வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு (Tin(II) oxalate) C2O4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களைப் போல தோற்றமளிக்கும். தண்ணீரில் இது கரையாது. மேலும் படிக நீரேற்றுகளை உருவாக்கும்.

வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு, இசுட்டானசு ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
814-94-8 Y
ChemSpider 12597
EC number 212-414-0
InChI
  • InChI=1S/C2H2O4.Sn/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2/p-2
    Key: OQBLGYCUQGDOOR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13149
  • C(=O)(C(=O)O)O.[Sn]
UNII SAR72FE8EH N
பண்புகள்
C2O4Sn
வாய்ப்பாட்டு எடை 206.73 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 3.56
உருகுநிலை 280 °C (536 °F; 553 K)[1]
0.5 கி/லிட்டர்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H318
P264, P270, P280, P301+312, P302+352, P305+351+338, P310, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஆக்சாலிக் அமிலம் மற்றும் வெள்ளீயம்(II) ஆக்சைடு வினைபுரிவதால் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகிறது:

 

வெள்ளீய(II) குளோரைடு மற்றும் ஆக்சாலிக் அமிலம் வினைபுரிந்தாலும் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகும்.[2]

பண்புகள்

தொகு

வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.

நீர் மற்றும் அசிட்டோனில் கரையாது. நீர்த்த HCl, மெத்தனால் மற்றும் பெட்ரோலியம் ஈதரில் கரையும்.[3][4]

SnC2O4n H2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டு வகையில் இது படிக நீரேற்றை உருவாக்குகிறது. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n = 1,2 என அமையும்.

சூடுபடுத்தினால் சிதைவடையும்:

 

பயன்கள்

தொகு
  • கரிம எசுத்தர்களையும் நெகிழியாக்கிகளையும் தயாரிக்கும் வினையில் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[3]
  • துணிகளுக்கு சாயமிடுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இசுட்டானசு வாய்வழி பராமரிப்பு சேர்மங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
  • வெள்ளீயம்(II) ஆக்சலேட்டை மீள்நிரப்பு செய்யக்கூடிய வகை இலித்தியம் மின்கலங்களுக்கு நேர்மின்முனைப் பொருளாகப் பயன்படுத்துவது குறித்து சில ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tin Oxalate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  2. Nagirnyak, Svitlana V.; Lutz, Victoriya A.; Dontsova, Tatiana A.; Astrelin, Igor M. (26 July 2016). "Synthesis and Characterization of Tin(IV) Oxide Obtained by Chemical Vapor Deposition Method". Nanoscale Research Letters 11 (1): 343. doi:10.1186/s11671-016-1547-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-276X. பப்மெட்:27456501. பப்மெட் சென்ட்ரல்:4960077. Bibcode: 2016NRL....11..343N. https://nanoscalereslett.springeropen.com/articles/10.1186/s11671-016-1547-x. பார்த்த நாள்: 5 August 2021. 
  3. 3.0 3.1 "814-94-8 - Tin(II) oxalate - Stannous oxalate - 14113 - Alfa Aesar". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  4. "Registration Dossier - ECHA". European Chemical Agency. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  5. Park, Jae-Sang; Jo, Jae-Hyeon; Yashiro, Hitoshi; Kim, Sung-Soo; Kim, Sun-Jae; Sun, Yang-Kook; Myung, Seung-Taek (9 August 2017). "Synthesis and Electrochemical Reaction of Tin Oxalate-Reduced Graphene Oxide Composite Anode for Rechargeable Lithium Batteries". ACS Applied Materials & Interfaces 9 (31): 25941–25951. doi:10.1021/acsami.7b03325. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-8252. பப்மெட்:28718628. https://pubmed.ncbi.nlm.nih.gov/28718628/. பார்த்த நாள்: 5 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(II)_ஆக்சலேட்டு&oldid=3760173" இலிருந்து மீள்விக்கப்பட்டது