ஊவர் அணை

(ஹூவர் அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.

ஊவர் அணை
ஊவர் அணை, படம்:அன்சல் ஆடம்சு (1942)
அதிகாரபூர்வ பெயர்Hoover Dam
அமைவிடம்நெவாடா-அரிசோனா ஐக்கிய அமெரிக்கா
நோக்கம்Power, flood control, water storage, regulation, recreation
நிலைIn use
கட்டத் தொடங்கியது1931
திறந்தது1936
கட்ட ஆன செலவு$49 million ($NaN with inflation)
உரிமையாளர்(கள்)United States Government
இயக்குனர்(கள்)U.S. Bureau of Reclamation
அணையும் வழிகாலும்
வகைConcrete gravity-arch
தடுக்கப்படும் ஆறுகொலராடோ ஆறு
உயரம்726.4 அடி (221.4 m)
நீளம்1,244 அடி (379 m)
உயரம் (உச்சி)1,232 அடி (376 m)
அகலம் (உச்சி)45 அடி (14 m)
அகலம் (அடித்தளம்)660 அடி (200 m)
கொள் அளவு3,250,000 cu yd (2,480,000 m3)
வழிகால் வகை2 controlled drum-gate
வழிகால் அளவு400,000 cu ft/s (11,000 m3/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மீடு ஏரி
மொத்தம் கொள் அளவு28,537,000 acre⋅ft (35.200 km3)
செயலில் உள்ள கொள் அளவு15,853,000 acre⋅ft (19.554 km3)
செயலற்ற கொள் அளவு10,024,000 acre⋅ft (12.364 km3)
நீர்ப்பிடிப்பு பகுதி167,800 sq mi (435,000 km2)
மேற்பரப்பு பகுதி247 sq mi (640 km2)[1]
அதிகபட்சம் நீளம்112 mi (180 km)
அதிகபட்சம் நீர் ஆழம்590 அடி (180 m)
இயல்பான ஏற்றம்1,219 அடி (372 m)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)U.S. Bureau of Reclamation
பணியமர்த்தம்1936 - 1961
ஹைட்ராலிக் ஹெட்590 அடி (180 m) (Max)
சுழலிகள்13× 130 MW
2× 127 MW
1× 68.5 MW
1× 61.5 MW Francis-type
2× 2.4 MW Pelton-type
நிறுவப்பட்ட திறன்2,080 MW
Annual உற்பத்தி4.2 billion கிலோவாட் மணி[2]
இணையதளம்
Bureau of Reclamation: Lower Colorado Region - Hoover Dam

மீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.

மின்னுற்பத்தி பகிர்மானம்

தொகு

அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி 1987ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தின்படி விற்கப்பட்டது. பின்னர் அரசு தன் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.. அரசின் 30 வருட ஒப்பந்தப்படி அணையின் மின்னுற்பத்தியை 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.[3] பின்வரும்படி அணையின் மின் உற்பத்தி பிரித்து பயன்படுத்தப்படுகிறது:[2]

Area Percentage
தெற்கு கலிபோர்னியா மெட்ரோபாலிட்டன் தண்ணீர் மாவட்டம் 28.53%
நெவாடா மாநிலம் 23.37%
அரிசோனா மாநிலம் 18.95%
லாஸ் ஏஞ்சலஸ் தண்ணீர் மற்றும் மின்சார துறை 15.42%
தெற்கு கலிபோர்னியா எடிசன் நிறுவனம் 5.54%
போல்டர் நகரம், நெவாடா 1.77%
கிலன்டேல், கலிபோர்னியா 1.59%
பாசடேனா, கலிபோர்னியா 1.36%
அனகிம், கலிபோர்னியா 1.15%
ரிவர்சைடு, கலிபோர்னியா 0.86%
வெர்னான்,கலிபோர்னியா 0.62%
பர்பேங்,கலிபோர்னியா 0.59%
அசுசா, கலிபோர்னியா 0.11%
கோல்டன், கலிபோர்னியா 0.09%
பேன்னிங், கலிபோர்னியா 0.04%
ஊவர் அணை 2011

மேற்கோள்கள்

தொகு
  1. "Frequently Asked Questions: Lake Mead". Bureau of Reclamation. Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  2. 2.0 2.1 "Frequently Asked Questions: Hydropower". Bureau of Reclamation. Archived from the original on 2010-03-23. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.
  3. Lien-Mager, Lisa (December 20, 2011). "President signs Hoover Dam Power Allocation Act". ACWA News (Association of California Water Agencies) இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714164802/http://www.acwa.com/news/federal-relations/president-signs-hoover-dam-power-allocation-act. பார்த்த நாள்: 2011-12-27. 

புத்தகங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஊவர் அணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊவர்_அணை&oldid=3580562" இலிருந்து மீள்விக்கப்பட்டது