ஸ்டீவன் ஃபின்

ஸ்டீவன் ஃபின் (Steven Finn, பிறப்பு: ஏப்ரல் 4, 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 146 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஸ்டீவன் ஃபின்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டீவன் ஃபின்
உயரம்6 அடி 7 அங் (2.01 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 647)மார்ச்சு 2 2010 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுடிசம்பர் 19 2010 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 11 1 51 32
ஓட்டங்கள் 16 35 248 35
மட்டையாட்ட சராசரி 5.33 35 5.90 5.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 9* 35 32 13
வீசிய பந்துகள் 1,828 60 8,571 1,290
வீழ்த்தல்கள் 46 1 181 37
பந்துவீச்சு சராசரி 26.23 61.00 28.87 30.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 6 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 n/a
சிறந்த பந்துவீச்சு 6/125 1/61 9/37 3/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 0/– 13/– 4/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 30 2010

சர்வதேச போட்டிகள்

தொகு

இவர் மார்ச் 12, 2010 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவரின் 20 ஆவது வயதில் 647 ஆவது வீரராக இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.[1][2] இந்தத் தொடரின் முதல் போட்டியில் 181 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 10 இலக்குகள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வென்றது. சகாதத் ஹொசைனை தனது முதல் இலக்காக வீழ்த்தினார். தனது இரண்டாவது போட்டியில் 10 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்களை எடுக்கவில்லை.[3][4]

2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[5] இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள்வீசி 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மூன்றாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். நான்காவதுபோட்டியில் 10 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்கினைக் கைப்பற்றினார். மூன்றாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களில் முதலிடம் பிடித்தார். இவர் 8இலக்குகளை 31.62 எனும் சராசரியோடு எடுத்தார்.[6] இந்தத் தொடரை 5-0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இவரைப் பற்றி கூறுகையில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஃபின் எங்களின் முதன்மைத் தேர்வாக இல்லை. இருந்தபோதிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார் என இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்தார்.[7] பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இலங்கையில் நடைபெற்ற 2012 ஐசிசி உலக இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ஓட்டஙகளை வீட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 2 இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவரும் ஜேட் டெர்ன்பாகும் சேர்ந்து 10 ஆவது இணைக்கு பன்னாட்டு இருபது உலககோப்பையில் அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.

வெளியிணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Steven Finn". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 June 2010.
  2. "Michael Carberry and James Tredwell set for debuts". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 June 2010.
  3. "1st Test: Bangladesh v England at Chittagong, Mar 12–16, 2010". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 June 2010.
  4. "2nd Test: Bangladesh v England at Dhaka, Mar 20–24, 2010". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 June 2010.
  5. 'I'm back on track' – Patel, Cricinfo, 6 October 2011, பார்க்கப்பட்ட நாள் 2011-10-06
  6. Records / England in India ODI Series, 2011/12 / Most wickets, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2011-10-25
  7. Former England captain Michael Vaughan urges one-day shake-up, BBC Sport, 26 October 2011, பார்க்கப்பட்ட நாள் 2011-10-27
முன்னர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரர் விருது
2010
பின்னர்
தேவேந்திர பிசூ
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_ஃபின்&oldid=3007003" இலிருந்து மீள்விக்கப்பட்டது