அத்தினாபுரம்
(ஹஸ்தினாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அத்தினாபுரம் (இந்தி: हस्ति नापुर, சமசுகிருதம்: हस्तिtनापुरम् Hastināpuram) (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.
தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.
அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்தொகு
- யயாதி
- துஷ்யந்தன்
- பரதன்
- குரு
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
- விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
- திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
- பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி)
- துரியோதனன் -திருதராட்டிரனின் மகன்
- தருமர் - குந்தியின் மகன்
- பரீட்சித்து - அபிமன்யு - உத்தரைக்கும் பிறந்தவன்
- ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்