வெண்நிலா வீடு

2014 தமிழ்த் திரைப்படம்

வெண்நிலா வீடு 2014 ஆம் ஆண்டு செந்தில்குமார் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில், தன்ராஜ் மாணிக்கம் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம்[1][2][3][4][5][6][7]. இப்படத்தின் கதை கய் டீ முஃபஸ்ஸன்ட் என்பவர் இயக்கிய தி நெக்லஸ் என்ற குறும்படத்தைத் தழுவி அமைந்தது.

வெண்நிலா வீடு
இயக்கம்வெற்றி மகாலிங்கம்
தயாரிப்புபி. வி. அருண்
கதைவெற்றி மகாலிங்கம் (கதை)
ஐந்துகோவிலன் (வசனம்)
திரைக்கதைவெற்றி மகாலிங்கம்
இசைதன்ராஜ் மாணிக்கம்
நடிப்புசெந்தில் குமார்
விஜயலட்சுமி
சிரிண்டா அர்ஹான்
ஒளிப்பதிவுடி. கண்ணன்
படத்தொகுப்புவி. ஜே. சாபு ஜோசப்
விநியோகம்ஆதர்ஷ் ஸ்டுடியோ
வெளியீடு10 அக்டோபர் 2014 (2014-10-10)
நாடுஇந்தியா, மலேசியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

கிராமத்தில் வாழும் கார்த்திக் (செந்தில்குமார்) அவரது மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) மகள் வெண்ணிலா. கார்த்திக்கிற்கு நகரத்தில் வேலை கிடைப்பதால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு குடிவருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகிலுள்ள வீட்டுக்குத் தன் கணவனுடன் குடிவருபவள் இளவரசி (சிரிண்டா அர்ஹான்). முதலில் இளவரசியின் முரட்டுத்தனமான மற்றும் வாய்த்துடுக்கான பேச்சால் அவளிடமிருந்து விலகி இருக்கும் தேன்மொழி, இளவரசி அவளுக்கு செய்யும் உதவியின் காரணமாக நட்பாகிறாள். தன் முதலாளி வீட்டுத் திருமணத்திற்கு தேன்மொழியை அழைத்துச்செல்ல விரும்புகிறான் கார்த்திக். தான் அணிந்துவர தங்கநகை இல்லாததால் திருமணத்திற்கு வர மறுக்கிறாள் தேன்மொழி. இளவரசியிடம் நகைகளை இரவல் வாங்கி அணிந்துவர எண்ணி அவளிடம் சென்று கேட்கிறாள். இளவரசியும் பெருந்தன்மையோடு கொடுக்கிறாள். திருமணத்திற்குச் சென்று திரும்பும் வழியில் தேன்மொழியின் கழுத்திலுள்ள நகை திருடுபோகிறது.

அதிர்ச்சியடையும் தேன்மொழி மற்றும் கார்த்திக் வீட்டிற்கு வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூறுகின்றனர். இளவரசி தன் தந்தையிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்கிறாள். அவளின் தந்தை கந்துவட்டி தொழில் செய்பவர். கார்த்திக்கை காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சொல்கிறார். காவல் ஆய்வாளர், கார்த்திக்கின் மீதே சந்தேகம் கொண்டு இளவரசியின் தந்தையிடம் கார்த்திக்கின் நடவடிக்கைகளைக் கவனிக்கும்படி கூறுகிறார். தன் மகள் இளவரசியிடம் கார்த்திக் மற்றும் தேன்மொழி இருவரும் நகையை மறைத்து வைத்துக்கொண்டு திருடு போனதாக நாடகம் ஆடுவதாக சொல்வதை முதலில் நம்ப மறுக்கும் இளவரசி பிறகு தந்தை சொல்வதில் உண்மை இருக்கலாம் என்று நம்புகிறார். கார்த்திக் மற்றும் தேன்மொழியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தன் தந்தையின் திட்டத்தை இளவரசி செயல்படுத்துகிறார். அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது? கார்த்திக்கின் குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டது? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

பாடலில் சிறப்புத்தோற்றம்

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம். பாடலாசிரியர்கள் வெற்றி மகாலிங்கம் மற்றும் கபிலன். படத்தின் பாடல்கள் சேரன் வெளியிட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ஆர். கே. செல்வமணி பெற்றுக்கொண்டனர்[8].

வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1 சிலு சிலு கபிலன் கார்த்திக்
2 நாயன ஓசை கேட்டேன் கபிலன் சக்திஸ்ரீ கோபாலன்
3 ஆள அதட்டுது வயசு கபிலன் வேல்முருகன், பத்மலதா
4 ஜானி ஜானி வெற்றி மகாலிங்கம் கானா பாலா, தன்ராஜ் மாணிக்கம்
5 ஜானி ஜானி வெற்றி மகாலிங்கம் சத்யப்ரகாஷ்
6 வெண்ணிலா வீட்டுக்குள்ள வெற்றி மகாலிங்கம் வீனா அருண்
7 இசை இசைக்கருவிகள் சக்திஸ்ரீ கோபாலன்

மேற்கோள்கள் தொகு

  1. "வெண்நிலா வீடு".
  2. "வெண்நிலா வீடு". Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
  3. "வெண்நிலா வீடு".
  4. "வெண்நிலா வீடு".
  5. "விமர்சனம்".
  6. "விமர்சனம்".
  7. "விமர்சனம்".
  8. "பாடல்கள்".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்நிலா_வீடு&oldid=3572290" இலிருந்து மீள்விக்கப்பட்டது