வேலணை பிரதேச சபை

வேலணை பிரதேச சபை (Velanai Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 98.4 சதுர மைல்கள். இது இரண்டு தீவுகளை முழுமையாகவும் ஒரு தீவைப் பகுதியாகவும் உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலும் இது கடலினால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் மட்டும் ஊர்காவற்றுறை பிரதேச சபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். ஊர்காவற்றுறை பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 11 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வேலணை பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி, ஈ. பி. டீ. பி
ஜனவரி 2018 முதல்
துணைத் தலைவர்
பொன்னம்பலம் நடனசிகாமணி, பொதுஜன பெரமுன
ஜனவரி 2018 முதல்
செயலாளர்
கிரிஜா வாசுதேவன்
உறுப்பினர்கள்20
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2018

வட்டாரங்கள்

தொகு

வேலணை பிரதேச சபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர் ஆகிய விபரங்களையும், அவ்வட்டாரங்களுள் அடங்கிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் இலக்கம், பெயர்கள் முதலியவற்றையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 சரவணை J12 வேலணை வடக்கு
J20 சரவணை கிழக்கு
J21 சரவணை மேற்கு
2 மண்கும்பான் J11 மண்கும்பான்
J13 வேலணை வடகிழக்கு
3 அல்லைப்பிட்டி J10 அல்லைப்பிட்டி
4 மண்டைதீவு J7 மண்டைதீவு கிழக்கு
J8 மண்டைதீவு மேற்கு
J9 மண்டைதீவு தெற்கு
5 வேலணை கிழக்கு J14 வேலணை கிழக்கு
J8 வேலணை தென்கிழக்கு
J9 வேலணை கிழக்கு மத்தி
6 வேலணை தெற்கு J17 வேலணை தெற்கு
7 வேலணை மேற்கு J18 வேலணை மேற்கு மத்தி
J19 வேலணை மேற்கு
8 நயினாதீவு வடக்கு J34 நயினாதீவு வடக்கு
J35 நயினாதீவு மத்தி
9 புங்குடுதீவு மேற்கு J27 புங்குடுதீவு வடக்கு
J29 புங்குடுதீவு தென்மேற்கு
J30 புங்குடுதீவு மத்தி மேற்கு
J32 புங்குடுதீவு வடகிழக்கு
J33 புங்குடுதீவு மேற்கு
10 புங்குடுதீவு கிழக்கு J22 புங்குடுதீவு வடகிழக்கு
J23 புங்குடுதீவு கிழக்கு
J24 புங்குடுதீவு தென்மேற்கு
11 புங்குடுதீவு தெற்கு J25 புங்குடுதீவு தென்கிழக்கு
J26 புங்குடுதீவு தெற்கு
J28 புங்குடுதீவு மத்தி வடக்கு
J31 புங்குடுதீவு மத்தி கிழக்கு
12 நயினாதீவு தெற்கு J36 நயினாதீவு தெற்கு

தேர்தல் முடிவுகள்

தொகு

1998 உள்ளாட்சித் தேர்தல்

தொகு

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[2]<[3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,715 66.17% 8
  சுயேச்சை 508 19.60% 2
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 255 9.84% 1
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 58 2.24% 0
  தமிழீழ விடுதலை இயக்கம் 56 2.16% 0
செல்லுபடியான வாக்குகள் 2,592 100.00% 11
செல்லாத வாக்குகள் 284
மொத்த வாக்குகள் 2,876
பதிவில் உள்ள வாக்காளர்கள் 31,199
வாக்களித்தோர் 9.22%

2011 உள்ளாட்சித் தேர்தல்

தொகு

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,973 63.74% 8
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 2,221 35.63% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 39 0.63% 0
செல்லுபடியான வாக்குகள் 6,233 100.00% 11
செல்லாத வாக்குகள் 714
மொத்த வாக்குகள் 6,947
பதிவில் உள்ள வாக்காளர்கள் 12,028
வாக்களித்தோர் 57.76%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ward Map of Velanai Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2016-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-03-25.
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 25 மார்ச் 2017. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Velanai Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]

https://election.news.lk/images/la2018/n3/1008.pdf[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலணை_பிரதேச_சபை&oldid=3572650" இலிருந்து மீள்விக்கப்பட்டது