வெங்கடேஷ் ஐயர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

வெங்கடேஷ் ராஜசேகரன் ஐயர் ( பிறப்பு : 25 திசம்பர் 1994 ) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்ளூர் ஆட்டங்களில் மத்திய பிரதேச அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீகில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் இந்திய அணிக்காக நவம்பர் 2021-இல் அறிமுகமானார்.

வெங்கடேஷ் ஐயர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வெங்கடேஷ் ராஜசேகரன் ஐயர்
பிறப்பு25 திசம்பர் 1994 (1994-12-25) (அகவை 29)
இந்தூர், மத்திய பிரதேசம் , இந்தியா
பட்டப்பெயர்வெங்கி
உயரம்6 அ்டி 4 in[1][2]
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது காய் மித வேகம்
பங்குபன்முக ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 242)19 சனவரி 2022 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாப21 சனவரி 2022 எ. தென்னாபிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 93)17 நவம்பர் 2021 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப27 பிப்ரவரி 2022 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைமத்திய பிரதேசம்
2021–தற்போது வரைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஓ.நா.ப பஇ20 மு.த ப-அ
ஆட்டங்கள் 2 9 10 32
ஓட்டங்கள் 24 133 545 1252
மட்டையாட்ட சராசரி 12.00 33.25 36.33 48.15
100கள்/50கள் 0/0 0/0 0/6 4/4
அதியுயர் ஓட்டம் 22 35* 93 198
வீசிய பந்துகள் 30 55 786 669
வீழ்த்தல்கள் 0 5 7 19
பந்துவீச்சு சராசரி 15.00 48.57 32.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/23 2/22 3/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/– 4/– 17/–
மூலம்: Cricinfo, 04 March 2022

உள்ளூர் போட்டிகள் தொகு

மார்ச் 2015-இல், ஐயர் இருபது20 போட்டிகளில் மத்திய பிரதேச அணிக்காக இரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். மேலும் பட்டியல் - அ போட்டிகளில் அறிமுகமானார். இவர் அப்போது இளங்கலை வணிகவியல் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார் [3][4][5][6] இவர் முதல் தர போட்டிகளில் 2018-இல் அறிமுகமானார் .[7]

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2021-ஆம் ஆண்டு இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[8] 20 செப்டம்பர் 2021 அன்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் அறிமுகமானார் [9]. 23 செப்டம்பர் 2021-இல் இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் ஐபிஎல்- இல் தனது முதல் அரை சதத்தைப் செய்தார்.

2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 320 ஓட்டங்கள் குவித்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேற முக்கிய பங்காற்றினார். இறுதிப்போட்டியில் இவர் அரைசதம் அடித்த போதும் இவர் அணி தோல்வியைத் தழுவியது.[10]

சர்வதேச போட்டிகள் தொகு

இந்தியாவின் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை அணியில் நிகரப் பந்துவீச்சாளராக இருக்க அவர் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கினார் .[11][12]

17 நவம்பர் 2021 அன்று இவர், இந்திய அணிக்காக சர்வதேச இருபது20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.[13][14] அதே தொடரின் கடைசி ஆட்டத்தில் இவர் முஹல் முறையாக சர்வதேச அரங்கில் பந்து வீசினார் . பந்துவீசிய 3 நிறைவுகளில் இவர் 12 ஓட்டங்கள் கொடுத்து 1 விழித்தல் பெற்றார் .[15]

19 சனவரி 2022 அன்று, பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் அறிமுகமானார் .[16]

மேற்கோள்கள் தொகு

  1. "A studious rise: the making of Venkatesh Iyer" (in en). Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-news/119150/a-studious-rise-the-making-of-venkatesh-iyer. 
  2. Acharya, Shayan (10 November 2021). "Venkatesh Iyer 'not setting any targets' after India call-up" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/venkatesh-iyer-all-rounder-workload-management-ind-vs-nz-series-cricket-news/article37413579.ece. 
  3. "Full Scorecard of M. Pradesh vs Railways Central Zone 2014/15 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo.
  4. "Full Scorecard of Saurashtra vs M. Pradesh Group D 2015/16 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
  5. "News, Breaking News, Latest News, News Headlines, Live News, Today News CNN-News18". News18. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  6. "Who is Venkatesh Iyer, KKR's latest debutant?". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 22 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
  7. "Elite, Group B, Ranji Trophy at Indore, Dec 6-9 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  8. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. Archived from the original on 18 February 2021. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  9. Sportstar, Team. "Who's Venkatesh Iyer? Meet KKR's new all-rounder". Sportstar (in ஆங்கிலம்). Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
  10. "VIVO IPL 2021, Final CSK vs KKR – Match Report". www.iplt20.com. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  11. "Venkatesh Iyer, Avesh Khan To Stay Back In UAE To Join As India's Net Bowlers For T20 World Cup 2021 – Reports" (in அமெரிக்க ஆங்கிலம்). 12 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
  12. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  13. "Rohit Sharma to captain India in T20Is against New Zealand". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2021.
  14. "1st T20I (N), Jaipur, Nov 17 2021, New Zealand tour of India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
  15. "Rohit Sharma: Venkatesh Iyer's bowling important going forward, says Rohit Sharma | Cricket News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  16. "1st ODI, Paarl, Jan 19 2022, India tour of South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேஷ்_ஐயர்&oldid=3767026" இலிருந்து மீள்விக்கப்பட்டது