ஹொங்கொங் சுரங்கப் பாதைகளின் பட்டியல்
ஹொங்கொங் சுரங்கப் பாதைகள் அல்லது ஹொங்கொங் சுரங்கப் பாதைகளின் பட்டியல் (List of tunnels in Hong Kong) என்பது ஹொங்கொங் வாகன போக்குவரத்துத் துறையில் மலைகளைக் குடைந்தும், கடலுக்கு அடியால் பாரிய குழாய் வடிவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளாகும். இந்த சுரங்கப் பாதைகளின் உருவாக்கம் ஹொங்கொங் போக்குவரத்து துறையில் வாகன நெறிசல் அதிகரிப்பின் காரணமாக எழுந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைந்தது எனலாம். இந்தச் சுரங்கப் பாதைகளில் சில கடலடிச் சுரங்கப் பாதைகள் ஆகும். ஏனையவை மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகளாகும்.
இந்த சுரங்கப் பாதைகளின் உள்ளே அவசர ஆபத்து அல்லது விபத்துக்களின் போது முன்னெச்சரிக்கை பாதுக்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக; ஒக்சிசன் வசதி, அவசர தீயணைப்பு வசதி, உடனடி முதலுதவி, போன்றவற்றையும் கொண்டுள்ளன. அத்துடன் இச்சுரங்கங்களின் உள்ளே இருளாக அல்லாமல், சுரங்கத்தின் உற்பகுதி மின்விளக்குகளால் ஒளிக்கோலமாக இரவு, பகல் வேறுபாடின்றி காணக்கூடியதாக உள்ளன.[1] [2] சுரங்கத்தின் பக்கச் சுவர்கள் பொருத்து அட்டைகளால் வடிவமைக்கப் பட்டவைகளாக உள்ளன.[3] பக்க சுவர்களில் அவசர தேவையின் போது மக்கள் பாதுக்காப்பாக வெளியேறுவதற்கான மாற்று வழிகளும் உள்ளன.
வரலாறு
தொகுஹொங்கொங்கில் சுரங்கப் பாதைகளின் வரலாறு 1967 ஆம் ஆண்டு ஆரம்பமானது எனலாம். அதாவது ஹொங்கொங்கில் முதல் சுரங்கப்பாதை 1967 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சிங்கப் பாறை சுரங்கம் எனும் பெயரில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று பொது போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் முதல் கடலடி சுரங்கப்பாதை துறைமுகக் கடலடி குறுக்குச் சுரங்கம் எனும் பெயரில், கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பில் ஹுங் ஹாம் நகருக்கும் ஹொங்கொங் தீவுக்கும் இடையில், 1.86 கிலோ மீட்டர் தூரமுடைய கடலடிச் சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. [4]
அதனைத் தொடர்ந்து பல நிலச் சுரங்கப்பாதைகளும், கடலடி சுரங்கப் பாதைகளும் தோற்றம் பெறத் தொடங்கின.
சுரங்கப் பாதைகளின் பட்டியல்
தொகு- சிங்கப் பாறை சுரங்கம் (Lion Rock Tunnel) 1967
- துறைமுகக் கடலடி குறுக்குச் சுரங்கம் (Cross Harbour Tunnel) 1972
- இரண்டாம் சிங்கப் பாறைச் சுரங்கம் (Second Lion Rock Tunnel) 1978
- எபர்டீன் சுரங்கம் (Aberdeen Tunnel) 1982, 1983
- கை டக் சுரங்கம் (Kai Tak Tunnel) 1982
- கிழக்குத் துறைமுக கடலடி குறுக்குச் சுரங்கம் (Eastern Harbour Crossing) 1990
- சிங் மூன் சுரங்கம் (Shing Mun Tunnel) 1990
- சுங் வான் ஓ சுரங்கம் (Tseung Kwan O Tunnel) 1990
- டேட்ஸ் கேய்ன் சுரங்கம் (Tate's Cairn Tunnel) 1991
- மேற்குத் துறைமுக கடலடிச் சுரங்கம் (Western Harbour Crossing) 1997
- சேங் சிங் சுரங்கம் (Cheung Tsing Tunnel) 1997
- டாய் லாம் சுரங்கம் (Tai Lam Tunnel) 1998
- டிஸ்கோவரி குடா சுரங்கம் (Discovery Bay Tunnel) 2000
- கழுகின் கூடு சுரங்கம் (Eagle's Nest Tunnel and Sha Tin Heights Tunnel) 2008