாள்: 12 November 2023.
- ↑ "கால்நடை வரத்து இல்லாததால் வீரகனூர் வாரச்சந்தை 'வெறிச்': ஆடுகளின் விலை கிடுகிடு உயர்வு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1783628. பார்த்த நாள்: 12 November 2023.
- ↑ "Diwali sale : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை : இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம்". நியூஸ்18. https://tamil.news18.com/news/tamil-nadu/salem-district-diwali-sale-at-salem-veeraganur-goat-market-sur-600335.html. பார்த்த நாள்: 12 November 2023.
- ↑ "விறுவிறுப்பாக நடக்கும் ஆட்டு விற்பனை, குஷியில் விற்பனையாளர்கள்". சத்தியம் டிவி. https://sathiyam.tv/goat-sale-going-on-briskly-vendors-in-khushi/. பார்த்த நாள்: 12 November 2023.
- ↑ "வீரகனூரில் கால்நடை சந்தையில்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை". மலைமலர். https://www.maalaimalar.com/news/district/salem-district-news-at-veerakanur-livestock-marketgoats-sold-for-rs-3-crore-on-the-occasion-of-diwali-684423. பார்த்த நாள்: 12 November 2023.