வீ. ரேணுகாதேவி
வீ. ரேணுகாதேவி (பிறப்பு: ஆகத்து 14, 1954) என்பவர் ஒரு தமிழகக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறைத் தலைவராகவும், மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலத் தலைவராகவும் பணியாற்றி பணி நிறைவு செய்தவர். தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், மொழியியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டமும், மொழியியலில் முனைவர் பட்டமும், தெலுங்கு மொழியில் பட்டயமும் பெற்றிருக்கிறார். தேசிய அளவிலான 15 பணிமனைகள் மற்றும் கருத்தரங்குகளை இவர் நடத்தியுள்ளார். அகில இந்திய வானொலியில் 15 முறை இவர் உரையாற்றியுள்ளார். கல்வி தொடர்பான பன்னாட்டு இதழ்களில் இவரது 78 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மொழியியல் தொடர்பான சில நூல்களையும் எழுதியுள்ளார்.[1]
வீ. ரேணுகாதேவி | |
---|---|
பிறப்பு | வீ. ரேணுகாதேவி ஆகஸ்ட் 14, 1954 அருப்புக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | மதுரை. |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலைப் பட்டம் (தமிழ்), முதுகலைப் பட்டம் (மொழியியல்), முனைவர் பட்டம் (மொழியியல்), தெலுங்கு மொழிப் பட்டயம். |
பணி | துறைத்தலைவர், மொழியியல் துறை |
பணியகம் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பேராசிரியர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | வீ. வீரப்பன் (தந்தை), வீரம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | க. பசும்பொன் |
பிள்ளைகள் | சரண்யாதேவி (மகள்) |
உறவினர்கள் | சகோதரி -1 |
எழுதியுள்ள நூல்கள்
தொகுபல்கலைக்கழகக் கல்விக்குழு உறுப்பினர்
தொகுஇவர் இந்தியாவிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.
வ.எண். | துறை | பல்கலைக்கழகம் | காலம் |
---|---|---|---|
1 | மொழியியல் துறை | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | 01-07-2005 முதல் 30-06-2008 |
2 | இந்திய மொழிகளின் புலம் | அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் | 23-08-2009 முதல் 22-08-2012 |
3 | திராவிட மற்றும் கணினி மொழியியல் துறை | திராவிட பல்கலைக்கழகம், குப்பம் | 26-01-2012 முதல் 25-01-2014 |
4 | மொழியியல் துறை | பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | 01-01-2012 முதல் 30-12-2014 |
5 | மொழியியல் துறை | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | 03-08-2012 முதல் 02-08-2015 |
தேர்வுக்குழு உறுப்பினர்
தொகுஇவர் கீழ்க்காணும் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறார்.
பல்கலைக்கழகம்
தொகு- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (மொழியியல் துறை மற்றும் மொழி பெயர்ப்புத் துறை)
- பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
- பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்.
- நடுவண் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
- கேரளாப் பல்கலைக்கழகம், கேரளா.
- திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரப் பிரதேசம்.
கல்லூரிகள்
தொகுஆட்சிக்குழு உறுப்பினர்
தொகுஇவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சில கல்லூரிகளின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
வ.எண். | கல்லூரி | காலம் |
---|---|---|
1 | ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, போடிநாயக்கனூர், தேனி மாவட்டம். | 01-04-2003 முதல் 31-03-2005 |
2 | மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம். | 04-04-2007 முதல் 31-03-2009 |
3 | ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி), சாத்தூர், விருதுநகர் மாவட்டம். | 11-07-2012 முதல் 09-07-2014 |
4 | ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம். | 16-07-2012 முதல் 15-07-2014 |
பாராட்டு மற்றும் விருதுகள்
தொகுஇவரது தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வழங்கப்பட்டு வரும் பாவேந்தர் பாரதிதாசன் விருதினையும் இவர் பெற்றிருக்கிறார்.(2015)[3]