1,1-டை குளோரோ எத்தீன்
1,1 டை குளோரோயெத்தீன் (1,1-Dichloroethene) என்பது C2H2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை 1,1-டைகுளோரோயெத்திலீன் அல்லது வினைலிடின் குளோரைடு அல்லது 1,1-டி.சி.இ. என்ற பெயர்களால் அழைப்பர். இது நிறமற்ற நுண்ணிய மணம் கொண்ட ஒரு திரவமாகும். மற்ற குளோரோகார்பன்களைப் போலவே 1,1 டை குளோரோயெத்தீன் சேர்மமும் நீரில் குறைவாக கரைகிறது. கரிம கரைப்பான்களில் முழுவதுமாக கரைகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1-டைகுளோரோ எத்தீன் | |||
வேறு பெயர்கள்
1,1-டைகுளோரோயெத்திலீன்
1,1-டி.சி.இ வினைலிடீன் குளோரைடு வினைலிடீன் டைகுளோரைடு கெமினல் டைகுளோரோயீத்தேன் | |||
இனங்காட்டிகள் | |||
75-35-4 | |||
ChEBI | CHEBI:34031 | ||
ChemSpider | 6126 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C14039 | ||
பப்கெம் | 6366 | ||
| |||
UNII | 21SK105J9D | ||
பண்புகள் | |||
C2H2Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 96.94 கி/மோல் | ||
அடர்த்தி | 1.213 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −122 °C (−188 °F; 151 K) | ||
கொதிநிலை | 32 °C (90 °F; 305 K) | ||
0.04% (20°C)[1] | |||
ஆவியமுக்கம் | 500 mmHg (20°C)[1] | ||
-49.2•10−6 cm3/mol | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.3 D | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | −22.8 °C (−9.0 °F; 250.3 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 6.5%-15.5%[1] | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LCLo (Lowest published)
|
மில்லியனுக்கு 16,000 பகுதிகள் (எலி, 4 மணி) மில்லியனுக்கு 17,300 பகுதிகள் (சுண்டெலி, 2 மணி) மில்லியனுக்கு 16,000 பகுதிகள் (எலி, 8 மணி)[2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca[1] | ||
உடனடி அபாயம்
|
Ca [N.D.][1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரித்தல்
தொகு1,1,1-டிரைகுளோரோயீத்தேன், 1,2-டைகுளோரோ ஈத்தேன் போன்ற சேர்மங்கள் தயாரிக்கையில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக உருவாகும் 1,1,2-டிரைகுளோரோ ஈத்தேனை ஐதரசன் குளோரைடு நீக்கம் செய்து 1,1 டை குளோரோயெத்தீன் தயாரிக்கப்படுகிறது. இவ்வேதி மாற்றம் சோடியம் ஐதராக்சைடு அல்லது கால்சியம் ஐதராக்சைடு போன்ற கார வினையூக்கியால் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது[3]
- Cl2CHCH2Cl + NaOH → Cl2C=CH2 + NaCl + H2O
காரமல்லாத வாயு நிலை வினை மிகவும் விரும்பத்தக்கதாகும். ஆனால் இம்முறை குறைவாகவே தெரிவு செய்யப்படுகிறது.[4]
பயன்பாடு
தொகுவினைல் குளோரைடு, அக்ரைலோநைட்ரைல் மற்றும் அக்ரைலேட்டு பலபடிகள் தயாரிக்கையில் இணையொருபடியாக 1,1 டை குளோரோயெத்தீன் பயன்படுத்தப்படுகிறது. மீத்தூய சிலிக்கன் டையாக்சைடு படலங்கள் தயாரிப்பதற்கான குறைகடத்தி கட்டுருவாக்கக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பாலிவினைலிடீன் குளோரைடு
தொகு1,1 டை குளோரோயெத்தீனை பல ஆல்க்கீன்களுடன் சேர்த்து பலபடியாக்கல் வினைக்கு உட்படுத்தி பாலிவினைலிடீன் குளோரைடை உற்பத்தி செய்ய முடியும். மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சரன் எனப்படும் நெகிழி உறைகள் தயாரிக்க இப்பலபடி பயன்பட்டது. 1900 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உணவுகள் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டு இத்தகைய உறைகள் தயாரிப்பு கைவிடப்பட்டது. இதனால் 2004 ஆம் ஆண்டிலிருந்து இவற்றுக்கு மாற்றாக பாலியெத்திலீன் பலபடிகள் பயன்படுத்தப்பட்டன.
முன்பாதுகாப்பு
தொகு1,1 டை குளோரோயெத்தீன் வெளிப்பாட்டினால் ஆரோக்கிய விளைவுகள் முதன்மையாக மைய நரம்பு மண்டலத்தில் உண்டாகின்றன. உணர்வு நீக்கம், மயக்கம், வலிப்பு, இழுப்பு முதலியன உள்ளிட்டவை அறிகுறிகளாகும்[5]. புற்றுநோயை இச்சேர்மம் ஊக்குவிக்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. பிறவிக் குறைபாடுகளையும் இது உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது[7].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0661". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "1,1-Dichloroethane". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Course CEIC2004 Industrial Chemistry for Engineers. Chemistry Lecture Notes, UNSW
- ↑ Manfred Rossberg, Wilhelm Lendle, Gerhard Pfleiderer, Adolf Tögel, Eberhard-Ludwig Dreher, Ernst Langer, Heinz Rassaerts, Peter Kleinschmidt, Heinz Strack, Richard Cook, Uwe Beck, Karl-August Lipper, Theodore R. Torkelson, Eckhard Löser, Klaus K. Beutel, Trevor Mann "Chlorinated Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2.
- ↑ epa.gov
- ↑ CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
- ↑ https://oehha.ca.gov/proposition-65/crnr/chemical-listed-effective-december-29-2017-known-state-california-cause-cancer