ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி
ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி ( Spix's macaw ) சிறிய நீல மக்காவ் கிளி என்றும் அழைக்கப்படுவது, பிரேசிலைச் சேர்ந்த ஒரு அகணிய மக்காவ் இனமாகும். இது பிசிட்டாசிடே (உண்மையான கிளிகள்) குடும்பத்தின் ஒரு பகுதியான அரினே ( நியோட்ரோபிகல் கிளிகள்) உள் குடும்பத்தில் உள்ள அரினி இனக்ககுழு உறுப்பினராகும். 1638 ஆம் ஆண்டில் பிரேசிலின் பெர்னம்புகோ மாநிலத்தில் பணிபுரிந்தபோது ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் மார்க்கிரேவ் இதை முதலில் இதை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். மேலும் இதற்கு ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் பாப்டிஸ்ட் வான் ஸ்பிக்சினால் பெயரிடப்பட்டது. அவர் 1819 ஆம் ஆண்டில் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவில் இந்த பறவையை மாதிரிக்காக பிரேசிலின் வடகிழக்கு பாகையா கரையில் சேகரித்தார். இந்த பறவை அதன் இயற்கையான வாழிடத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. பல ஆண்டு ஆய்வுக்குப் பிறகு, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக இது இயலிடத்தில் அற்றுவிட்ட இனமாக 2019 இல் அறிவித்தது.
ஸ்பிக்ஸ் மக்காவ் கிளி | |
---|---|
1980 இல் ஜெர்மனியின் வோகல்பார்க் வால்ஸ்ரோடில் வயது வந்த மக்காவ் (தோராயமாக) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cyanopsitta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CyanopsittaC. spixii
|
இருசொற் பெயரீடு | |
Cyanopsitta spixii (Wagler, 1832) | |
வேறு பெயர்கள் | |
List
|
இது நடுத்தர அளவிலான கிளியாகும். சுமார் 300 கிராம் (11 அவுன்ஸ்) எடையுடையது. பெரும்பாலான பெரிய மக்காவை விட சிறியது. இதன் உடல் தோற்றம் ஓரளவு நீல நிறம் கொண்டதாக இருக்கும். இதன் தலை சாம்பல்-நீல நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி வெளிர் நீல நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி தெளிவான நீல நிறத்தில் இருக்கும். ஆண் கிளிகளும், பெண் கிளிகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக இருக்கும். இருப்பினும், பெண் கிளிகள் ஆணைவிட சற்று சிறியதாக இருக்கும்.
வடகிழக்கு பிரேசிலின் உள்பகுதியில் உள்ள கேட்டிங்கா உலர் வன காலநிலைக்குள் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவின் வடிகால் படுகையில் உள்ள கரையோர கரைபீரா கேலரி வனங்களில் இந்த இனங்கள் வசித்து வந்தன. கூடு கட்டுவதற்கும், உணவுக்கும், தூங்குவதற்கும் மரத்தைச் சார்ந்திருப்பதால் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கை வாழ்விடத்தைக் கொண்டிருந்தது. இது முதன்மையாக கரைபாவின் விதைகள் மற்றும் கொட்டைகள் மற்றும் பல்வேறு ஆமணக்குக் குடும்ப புதர்கள், கேட்டிங்கா தாவரங்களை உண்கிறது. இதன் இயற்கை வாழிடத்தில் காடழிப்பு காரணமாக, இருபதாம் நூற்றாண்டு முழுவதும் காடுகளில் அரிதாகவே காணப்பட்டன. இதன் இயற்கை வாழிடத்தின் தொலைவு காரணமாக சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நிலையிலும் இது எப்போதும் மிகவும் அரிதாகவே இருந்துள்ளது.
இது சிஐடிஇஎஸ் பிற்சேர்க்கை I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி சட்டப்பூர்வமான பாதுகாப்பினால், பன்னாட்டளவில் அறிவியல் அல்லது கல்வி நோக்கங்களுக்காகத் தவிர இதன் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஸ்பிக்சின் மக்காவுகளை அதன் இயலிடத்தில் அற்றுவட்ட இனமாகக் கருதுகிறது. காடுகளில் இவை கடைசி அறியப்பட்ட வாழிடமான பிரேசிலின் வடகிழக்கு பாகையா உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க மிகவும் அரிதானவையாக மாறின. 2000 ஆம் ஆண்டில் ஒரு ஆண் பறவையைப் பார்த்த பிறகு, அடுத்து கடைசியாக 2006இல் தான் பார்வையில் பட்டது. [4] பிரேசிலிய அரசாங்கத்தின் கீழ் உள்ள பல பாதுகாப்பு அமைப்புகளில் வளர்ப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் மூலம் இந்தப் பறவை இனம் தற்போது பராமரிக்கபட்டு வருகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றான அச்சுறுத்தலுக்கு உள்ளான கிளிகள் பாதுகாப்பு சங்கம் (ACTP) ஸ்பிக்ஸ் மக்காக்களை மீண்டும் காட்டுக்குள் விடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 இல் ஜெர்மனியில் இருந்து பிரேசிலுக்கு இந்தப் பறவைகளைக் கொண்டுவந்தது. பிரேசிலியன் பல்லுயிர் பாதுகாப்புக்கான சிகோ மென்டிஸ் நிறுவனம் (ICMBio) போதுமான இனப்பெருக்கம் செய்யக்கூடிய பறவைகளும், அதன் மீட்டெடுக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்களுக்காக காத்திருக்கிறது. அவை கிடைத்தவுடன், இந்த உயிரினங்களை மீண்டும் அதன் பூர்வீக இடங்களில் வாழவைத்தல் தொடர்புடைய திட்டத்துடன் அரரின்ஹா-அசுல் திட்டத்தை நடத்துகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "Cyanopsitta spixii ". IUCN Red List of Threatened Species (BirdLife International) 2019: e.T22685533A153022606. 2019. https://www.iucnredlist.org/species/22685533/153022606.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Spix, Martius (1824–25). Avium Brasiliensium Species Novae, Vol.1 plate XXIII.
- ↑ "Spix's Macaw, Star of "Rio," Spotted in the Wild for the First Time in 15 Years". smithsonianmag.com. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.