வெங்கடப்பா கலைக்கூடம்

வெங்கடப்பா கலைக்கூடம் (Venkatappa Art Gallery) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில், கப்பன் பூங்காவிற்கு அருகிலும் பெங்களூர் அருங்காட்சியகம், விஸ்வேஸ்வரயா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அருகிலும் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இது கர்நாடகா முழுவதிலும் உள்ள கலைஞர்களையும் கலை ஆர்வலர்களையும் ஈர்க்கிறது.   [ மேற்கோள் தேவை ]

கே.வெங்கடப்பாவின், ராமரின் திருமண ஓவியம்

வரலாறு தொகு

அபானிந்திரநாத் தாகூரின் மாணவரும்கர்நாடகாவின் மிகவும் பிரபலமான கலைஞருமான கே. வெங்கடப்பா (1886-1965) அவர்களின் ஓவியங்கள், இசைக்கருவிகள் மற்றும் ப்ளாஸ் டர் ஆப் பாரிஸ் சிற்பங்கள் உள்ளிட்ட காட்சிப்பொருள்களைக் காட்சிப்படுவதற்காக மைசூர் அரசு 1966 ஆம் ஆண்டில் ஒரு கலைக்கூடம்/ அருங்காட்சியகம் தேவை என்று முடிவு செய்தது. [1]

வெங்கடப்பா கலைக்கூடத்திற்கான அடிக்கல் 1967 நவம்பர் 24 ஆம் நாளன்று அப்போதைய முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பாவால் அவர்களால் நாட்டப்பட்டது. இருந்தாலும் இதன் கட்டுமானப் பணிகளை முடிக்க அதிக நாள்கள் ஆயின. கட்டுமானப் பணியின் தாமதத்தால் விரக்தியடைந்த கலைஞர்கள் 1971 ஆம் ஆண்டில் கலைக்கூடத்திற்கான கட்டுமானப் பணி முடிக்க வேண்டும் என்று கோரி பைபிள் சொசைட்டி முன் நடைபாதையில் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்களில் ஜி.எஸ்.ஷெனாய், பாஸ்கர் ராவ், ரமேஷ் ராவ், ஆச்சார்யா மற்றும் புனம் சட்டாயா ஆகியோர் அடங்குவர். இந்த கட்டிடம் இறுதியாக 1975 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. [2]

கே. வெங்கடப்பாவின் படைப்புகளை வைத்திருக்கும் ஒரு அருங்காட்சியகமாகவும், கர்நாடகா முழுவதிலுமுள்ள கலைஞர்கள் தங்கள் கலை பயிற்சிக்கு பயன்படுத்தக்கூடிய ஓர் இடமாகவும் இது செயல்பட்டது. வெங்கடப்பா கலைக்கூடத்தைப் பலர் பொதுவாக பெங்களூர் அருங்காட்சியகம் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர். ஏனெனில் இரண்டு அருங்காட்சியகங்களும் அருகருகே அமைந்துள்ளன. இருந்தாலும் அமைப்பில் அவை வேறுபட்ட பாணியில் அமைந்துள்ளன. வெங்கடப்பா கலைக்கூடத்தில் தற்காலத்திய கலைப்பொருள்கள் காட்சியில் உள்ளன. அதில் அருங்காட்சியகம் மற்றும் காட்சிக்கூடம் ஆகியவை உள்ளன. இவ்வாறாக அமைவது அருங்காட்சியக வரலாற்றில் மிகவும் அரிதானதாகும்.

நவீனத்துவத் தன்மை கொண்ட கட்டிடம் கர்நாடக பொதுப்பணித் துறையால் ஒரு செயற்கைத் தீவின் வரிசையில் அழகிய அகழியுடன் அதைச் சுற்றி தாமரை குளம் உள்ள பாணியில் கட்டப்பட்டது. அண்மையில் ஒருவகையான ஓவியப்போட்டிக்கான எதிர்ப்பினைத் தெரிவிக்க இவ்விடம் பயன்படுத்தப்பட்டது. கர்நாடகாவின் பண்பாட்டு பொதுநலன்கள் தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே வெங்கடப்பா நினைவாக அமைக்கப்பட்ட வெங்கடப்பா கலைக்கூட அமைப்பால் அது நடத்தப்பட்டது. [3]

அருங்காட்சியகம் /கலைக்கூடத்திற்கான திட்டம் ஐந்து தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஆனால் மூன்று தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மேலும் முழு கட்டிடமும் குளிரூட்டப்பட்டுள்ளது.

இந்த காட்சிக்கூடத்தில் கே.கே. ஹெப்பர் மற்றும் சிற்பி ராஜாராம் ஆகியோரின் சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியரான கே.கே.ஹெப்பர் 1993 ஆம் ஆண்டில் தன் சேகரிப்புகளை வெங்கடப்பா கலைக்கூடத்திற்கு வழங்கினார். கர்நாடக அரசும் அவருடைய சில படைப்புகளை வாங்கியது.

கே.கே. ஹெப்பர் காட்சிக்கூடப் பிரிவு 1993-94 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் முன்னாள் இந்திய தூதராக இருந்த சிரஞ்சீவ் சிங் அவர்களின் உதவியோடு தொடங்கப்பட்டது. கலைஞர் எஸ்.ஜி.வாசுதேவ் கலைப்பொருள்களின் நன்கொடையைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.  இவர்களுடைய பணியில் கலை வரலாற்றாசிரியர் மரிஷமாச்சர் அவர்களுக்கு உதவி செய்தார். காட்சிக்கூட இடத்தை 2004-5 ஆம் ஆண்டில் ரூ.16 லட்சம் செலவில் கலைஞரும் கே.கே. ஹெப்பரின் மகளுமான ரேகா ராவ் புதுப்பித்தார். அவர்கள் தரையையும் மாற்றி புதிய ஒளி அமைப்பை நிறுவினர்.

குறிப்புகள் தொகு

  1. Government of Karnataka, Department of Archaeology, Museums and Heritage. "Museums in Karnataka". Department of Archaeology, Museums and Heritage. Department of Archaeology, Museums and Heritage. Archived from the original on 18 October 2015. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Reporter, Staff (1 April 2016). "The footpath was his gallery". The Hindu. http://www.thehindu.com/todayspaper/tpnational/tpkarnataka/the-footpathwashisgallery/article4568312.ece. பார்த்த நாள்: 16 April 2016. 
  3. Chronicle, Deccan. "From paint brushes to black umbrellas.". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/lifestyle/booksand-art/200316/venkatappaartgalleryfrombrushestoblackumbrellas.html. பார்த்த நாள்: 10 April 2016. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடப்பா_கலைக்கூடம்&oldid=3592060" இலிருந்து மீள்விக்கப்பட்டது