வென்னிமலை

கேரளாவிலுள்ள ஒரு கிராமம்
(வெண்ணிமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வென்னிமலை (Vennimala) என்பது தென்னிந்திய மாநிலமானகேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் புதுப்பள்ளி கிராம ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். [1] இது, கோட்டயத்தின் கிழக்கே 16 கி.மீ. தொலைவிலுள்ளது. [2] இது மேற்கு கேரள நகரங்களுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது.

வென்னிமலை
கிராமம்
சிறீ இராம இலட்சுமணக் கோயில், வென்னிமலை
சிறீ இராம இலட்சுமணக் கோயில், வென்னிமலை
அடைபெயர்(கள்): விஜயாத்ரி
ஆள்கூறுகள்: 9°34′07″N 76°36′10″E / 9.5686094°N 76.6027126°E / 9.5686094; 76.6027126
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
மொழிகள்:
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
686516
தொலைபேசி இணைப்பு எண்0481
தட்பவெப்ப நிலைவெப்பமண்டல பருவமழை (கோப்பென்)
சராசரி கோடை வெப்பநிலை28 °C (82 °F)
சராசரி குளிகால வெப்பநிலை16 °C (61 °F)

இந்து புராணங்களின்படி, இராமனும் இலட்சுமணனும் திரேதா யுகத்தில் இந்த இடத்திற்கு வந்தார்கள் எனவும், இங்கிருந்த முனிவர்களை அச்சுறுத்தி துன்புறுத்திய பல அசுரர்களை இலட்சுமணன் கொன்றதாகவும் ஒரு கதை இருக்கிறது. இலட்சுமணனின் வெற்றியால் கிராமத்திற்கு விஜயாத்ரி என்ற பெயர் வந்தது. (சமசுகிருதத்தில் வெற்றிகரமான இடம்) (மலையாளத்தில் வென்னிமலை) (வெற்றிமலை). [3] [4] [5]

இங்குள்ள மலையில் பாஸ்கரவர்மன் என்பவர் கட்டிய மலைக்கோயில் ஒன்றுள்ளது. தற்போதைய கட்டிடம் பிற்காலத்தில் கட்டப்படதாக இருக்கலாம். ஆனால் இக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இங்கு இலட்சுமணனின் உருவம் முக்கிய சிலையாக உள்ளது. இந்த இராம-இலட்சுமண சுவாமி கோவிலை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக கேரள மாநிலம் அறிவித்துள்ளது. [6] மேலும் வென்னிமலை தெக்கும்கூர் வம்சத்தின் ஆரம்பத் தலைநகராக இருந்தது . [7]

வரலாறு

தொகு

பொ.ச. 14 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சந்தேச காவ்யமான (செய்தி கவிதை) [8] உன்னுநீலி சந்தேசம், தெக்கும்கூர், வென்னிமலை, மணிகண்டபுரம் ஆகிய தலைநகரங்களை விவரிக்கிறது. இந்த கவிதை நூல் தெக்கும்கூர் மன்னனைப்பற்றியும், நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் பேசுகிறது. மனிதர்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியதாக்வும் தெரிகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vennimala - Routes & Locations". www.keralatourism.org.
  2. "Vennimala is a well kept secret". www.manoramaonline.com.
  3. "Vennimala Sree Rama Lakshamana Perumal Temple". www.vaikhari.org.
  4. Book Title: The Collected Aithihyamaala - The Garland of legends from Kerala Volume 1-3, Author: Kottarathil Sankunni Translated by Leela James, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5009-968-1; Publisher: Hachette Book Publishing India Pvt Ltd, 4/5 floor, Corporate Centre, Plot No.:94, Sector 44, Gurgaon, India 122003; (First published in Bhashaposhini Literary Magazine in 1855~1937)
  5. Narayanan, M. G. S. 2002. ‘The State in the Era of the Ceraman Perumals of Kerala’, in State and Society in Premodern South India, eds R. Champakalakshmi, Kesavan Veluthat, and T. R. Venugopalan, pp.111–19. Thrissur, CosmoBooks
  6. "Vennimala temple declared protected monument". The Hindu. 2014-02-19. https://www.thehindu.com/news/national/kerala/vennimala-temple-declared-protected-monument/article5705716.ece. 
  7. N.E Kesavan Namboothiri, Thekkumkoor Charithravum Puravrithavum (Kottayam: National Book Stall, 2014), 8-9
  8. "Archived copy". Archived from the original on 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வென்னிமலை&oldid=3792329" இலிருந்து மீள்விக்கப்பட்டது