ஹோமோசிஸ்டீன்

ஹோமோசிஸ்டீன் (Homocysteine) என்னும் அமினோ அமிலத்தின் வாய்பாடு: HSCH2CH2CH(NH2)CO2H. இது, சிஸ்டீன் அமினோ அமிலத்திற்கு ஒப்பானதாகும். ஆனால், சிஸ்டீனைக் காட்டிலும் ஒரு மீத்தைலீன் (-CH2-) தொகுதியை அதிகமாகக் கொண்டுள்ளது. ஹோமோசிஸ்டீன், மெத்தியோனின் அமினோ அமிலத்திலுள்ள இறுதி மீத்தைல் [Cε] தொகுதியை நீக்குவதன் மூலம் தொகுக்கப்படுகிறது. மீண்டும், பி-விட்டமின்கள் (உயிர்சத்துக்கள்) துணையுடன் மறுசுழற்சி முறையில் மெத்தியோனின் அமிலமாகவோ, அல்லது சிஸ்டீனாகவோ மாற்றம் பெறக் கூடியது.

ஹோமோசிஸ்டீன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-4-சல்ஃபானைல் பியூட்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
454-29-5 N[ESIS]
6027-13-0 (L-isomer) Yes check.svgY
ChEMBL ChEMBL310604 Yes check.svgY
ChemSpider 757 Yes check.svgY
EC number 207-222-9
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05330 Yes check.svgY
பப்கெம் 778
பண்புகள்
C4H9NO2S
வாய்ப்பாட்டு எடை 135.18 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இரத்த ஓட்டத்தில் அதிக அளவு ஹோமோசிஸ்டீன் அளவுகள் இருப்பது இதயகுழலிய நோயுடன் (மாரடைப்பு) தொடர்புப் படுத்தப்பட்டாலும், இதன் அளவைக் குறைப்பதனால் நோய் அறிகுறிகளில் மாற்றம் தெரிவதில்லை.[1]

கட்டமைப்புதொகு

நடுநிலை அமிலக்காரக் குறியீட்டில் (pH=7.0) ஹோமோசிஸ்டீன் இருமுனை அயனிவடிவத்தில் உள்ளது. (S)-ஹோமோசிஸ்டீன் (இடது) மற்றும் (R)-ஹோமோசிஸ்டீனின் (வலது) பீட்டாடைன் வடிவம்:

 

உயிரித்தொகுப்பு மற்றும் உயிர்வேதிப் பணிகள்தொகு

ஹோமோசிஸ்டீனை உணவிலிருந்துப் பெற முடியாது.[2] மாறாக, மெத்தியோனின் அமினோ அமிலத்திலிருந்து பல்படிமுறையில் தொகுக்கப்படுகின்றது. L-ஹோமோசிஸ்டீன் முதன்மையாக இரண்டு இறுதி நிலைகளை அடைகிறது: டெட்டிராஹைட்ரோஃபோலியேட் மூலமாக மெத்தியோனினாக மாற்றப்படுதல் அல்லது சிஸ்டீனாக மாற்றப்படுதல்.[3]

குருதியில் ஹோமோசிஸ்டீன் அளவுகள்தொகு

குருதி சோதனையில் ஹோமோசிஸ்டீனின் மேற்கோள் வீச்சு
பாலினம் வயது கீழ் எல்லை மேல் எல்லை அலகு ஏற்றம் சிகிச்சைக்குரிய இலக்கு
பெண் 12–19 ஆண்டுகள் 3.3[4] 7.2[4] μmol/L > 10.4 μmol/L
(அ)
> 140 μg/dl
< 6.3 μmol/L[5]
(அ)
< 85 μg/dL[5]
45[6] 100[6] μg/dL
>60 ஆண்டுகள் 4.9[4] 11.6[4] μmol/L
66[6] 160[6] μg/dL
ஆண் 12–19 ஆண்டுகள் 4.3[4] 9.9[4] μmol/L > 11.4 μmol/L
(அ)
> 150 μg/dL
60[6] 130[6] μg/dL
>60 ஆண்டுகள் 5.9[4] 15.3[4] μmol/L
80[6] 210[6] μg/dL

மேற்கோள்கள்தொகு

  1. Martí-Carvajal AJ, Solà I, Lathyris D, Salanti G (2009). "Homocysteine lowering interventions for preventing cardiovascular events". Cochrane Database Syst Rev (4): CD006612. doi:10.1002/14651858.CD006612.pub2. பப்மெட்:19821378. 
  2. Selhub, J. (1999). "Homocysteine metabolism.". Annual Review of Nutrition 19: 217–246. doi:10.1146/annurev.nutr.19.1.217. பப்மெட்:10448523. 
  3. Champe, PC and Harvey, RA. "Biochemistry. Lippincott's Illustrated Reviews" 4th ed. Lippincott Williams and Wilkins, 2008
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 The Doctor's Doctor: Homocysteine
  5. 5.0 5.1 Adëeva Nutritionals Canada > Optimal blood test values பரணிடப்பட்டது 2009-05-29 at the வந்தவழி இயந்திரம் Retrieved on July 9, 2009
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 Derived from molar values using molar mass of 135 g/mol
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோமோசிஸ்டீன்&oldid=3291537" இருந்து மீள்விக்கப்பட்டது